Saturday, 14 December 2013
Friday, 13 December 2013
AEEO பதவி உயர்வு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக ....14/12/2013
உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல்
அன்பார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
பெருமக்களே ! ஒரு நற்செய்தி
இதோ வருகிறது! அதோ வருகிறது என்று சொல்லிக்
கொண்டிருந்த உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு
தகுதி வாய்ந்த உ.தொ.க.அ முதல் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. இதை முதல் படியாகக் கொண்டு முன்னேறுவோம் .இதை எட்டிப் பிடிப்பதற்குத்தான் எத்தனை தடைகள்!
ஏழு பேர் கொண்ட அந்த பட்டியல்
1.SUTHATHIRAM K - THENI
2.THAMOTHARAN R - VIRUDHANAGAR
3.NAGARAJAN R - VIRUDHANAGAR
4.JAYALATHA E - TIRUNELVELI
5.AROCKIASAMY A - RAMANATHAPURAM
6.JEYARAJU S - RAMANATHAPURAM
7.RAJAMAREES S - DINDUGAL
தயங்காமல் இதை கண்டு வாழ்த்துவோம்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
இதற்காகப் பாடுபட்ட அத்துணை பேருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்
14/12/2013 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்த கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Thursday, 12 December 2013
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கான முடிவை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கான முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இத்தேர்வில் பிழையான கேள்விகள் இடம்பெற்றிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்த எஸ்.விஜயலெட்சுமி, ஜே.ஆன்டனி கிளாரா ஆகியோருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21-ஆம் தேதி நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், தமிழ்ப் பாடத்தின் "பி' வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.
பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர்.
பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் இதனை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.
அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் மறுதேர்வு நடத்துவதால் இப்பணி மேலும் தாமதமாகும். 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும் செலவினத்தை ஏற்படுத்தும்.
மேலும் முந்தையத் தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம்.
மறுதேர்வை சில தேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். எனவே மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, "பி' வரிசை கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழை, அச்சுப்பிழை தான், இதனால் கேள்வியின் அர்த்தம் எவ்விதத்திலும் மாறுபடாது. இத்தேர்வை எழுதும் முதுகலைப் பட்டதாரிகள், எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
மறுதேர்வு நடத்துவது அரசுக்கு தேவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்தும். எனவே தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து மனுதாரர்கள் இருவருக்கும் 21 மதிப்பெண்களை வழங்க வேண்டும். மனுதாரர்களுக்கு இரு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும்.
தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உத்தரவிட்டனர். மேலும், தமிழ் பாடத்துக்கான திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலைத் தயாரித்து, டிசம்பர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்
Subscribe to:
Posts (Atom)