சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு வருகிற 22–ந் தேதி நெல்லை மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆடித்தபசு
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா வருகிற 22–ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேற்படி உள்ளுர் விடுமுறையானது அன்னிய செலவாணி முறிச்சட்டம் 1881 ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும் எனவும், கல்வி நிறுவனங்களை பொறுத்தவரையில் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவைகளில் நடைபெறும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2–வது சனிக்கிழமை
மேலும் மேற்படி உள்ளுர் விடுமுறையை அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு அடுத்த மாதம் 10–ந் தேதி (2–வது சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment