Saturday, 24 August 2013

ஒரு வேண்டுகோள்

இனிய வணக்கம்
               AEEO நண்பர்களே...!! கல்வி சார் வலைபூ நண்பர்களே...!! கல்வி சார் முகநூல் நண்பர்களே..!! மீண்டும் வணக்கங்கள்.....!!
                    
                     ஒரு வேண்டுகோள்

1.பள்ளிகளை பார்வை செய்யும்போது எந்த மாதிரியாக பார்வையிட வேண்டும் என்ன பதிவேடுகளை பார்க்கலாம் கற்றல் கற்பித்தல் சார்பாக வகுப்பறை பார்வை பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

2.பள்ளி ஆண்டாய்வு செய்யும்போது எந்த மாதரியாக ஆண்டாய்வு செய்ய வேண்டும் என்ன என்ன பதிவேடுகள் பார்வையிட வேண்டும் ஆண்டாய்வு படிவம்  மாதிரி , AEEO பூர்த்தி செய்து DEEO விடம் சமர்ப்பிக்க எதுவாக படிவம், முதலிய வற்றையும் உங்கள் கருத்துக்களையும் முன்னால் இயக்குனர்கள் வழிகாட்டுதல் அரசு ஆணைகள் முதலியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்
          
                    முக்கிய அறிவிப்பு

       நண்பர்களே AEEO சங்கத்தில் அரசு ஆணைகளுக்கு சந்தேகம் தீர்க்க ஒரு குழு அமைத்துள்ளோம் 1. AEEO , 2. ஓய்வு பெற்ற CEO  , 3. ஓய்வு பெற்ற  DEEO 4.ஓய்வு பெற்ற DEEO (PA) 5. கண்காணிப்பாளர் 6. AEEO (ஓய்வு) ,7.HM 8.ஆசிரியர்   ஆகியோர்கள் கொண்ட குழு உருவாக்கி உள்ளோம் . உங்கள் சந்தேகங்களை எங்கள் E.mail முகவரிக்கு அனுப்புங்கள் உடன் பதில்களை எங்கள் blogspotல் (www.aeeoassociation.blogspot.in) உங்கள் கேள்வி – பதில் என்ற வகையில் பதில் கூற உள்ளோம் ஆகவே அனைவரும் பாடம் சார்பாகவும் அரசு ஆணைகள் சார்பாகவும் ஊதிய முரண்பாடுகள் சார்பாகவும் சந்தேகங்களை உடன் கேட்டு பயன் பெறுங்கள்.

இவண்,
சுந்தர்ராஜன்
(கௌரவத் தலைவர்)
அய்யாசாமி
(தலைவர் )
சௌந்தரராஜன
(பொதுச்செயலாளர்)
ஆரோக்கியம்
(பொருளாளர்)

                               AEEO சங்கம்

பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அரவணைப்பு தேவை

பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.
பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவனைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாய்மார்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்தகைய பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.
இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடுதல் கூடாது. அதே போன்று வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் தங்கள் வீட்டு பணிகளை செய்வதில் நேரத்தை செலவிடாமல், பெண் குழந்தைகளின் கவனிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.
குழந்தைகள் பள்ளிக்கும், டியூஷனுக்கு செல்லும் போது மற்றவர்களின் துணையை நாடுவது ஆபத்தை விளைவிக்கும். முடிந்தவரையில் பெண் குழந்தைகளை தாய்மார்கள் அழைத்துச் சென்று வருவது பாதுகாப்பாகும்.
பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. இதனால் தேவையற்ற மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு, எல்லா விஷயங்களையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பெண் குழந்தைகளை தன்னுடைய மகளாக நினைக்காமல் தோழியாக கருதி, அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு தாய்மார்களும் பெண் குழந்தையை பாதுகாத்து, அரவணைத்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் B

பொதுவாக நிதிப் பற்றாக்குறை என்றால் அது நடுத்தர குடும்பங்களுக்குத் தான் அதிகமாக ஏற்படும். ஏன் எனில், செல்வ செழிப்பான குடும்பங்களுக்கு மாத பட்ஜெட்  போட்டு செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.

கனவுகளிடம் கவனமாக இருங்கள்!

நாம் எதிர்காலத்தைப் பற்றி காணும் கனவுகளை நனவாக்குவதற்கு கடின முயற்சியும் அவசியம். எனவே, கனவை நனவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.
வாழ்நாளை யாராலும் அதிகப்படுத்த முடியாது. ஆனால் அர்த்தப்படுத்த முடியும். மேலும் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழப் போகிறார் என்பது தெரியாது, என்றாலும் நம்பிக்கையோடு எதிர்காலத்திற்கான கனவுகளை வளர்க்கிறோம். அவ்வாறன இலட்சியக் கனவுகளை எவ்வளவு விரைவில் நனவுகளாக மாற்றப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்.
கனவு காண்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடாமல் உங்களுக்குத் தேவையானது எது? தேவையற்றது எது? என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானம் செய்து கொள்வது மிக அவசியம்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களுடைய கனவுகளுக்கு மெருகேற்றும் விதமாக இருக்க வேண்டும். அத்தோடு, ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களுடைய கனவை நனவாக்கும் நோக்கில்  முன்னோக்கியே செயல்பட வேண்டும். சிலர் ஆண்டுதோறும் சில குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொண்டு அதை அடைவதற்கு உழைப்பார்கள். அது மிகவும் நல்லதுதான் என்றாலும், அத்தகைய குறிக்கோள் உங்களுடைய கனவுக்கு வலிமை சேர்ப்பதாகவும், கனவுகளை நனவாக்குவதற்கான செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டும்.
கனவு நனவாகும் வரை நீங்கள் கவனமாகவும், மென்மையாகவும் செயல்பட வேண்டும். எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் சாந்தமாகவும் அன்பாகவும் அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும். கோபப்படுவதும், எரிச்சலடைவதும் கூடவே கூடாது. அத்துடன் எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பதற்றப்படுவது போன்ற குணங்களை விட்டொழிக்க வேண்டும். அதற்கு உங்களை நீங்களே சுயதிறனாய்வு செய்து தேவையற்ற மனோபாவத்தையும் குணங்களையும் நீக்கி விடுங்கள்.
உதவி செய்தல், புன்னகை புரிதல், சாந்தமாகப் பேசுதல் போன்ற நற்பண்புகள் உங்களுடைய கனவை நனவாக்குவதற்கு நிச்சயம் உதவும். உங்களுடைய வாழ்வில் வரும் நல்ல சந்தர்பங்களை நழுவவிடாமல் நன்றாகப் பயன்படுத்தி உங்களுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்காட்டுங்கள். உங்களுடைய இலட்சியக்கனவு நிச்சயம் ஒரு நாள் நனவாகும்.

டி.என்.பி.எஸ்.சி., "திக்..திக்...'

ஏற்கனவே, குரூப் - 2 தேர்வில், கேள்வித்தாள், "லீக்' ஆன விவகாரம், சமீபத்தில், தர்மபுரியில், டி.இ.டி., தேர்வில் எழுந்த சர்ச்சை ஆகியவற்றால், டி.என்.பி.எஸ்.சி., "திக்..திக்...' நிலையில் உள்ளது.

sports


Current events

Friday, 23 August 2013

TIME TABLE FOR COMMUNICATIVE ENGLISH TRAINING(Primary) on 24.08.2013

வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி

தினமும் ஒரு குறள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இப்போதைய என்னுடைய அரசு அலுவலகத்தின் மாவட்டத் தலைமையகத்தில் பணியாற்றினேன். அந்தத் தலைமையகத்தில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பணி புரியும் நிலையில் இருந்தேன். தலைமை இடம் என்பதால் மாவட்டத்தின் கிளை அலுவலகங்கள் பலரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிடும். சென்னை அலுவலகத்தில் இருந்து புள்ளி விவரங்களை உடனுக்குடன் தரும்படி கேட்பேன். அதற்கான விவரங்களைச் சேகரித்து, ‘தொலை அச்சு’ மூலம் தரவேண்டியிருக்கும்.

இவ்வாறு அந்த அரசு அலுவலகத்தில் நானும் என்னைப் போன்ற அலுவலர்களும் மூச்சுவிட நேரமில்லாமல் பணி புரிந்தோம். அந்நிலையில்தான் எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. வேலை பரபரப்பை நிதானத்திற்குக் கொண்டுவர வேண்டும்; ஒரு பயனுள்ள விஷயத்தை செய்யவேண்டும் என்ற சிந்தனையில்தான் ‘அது உதித்தது. ஆமாம், தினமும் ஒரு குறளும் அதன் பொருளையும் ‘நோட்டீஸ் போர்டில்’ எழுத வேண்டும் என்பதுதான் அந்த எண்ணம். அதோடு பெரியவர்களின் (நேரத்திற்குத் தகுந்தாற்போல) பொன்மொழியையும் எழுத வேண்டும் என்றும் எண்ணினேன். நண்பர்கள் யோசனையை ஆமோதித்தனர். பிறகென்ன, ‘எண்ணம்’ நடைமுறைக்கு வந்தது.

இந்தக் குறளைப் பற்றி அனைவரும் ‘டிஸ்கஸ்’ செய்வோம். பரபரப்பான வேலைகளில் இந்தப் பணி மனநிறைவைத் தந்தது. உடன் பணிபுரிபவர்கள் திடீரென்று, ‘என்ன 2 நாளா லீவா?’ என்பார்கள். எப்படித் தெரியும் என்றால், ‘2 நாளா குறளைக் காணவில்லையே? ‘என்பார்கள். அந்த அலுவலகத்தில் இப்போது நான் இல்லையென்றாலும் அங்குள்ளவர்களால், ‘குறள் பணி’  தொடர்ந்து நடைபெற்றுவருவது அறிந்து பெருமகிழ்வு கொள்கிறேன்.

-எஸ். சாந்தி,காட்பாடி


கல்வியோடு காலை உணவு!

பள்ளிக்கு படிக்க வரும் ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு அளித்து வருகிறது சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி. அத்துடன் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியும் அளிக்கிறது.

தமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளிக்க அரசு திட்டம்தமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

மேல்நிலைக் கல்வி கற்க வரும் மாணவ, மாணவியரில் பலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் எழுத, படிக்க சிரமப்படுவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்தது. இதையடுத்து, அந்த வகை மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு, அதற்காக, செயல்முறை புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட கல்வித் துறையில் இருந்தும், தமிழாசிரியர்கள் மூன்று பேருக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களில், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு, செயல்முறை புத்தக பாட அடிப்படையில், பயிற்சியளிக்க உள்ளனர். இந்த சிறப்பு திட்டம், விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக, கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதிமொழிப் படிவம்

வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்காக மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தொடங்கியுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்களில் தவறுகளைக் குறைப்பதற்காக மாணவரின் பெயர், பிறந்த தேதி, ஜாதி உள்ளிட்ட விவரங்களைக் கோரும் உறுதிமொழிப்படிவத்தை மாணவர்களிடம் வழங்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் கே.தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
பூர்த்திசெய்யப்பட்ட உறுதிமொழிப் படிவங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7 வரை பெற்றோர் நேரில் ஒப்படைக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான உறுதிமொழிப் படிவங்களை வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை, ஆதார் அட்டை எண்: இந்த ஆண்டு முதல் முறையாக ரேஷன் அட்டை எண், ஆதார் கார்டு அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் கோரப்படுகின்றன. மாணவர்களின் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்யும்போது மீண்டும் அவர்களிடம் எந்த ஆவணங்களையும் கோர வேண்டியிருக்காது. பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது சில பெற்றோர்கள் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைத் தவறாக வழங்கி விடுகின்றனர். எனவே, மதிப்பெண் சான்றிதழிலும் இந்த விவரங்கள் தவறாக அச்சிடப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள விவரங்கள் மாணவர்களின் பெயர், பிறந்ததேதிக்கு முக்கிய ஆவணமாக உள்ளது. கல்லூரிகளில் சேரவும், வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும்போதும் இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றை சரிசெய்ய காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, பிழைகளில்லா மதிப்பெண் சான்றிதழை அச்சிடுவதற்காக சரியான விவரங்கள் அடங்கிய உறுதிமொழிப் படிவத்தைப் பெற்றோரிடம் இருந்து பெற வேண்டும் என தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் படிவத்தில் மாணவரின் பிறந்த தேதி மற்றும் ஜாதி உள்ளிட்ட விவரங்களை அந்தந்த சான்றிதழின்படி பூர்த்திசெய்து ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7 வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளித் தலைமையாசிரியர்களிடம் நேரில் வழங்க வேண்டும்.
இந்தச் சான்றிதழ்களைப் பெற இயலாத பெற்றோர் அவர்கள் அளிக்கும் உறுதிமொழி ஆவணத்தின் அடிப்படையில் மகன் அல்லது மகள் பிறந்த தேதி மற்றும் ஜாதி விவரங்கள் பதிவு செய்யப்படும் என தேவராஜன் தெரிவித்துள்ளார்.
விவரங்கள் ஆன்-லைனில் பதிவு: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் பதிவுசெய்யப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே பாஸ்வேர்டு வழங்கப்பட உள்ளது.
இந்த விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய பள்ளிகளுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் சரிபார்ப்புக்காக பள்ளிகளுக்கு அக்டோபர் மாதத்தில் அனுப்பப்பட உள்ளது.
 

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 புதிய ஆங்கில வார்த்தைகளாவது கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அரசுத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என இந்த ஆண்டு 3,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். அதோடு, ஏற்கெனவே ஆங்கில வழி வகுப்புகள் உள்ள 320 பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுத்தர பல்வேறு புதிய திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வகுத்துள்ளது.
முதல் கட்டமாக, இந்த மாணவர்களுக்கு ஆங்கில வழி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.24) பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களிடத்தில் தன்னம்பிக்கை வளர்க்கும் விதத்தில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்ப்பதற்கான எளிய முறைகள் இந்தப் பயிற்சியின்போது கற்றுத்தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்கில வழி வகுப்புகளைப் பொருத்தவரை ஆங்கில எழுத்துகள், வார்த்தைகளோடு வார்த்தை உச்சரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெறும் கரும்பலகையின் மூலம் மட்டுமே ஆங்கிலத்தைக் கற்பிக்காமல், விடியோ, ஆடியோ சி.டி.க்கள் மூலமும் மாணவர்களின் உச்சரிப்புத் திறன் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
24/08/2013  CRC english subject

Wednesday, 21 August 2013

கல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு

இனிய   வணக்கம் ,

                      வலை  பூ   நண்பர்களே ,  நீங்கள்  செய்யும்   பணி என்பது    வியக்கத்தக்கப்   பணி  .  இப்போது  யாரும்  பொது  வேலைக்கு   வருவதில்லை   எனக்   குறைபட்டு   கூறுபவர்களுக்கு   நான் கூறும் பதில் இதோ எந்த பணப் பலனும் இல்லாமல் இரவு பகல் பாராமல் விழிப்புணர்வு ஏற்படும் நம் கல்வி வலைபூ நண்பர்களைச்  சுட்டிக்காட்டுகிறேன் .

                    "பல மணி நேர உழைப்பு , இளைஞர் பட்டாளம் , அனைவரும் ஆசிரியர் பணி , இயக்கப் பணி , இரவில் BLOG,என வாழ்க்கைச் சக்கரம்"...
 
                      நீங்கள் தான் உண்மையான நாட்டுப் பற்றுடைய மனிதர் . வலைபூ  நண்பர்களே!கல்வி  என்பது மாணவர்களுக்குக் கற்றுக்  கொடுப்பது மட்டும் அல்ல ஆசிரியர் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுப்பது. மேலும் அரசு ஆணைகளைக் கற்றுத் தருவது , இயக்குனர் ஆணைகளை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்வது , அன்றைய கல்விச் செய்திகளை உடனுக்குடன் கூறுவது என நாமும் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் மகத்தான பணியைச் செய்கின்ற நாம் அனைவரும்  செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினத்தன்று சென்னையில் கூடுவோம். மேலும் மேலும் வலைபூ தரத்தை மேம்படுத்தி தமிழகத்தை முதல் மாநிலமாக்குவோம்.

                  முதல் முறையாக அனைத்து கல்வி   சார்ந்த வலைபூ நண்பர்கள்                                            
                                                 "செப்டம்பர் 5" 

                  டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் இடத்தில்  முதல் கூட்டத்தை நடத்துவோம் , முகம் பார்த்து பேசுவோம் , நெருங்கிய நண்பர்களாக மாறுவோம் , சமுதாயத்தை மாற்றுவோம் .

                                                                                                                            இவண்
                                                                                                                 இரா.கணேசன் ,AEEO,
                                                                                                                 எழும்பூர் சரகம் ,
                                                                                                                   சென்னை .

பெறுநர்
 கல்வி சார்ந்த வலை தளங்கள் ....
1. www.kalvisolai.com
2.www.tnkalvi.com
3.www,teachertn.com
4.www.tamilnaduasiriyar.com
5.www.padasali.nat.
6.www.mptnptf.blogspot.com
7.www.tnptfvirndhunagar.blogspot.in
8.www.chennaitnptf.blogspot.in
9.www.sstaweb,blogspot.in
10.www.asiriyarkudumbam.blogspot.in
11.www.tntam.blogspot.com.
12.www.tnasiriyararangam.blogspot..com
13.www.tamilagaasiriyar.com
14.www.taakkootani.blogspot.in
15.www.testfnagai.blogspot.in
16.www.voiceoftata.blogspot.in
17.www.testfinkilvelur.blogspot.in
18.www.tnstfcuddalore.blogspot.in.
19.www.teachersalem.blogspot.in
20.www.arivomarasanaigal.blogspot.com.
21.www.aeeoassociation.blogspot.in
22.www.testfnagai.blogspot.com
23.www.tnschools.co.infacebook
tnkalvl
sstateachers
asiriyarkural
tamilagaasiriyar
teacherskottanikrishnagiri
murugaselvarajan
ramasamy
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஸ்ரீவில்லிப்புத்தூர் 
ஜனநாயகம் ஜனநாயகம்   
tnptfmani
aasiriyar voice 
நடேசன் 
கிரிஜா AEEO 
முகநூளில் உள்ள ஆசிரியர் அனைவரும் 


நான் தொகுத்ததில் விடுபட்ட BLOG இருந்தால்  உடனே என்னுடைய E.Mail க்கு தெரிவிக்கவும் aeeoganesan@gmail.com
                                                        phone:   9750982287


இடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையில் உள்ளவர் தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750/- வழங்கியமைக்கு தணிக்கைக் குழு தடை விதிப்பு, ரூ.2800/- தர ஊதியம் பெறும் தேர்வுநிலை இ.நி.ஆசிரியர் ரூ.500/- சிறப்புப்படியாக பெற இயலாது, கூடுதலாக பெறப்பட்ட ஊதியத்தை அரசு கணக்கில் செலுத்த உத்தரவு

SCL EDN DEPT AUDIT OBJECTION FOR SG TEACHERS THOSE WHO OBTAIN SELECTION GRADE WITHIN 01.01.2011, THEY R NOT ELIGIBLE TO GET  RS.750/- AS PP  OTHER THAN ORDINARY GRADE REG AUDIT ORDER CLICK HERE

தற்போது 1.1.2011 -க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின்   17.5.2011 நாளிட்ட   கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம். 
தற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர் S.A.மற்றும்  P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின் படி பார்ப்போம்.

SPECIAL ALLOWANCE  பற்றிய   விளக்கம் :

          இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010. 

    இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர். 

பின்னர் 12.01.2011 இல் அரசாணை  23 இன் படி தனி ஊதியம்.

   இதில் பத்தி  4 - இல்   "  இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     மேலும் பத்தி 4 - இன் இறுதியில் " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்றும் உள்ளது. 

 சிறுவிளக்கம் உங்களுக்காக:

     இதில் குறிப்பிடப்பட்டுள்ள "சாதாரண நிலையில்" என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தணிக்கை தடை என்று பணத்தை திருப்பிகட்ட கூறுவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

      அதாவது 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் 5200-20200 +2800 இல் ஊதிய  நிர்ணயம் செய்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள் 1.1.2011 இல் தேர்வுநிலையை அடைந்திருந்தால் தனி ஊதியம் 750 பெற இயலாது என்பதாகவும், ஏனெனில் தனி ஊதிய அரசாணையில் சாதாரண நிலையில் என்று உள்ளது என தணிக்கையர்கள் கூறுகின்றனராம்.

இங்கு கொஞ்சம்  பொறுமையாக படியுங்கள்.

  S.A. வழங்கும்போது GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்தததால் இதனை பெற்றவர்களை பட்டியலிட்டால் 

1. 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்று தேர்வுநிலை முடிக்காதோர்.(சாதாரண     நிலை என்று வைத்துகொள்ளுங்களேன் )

2.  1.6.2009 -க்கு பின்னர் தேர்வுநிலை பெற்று  5200 - 20200 + தனி ஊதியம் 2800                 பெற்றுகொண்டிருப்போர்.

3.   இடைநிலை ஆசிரியர் தேர்வுநிலையினர் 9300-34800 + 4300 நிலையினர்.

4.   இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலையினர் 9300-34800 + 4500 நிலையினர்            
(அதாவது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களும் சிறப்பு படி பெற தகுதிடையவ்ர்கள் )
  
இதில் நாம் குறிப்பிட்டுள்ள வரிசை எண்  3 மற்றும் 4 இல் உள்ளவர்கள்  அரசாணை  23 இன் பத்தி 4 - இன் இறுதியில்உள்ள  " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும்  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் (தேர்வுநிலை மற்றும்   சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு) தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." வரிகளின்படி சிறப்புபடி தொடர்ந்து பெற தகுதி பெறுகின்றனர்.

இவர்களுக்கு தொடர்ந்துபெற தகுதி பெறுகின்றனர் என்றால், இவர்களைத்தவிர மேலும் சிறப்புபடி பெற்று வந்தவர்களுக்கு என்ன நிலை? 

   அவர்களுக்கு  "தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது." என்ற வரிகளையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பத்தி 4 இன் வரிகளை திரும்ப படியுங்கள்:

 பத்தி  4 - இல்   "  இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதில் சாதாரண நிலையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் 1.6.2009 -க்கு பிறகு  தேர்வு நிலை பெற்று 5200 - 20200 + 2800 இல் உள்ளவர்களுக்கு தனி ஊதியம் இல்லை என்கின்றனர். 

    இவர்களை தேர்வுநிலை பெற்றவர்கள் பட்டியலில் வைத்தால்,சிறப்புபடியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்ட தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுடன் இவர்களையும் இணைத்திருப்பார்கள் அல்லவா? அப்படி சிறப்பு படியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5200-20200+2800 பெறும்  தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இடம் பெறாததால் இவர்கள் தனி ஊதியம் பெறவே தகுதி பெற்றவர்கள்.

  இதுசார்ந்து நாமக்கல் கருவூல அலுவலர் கோரிய தெளிவுரைக்கு சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்கள் அளித்த பதிலை மீண்டும் படியுங்கள். 
thanks     
C.T.ROCKLAND, TRICHY, TAMILNADU, India

Tuesday, 20 August 2013

TET 17/08/2013 18/08/2013 key answer

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-

நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...

சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

E-டிக்கெட் முன் பதிவு
7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/

விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/

E-Payments (Online)
9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

10) mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/

11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/ https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/

12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html

14) Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/ http://trb.tn.nic.in/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/ .

இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/

கணினி பயிற்சிகள் (Online) 1) அடிப்படை கணினி பயிற்சி
tamil.gizbot.com
http://99likes.blogspot.com/
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
http://99likes.blogspot.com/

3) இ - விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/

பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/
http://freehoroscopesonline.in/horoscope.php

6) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி http://www.way2sms.com/

7) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம் http://www.youtube.com/
http://www.cooltamil.com/

இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.oneindia.co.in/
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/

10) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம் http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இணையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
www.software99likes.blogspot.com
http://www.filehippo.com/

வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/

அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdfhttp://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
தேவையான வெப்சைட்களை பயன்படுத்துங்கள் ! பயன்பெறுங்கள்