Friday, 7 June 2013

பள்ளிக்கல்வி - அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர் பிற நிபந்தனையுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர்

பள்ளிக்கல்வித்துறையின் "கற்க கசடற" மாத இதழ் துவங்க மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் உத்தரவு

பிளஸ்2 உடனடி தேர்விற்கு விண்ணபிக்க தவறியவர்- களுக்கு "சிறப்பு அனுமதி திட்டத்தின்" கீழ் விண்ணபிக்க 07.06.2013 மாலை 5.00 மணிக்குள் அனுமதித்து உத்தரவு

Thursday, 6 June 2013

இரயில்வே அருங்காட்சியகம்……………….



Tamil Nadu Open University – Junior Assistant Posts 2013:

Tamil Nadu Open University invites applications for the recruitment of 14
Junior Assistant Posts. Eligible candidates may send their applications on or
before 28-06-2013. More details like selection process, qualification, how to
 apply are disclosed below…
Tamil Nadu Open University Vacancy Details:
Total No of Posts: 14
Name of the Posts: Junior Assistant
Educational Qualification: Candidate should possess Bachelors Degree from 
recognized university with working knowledge of Computer office applications and 
type writing higher grade in Tamil as well as English.
Application Form & Fee: Application form can be obtained from the office of the 
 Registrar, Tamil Nadu Open University, No. 577 Anna Salai, Saidapet, Chennai – 600 015
 in person on payment of cash Rs. 300/- or by sending a requisition accompanied by 
Demand Draft of Rs.350/- drawn in favor of Tamil Nadu Open University payable at Chennai.
How to Apply: Interested Candidates may send their applications in the prescribed 
format along with all enclosures should reach The Office of the Registrar, Tamil Nadu 
Open University, No. 577 Anna Salai, Saidapet, and Chennai-600015 on or before 28-06-2013 
by 5:00 PM.
Last Date for Receipt of Applications: 28-06-2013 by 05.00 PM.
More information regarding selection process, pay scale, qualifications are available 
in the following link…

12ஆம் வகுப்பு மார்ச் பொது தேர்வு எழுதியவர்களில் நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை கீழ்க்கண்ட பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டு உள்ளது


Subject CodeSubject NameCandidates are allowed to apply for revaluation/re-totalling for the following subjects ONLY
007ChemistryFrom 29.05.2013 to 01.06.2013 ONLY @dge.tn.nic.in
009BiologyFrom 01.06.2013 to 04.06.2013 ONLY @dge.tn.nic.in
011BotanyFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in
013ZoologyFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in
005PhysicsFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in
041MathematicsFrom 03.06.2013 to 06.06.2013 ONLY @dge.tn.nic.in

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி?

எந்த ஒரு மதிப்பீட்டு ஆண்டிற்கும் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியே கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 1,2012 முதல் 31 மார்ச் 2013 வரையிலான அனைத்து வருமானங்களுக்கும், வருமான வரி தாக்கல் செய்ய கடைசி
நாள் ஜூலை 31, 2013 ஆகும்.
சில நேரங்களில் வருமான வரித்துறை தேதியை நீட்டிக்கும். அவ்வாறு நீட்டிக்கப்பட்டால் அதை வரித் துறை கண்டிப்பாக தெரிவிக்கும். உதாரணமாக, கடந்த ஆண்டு கடைசித் தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. கடைசி தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்தால் அதற்கு அபராதம் கிடையாது.
ஆண்டு வருமானம், வருமான வரி வரம்பை தாண்டிவிட்டால் நீங்கள் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்யவேண்டும். மேலும் ஆண்டிற்கு ரூ 10 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உள்ளவர்கள், அதை மின்னணு வடிவத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனபதையும் நினைவில் கொள்ளுங்கள்.
"மின் தாக்கல்(E-filing), ஒரு தனிநபர் அல்லது இந்து மத பிரிக்கப்படாத குடும்பத்திற்கு, அவரது அல்லது குடும்பத்தின் மொத்த வருமானம், அல்லது முந்தைய ஆண்டிற்கான சட்டத்தின் கீழ் வரிவிதிப்புக்குரிய மொத்த வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் மதிப்பீட்டு ஆண்டு 2012-13 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என வருமான வரி துறை கடந்த ஆண்டு தெரிவித்துள்ளது.
எனவே வருமான வரி தொடர்பான ஆவணங்களை தயாராக வைத்திருங்கள். ஏனெனில் கடைசி நாளுக்கு ஒரு சில நாட்களே உள்ளன.

ஊதியக் குறைத் தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிப்பு



ஆசிரியர் தகுதி தேர்வு இரு வண்ணங்களில் விண்ணப்பம் அரசு பள்ளிகள் மூலம் விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 2 வண்ணங்களில் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை, 1 ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை 21ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், தேர்வுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நேற்று நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவொளி தலைமை வகித்தார். இணை இயக்குநர் சேதுராமன் வர்மா, துணை இயக்குநர் பூபதி ஆகியோர் ஆலோசனை அளித்தனர். 
திருச்சி உட்பட 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 66 மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் குழப்பமின்றி தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பவது. திட்டமிட்டபடி தேர்வை சிறப்பாக நடத்துவது. தேர்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டிஇடி) வரும் 17ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. 
கல்வித்துறை அலுவலர்களின் பணிச்சுமையைக் குறைப்பது, குழப்பத்தை தவிர்க்கும் வகையில் புது முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன்படி, வழக்கமாக மாவட்டக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும். இனி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். அரசு மேல்நிலைப்பள்ளிகள் இல்லாத பகுதிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். அதேபோல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு தனித்தனி விண்ணப்பங் களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக இரண்டு வண்ணங்களில் விண்ணப்பம் அச்சிடப்பட்டு, விநியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

விருப்பக் கடிதம் அளிக்காத PG Panel இல் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல இயலாது

01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல தகுதிவாய்ந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அது குறித்த செயல்முறைகளில் பத்தி எண்.3ல் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா என்பதற்கான விருப்பக் கடிதத்தினை சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
           அவ்வாறு உடனனடியாக விருப்ப கடிதம் வழங்காத பட்டியலில் உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் முதுகலை ஆசிரியர்களாகவே பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார் என கருதப்பட்டு அவர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக  பதவி உயர்வு வழங்கப்படும்.
       அவ்வாறு விருப்பக் கடிதம் அளிக்காத ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வில் சென்றால் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை கல்விப் பணி விதி 9(க்ஷ)ன்படி, பட்டதாரி ஆசிரியர் பதவியில் மீள் உரிமை ரத்தாகும் என்றும் மீண்டும் பட்டதாரி ஆசிரியர் பணியினைக் கணக்கில் கொண்டு அரசு உயர்நிலை பள்ளி  தலைமை ஆசிரியராக  பதவி உயர்வில்  செல்ல இயலாது என்றும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொறியியல் சேர்க்கை - ரேண்டம் எண் வெளியீடு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான ரேண்டம் எண், இன்று(ஜுன் 5ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் சுழற்சி எண் என்று இது அழைக்கப்படுகிறது.

ரேண்டம் எண் வெளியீட்டு நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், உயர்கல்வித்துறை செயலர், தொழில்நுட்பக் கல்வி கமிஷனர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே, ஜுன் 5ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அந்த எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள், http://tanca.annauniv.edu/random13/ என்ற வலைத்தளம் சென்று, தங்களின் விண்ணப்ப எண்ணை உள்ளிட்டு, தங்களுக்கான ரேண்டம் எண்ணை பெற்றுக்கொள்ளலாம்.
Assigning Random Number 05.06.2013
Publication of Rank list 12.06.2013
Commencement of Counselling 21.06.2013
End of Counselling 30.07.2013

ரேண்டம் எண் எதற்காக?
பொறியியல் படிப்பிற்கு, இரண்டு மாணவர்களுக்கு இடையே போட்டி ஏற்படும்போது, அந்த இரண்டு மாணவர்களும், பிளஸ் 2 தேர்வில், ஒரேமாதிரியான மொத்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கலாம். அப்போது, கணிதத்தில் யார் அதிக மதிப்பெண் என்று பார்க்கப்படும். அதிலும், ஒரேமாதிரி இருந்தால், இயற்பியல் பாடத்தில் யார் அதிகம் என்று பார்க்கப்படும்.

அதிலும், ஒரே மதிப்பெண்ணாக இருந்தால், வேதியியல் மதிப்பெண் பார்க்கப்படும். ஆனால் அதிலும் சம மதிப்பெண்கள் என்ற நிலை ஏற்பட்டால், அந்த இருவரின் பிறந்த தேதி பார்க்கப்படும். அதில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால், பிறந்த தேதியும் ஒரே மாதிரி அமையும்போது, இந்த ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். இதனடிப்படையில், தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு பொறியியல் இடம் வழங்கப்படும்.

Sunday, 2 June 2013

TIPS FOR TET EXAM ........



TET exam paper II  18/8/2013 இன்னும் 78 நாட்களே உள்ளன இன்று முதல் TIME TABLE போட்டு படித்தால் அரசு ஆசிரியர் வேலை உறுதி 

இதோ படிக்க வேண்டியவை 

MAJOR SUBJECT : 1.TAMIL 2.ENGLISH  3. HISTORY 4. GEOGRAPHY 

1.  1 முதல் +2 வரை தமிழ் சமச்சீர் புத்தகம் 

2.   1 முதல் +2 வரை ENGLISH சமச்சீர் புத்தகம் 

3.    1 முதல் 10 வரை சமுக அறிவியல்  சமச்சீர் புத்தகம்

4.   RUN AND MARTIN GUIDE FOR ENGLISH

5.  SOCIAL SCIENCE சேவியர் GUIDE 

6. தமிழ் விகடன் TET பிரசுரம் 

7.  TAMILNADU GUIDE SHANKAR IAS ACADEMY 

8. கல்வி  உளவியல் ராம் பதிப்பகம் , கவிய மாலா  பதிப்பகம் 

9.    கல்வி  உளவியல் 1000 உளவியல் 1 MARK QUESTION ANSWER KALVISOLAI 

10. MADURAI SAI  STUDY MATERIAL 

11. PALANI AAIYAKUDI (ஆயக்குடி ) இலவசப் பயிற்சி மையம் MATERIAL 

12. புதிய தலைமுறை கல்விமலர் ஆங்கிலம் உளவியல் MATERIAL 

13. தினதந்தி சமுக அறிவியில் MNATERIAL 

                               இதை திட்டமிட்டு படித்தல் வெற்றி உறுதி ................




                              

சென்னை பொருளாதாரக் கணக்கெடுப்பு

                 




 சென்னை  மாநகராட்சி    ரிப்பன்  மாளிகையில்  மாநகராட்சி  ஆணையாளர்  திரு. விக்ரம் கபூர்   I.A.S.   அவர்கள்   தலைமையில்  பொருளாதாரக்  கணக்கெடுப்புக்கான  ஆலோசனைக்  கூட்டம்   நடந்தது .  

                     4/06/2013 -- 05/06/2013  --  06/06/2013     ஆகிய   நாட்களில்  ஆசிரியர்களுக்கு  பயிற்சி மண்டல வாரியாக அளிக்கப்பட உள்ளது  

                    இக்கூட்டத்தில் தொடக்க கல்வி இயக்ககம் சார்பாக திரு.இரா.கணேசன் AEEO அவர்களும் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பாக திரு.சத்தியமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டார்கள்.  காவல் துறை அலுவலர்கள் , சமுக நல துறை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மாநகராட்சி கல்வி அலுவலர்கள் சுமார் 20பேர் கலந்து கொண்டார்கள் .

                    சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 6000  ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது     ....

பள்ளிக்கல்வித்துறை - 1995 முதல் 2001 வரை தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், மகளிர் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள 4748 பணியிடங்கள் மற்றும் 6239 பணியிடங்களுக்கான ஊதியம் 01.01.2013 முதல் 31.12.2013 வரை ஆணை வழங்கி அரசு உத்தரவு.