மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் கமிஷனை அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்தார்.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசு செய்திக் குறிப்பில், ஏழாவது ஊதியக் குழுவுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஊதியக் குழுவின் தலைவர், உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2016 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பாக, தனது பரிந்துரைகளை அரசுக்கு ஏழாவது ஊதியக் கமிஷன் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பிறகு ஊழியர்களின் பலதரப்பட்ட அமைப்புகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி அறிவிப்பை வெளியிடும். இதற்கு ஒரு சில ஆண்டுகள் பிடித்தாலும், சம்பள உயர்வு மற்றும் புதிய சலுகைகள், ஜனவரி 1, 2016 முதல் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஏழாவது ஊதியக் கமிஷன் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம், நாடு முழுவதும் மத்திய அரசின் ஊழியர் மற்றும் பென்ஷன்தாரர்கள் சுமார் 80 லட்சம் பேர் பயன் பெறுவர். இவர்களின் பங்கு, அடுத்த வருடம் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பதால், அதை மனதில் வைத்து ஊதியக் கமிஷனை சற்று முன்னதாகவே அறிவித்துள்ளது என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment