Thursday, 18 July 2013

கட்டணம் இல்லாமல் ஆங்கில வழிக் கல்வி----உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி

 "ஊராட்சி பள்ளிகளில், ஆங்கிலக் கல்வி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கப்படுகிறது" என உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி தெரிவித்தார்.
 
காரமடையை அடுத்த திம்மம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில், காரமடை உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி பேசியதாவது:

பெற்றோர், தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனால் தமிழக அரசு, துவக்க பள்ளியில் முதல் வகுப்பிலும், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பிலும், ஆங்கில வழி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.

இதற்கு எவ்வித கட்டணமும் வசூல் செய்யாமல் இலவசமாக கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. எனவே, பெற்றோர் இத்திட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment