Wednesday 17 July 2013

உலக புலிகள் தின போட்டிகள்: மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு


கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆண்டின் முக்கிய நிகழ்வாக, ஜூலை 29ல் உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் (என்.சி.எஸ்.,) உல வன உயிரின நிதியம் மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளை நடத்தவுள்ளன. புலிகளின் முக்கியத்துவம், வன விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
எல்.கே.ஜி.,யிலிருந்து முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 என 4 பிரிவுகளாகப் பிரித்து, மாறுவேடப்போட்டி, நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என 3 விதமான போட்டிகள் நடத்தப்படும்.
போட்டிகளில் பங்கேற்போர், "புலி மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் என்ன?", "புலி மற்றும் வன உயிரினங்கள் அழிந்தால் நமது சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?", "காடுகள், நீர் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதில் மனிதர்களின் பங்கு என்ன?," ஆகிய 3 தலைப்புகளில் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளிகள், ஜூலை 17 மாலை 5.00 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைncs.cbe@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அல்லது இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜலாலுதீன் (மொபைல் எண்: 95856 26233), வன உயிரினத்துறை பேராசிரியர் பரணிதரன் (98944 24686), உலக வன உயிரின நிதியம்-இந்தியா உதவி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி (94862 45097) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment