Saturday, 28 September 2013

எது உங்கள் பாதை?

என்ன படிக்க வேண்டும் என்பதே ஒரு அறிவுதான். என்ன படிப்புப் படித்தால் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும்? கை நிறைய சம்பளம் கிடைக்கும்? இவை போன்ற கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்துகொண்டே இருக்கும். என்ன படிப்புப் படிக்கலாம் என்பதில் மாணவர்களுக்குத் தெளிவான சிந்தனை இருப்பதில்லை. இன்னும் தேர்வே தொடங்கவில்லையே, மேற்படிப்பு குறித்துப் பின்னால் பார்ப்போம் என இருந்துவிட முடியாது. ஏனெனில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகிய நிலையங்கள் இன்னும் சில நாட்களில் சேர்க்கை விண்ணப்பங்களை விநியோகிக்கத் தொடங்கிவிடும்.
கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் இப்போது இருக்கும் கல்வி வாய்ப்புகள் குறித்து முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பொறியியல், மருத்துவம், வணிகவியல், கலைத்துறை, நுண்கலை, சிறப்புத் தொழில்நுட்பப் படிப்புகள் இவற்றைக் குறித்து இணையத்திலிருந்தோ கல்வி ஆலோசகர்களிடமிருந்தோ தெரிந்துகொள்ளலாம். ஏனெனில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடும் சமயத்தில்தான் நாம் ‘அந்தப் படிப்பைத்’ தேர்ந்தெடுத்திருக்கலாம் என்ற எண்ணம் வரும். இவற்றைத் தவிர்க்கக் கல்வி வாய்ப்புகள் குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம். பெரும்பான்மையானோர் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இது மாணவர்கள் செய்யும் பொதுவான தவறு. அவற்றை விட்டுவிட்டுத் தனித்தன்மையான தொல்லியல், நுண்கலை போன்ற படிப்புகளையும் தேர்வுசெய்யலாம். இது போன்ற துறைகளைத் துணிச்சலாக தேர்ந்தெடுத்தவர்கள் இன்று மனநிறைவுடன் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் மனநிலையையும் விருப்பத்தையும் அறிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் கப்பல் துறை போன்ற சில படிப்பு முடித்தவர்களுக்கு உள்நாட்டில் வேலை கிடைக்காது. வேறு சில படிப்பு முடித்தவர்களுக்கு வெளி மாநிலத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு இருக்கும். அதனால் தங்கள் ஊரைவிட்டு வெளியேறி வாழ முடியாத இயல்பு உள்ளவர்கள் இவற்றைத் தவிர்க்கலாம். நம் மாநிலத்தில் வேலை பெற்றுத்தரக்கூடிய படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதிக மதிப்பெண் கிடைக்கவில்லை எனக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம். அனைவரும் விரும்பிப் படிக்கும் துறைகளையே தேர்ந்தெடுப்பதால் நிகழும் போட்டியை இதன் மூலம் தவிர்க்கலாம்.
12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறோம். நம்மால் அகில இந்திய அளவிலான மத்திய அரசுத் தேர்வுகள் எழுத முடியாதா என்னும் தாழ்வு மனப்பான்மை சிலருக்கு இருக்கலாம். இதற்கு அவசியமே இல்லை. 12ஆம் வகுப்பில் குறைவாக மதிப்பெண்கள் பெற்றாலும் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பட்சத்தில் மத்திய அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்திய அளவில் கிட்டத்தட்ட 60 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சட்டக் கல்லூரிகள், கலை - அறிவியல் கல்லூரிகள், ஆராய்ச்சி, மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என நாட்டில் உள்ள சிறந்த அரசுக் கல்லூரிகளுக்கான தேர்வுகள் இவை. மாணவர்கள் இவற்றைக் கவனத்துடனும் நம்பிக்கையுடனும் பயன்படுத்திகொள்ள வேண்டும்.
படிப்பு என்பது நமக்கு நல்ல பண்புகளைக் கொடுக்கக்கூடியது. நல்ல பண்புகளில் தன்னம்பிக்கையும் முக்கியும். அந்தத் தன்னம்பிக்கையுடன் நம் விருப்பப் பாடமும் சேரும் பட்சத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதையே நம் ராஜபாட்டையாகும்.

'ஹைடெக்' ஆகிறது அரசு நடுநிலைப் பள்ளிகள்!

(கோப்புப் படம்)
(கோப்புப் படம்)
மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக மாவட்டந்தோறும் நான்கு அரசு நடுநிலைப் பள்ளி வீதம் மாநிலம் முழுவதும் 128 பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றை இணையதளம் மூலம் இணைக்கும் திட்டத்தை தொடக்க கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி மற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் புது முயற்சியாக அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தி, அனைத்து வகுப்புகளையும் அதில் ஒருங்கிணைத்து பயிலும் திட்டம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, மாவட்டந் தோறும் நான்கு அரசு நடுநிலைப் பள்ளி வீதம் மொத்தம் 128 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு இணையதளம் மூலம் இணைக்கப்பட உள்ளது. அவ்வாறு இணைக்கப்படும் பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்டந்தோறும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக் குழுவில் அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ்.ஏ.,) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ., மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், தலா இரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆர்வமுடைய பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இடம்பெறுவர்.
குழுவில் இடம்பெறும் ஆசிரியர்களுக்கு கணினி, விடியோ கான்பரன்சிங் மேற்கொள்வது போன்ற தொழில்நுட்பம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இணையதள வசதி இருக்க வேண்டும். போதிய இட வசதி, மின் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு மாநில தொடக்க கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
தவிர, அந்தந்த மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பள்ளியின் பெயர், முகவரி, கைப்பேசி விவரம் குறித்து வரும் அக்டோபர் 5-ம் தேதிக்குள் மாநில தொடக்கக் கல்வி இணை இயக்குநருக்கு (நிர்வாகம்) மின்னஞ்சல் (இ-மெயில்) செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் ராமராசு கூறியது:
தனியார் பள்ளிகளுக்கு நிகராக தொடக்கக் கல்வித் துறை முதன்முறையாக அரசு நடுநிலைப் பள்ளிகளை இணையதளம் மூலம் இணைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல், புதிய படைப்பாற்றல், குழுப் பணி (குரூப் டிஸ்கசன்) வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கம்.
அதே வேளையில் ஆசிரியர்கள் கலந்தாலோசித்து கற்பிக்கும் பணியை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமையும். அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் கணினி வழங்கி இணையதளம் மூலம் இணைத்தால் பள்ளி மாணவர்கள் தொடக்க கல்வி முதலே கணினி அறிவு பெற வாய்ப்பாக அமையும் என்றார்.

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி

சென்னை: அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்களிடையே, அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த வாரம், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தேர்வு செய்யப் பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியரை அழைத்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்த பயிற்சியை அளித்தது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாவட்டங்களுக்குச் சென்று, பிற ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிப்பர் என்றும், பின், செயல் விளக்கத்துடன், அடிப்படை அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்குவர் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, நேற்று, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்ககத்தின் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், தேவையான அளவிற்கு, அறிவியல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, செயல் விளக்கத்துடன், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில், ஆசிரியர்களுக்கு, எவ்வித சிக்கலும் ஏற்படாது" என்றார்.

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: "ஸ்லோ லேனர்ஸ்" பட்டியலிட உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை பட்டியலிட, சி.இ.ஓ., அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் சி.இ.ஓ.,வாக பொன்குமார் இருந்த போது, எஸ்.எஸ். எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, அம்மாணவ, மாணவிகளின் திறனை அறிந்து, அவர்களுக்கு தனித்தனி வகுப்புகள் நடத்தப்பட்டது. சிறப்பு ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகள், கூடுதல் வகுப்புகள், அலகு தேர்வுகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி சதவீதம் உயர்த்தப்பட்டது.
மாணவர்களுக்கு பள்ளியிலேயே காலை உணவு கூட வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், பொதுத்தேர்வில், ஈரோடு மாவட்டம் மாநில அளவில் வெற்றியை பெற்றது. அடுத்து வந்த சி.இ.ஓ., வை.குமார், இப்பணிகளுடன், மாதிரி வினாத்தாள் தயாரித்து வழங்குதல், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் என நடத்தி, அதே இடத்தை தக்க வைத்தார்.
இவரை தொடர்ந்து சி.இ.ஓ.,வாக இருந்த ஸ்ரீதேவி முயற்சியால், எஸ்.எஸ். எல்.ஸி., பொதுத்தேர்வில், 13 பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ப்ளஸ் 2 தேர்வில் அவர் ஆர்வம் காட்டாமல், கோட்டைவிட்டார்.
கடந்த ஆக., 19ல், சி.இ.ஓ.,வாக, அய்யண்ணன் பொறுப்பேற்றார். நடப்பு கல்வியாண்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சி.இ.ஓ., செய்து வருகிறார்.
பல பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை "ஏ, பி" போன்ற பிரிவிலும், சுமார் ரகம், மிகவும் குறைவாக படிப்போரை "சி, டி" என்ற வரிசையிலான வகுப்பிலும் படிக்க வைப்பதாகவும், சில பள்ளிகள் சுமாரான மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுபற்றி ஈரோடு சி.இ.ஓ., அய்யண்ணன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து, மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மதிப்பீடு செய்தோம். கற்றல் திறன் குறைவாக (ஸ்லோ லேனர்ஸ்) உள்ள மாணவர்களை பட்டியலிட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், நாட்குறிப்பில் குறிப்பிட்டு, அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பில் படிக்கும் அனைத்து திறன் கொண்ட மாணவர்களுக்கும் அவரவர் திறனுக்கு ஏற்ப, கூடுதல் கவனம் செலுத்தியும், சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்தும், கூடுதல் தேர்வுகள் நடத்தியும் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நடந்து முடிந்துள்ள காலாண்டு தேர்வு முடிவின்படி, இப்பட்டியல் தயாரித்து, ஒவ்வொரு மாதமும் அவர்களது முன்னேற்றம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி மற்றும் மாநில அளவிலான தேர்ச்சிக்கு வழி செய்யப்படும், என்றார்.

நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்

: மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து, வருகிற 30ம் தேதிக்குள் அனுப்ப, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தது 100 மாணவர்கள் பயில வேண்டும். கணிதத்தில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 26 September 2013

உயர்கல்வியை வீழ்ச்சியிலிருந்து மீட்க...

உயர்கல்வியை வீழ்ச்சியிலிருந்து மீட்க...

First Published : 26 September 2013 01:56 AM IST
அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று, உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி ஒன்று முதல் இருநூறு வரையிலான பல்கலைக்கழகங்களின் பெயரை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரும் இடம்பெறாதது இந்தியக் கல்வியாளர் ஒவ்வொருவரும் வெட்கப்படத்தக்கது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமையாசிரியர்கள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
பள்ளி மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும்போது உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதும், ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் மாணவர்கள் பயணம் செய்யும் நிலையும் உள்ளது. மாணவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இத்தகைய செயல்கள் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பதை இறைவணக்கக் கூட்டம் மற்றும் மாணவர் மன்றக் கூட்டங்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் அறுவுறுத்த வேண்டும்.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிவறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதிலும் தலைமை ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் டெங்கு போன்ற காய்ச்சல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் போதிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பழைய கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள், இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்கள் ஆகியவை இருந்தால், அவற்றை உடனே அகற்ற வேண்டும்.
பெற்றோர்-ஆசிரியர் கழகம் வாயிலாக தலைமையாசிரியர்கள் அவ்வப்போது மாணவர்களின் பெற்றோரை அழைத்துக் கூட்டம் நடத்த வேண்டும். அதில் பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவர் பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
இந்த அறிவுரைகளை பள்ளித் தலைமையாசிரியர்கள் பின்பற்றுவதை மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும்.
மாணவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு அலுவலர்கள் தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
இந்த ஊதியக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து இதன் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 7-வது ஊதியக் குழு மூலம் மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.
பொதுவாக ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்து, சம்பள உயர்வு அளித்து வருகிறது. இதை மாநில அரசுகளும் சில திருத்தங்களுடன் பின்பற்றி வருகின்றன.
தற்போதைய 7-வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை அளிக்க 2 ஆண்டுகாலம் அவகாசம் எடுத்துக் கொள்ளும். எனவே, 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிய ஊதியம் அமலுக்கு வரும்.
இந்த ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் குறித்து, சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2006 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.
காங்கிரஸ் தகவல் தொடர்புப் பிரிவு பொதுச் செயலாளர் அஜய் மக்கான் தனது டிவிட்டர் பதிவில், ""திறமைசாலிகள் அரசுப் பணிகளில் சேர்வதை ஊக்கப்படுத்தவேண்டும். அதற்கு ஊதியக் குழுக்கள் உதவுகின்றன.
2003-ல் பாஜக தலைமையிலான அரசு 6-வது ஊதியக் குழுவை அமைக்க மறுத்தது. ஆனால் அடுத்து வந்த காங்கிரஸ் அரசு 2005-ஆம் ஆண்டு 6-வது ஊதியக் குழுவை அமைத்தது. இப்போது 7-வது குழுவையும் அமைத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், ""ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுவது ஊழியர்களின் உரிமை. ஊதியக் குழுக்கள் பரிந்துரை செய்தால்தான் அரசால் அதை நிறைவேற்ற முடியும்'' என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள ஊழியர் சங்கம், ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 2011-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்தே அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர் மற்றும் பணியாளர் சங்கத்தின் தலைவர் கே.கே.என். குட்டி கூறுகையில், ""மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி புதிய விகிதத்தை 2001, ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிட வேண்டும்.
மேலும் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
ஊழியர்களுக்கான பல்வேறு படித் தொகைகளும் அடிப்படை சம்பளத்தின் விகிதாச்சாரத்தில் அமைவதால், அடிப்படை சம்பளம் உயர்வது படித் தொகைகளும் உயர்வதற்கு வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்து பயிற்சி

தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.
பள்ளிக் கல்வி இயக்குநரகம் மற்றும் தேசிய பங்குச் சந்தை செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி 8,9,11,12 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்கள் நிதி மேலாண்மை, சேமிப்பு, புத்திசாலித்தனமாகச் செலவு செய்தல் உள்ளிட்ட அத்தியாவசியமான விஷயங்களைக் கற்று வருகின்றனர்.
இந்தப் பயிற்சி மூலம் நடப்பாண்டில் (2013-14) 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் நிதி மேலாண்மை குறித்து அறிந்து வருவதாக தேசிய பங்குச் சந்தையின் முதன்மை வணிக வளர்ச்சி அதிகாரி ரவி வாரணாசி கூறினார்.
இந்த மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 25 வகுப்புகளோடு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூடுதலாக 6 வகுப்புகள் நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

ஏழாவது ஊதியக் கமிஷனுக்கு பிரதமர் ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் கமிஷனை அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்தார்.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசு செய்திக் குறிப்பில், ஏழாவது ஊதியக் குழுவுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஊதியக் குழுவின் தலைவர், உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2016 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பாக, தனது பரிந்துரைகளை அரசுக்கு ஏழாவது ஊதியக் கமிஷன் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பிறகு ஊழியர்களின் பலதரப்பட்ட அமைப்புகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி அறிவிப்பை வெளியிடும். இதற்கு ஒரு சில ஆண்டுகள் பிடித்தாலும், சம்பள உயர்வு மற்றும் புதிய சலுகைகள், ஜனவரி 1, 2016 முதல் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஏழாவது ஊதியக் கமிஷன் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம், நாடு முழுவதும் மத்திய அரசின் ஊழியர் மற்றும் பென்ஷன்தாரர்கள் சுமார் 80 லட்சம் பேர் பயன் பெறுவர். இவர்களின் பங்கு, அடுத்த வருடம் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பதால், அதை மனதில் வைத்து ஊதியக் கமிஷனை சற்று முன்னதாகவே அறிவித்துள்ளது என்று கருதப்படுகிறது.

படித்தால் மட்டும் போதுமா?

என் பயிற்சிப் பட்டறையில் மாணவர்களிடம் கேட்டேன்:" உங்களை அழைத்துச் செல்ல இரண்டு ஓட்டுனர்கள் வருகிறார்கள். ஒருவருக்கு கார் ஓட்டத்தெரியும். ஆனால் உரிமம் இல்லை. இன்னொருவருக்கு உரிமம் உண்டு; ஆனால் ஓட்டத்தெரியாது. யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?"
என்ன பதில் சொல்லி யிருப்பார்கள் என உங்களுக்கேத் தெரியும். இந்த புரிதல் வேலை தேடும் போது நம் மக்களுக்கு காணாமல் போய்விடுகிறது.
"என்ஜினீயரிங் படிச்ச என் மகனுக்கு 6000 ரூபாய்க்கு ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குது ...அதே நேரம் 12,000 ரூபாய் கொடுத்தும் என் காருக்கு ஒரு டிரைவர் கிடைக்க மாட்டேங்குது... என்ன உலகம் சார் ?" என்று அங்கலாய்த்தார் நண்பர்.
அவரே தொடர்ந்தார் : "எதுவும் கிடைக்கலேன்னு எம்.பி.ஏ சேரச் சொல்லிட்டேன்!"
எதுவும் கிடைக்காத பையன் எம்.பி.ஏ படித்து என்ன நிர்வாகம் செய்யப்போகிறார் என்று யோசித்தேன். இந்தியா இன்று வரலாறு காணாத மனித வள நிர்வாக சிக்கலில் உள்ளது.
ஒருபுறம், வேலை இல்லாத் திண்டாட்டம். மறுபுறம், தொழில்களுக்குத் தேவையான திறன்கள் இல்லாமல் கடும் பாதிப்பு.கல்வி உலகிற்கும் தொழில் உலகிற்கும் ஏழாம் பொருத்தம். இதில் துரித உணவு போல உடனடி தேவைக்கு மட்டும் கல்லூரிக்கு வரும் ஹெச்.ஆர்.தேர்வாளர்கள்!
மானாவாரியாக பொறியியல் கல்லூரிகள் திறந்து விட்டதில் பல கல்வி தந்தைகள் கல்லா கட்டியதுதான் மிச்சம். தகுதியில்லாத மாணவர்களைச் சேர்த்து, அவர்களை கொத்தடிமைகளைப் போல நடத்தி தன்னம்பிக்கையைத் தகர்த்து ஒரு மலட்டு சமுதாயத்தை உருவாக்கி வருகிறோம்.
ஆசிரியர்களின் நிலைமை இதை விட சோகம். மற்ற எந்த வேலையும் கிடைக்காத பொறியியல் படித்த மாணவன் இடைக்கால பிழைப்பிற்கு ஆசிரியராகிறான். ஆசிரியப்பணி ஒரு அறப்பணி. எந்த அறமும், ஆளுமையும், ஈடுபாடும் இல்லாமல் பணிக்கு வரும் ஆசிரியர் மாணவனைப் போலவே உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறான் .
மாணவர்களுக்கான "முன் மாதிரி" யாகத் திகழவோ, அவர்களின் கற்பனைக்குத் தீனி போடவோ, வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ சற்றும் தகுதியற்றவராக இவர்கள் இருக்கிறார்கள்.
கொடுத்த பாடத்தை நடத்தி, பாஸ் பண்ண என்னவெல்லாம் பண்ண முடியுமோ அதை செய்வதற்கு மட்டும் தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்பதும் உண்மை.மாணவர்கள் தேர்வில் தோற்றால் ஆசிரியருக்கு வேலை போகும் இங்கு. அதனால் தேர்வு பயம் அதிகம் இவர்களுக்குத் தான்!
இதனால் வாசிக்கும் பழக்கமோ, யோசிக்கும் பழக்கமோ இல்லாமல் கல்லூரியை விட்டு வெளி வருகிறார்கள் பெரும்பா ன்மையான மாணவர்கள். இவர்களின் முதல் உரைகல் அனுபவம் வேலை தேடும் அனுபவமே. படிக்காத தச்ச ருக்கும், ஓட்டுன ருக்கும், வண்ணப்பூச்சாளருக்கும் உள்ள நம்பிக்கையும், திடமும் படித்த பட்டதாரிகளிடம் இல்லை.
தொழிலாளர்களுக்கான தொழில் பயிற்சி மையங்கள் இங்கு மிகக் குறைவு. பொறியா ளர்களுக்கான கல்லூரிகள் அதிகம். இதனால் ஐ.டி.ஐ முடித்த பிள்ளைகளுக்கு உடனடியாக வேலை. பொறியியல் கல்லூரிகளில் படித்தோருக்கு பதில் ஒருவருக்கு தான் வேலை இங்கு. தேவை பற்றி எந்த யோசனையும் இல்லாமல் கல்வி வியாபாரம் செய்த களேபரம் தான் இந்த நிலைக்குக் காரணம்.
தவிர இங்கு வெள்ளை சட்டை வேலை என்பது தான் எல்லாருடைய கனவு!
" என் பையனை / பெண்ணை எப்படியாவது ஒரு என்ஜீனியர் ஆக்கி பாக்கணும். அவன் பெரிய ஐ.டி. கம்பனியில வேலை பாக்கணும்" என்று நினைக்கிற சாமானியர்கள் இருக்கும் வரை இந்நிலை நீடிக்கும்.
சரி, என்ன தான் தீர்வு?
பள்ளிகளில் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியர்க ளையும் இணைத்து கூட்டு ஆலோசனை அவசியம் !
வருங்கால தேவைகள் என்ன, எந்த வேலைகள் அடுத்த 5 ஆண்டுகளில் அதிகம் பெருகும் என்பதை மனித வள நிபுணர்களை அழைத்து கல்வி நிறுவனங்களும் அரசும் கலந்து பேசி , அதன் அடிப்படையில் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.
படிப்பு மட்டும் போதாது என்று உணர்ந்து திறன்களுக்கான பயிற்சிகளையும் பகுதி நேர பணி அனுபவங்களையும் மாணவர்கள் தேடிப் போக வேண்டும்.
எந்தெந்த வேலைகளுக்கு ஆட்கள் தேவை? கட்டுமான தொழிலுக்கு, எல்லாத்துறை விற்பனைக்கும், வாடிக்கையாளர் சேவைக்கும், கணினி பராமரிப்பு, துப்புரவுத்தொழிலுக்கு, ஆசிரிய ப்பணி, ஊடகத்துறை, மருத்துவ உதவிப்பணி, உளவியல் ஆலோசனை,விருந்தோம்பல் துறைகள்...எல்லா இடங்களிலும் ஆட்கள் தேவை! திறன்கள் உள்ளவர்கள் தங்கள் சம்பளத்தை தாங்களே நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கல்வித்தகுதியைப் பார்த்து வேலை தந்த காலம் போய், திறன்களைப பார்த்து வேலை கொடுக்கும் காலம் வந்துவிட்டது!
ஆட்களுக்கு வேலை தேவை. வேலைக்குத் தேவைப்படும் திறன்கள் கொண்ட ஆட்கள் இல்லை. இணைபிரியாத தண்டவாளங்கள் போலவே இந்த விகிதம் இருக்கிறது.
முதல் பத்தியில் நான் கேட்ட கேள்வியை மீண்டும் படியுங்கள்.
உங்கள் பதிலில் தான் இந்தியாவின் மனித வள மேம்பாட்டிற்கான விடை உள்ளது !
டாக்டர். ஆர். கார்த்திகேயன் - gemba.karthikeyan@gmail.com

Wednesday, 25 September 2013

AEEO WORKSHOP

                     DIRECTORATE OF ELEMENTARY EDUCATION CHENNAI-6
ONE DAY WORKSHOP FOR AEEOS
DATE: 24.09.2013                VENUE: Elementary Directorate  meeting hall
                                      PROGRAMME SHEDULE
TIME
SUBJECT
10.00 A.M TO 11.30 A.M
Workshop Inauguration –By Director of  Elementary Education
11.30 A.M TO 12.00 P.M
TEA BREAK
12.00 PM TO 1.40 PM
MOTIVATION SPEECH – JD AIDED
1.40PM TO 2.45 PM
LUNCH
2.45 PM TO 3.15 PM
GROUP DISCUSSION INTRODUCTION – JD ADMIN
3.15 PM TO 4.00 P.M
1.     Academic outcome  of children
           and  School  cleanliness
2.     Usage of materials in Schools
(Books, computers, science articles, Child playthings etc.
3.     Drop out Children-Present status-expectations –self-discipline of teachers
4.     Teacher’s involvement –capacity building of teachers by other resources. Making them visit other schools-teacher training
5.     AEEO Visit and Inspection   discussion including designing new format
6.     Directorate-DEEO’s Office and AEEO’s office functions-problems  and solutions - innovative things to be implemented
4.00 PM TO 4.15 PM
TEA BREAK
4.15 P.M TO 5.40P.M
Presentation of  topics discussed
by Each group
5.40 P.M TO6.00 P.M
FEEDBACK AND CONCLUSION OF WORKSHOP


குழந்தைகளுக்கான இணைய தளங்கள்

www.abckid.com
www.kidplanet.org
www.about.com
www.kidslone.com
www.kids.gov
www.kidsort.com
www.4kids.org
www.4kids.com
www.kidinfo.com
www.yucky.com
www.kidbookshelf.com
www.bonus.com
www.kidsdomain.com
www.bitg.com
www.volcano.org
www.ala.org
www.littlechicker.com
www.acbr.com
www.learning.com
www.edbriefs.com
www.wildbirds.com
www.fun.html
www.drawsquard.com
www.funsites.html
www.askjeeves.com
www.links.html
www.allcraft.com
www.kidsites.com
www.didyouknow.com

Sunday, 22 September 2013

திசைக் குழப்பம் வந்ததுண்டா?திசை அறிய மொபைல் மென்பொருள்AEEO MURALI CHENNAI

திசைக் குழப்பம் வந்ததுண்டா?திசை அறிய மொபைல் மென்பொருள்

உங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில்  கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது? தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா?. புதிய இடங்களுக்கு செல்லும்போது இந்தக் குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அந்த இடத்தில் வசிப்பவர்களை கேட்டுத்தான் திசை அறிய வேண்டி இருக்கிறது.  பகலில் சூரியனை வைத்து திசையை அடையாளம் கண்டு கொள்ள, முடியும் என்றாலும் சில நேரங்களில் சூரியன் சற்று மேலே இருந்தால்  திசைகளை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை.  சாலைகளை வைத்தே திசைகளை அறிய முற்படுவதால் சரியான திசை தெரிவதில்லை.
    புதிய ஊர் மட்டுமல்ல பழகிய சென்னையிலும்  திசை இன்னமும் குழப்பத்தான் செய்கிறது. குறிப்பாக வட சென்னையில் கிழக்கு திசையை வடக்கு என்றே நினைத்துக் கொள்வேன்.
உதாரணத்திற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என் கண்களுக்கு வடக்கு தெற்காக அமைந்திருப்பதாகத் தோன்றும் ஆனால் உண்மையில் அது கிழக்கு  மேற்காக அமைந்திருக்கிறது.
தாம்பரத்தில் இருந்து தெற்கு வடக்காக செல்லும் ரயில் பாதை(சற்றே வடகிழக்கு திசையில் செல்லும்) நுங்கம்பாக்கம் வரை  ரயில் நிலையங்கள் ஓரளவிற்கு வடக்கு தெற்காகவே அமைந்திருக்கும். நுங்கம்பாக்கத்திலிருந்து கிட்டத்தட்ட அரை வட்ட வடிவில் இருப்புப் பாதை திரும்பி கிழக்கு நோக்கி செல்கிறது. சாலைகள் போல உடனே திருப்பம் இல்லாததால் ஒரே திசையில் செல்வது போல் தோன்றி கண்களை ஏமாற்றுகிறது. 
   அதுபோல் சிறு வயதில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்  முகப்பு கிழக்கு நோக்கி அமைந்திருப்பதாக நினைத்துக் கொள்வேன். உண்மையில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இது தோற்றப் பிழை என்பதை அறிந்ததால் சரியான திசையை அறிவு சொல்லி விடுகிறது. 

  நமது மொபைலில் ஜி.பி.எஸ்  இருந்தால் அதைப் பயன்படுத்தி திசையையும் வழியையும் அறிந்து  கொள்ள முடியும். GPS வசதி இல்லாத மொபைல்களில் திசை அறிய  மென்பொருள் உண்டா தேடினேன்.
    ஜாவா எனேபில்டு கைபேசியாக இருந்தால் பயன்படுத்தக் கூடிய இலவச காம்பஸ் ஒன்று கிடைத்தது. இப்போது பெரும்பாலான கைபேசிகளில் Java இருப்பதால் இதை எளிதில் நிறுவ முடியும்.
இந்த அப்ளிகேஷன் மூலம் நமது கைபேசியையே திசைகாட்டும் கருவி போல் பயன்படுத்தி திசையை அறிந்து கொள்ள முடிகிறது. இதை
http://www.qcontinuum.org/compass/index.htm  என்ற முகவரியில் இருந்து
  • compass.jar (91K) என்ற பைல்களை டவுன்லோட் செய்து  செல்போனில் நிறுவிக் கொள்ளலாம். Games and Application Folder இல் காப்பி செய்தால் போதுமானது. இணைய இணைப்பு வசதி செல்லில் செயல்படுத்தி இருந்தால்  அதில் இருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.  நிறுவிய பின்னர் பயன் படுத்த இணைப்பு தேவை இல்லை.
   இதை இயக்கும்போது படத்தில் உள்ளவாறு காட்சி அளிக்கும்.
     கீழ்ப் பகுதியில் உள்ள Options வழியாக நேரமண்டலம்,வசிக்கும் இருப்பிடம் தேர்ந்தெடுக்கலாம். சென்னையாக இருந்தால் 15டிகிரி வட  அட்சத்திலும் 80.15 டிகிரி தீர்க்க ரேகையிலும் அமைந்திருப்பதை காண முடியும். கீழே என்  LG மொபைலில் காட்சி தரும் காம்பசைத் தான் பார்க்கிறீர்கள் .இந்த மொபைலில் கேம்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் சென்று( ஒவ்வொரு செல்லிலும் இது வேறுபடும்) compass இயக்கினால் இது போல தோற்றமளிக்கும். 
    இன்று (19.09.2013)  காலை 5.54 க்கு சூரியன் மற்றும் சந்திரனின் நிலை வானத்தில் இவ்வாறு அமைந்திருக்கிறது. ( படத்தில் சூரியன் மஞ்சள் நிறத்திலும் சந்திரன் வெள்ளை நிறத்திலும் உள்ளது. நிறத்தையும் மாற்றிக் கொள்ள முடியும் ) இதை வைத்துக் கொண்டு திசை எப்படி அறிவது என்கிறீர்களா? இதன் மூலம் திசை அறிய வானில் சூரியன் இருக்க வேண்டும். மொபைலில் காம்பசை  இயக்கி விட்டு வானில் சூரியன் இருக்கும் நிலைக்கு, மொபைலில் சூரியன் படம் பொருந்துமாறு மொபைலை திருப்பிக் கொள்ளவேண்டும். அல்லது நமது நிழலின் திசையில் நிழலோடு பொருந்தும்படி மொபைலைப் பிடித்துக் கொண்டால் மொபைலின் மேற்புறம் வடக்கு திசையைக் குறிக்கும். வானில் சூரியன் இருந்தால் நாங்கள் திசையை எளிதில் கண்டுபிடித்து விடுவோம் என்கிறீர்களா? காலையில் கிட்டத்தட்ட 11 மணிக்கு மேல் ஏறக்குறைய 3 மணி வரை சூரியன் இருந்தாலும் திசையை துல்லியமாக அறிவது புதியவர்களுக்கு கடினமாகவே இருக்கும். 

       நாம் பார்க்கின்ற நேரத்தில் வானத்தில் சூரியன் மற்றும் சந்திரன் எந்த இடத்தில்   இருக்குமோ அது போலவே மொபைல் காம்பசிலும் சூரியன் சந்திரனும் அதே நிலையில் அமைந்திருக்கும்.

    உதாரணமாக இன்று காலை 5.50 மணி அளவில் சூரியனும் சந்திரனும் காம்பசில் இப்படித்தான் இருந்தது.



        மாலையில் சுமார் 6 மணி அளவில் வானில் உள்ளது போலவே சூரியன் சந்திரன் இடம் மாறி இருக்கும். இந்தக் காம்பஸ் நாம் பார்க்கின்ற நேரத்தில் சூரிய சந்திர நிலையை அப்படியே காட்டும்.



      மேலுள்ள படத்தில் சந்திரன் இல்லை. அப்படி என்றால் நம் பார்வைப் பரப்பில் சந்திரன் இல்லை என்று அர்த்தம். ஒவ்வொரு நிலையிலும் சூரியன் சந்திரனின் azimuth, altitude கோணங்கள் மற்றும் பல தகவல்களை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 
      இலவச ஜாவா அப்ளிகேஷனான இதன் சோர்ஸ் கோடையும் டவுன் லோட் செய்து கொள்ளலாம்.( ஜாவா நிரல் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.)

      இதை  மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு உபயோகமாய்த்தான் இருக்கிறது. 

      தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

      நேரமும் இடமும்[தொகு]

      இடம்:
      TAG அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
      வழி:
      • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
      • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.
      நேரம்:
      • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
      • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
      பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.
      நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.

      ஏதாவது எடுத்து வர வேண்டுமா?[தொகு]

      உங்கள் மடிக்கணினி, Data card, படம்பிடி கருவிகளைக் கொண்டு வந்தால் பயிற்சிகளில் பங்கெடுக்க உதவியாக இருக்கும். எனினும், இவற்றைக் கொண்டு வருதல் கட்டாயம் இல்லை.

      நிகழ்ச்சி நிரல்[தொகு]

      நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
      • புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்
        • தமிழ்த் தட்டச்சு
        • தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
        • விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல்
        • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
      • ஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்
        • சிறப்பாக பரப்புரை செய்வது எப்படி?
        • சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி?
        • தானியங்கிகள் பயன்படுத்துவது எப்படி?
        • சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?
      மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
      • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
      • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
      • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
      • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
      • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
      • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
      • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
      • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
      • நன்றியுரை (3 நிமிடங்கள்)
      சிற்றுண்டி, தேநீர் வழங்கி நிகழ்வு நிறைவு பெறும்.

      சமூக வலைத்தளப் பக்கங்கள்[தொகு]

      வழிசெ

      தொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால், அதை தவிர்க்க கைபேசியை அணைத்து வைக்க இயக்குநர் உத்தரவு

      மாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீதம் 32 AEEOக்களுக்கு 24.09.2013 அன்று ஒரு நாள் பணிமனை தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

      மாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீதம் 32 AEEOக்களுக்கு 24.09.2013 அன்று ஒரு நாள் பணிமனை தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

      பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அனுமதி




      "எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்கவும், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டுமான வசதியை ஏற்படுத்தவும் ஒதுக்கீடு செய்யலாம்' என, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது..


      பார்லிமென்ட் உறுப்பினர்கள், தங்கள் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு எம்.பி.,க்கும், ஆண்டுதோறும், 5 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு எம்.பி.,யும், தன் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். லோக்சபா எம்.பி.,க்களுக்கு, அவர்கள் சார்ந்துள்ள தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய முடியும்.
      ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரிந்துரைக்கலாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளில், எந்தெந்த பணிகளுக்கு, பரிந்துரை செய்யலாம் என்பது ஏற்கனவே வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், புதிதாக, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி போன்ற மரச்சாமான்களை வாங்க பரிந்துரை செய்யலாம். ஆரம்பப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், மேஜை, நாற்காலிகள் வாங்க பரிந்துரை செய்யலாம். இந்த வகையில், ஆண்டொன்றுக்கு, 50 லட்சம் ரூபாய் அனுமதிக்கலாம். அதிலும் ஒரு பள்ளிக்கு, ஆயுட்கால அதிகபட்ச அளவு, 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுமதிக்க முடியும். அதே போல், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டடம் போன்ற கட்டுமான வசதிகளை ஏற்படுத்த பரிந்துரை செய்யலாம். ஆனால், எம்.பி.,யோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ, அந்த சங்கத்தில் உறுப்பினர்களாகவோ, நிர்வாகிகளாகவோ இருக்கக் கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.