Saturday, 1 June 2013
Friday, 31 May 2013
பாராட்டு விழா , பணி நிறைவு விழா
சென்னை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் இருந்து பதிவி உயர்வு பெற்று கடலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்க்கு நேர்முக உதவியாளராக செல்லும் திருமதி. ஜெயந்தி அவர்களுக்கு வழி அனுப்பு விழா
நாள் - 31/5/2013
CHENNAI DEEO , THIRUMATHI . JAYANTHI
DEEO P.A , THIRUMATHI.JAYANTHI
AEEO GANESAN ,THIRUMATHI.JAYANTHI
DEEO , TYPIST GOMATHI , THIRUMATHI JAYANTHI
AEEO CHITHIRA , THIRUMATHI JAYANTHI
THIRUMATHI MANIMEEKALAI , THIRUMATHI JAYANTHI
AEEO'S
THIRUMATHI . INDIRA
THIRUMATHI . CLARA
THIRUMATHI . CHITHIRA
THIRU . ARUMUGAM
THIRUMATHI . INDIRA AEEO
THIRUMATHI .CLARA AEEO
THIRU .ARUMUGAM AEEO
SELVI.LILLY TEACHER
------------------------------------------------------------------------------------------------------------
ஓய்வு பெரும் துணை இயக்குனர் சிவா.தமிழ்மணி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
நாள் - 31/5/2013
சென்னை மாவட்ட DEEO , திருமதி சிவா .தமிழ்மணி ,திரு.சிவா தமிழ்மணி
AEEO கணேசன் நினைவு பரிசு வழங்குகிறார்
மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று, மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசாணை (1டி)
எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013 அரசாணையின்படி
20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை
பெற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும்
31.05.2013 பிற்பகல்
தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை
பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில்
சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு 7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி
ஆசிரியர்கள்) பணி காலி
இடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை
செய்யப்பட உள்ளனர்.
அவர்களின் உத்தேச பதிவுமூப்பு பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான பதிவுதாரர்கள் தாங்கள் பதிவு செய்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பரிந்துரை விவரங்களை ஜூன் 7–ந் தேதிக்குள் நேரில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மாறுதல் ஆணை பெற்ற முதுகலை / பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுநர் / இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.13 முதல் 07.06.13 -க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013-2014 ஆம்
கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை
ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / ஆசிரியர் பயிற்றுநர் / இடைநிலை ஆசிரியர்கள்
/ உடற்கல்வி ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல்
07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில்
07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Wednesday, 29 May 2013
ஆசிரியர்க்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
AEEO நண்பர்களே********
இனிய வணக்கம்
2013-14 ம் கல்வி
யாண்டில் மாணவர்களுக்கு எப்படிப்பட்ட கல்வி தர வேண்டும் என்பதை ஆப்ரஹாம் லிங்கன் பெற்றோராக
ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தையே நாமும் முன் மாதிரியாகக் கொள்வோம்.
நாம் பள்ளிக்கு
சென்று பார்வை, ஆண்டாய்வு செய்யும் போது ஆசிரியர்கள் இந்த நோக்கத்தில் கற்பித்தார்களா
என்பதை உறுதி செய்வோம். இந்த கடிதம் கூட Charuonline.com லிருந்து
எடுத்ததே. திரு.சாருநிவேதா blogspot
லிருந்து அதை அப்படியே வெளியிடுகிறேன். நாம் கல்வியாளர்கள். நாம் இக்கடிதத்தில்
கூறியுள்ளதை அமுல்படுத்துவோம்.
கடித மொழிபெயர்ப்பு ..
ஸ்ரீ ராம்கிருஷ்ணமூர்த்தி
மற்றும் குமார்.ஆர்.எஸ்.
அன்பு மிக்க ஆசிரியருக்கு ,
எனது மகன்
நிறையகற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. எல்லா மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல,
எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல. ஆனால் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
ஒவ்வொரு போக்கிரி உள்ள இடத்திலும் ஒரு
வீரன் உண்டு, ஒவொரு சுயநலமான அரசியல்வாதி உள்ள இடடேல்லும் ஒரு தன்னலம் கருத்தா
தல்லைவன் உண்டு ஒவ்வொரு பகைவனுக்கும் இடையிலும் ஒரு நண்பன் உண்டு.
இதற்கு காலம் அதிகம்
எடுத்துகொள்ளும் என்று எனக்குத் தெரியும் இருந்தாலும்
உங்களால் முடியுமானால் அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நாம் ஈட்டியது ஒரு டாலர்
என்றாலும் கண்டெடுத்த ஐந்து
டாலர்களை காட்டிலும் அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும்
வெற்றியைக் கொண்டாடவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவனை
விலகி இருக்கச் சொல்லுங்கள்.
மனம் விட்டு சிரிப்பதன்
ரகசியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நயவஞ்சகர்களை எளிதில் அடையாளம் காணவும்
ஆரம்பத்திலேயே அவன் கற்றுக் கொள்ளட்டும்.
புத்தகங்கள் என்ற அற்புத
உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். மேலும் வானில் பறக்கும்
பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும் சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின்
வேகத்தையும் பசுமையான மலையடி வார மலர்களின் வனப்பையும் ரசிபதற்கு அவனுக்கு
கற்றுகொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விடவும்
தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மற்றவர்கள்
தவறு என்று விமர்சித்தாலும் தனது சுயசிந்தனையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை
கொள்ள அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
மென்மையான மனிதர்க்ளிடம்
மேன்மையகய்வும் முரடர்களிடம் கடினமகவும் அனுகுவதற்கு அவனுக்கு பயிற்சி அளியுங்கள்.
கும்பலோடு கும்பலாக
கரைந்து போய்விடாமல் எந்த சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச்
செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
எல்லா மனிதர்களின்
குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என்றாலும் அதையெல்லாம் வடிகட்டி நல்லவற்றை
மட்டுமே பிரித்து எடுத்துக் கொள்ள அவனுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் துயரமான
வேளைகளில் சிரிப்பது எப்படி என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.
கண்ணீர் சிந்துவதில்
தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால்
எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும்
அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
நம் திறமையும்,
அறிவாற்றலையும் விற்பதில் தவறே இல்லை. ஆனால் அது நமது மனசாட்சியையும் ஆன்மாவையும் பயணம்
வைப்பதாக இருந்துவிடக்கூடாது என்பதை அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
பெருங்கும்பல் திரண்டு வந்து
கூச்சலிட்டாலும் நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து
போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை அளியுங்கள்.
அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக
செல்லம் கொடுத்து மற்றவர்களைச் சார்ந்திருக்க வைத்து விட வேண்டாம். ஏனென்றால் புடம்
போட்ட இரும்பு மட்டுமே மிகச் சிறந்ததாக மாறுகிறது. தவறு கண்டால் கொதித்து எழும்
துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அதே வேளையில் தனது வலிமையை மௌனமாக
வெளிப்படுத்தும் பொறுமையை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
அவன் தன் மீதே மகத்தான நம்பிக்கை வைக்க
வேண்டும். அப்போதுதான் நம்பிக்கை கொள்வான்.
இது மிகப் பெரிய சவால் தான் இருந்தாலும்
இதில் உங்களால் முடிந்ததையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுத்து விடுங்கள்.
அவன் மிகநல்லவன் என் அன்பு மகன்
ஆப்ரஹாம்
லிங்கன்
நன்றி
நன்றி நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!
2013-14
கல்வியாண்டு,கல்வித்துறை சிறப்பாக செயல்பட ஆணிவேராக இருப்போம்................
இவன்...
உதவி தொடக்க கல்வி அலுவலர்
சங்கம்
ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25
சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் (சி.இ.ஓ.) அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள்
இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பங்களைப்
பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் அதே அலுவலகங்களில்
சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் 25 சதவீத இடங்களை ஏழைகள், சமூக ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த ஒதுக்கீடு தொடர்பாக பெற்றோர்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த இடங்களுக்கு அதிகமானோர் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், தனியார் பள்ளிகளிடமும் இந்த விண்ணப்பங்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
எனவே, இந்த இடங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்பதோடு, மாணவர் சேர்க்கைக்கு இரண்டு வாரங்கள் கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் தவிர பிற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழைகள், சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த 25 சதவீத இடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) அறிமுக வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்.
இந்த விண்ணப்பத்தைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 26 May 2013
TIP'S FOR NEW AEEO FRIENDS
AEEO நண்பர்களே இனிய வணக்கம்....!!!
MIDDLE HM TO AEEO வாக பணிமாறுதல் மூலம் புதிய பொறுப்பு ஏற்கும் உங்களுக்கு உங்கள் பணி சிறக்க எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் .
AEEO பணி செம்மையாகத் தொடங்கிட
1. அலுவலகத் தலைவர் என்ற முறையில் காலையில் முதல் நபராக
அலுவலகத்திற்குச் செல்லவும் . மாலையில் கடைசி நபராக
அலுவலகத்தை விட்டு வெளியே வரவும்
2. அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும் போது MOVEMENT REGISTER
[ சலனப் பதிவேடு ] எழுதி விட்டு செல்லவும் .
3. யாரிடமும் அதிகம் பேசாமல் பணி மட்டுமே செய்யுங்கள் . பாராட்டுகள்
கூட ஒரு போதை. பாராட்டுக்கு மயங்காதீர்கள் .
4. பள்ளி பார்வை செல்லும்போது கட்டாயம் சொந்த வாகனம்
பயன்படுத்த வேண்டும் .
5. இதுவரை மதிய உணவை கையில் எடுத்துச் சென்றதைப் போலவே
இனிமேலும் எடுத்துச் செல்லுங்கள்
6. யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள் .
7. யார் மனதையும் காயப்படுத்தாமல் பணி செய்ய முயிற்சி செய்யுங்கள்.
8. AEEO பணி சிறக்க ECS போடக்கற்றுக்கொள்ளுங்கள்.
9. பணி செய்யும் போது TABLET வைத்துக்கொள்ளுங்கள் . புள்ளிவிவரம் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள் . புள்ளிவிவரம் கொடுப்பதில் நீங்கள் முதல் நபராக இருக்க உதவும் .
10. ஆசிரியர் இயக்கங்களில் பணிபுரிந்ததை மறந்து அனைத்து
ஆசிரியர்களுக்கும் பொதுவான அலுவலராக பணிபுரியுங்கள் .
வாழ்த்துக்கள் ..........!!!!!
AEEO ASSOCIATION

Subscribe to:
Posts (Atom)