முப்பருவமுறையின் கீழ் இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற தனியார் விண்ணப்பிக்கலாம் என, மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
Thursday, 19 September 2013
Wednesday, 18 September 2013
மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால், "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் அதிகளவில் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால், படிப்பில் கவனம் சிதறி அக்கறை குறைகிறது; வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது சில மாணவர்கள் எஸ்.எம்.எஸ். பரிமாற்றம் மற்றும் போனில் உள்ள விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். கடந்த 2009ல் இதுதொடர்பான புகார் எழுந்தபோது, கல்வித்துறை வெளியிட்ட சுற்றிக்கையில், "பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல்போன் கொண்டு வரக்கூடாது; பயன்படுத்தக் கூடாது," என அறிவுறுத்தியிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்ததால், பள்ளிகளில் மொபைல்போன் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால், கல்வித்துறை இயக்குனரகம் பள்ளிகளுக்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், "பள்ளியில் மாணவர்கள் மொபைல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால், வகுப்பு ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர், அதை வாங்கி வைத்திருக்க வேண்டும். மாணவன் அல்லது மாணவி, வகுப்பு முடிந்து செல்லும்போது எச்சரித்து போனை கொடுக்க வேண்டும். மீண்டும் அதே மாணவன் அல்லது மாணவி மொபைல்போன் பயன்படுத்தினால், பெற்றோரை அழைத்து கண்டித்து நடவடிக்கை எடுக்கலாம்" என தெரிவித்துள்ளது. கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மொபைல்போன் வாங்கி தரும் பெற்றோர், அதை பள்ளிக்கு கொண்டு செல்லக்கூடாது என பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மொபைல் போன் பிடிபட்டால், பாதுகாப்பு கருதி வாங்கிக் கொடுத்ததாக, பெற்றோர் கூறுகின்றனர். கேமரா, "புளூடூத்" வசதி கொண்ட மொபைல்போன், தவறான பழக்கங்களை கற்றுத்தருகின்றன. மொபைல்போன் வைத்திருக்கும் மாணவர், முதல் முறை எச்சரிக்கப்படுவார். மீண்டும் அதே தவறு செய்தால், உயரதிகாரிகள் அனுமதியுடன் "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய பாடத்திட்டத்தால் பாதிப்பு
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்) பாடத்திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
புதிய பாடத்திட்டம்
தமிழக அரசில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி முதல் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிகள் வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு போட்டித் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வுசெய்து வருகிறது.
கடும் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் அரசுப் பணிகளுக்கு திறமையான ஊழியர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. அண்மையில் மாற்றியமைத்தது. பழைய பாடத்திட்டங்கள் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்டதுடன் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் ரீசனிங் என்று அழைக்கப்படும் நுண்ணறிவுத்திறன் தொடர்பான புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டது.
நுண்ணறிவுத்திறன் பகுதி
வழக்கமாக, வங்கித் தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில்தான் ரீசனிங் பகுதி இருக்கும். படங்கள், அறிவாற்றலை சோதிக்கும் இந்த பகுதி என்றாலே பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு சற்று நடுக்கம்தான். இந்த பகுதிக்கு பயந்தே வங்கி, ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் தேர்வுகளை தவிர்க்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் அதிகம். இத்தகையோர் பெரிதும் நம்பியிருப்பது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைத்தான்.
அரசு பள்ளிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த, கடினமாக உழைக்கக் கூடிய, பெரிய பயிற்சி நிறுவனங்களில் அதிக பணம் செலவழித்து படிக்க இயலாத நிலையில் உள்ள பல கிராமப்புற மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தமிழக அரசுப் பணிகளில் சேர்ந்தனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு
இந்தச் சூழ்நிலையில், குருப்-1, குருப்-2, குருப்-4, கிராம நிர்வாக அதிகாரி தேர்வு என அனைத்து தேர்வுகளிலும் நுண்ணறிவுத்திறன் என்ற பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. சேர்த்தது. வெறும் எழுத்துத்தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பணிக்கு தேர்வு செய்யப்படும் குருப்-4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் இந்த பகுதியில் இருந்து 25 வினாக்கள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 37.5 மதிப்பெண் கிடைக்கும். எனவே, தேர்வில் தேர்ச்சியை நிர்ணயிப்பதில் இந்த பகுதிக்கு முக்கிய பங்கு உண்டு.
இதேபோல், முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு கொண்ட குருப்-2, குருப்-1 தேர்வுகளிலும் ரீசனிங் பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதற்கு கணிசமான மதிப்பெண் ஒதுக்கப்பட்டு இருப்பதால் இந்த பகுதியில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு செல்ல முடியாது. ரீசனிங் பகுதியை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தின்படி, 5,566 காலி பணி இடங்களை நிரப்ப கடந்த மாதம் குருப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள், தமிழ் தாள், பொது அறிவு பகுதிகளில் நல்ல முறையில் விடை அளி்த்ததாகவும் ரீசனிங் பகுதி வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க இயலவில்லை என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
அரசுக்கு கோரிக்கை
துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், தலைமைச் செயலக பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த தேர்வும், புதிய பாடத்திட்டத்துடன் நடைபெற உள்ளது. இந்த இரு தேர்வுகளின் முடிவு வெளியாகும்போது பாதிப்பின் உண்மை நிலவரம் தெரியும்.
கிராமப்புற மாணவர்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு ரீசனிங் பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம். அல்லது ரீசனிங் பாடத்திட்டத்தை எதிர்கொள்ள கிராமப்புற மாணவர்கள் தயாராக வேண்டும். இதில் எது நடந்தாலும் விரைவாக நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கை
மத்திய அரசின் கீழ் செயல்படும் வித்யா சமிதி பள்ளியில் 6ம் வகுப்பு சேர்வதற்கு நடைபெறும் நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்
அரசு துறை தேர்வுகள் அறிவிப்பு
சென்னை:டிசம்பர் மாதம் நடக்க உள்ள, அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.அரசு பணிகளில் உள்ளவர்களும், அரசு பணிகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களும், துறை தேர்வுகளை எழுதலாம். ஆண்டுதோறும், ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில், துறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, டிசம்பரில் நடக்கும் துறை தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அக்., 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். "டிசம்பர், 23ம் தேதி முதல், 31ம் தேதி வரை - 25ம் தேதி தவிர, தேர்வுகள் நடக்கும்' என, தேர்வாணையம் அறிவித்து உள்ளதுDEPARTMENTAL EXAMINATIONS-Online Registration
Current Online Registration for... (Click to Apply Online) | Notification | Current Status |
Departmental Examinations December 2013 | Tamil | English | Online up to 15 Oct 2013 |
Tuesday, 17 September 2013
கேள்வி பதில்
|
Sep 15 (2 days ago)
| |||
|
1. சார் வணக்கம்!
எனது தலைமை ஆசிரியை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து
பி.லிட் பட்டப் படிப்பின் மூலமாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி
உயர்வு பெற்று வந்தவர்.
அதன் பிறகு பி.எட். பட்டப்படிப்பையும் முடித்து ஊக்க ஊதியம்
பெற்ற நிலையில் தற்போது அதைத் திருப்பிக் கட்ட சொல்கிறார்கள்.
ஏனென்றால் பி.லிட் முடித்து பதவி உயர்வு பெற்றவருக்கு
பி.எட்.க்கு ஊக்க ஊதியம் இல்லையாம்.
தயவு கூர்ந்து இந் நிலையைத் தெளிவாக்க வேண்டுகிறேன்.(மொத்தத்தில்
அவர் இரண்டு ஊக்க ஊதியத்தைத் தாண்டவில்லை).
இருக்கும் பட்சத்தில் அரசாணை எண்ணையும் குறிப்பிட வெண்டுகிறேன்.
எனது தலைமை ஆசிரியை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து
பி.லிட் பட்டப் படிப்பின் மூலமாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி
உயர்வு பெற்று வந்தவர்.
அதன் பிறகு பி.எட். பட்டப்படிப்பையும் முடித்து ஊக்க ஊதியம்
பெற்ற நிலையில் தற்போது அதைத் திருப்பிக் கட்ட சொல்கிறார்கள்.
ஏனென்றால் பி.லிட் முடித்து பதவி உயர்வு பெற்றவருக்கு
பி.எட்.க்கு ஊக்க ஊதியம் இல்லையாம்.
தயவு கூர்ந்து இந் நிலையைத் தெளிவாக்க வேண்டுகிறேன்.(மொத்தத்தில்
அவர் இரண்டு ஊக்க ஊதியத்தைத் தாண்டவில்லை).
இருக்கும் பட்சத்தில் அரசாணை எண்ணையும் குறிப்பிட வெண்டுகிறேன்.
பதில்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்வித் தகுதி பி.எட் ஆகும். ஆனால் தமிழ் படிதததால் சிறப்பு முன்னுரிமை காரணமாக பி.எட் படித்ததாக கருத்தில் கொண்டு ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப் படுவதால் அதற்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப் படுவதில்லை.
2)
|
4:05 PM (22 hours ago)
| |||
|
ஐயா, வணக்கம்.
எனக்கு ஒரு சந்தேகம்.தெளிவுபடுத்துவீர்களா?
1.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இடலாமா?
2.பச்சை நிற மையை பயன்படுத்தலாமா?
கே.ரங்கநாதன் த.ஆ
திருப்பூர்.
எனக்கு ஒரு சந்தேகம்.தெளிவுபடுத்துவீர்களா?
1.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இடலாமா?
2.பச்சை நிற மையை பயன்படுத்தலாமா?
பதில்
1. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இட விதிகளில் அனுமதி இல்லை
2, பச்சை நிற மை பயன்படுத்தக் கூடாது
*******************************************************************************************
*******************************************************************************************
Monday, 16 September 2013
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது . . .
பெற்றோரின் வளர்ப்பை குழந் தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஏனெனில் குழ ந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்ப டும் வகையில் நடந்து கொண் டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர் ப்பு என்று தான்.
அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனை வரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டி யது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங் களை பின் பற்ற வைக்க வேண்டும்.
அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.
ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும்.
எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லி க் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன் மைகளையும் வெளிப்படையாக புரியு மாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின் பற்றுவார்க ள்
இருமுறை பல் துலக்குதல்..
நிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப் படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்துவிடுங்கள்.
அதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர் களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதா ல் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைக ளைச் சொன்னால், அவர்களே தின மும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்க ளை தேடி வருவார்கள்.
அடித்து எழுப்ப வேண்டாம்…
நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழு ப்பி விடுவார்கள்.
உண்மையில் அவ்வாறு எழுப்புவ து நல்ல பழக்கமல்ல. சொல்லப் போனால் அது அவர்களது உடலுக் கு கெட்டதைத்தான் விளைவிக்கு ம். எப்படியெனில், சிறு குழந்தைக ளுக்கு 8-9 மணி நேரத்தூக்கம் மிக வும் இன் றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்துஎழுப்ப வேண்டாம் . அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்கவிடக்கூடாது . இல்லாவிட் டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்க மாகி விடும்.
சாப்பிடும் பழக்கம்…
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்ப டி உட்கார்ந்து சாப்பிட வேண் டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்ப டி உட்கார்ந்து சாப்பிட வேண் டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
சுத்தம் செய்தல்…
குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
உதாரணமாக, பால் குடிக்கும்போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக் கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப் படுத்த வேண் டும்.
மரியாதை…
குழந்தைகளுக்கு தவறாமல் கற்று க் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது, ’நன்றி’ மற்றும் ‘ தயவு செய்து’ போன்ற மரியாதை யான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பகிர்ந்து கொள்ளுதல்…
பகிர்ந்து கொள்வது என்பது ஒருவித மான சந்தோஷம். ஆனால் தற்போது ள்ள குழந்தைகள் இதனை செய்வதில் லை. மேலும் தற்போதைய பெற்றோர் கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்க ளுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொட க்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்று க் கொடுக்க வேண்டும்.
பொறுப்பு…
சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடு க்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செல விற்கு பணம் பொடுத்தால், அதை சேமி த்து வைத்து, தேவையான பொருட்க ளை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும்.
இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.
ஆரோக்கிய உணவுகள்…
தற்போதுள்ள குழந்தைகளுக்கு பிட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறுவயதிலேயே வாங் கிக் கொடுத்து பழக்கி விட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற் காலத்தில் ஆரோக் கியமற்ற உடலைப் பெற்றிருப்பார்கள்.
ஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத் துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.
அளவான டிவி, அதிகமான விளை யாட்டு…
குழந்தைகளை சுத்தமாக டிவி பார் க்கவே கூடாது என்று சொல்லக் கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விட க் கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம்.
குழந்தைகள் பள்ளியைவிட்டு வந்ததும் அவர்களுக்கு சாப்பிட சுண் டல், போன்றவைகள் கொடுங்கள். பின்பு அவர்களை விளையாட அனுப்பி வையுங்கள். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
நல்ல பழக்கம்..
பொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழு து கண்டித்து, அதனை குப்பைத்தொட்டியி ல் போடவேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின்மீது அக்கறை கொ ண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டு வார்கள்.
உதவி…
சற்று பெரிய குழந்தைகளாக இருந் தால், நீங்க ள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத் து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம்.
சரியான படுக்கை நேரம்
குழந்தைகளுக்கு தினமும் இரவில் 9 மணிக்குள் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். காலை 6 மணிக்குள் எழுந்து கொள்ள அவர்களை பழக்கி விடுங்கள். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்க ள்..
Apply for CPL training
The Indira Gandhi Rashtriya Uran Akademi, Rae Bareli, of the Union government has invited applications for admission to the 18-month Commercial Pilot Licence (CPL) training course starting in March. There are 75 seats — 11 reserved for those belonging to the Scheduled Castes, six for applicants from the Scheduled Tribes and 21 for Other Backward Classes.
Those who have passed Plus Two with at least 55 per cent marks (50 per cent for the reserved categories) in aggregate in Mathematics and Physics may apply. Applicants should have completed the age of 17 at the time of joining the course. Selection is through a written test, an interview and a pilot aptitude battery and psychometric tests.
The written test will be held in Hyderabad, Delhi, Mumbai, Rae Bareli and Kolkata on November 17. The test will be of the Plus Two level, with objective-type questions from General English, Mathematics, Physics, reasoning and current affairs. The result will be published on November 28.
Interview will start on December 16 and its result will be announced on December 28. The pilot aptitude battery and psychometric tests will start on January 21. The final rank list will be published on January 30. The application fee of Rs. 6,000 should be paid through a demand draft drawn in favour of the Akademi, payable in Rae Bareli. Those belonging to the Scheduled Castes and the Scheduled Tribes need not pay the fee.
Download application form and details from www.igru.gov.in. The form should be filled in capital letters. Send it, along with the fee and other documents, to the Director, Indira Gandhi Rashtriya Uran Akademi, Fursatgenj Airfield, Rae Bareli, Uttar Pradesh – 229 302 so as to reach there on or before October 15. Admit cards will be sent by October 30. The fee of Rs. 32.5 lakh, plus taxes at 12.36 per cent, should be paid in four quarterly instalments. Another Rs. 1 lakh should be paid towards the cost of uniform, study materials, a navigation computer, headphones and examination and licence fees of the Director General of Civil Aviation. Mess and hostel fees come to about Rs. 8,000 a month. Students can exercise their option for the B.Sc. Aviation course. Visitwww.igrua.gov.in for details.
Those who have passed Plus Two with at least 55 per cent marks (50 per cent for the reserved categories) in aggregate in Mathematics and Physics may apply. Applicants should have completed the age of 17 at the time of joining the course. Selection is through a written test, an interview and a pilot aptitude battery and psychometric tests.
The written test will be held in Hyderabad, Delhi, Mumbai, Rae Bareli and Kolkata on November 17. The test will be of the Plus Two level, with objective-type questions from General English, Mathematics, Physics, reasoning and current affairs. The result will be published on November 28.
Interview will start on December 16 and its result will be announced on December 28. The pilot aptitude battery and psychometric tests will start on January 21. The final rank list will be published on January 30. The application fee of Rs. 6,000 should be paid through a demand draft drawn in favour of the Akademi, payable in Rae Bareli. Those belonging to the Scheduled Castes and the Scheduled Tribes need not pay the fee.
Download application form and details from www.igru.gov.in. The form should be filled in capital letters. Send it, along with the fee and other documents, to the Director, Indira Gandhi Rashtriya Uran Akademi, Fursatgenj Airfield, Rae Bareli, Uttar Pradesh – 229 302 so as to reach there on or before October 15. Admit cards will be sent by October 30. The fee of Rs. 32.5 lakh, plus taxes at 12.36 per cent, should be paid in four quarterly instalments. Another Rs. 1 lakh should be paid towards the cost of uniform, study materials, a navigation computer, headphones and examination and licence fees of the Director General of Civil Aviation. Mess and hostel fees come to about Rs. 8,000 a month. Students can exercise their option for the B.Sc. Aviation course. Visitwww.igrua.gov.in for details.
போரடிக்காமல் இருக்க சில வழிகள்!
இன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தை “போரடிக்கிறது” என்பதாக இருக்கிறது. எதுவும் அவர்களுக்கு சீக்கிரமே போரடித்துப் போகிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருப்பதாக அவர்கள் நினைக்கும் விஷயங்கள்கூடக் காலப்போக்கில் போரடிக்கும் விஷயங்களாக மாறி விடுகிறது. சொல்லப் போனால் பழையவை எல்லாம் போரடித்துப் போகும் சமாச்சாரங்களாக மாறி விடுகிறது. எப்போதும் எதையும் புதிது புதிதாகப் பெறுவதும் சில நாட்களிலேயே அதையும் மாற்றி அதை விடப் புதிதாக ஒன்றைப் பெறுவதும் போரடிக்காமல் இருக்க அவசியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு போரடிப்பது ஒரு தாங்க முடியாத நிலையாக இருக்கிறது.
புதிது புதிதாகப் பொருள்களும், அனுபவங்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த மனநிலை யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வரக்கூடியதல்ல அல்லவா? அதனால் போரடிப்பது என்பது அவர்களுக்கு அவ்வப்போது தவிர்க்க முடியாத மனநிலையாக மாறி விடுகிறது.
யார்க் பலகலைக்கழகத்தின் உளவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜான் ஈஸ்ட்வுட் (Dr.John Eastwood) தலைமையில் நடந்த ஓர் ஆராய்ச்சியில் போரடிப்பதற்குக் காரணமான மனநிலைகள் ஆராயப்பட்டன. மனதின் எண்ணங்களும், உணர்வுகளும் சரி, வெளியே நடக்கும் நிகழ்வுகளும் சரி, கவனம் முழுமையாக செலுத்த உகந்ததாக இல்லை என்று மனிதர்கள் நினைப்பது தான் போரடிக்க முக்கியக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஈடுபட்டிருக்கும் எந்த நடவடிக்கையும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை, அதில் ஈடுபடுவது திருப்திகரமாகவும் இல்லை என்று மனிதன் உணரும் போது போரடிக்கிறது என்கிறான் என்று அந்த ஆராய்ச்சி சொல்கிறது.
அதனால் போரடிக்கும் போது மனிதன் தன் கவனத்தைப் போதுமான அளவு எதிலும் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறான். இருக்கிற சூழ்நிலையும், ஈடுபடுகின்ற செயலும் பிடித்தமானதாக இல்லை. ஆனால் அதற்குக் காரணம் தான் அல்ல, வெளியுலகம் தான் என்று மனிதன் நினைக்கிறான். இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது தன் கையில் இல்லை என்றும் இது மாறினால் ஒழிய போரடிப்பது தவிர்க்க முடியாது என்று நினைக்கிறான் என்றும் அந்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
உண்மையில் போரடிப்பதற்கு மிக முக்கிய காரணம் மனிதனின் அகத்தில்தான் இருக்கிறதே ஒழிய புறத்தில் இல்லை. புரிதல், கவனம், அர்த்தம், சுவாரசியம், பங்கு பெறுதல் ஆகியவை இல்லாத போது எதுவும் அவனுக்கு சீக்கிரம் போரடித்துப் போகிறது. பல சமயங்களில் இவை ஒன்றுக்கொன்று இணைந்ததாகவே இருக்கிறது. உதாரணமாக, ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டே போகிறார். மாணவனுக்குப் பாடம் புரியவில்லை. அவர் சொல்கிற விதம் சுவாரசியமாக இல்லை. அதனால் கவனம் செலுத்த முடியவில்லை. கற்றலில் பங்கு பெற முடியவில்லை. அதனால் அவனுக்குப் போரடிக்கிறது.
வாழ்க்கையின் நிகழ்வுகள் மாற்றமின்றி ஒரே மாதிரி போகும் போதும் போரடிக்க ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் சுவாரசியம் குறைகிறது. கவனம் குறைகிறது. வாழ்க்கை அர்த்தம் இல்லாததாகத் தோன்றுகிறது. அதனால் போரடிக்கிறது. புதியதாக பொருளோ, வாகனமோ வாங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி வாங்கினால் சில நாட்கள் போரடிக்காமல் இருக்கிறது. வாங்கிய பொருள்களால் ஏற்படும் புதிய அனுபவங்களும், வாங்கிய பொருள்களை மற்றவர்களுக்குக் காண்பித்துக் கிடைக்கும் பெருமிதமும் முடிகையில் மறுபடி போரடிக்க ஆரம்பிக்கிறது.
போரடிப்பது பெரிய விஷயமல்ல. அது பெரிய பிரச்சினையும் அல்ல. எல்லார் வாழ்விலும் அது அவ்வப்போது ஏற்படுவது தான் என்றாலும் போரடிக்காமல் இருக்க மனிதன் தேடும் வழிகளில் தான் பெரும்பாலும் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. தேவை இருக்கிறதோ இல்லையோ, பொருள்களை வாங்கிக் குவிப்பதும் போரடிப்பதின் விளைவே. போரடிப்பதால் தான் பெரும்பாலானோர் போதையைத் தேடிப் போகிறார்கள் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். சூதாட்டம் முதலான வேறுபல தீய பழக்கங்கள் உருவாவதும் இந்தக் காரணத்தினால்தான். வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தைத் திரும்ப ஏற்படுத்திக் கொள்ள தேர்ந்தெடுக்கும் இது போன்ற வழிகள் புதைகுழியாய் மாறி மனிதனை அடித்தளத்திற்கு இழுத்து விடும் வல்லமை படைத்தவை என்பது தான் உண்மையான பிரச்சினை.
தீய பழக்கங்களில் ஈடுபடுவதாலாவது போரடிப்பது தவிர்க்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை என்பதே வேடிக்கையான உண்மை. போதை போன்ற தீயபழக்கங்களில் ஆழ்ந்தால்கூட போரடிக்காமல் இருப்பதில்லை. போரடிக்காமல் இருக்க அதன் அளவுகளை ஒருவன் அதிகரித்துக் கொண்டே போக வேண்டி இருக்கிறது. போரடிப்பதைத் தவிர்க்க அவன் தன்னை மேலும் மேலும் அழித்துக் கொண்டே போகும் அபாயமும் இருக்கிறது.
சரி அப்படியானால் நமக்கு தீமைகளை வரவழைத்துக் கொள்ளாமல் போரடிப்பதில் இருந்து மீளும் வழிகள் என்ன?
வாழ்வில் ஓர் உன்னத இலக்கும், அதைச் சாதிக்கும் துடிப்பும் இருக்கும் நபர்களுக்கு என்றுமே போரடிப்பதில்லை. ஒவ்வொரு அடியாக முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் போது, இலக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறோம் என்ற பெருமிதமும் இருக்கும் போது, எப்படி போரடிக்கும்? இப்படிப்பட்டவர்களுக்கு நேரம் போகவில்லை என்ற எண்ணம் ஏற்படாது. நேரம் போதவில்லையே என்ற எண்ணமே மேலோங்கும்.
அடுத்ததாக எப்போது பார்த்தாலும் வேலை, வேலை என்று இருப்பதை ஒருவர் தவிர்க்க வேண்டும். மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரி வேலை பார்ப்பது, அந்த வேலையைத் தவிர வேறு எதையும் அறியாமலிருப்பது இரண்டும் இருந்தால் போரடிப்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அவர்கள் அறிவுக்கூர்மையும் மங்க ஆரம்பித்து விடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.
எத்தனையோ நல்ல விதங்களில் அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்தாத வழிகளில் ஈடுபட்டு ஒருவர் போரடிப்பதைத் தவிர்க்கலாம். நல்ல இசையைக் கேட்டல், நல்ல புத்தகம் படித்தல், ஓவியம் வரைவது, தோட்டவேலை போன்ற நல்ல பொழுதுபோக்குகள் ஆகியவற்றில் ஈடுபடுதல், அழகிய இயற்கைக் காட்சிகள் உள்ள இடங்களுக்குச் செல்தல், நல்ல நண்பர்களைச் சந்தித்துப் பேசுதல், நல்ல சொற்பொழிவு கேட்டல் போன்றவற்றை அந்த வழிகளாகச் சொல்லலாம். மீண்டும் பழைய வேலைகளுக்குத் திரும்பும் போது புத்துணர்ச்சி அடைந்திருக்க இவையெல்லாம் நல்ல மாற்று வழிகள்.
போரடிப்பதாகச் சொல்பவர்கள் பெரும்பாலும் தீர்வை வெளியே தேடுகிறார்கள். ஆனால் தீர்வு ஒருவருக்குள்ளேயே இருக்கிறது. போரடிப்பதைத் தவிர்க்க ஒருவரது சிந்தனைகளில் புதுமை இருந்தாலே போதும். பார்க்கின்ற விதம் மாறினாலே, பார்க்கின்ற கோணம் மாறினாலே, எத்தனையோ சாதாரண விஷயங்களின் அசாதாரண அல்லது சுவாரசியமான அம்சங்களை நாம் பார்க்க முடியும். அதே போல் செயல்களைச் செய்கின்ற விதத்தை மாற்றினாலும் கூட வாழ்வில் சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். வித்தியாசங்களை வெளியே இருந்து தருவித்து சுவாரசியம் காண முயலாமல் உள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு வாழ்வை சுவைபடுத்திக் கொள்ள முடிந்தவன் “போரடிக்கிறது” என்று என்றுமே நினைக்கவும் மாட்டான்.
ஆஸ்கார் ஒயில்டின் “டோரியன் க்ரேயின் ஓவியம்” (The Picture of Dorian Gray) நாவலில் ஒரு அழகான வசனம் வரும். ஹென்றி வோட்டன் பிரபு என்ற கதாபாத்திரம் இளையவனான டோரியன் க்ரே என்ற கதாபாத்திரத்திடம் சொல்வார். “இந்த உலகில் சகிக்க முடியாத பயங்கரமான விஷயம் போரடிப்பது ஒன்று தான் டோரியன். அந்த ஒரு பாவத்திற்கு மன்னிப்பே இல்லை”.
ரசிக்கவும், அறியவும், அழகான, அறிவார்ந்த ஆயிரக்கணக்கான விஷயங்கள் இந்த உலகில் இருக்கையில் அதை நோக்கி நம் கவனத்தையும் கருத்தையும் செலுத்தாமல் போரடிக்கிறது என்று சொல்வது ஆஸ்கார் ஒயில்டு கூறுவது போல மன்னிக்க முடியாத பாவமே அல்லவா?
மாணவன் எனும் மூலதனம்
பள்ளியில் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடவும், உணவைப் பகிர்ந்துண்ணவும், மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும், அடுத்த செஷனுக்கு மனதை தயார் செய்வதற்கேற்ற வகையிலும்தான் கால அட்டவணையில் உணவு இடைவேளைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையான பள்ளிகளில் அது ஆசிரியர்களின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது.
60 நிமிட இடைவெளியை வெறும் 10 அல்லது 20 நிமிட இடைவேளையாக அவரவர் விருப்பத்துக்கு குறைக்கப்பட்டு, களவாடியபொழுதுகளில் திறமையான (மற்ற ஆசிரியருடன் போராடி வெற்றிபெறும் வல்லமை பொருந்தியவர் அல்லது தானே சிறந்த ஆசிரியர் என்று உணருபவர்) ஆசிரியர்கள் சிறு தேர்வுகள் வைத்து மாணவர்களை மிகச்சிறந்த மதிப்பெண் உற்பத்தி எந்திரங்களாக உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவர்.
பிள்ளைகள் உணவை அவசர அவசரமாக உண்டுவிட்டு ஓடுவர். மற்றவருடன் பேசவும் நேரம் இருப்பதில்லை; நன்கு படிக்கும் மாணவர்களிடம் இடைவேளையின்போது சந்தேகங்களைக் கேட்டுத் தெளியவும் நேரமிருப்பதில்லை. மகிழ்ச்சியாக விளையாடி மகிழவும் நேரமிருப்பதில்லை என்று மாணவர்கள் சில ஆசிரியர்களிடம் புலம்புவர். வீட்டுக்கு சென்று மதிய உணவு உண்ணும் மாணவர்களின் நிலைமை இன்னும் பரிதாபத்துக்கு உரியது. சாப்பிட்டால் நேரமாகிவிடுகிறது என்று சிலர் சாப்பிடாமல் பாக்ஸில் போட்டு எடுத்து வந்து இரண்டாம் பாடவேலையின்போது சாப்பிடுவர். வேறு சில மாணவர்கள் அவசர அவசரமாக அள்ளிபோட்டுக்கொண்டு ஓடிவருவர்.
மதிய நேர தேர்வுகளை அட்டெண்ட் பண்ணவில்லை என்றால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதால், சில மாணவர்கள் வீட்டுக்கு போகவும் பயந்து சாப்பிடாமலேயே இருந்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் நீதி நெறி கல்விக்கு என ஒதுக்கபட்டிருக்கும் பாடவேளைகளையும்கூட இவர்கள் பிடுங்கிக்கொள்வது கொடுமை எனில், மாணவர்கள் பயமின்றி தங்கள் உடலும் உள்ளமும் ஒன்றிணைந்து செயல்படும் ஓவியம், உடற்கல்வி ஆகிய பாடவேளைகளையும்கூட '10 ஆம் வகுப்புக்கு என்ன இதெல்லாம் வேண்டியிருக்கு' என்று பாட ஆசிரியர்கள் அதையும் பிடுங்கிக்கொள்வது கொடுமையிலும் கொடுமை!
அனைத்து ஆசிரியர்களும் மனித உளவியல், குழந்தைகள் உளவியல் என பலவிதமாகப் படித்துவிட்டுதான் வருகின்றனர். பிறகு ஏன் அவர்கள் மாணவர்களின் நிலையிலிருந்து பார்க்க தவறிவிடுகின்றனர்?
கல்வியாளர்கள் பல காலமாய் போராடி குழந்தை மையக்கல்வியை வகுப்பறைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசின் பல்வேறு கல்விக்கொள்கைகளும் காலத்துக்கேற்ப மாறுதல்களை உள்வாங்கி குழந்தைகள் மகிழ்வுடன் பள்ளிக்கு வர வழி செய்துள்ளன. அரசு பல நூறு கோடிகளை கல்விக்கென்று ஆண்டுதோறும் செலவழிக்கிறது. அது ஒரு தனி மனிதன் மீது அரசு செய்யும் மூலதனம். அவன் மீண்டும் அதை நாட்டுக்கு எந்த வகையிலாவது திரும்ப செலுத்தும்போது மட்டுமே அவன் நாட்டின் வளமாக கருதப்படுகிறான். இல்லையெனில், அவன் மீது செய்யப்பட்ட செலவு வீணாகிறது. அதனால்தான் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் (1776)கல்வியறிவு பெற்ற மனிதனை விலையுயர்ந்த எந்திரத்துக்கு ஒப்பிடுகிறார்.
கல்விக்காக நம் நாட்டில் எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வியின் மூலமே நல்ல குடிமக்களை உருவாக்க இயலும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், கல்வி என்பது என்ன என்பதைப் பற்றிய தெளிவு பெரும்பாலானவர்களிடம் இல்லாமல் போனதுவே சோகம்.
கல்வியறிவு பெற்ற மனிதன நாட்டுக்கு தக்க விதத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறான். நாட்டு வளர்ச்சியில் அக்கறை காட்டுபவனாகவும், சக உயிரினங்களை மதித்துத் தனக்கு சமமாய் நடத்துபவனாகவும், எளிய உயிரினங்களை அரவணைப்பவனாகவும், நல்ல நீதிநெறிகளை பின்பற்றுபவனாகவும் பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் திறன் மிக்கவனாகவும், கல்வியை சுய முன்னேற்றத்துக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துபவனாகவும் இன்னும் பல குணநலன்களைக் கொண்டவனாகவும் எதிர்ப்பர்க்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட மனிதனைதான் பொருளாதார வல்லுனர்கள் Human Capital என்று வர்ணிக்கின்றனர். இப்படிப்பட்ட முழு ஆளுமைத்திறன் கொண்ட குடிமக்களை உருவாக்க ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்படுதல் அவசியம். வெறும் மதிப்பெண் உற்பத்தியை மட்டுமே நோக்கமாய் கொண்ட ஆசிரியர்களிடம் நிச்சயம் சுயநலவாதிகளை மட்டுமே உருவாக்க முடியும். ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர் ஒவ்வொருவரையும் ஒரு விலைமதிக்க முடியாத வளமாக கருதி, அவர்களை நாட்டுக்கு உகந்த வகையில் வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் வல்லரசு கனவு நிறைவேறும். இல்லையேல் எந்த நிஞ்சா டெக்னிக்கை பயன்படுத்தியும் எதையும் சாதிக்க முடியாது.
பெற்றோரின் அக்கறை எதில் இருக்க வேண்டும்?
“Education is the most crucial investment in human development. Education influences improvement in health, hygiene, demographic profile, productivity and all that is connected with the quality of life.” - The Ninth Five Year Plan
ஐந்தாண்டு திட்டங்களில் கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதைப் போலவே பெற்றோரின் மனநிலையிலும் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெறுவதற்கான வந்த சிலர், படிவத்தில் எழுதப்பட்டிருந்த மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி போன்றவற்றை சரிப்பார்த்து கையெழுத்து போட்டு விட்டு, இப்போது பிள்ளைகள் எவ்வாறு படிக்கின்றனர் என்று கேட்டனர். மேலும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளும் படியும் கூறிச்சென்றனர்.
ஆனால், வேறு பல பெற்றோரின் அணுகுமுறை என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. படிவத்தில் கையொப்பமிட்டு பெரும்பாலான பெற்றோர் ஏதாவது குறை கூறினால்தான் தன்னை அக்கறையுள்ள பெற்றோராக கருதுவர் என்பதைப்போல விதவிதமாய் பிள்ளைகளின் மீது தேவையற்ற குற்றசாட்டுகளை வைத்தனர்.
அவற்றில் சில...
“என் மகள் எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறாள்.”
“என் மகன் என்னை டிவி பார்க்கவே விடுவதில்லை.”
“கையெழுத்தே சரியில்லை.”
“ஒரு மதிப்பெண்ணில் முதல் ரேங்க்-ஐ தவறவிட்டாள்”
தற்போதைய மாணவர்களைவிட பெற்றோரின் மனநிலையே கவலை தருவதாய் இருக்கின்றது. கையெழுத்தே சரியில்லை என்று மகளை குறைகூறிய தந்தைக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. ஏனெனில், அப்பெண்ணின் கையெழுத்து அவ்வளவு அழகு கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல. அப்பெண்ணிடம் விசாரித்ததில் அவர் பொறியியல் முடித்துவிட்டு செங்கல் சூளை நடத்துவதாய் தெரிவித்தாள். ஓ! இவர் தன்னுடைய நிறைவேறாத ஆசையை பெண்ணின் மீது திணிக்கிறார் என்று புரிந்தது.
பெற்றோர் பலரது மனநிலை இப்படித்தான் இருக்கிறது. ராணுவ வீரர் ஒருவர் வந்தார். என் மகள் 90% மார்க் வாங்கவில்லை என்று குறைபட்டார். அவளது உள்வாங்கும் திறன் அளவுக்குத் தானே அவள் மதிப்பெண் பெற முடியும் என்றேன். அது அவருக்கு புரிந்தது போலவே தெரியவில்லை. அதற்கும் மேல் Attitude, Aptitude, Individual Difference என்று அவருக்கு பாடம் நடத்தி புரியவைக்க எனக்கு நேரமில்லை.
அடுத்து வந்தவர், இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார். படிவத்தில் கடகடவென கையெழுத்திட்டு நீட்டியவர், 'நேற்று ஏதோ National Level Talent Test' என்று சொல்லியனுப்பியிருந்தீங்களே, அதைப் பற்றி சொல்லுங்க' என்று பரபரத்தார். 'அதற்கு முன் உங்கள் மகன் State Level Talent Exam-ல் qualify ஆயிருக்கான். அதற்காக அவனுக்கு 1000 ரூபாய் Cheque வந்திருக்கு. அதைப் பாருங்க' என்று கூறி, 'அப்பாவிடம் அதை காட்டுப்பா சந்தோஷப்படுவார்' என்றேன். மூச்சிரைக்க வகுப்பறையிலிருந்து எடுத்துக்கொண்டு ஓடிவந்தான் பிள்ளை. அதை கையில் வாங்கி வைத்துக்கொண்டு மீண்டும் அந்த Exam-ஐ பற்றி சொல்லுங்க என்றார். என்ன மனிதர் இவர். கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு! பிள்ளை எத்தனை பெரிய சாதனை செய்துவிட்டு அருகில் நிற்கிறான். முதலில் பெருமிதத்துடன் அவனிடம் கைகொடுத்து வாழ்த்தி அவனுக்கு ஒரு சிறு அங்கீகாரத்தையும் கொடுக்காமல் அடுத்து என்ன என்ன என்று நிற்கிறாரே என்று மிகவும் வருத்தமானது.
‘நீங்கள் ஹெட்மாஸ்டரைப் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்தேன். அவர் அங்கேயும் அதைப்போலவே காரியத்திலேயே கண்ணாக இருந்ததைப் பார்த்த தலைமை ஆசிரியர் முதலில் பிள்ளைக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்லுங்கள் என்று வற்புறுத்திய பிறகே கைகுலுக்கி இருக்கிறார். இந்த தந்தையிடம் அந்த பிள்ளை எப்படித்தான் இருக்கிறானோ. இந்த ஆள் வீட்டிலும் இப்படித்தான் போல, அதான் பிள்ளை வாயே திறக்கிறது இல்லையோ என்று கூறி வருத்தப்பட்டார் தலைமை ஆசிரியர்.
“கல்வி என்பது போரையும் வறுமையையும் அறியாமையையும் போக்குவதற்காகவும், மக்களிடையே ஒற்றுமையையும் பரந்த மனப்பான்மையையும் ஏற்படுத்துவதற்காகவும் அத்துடன் பொருளாதார வளர்ச்சிக்காகவும் தானே தவிர, கல்வி மட்டுமே ஒரு தனிச்சிறப்புமிக்க, அனைத்தையும் நிகழ்த்தக்கூடிய மாய உலகை அடைந்து விடும் வழியாகிவிடாது”என்கின்றன கல்விக்கொள்கைகள்.
அதுமட்டுமல்லாமல் எதனையும் விட முக்கியமானது தனி மனிதனின் ஆளுமையும் உளவியல் சார்ந்த நல் வளர்ச்சியுமே என்பதை பெற்றோர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் பிள்ளைகளை வெறும் மதிப்பெண் பெரும் எந்திரங்களாக பார்க்காமல் அவர்களது முழு உடல், உள மற்றும் ஆளுமை வளர்ச்சியில் அக்கறை செலுத்துவது ஒவ்வொரு பெற்றோரது இன்றியமையாத கடமை.Deepak Chopra Auh - The Future of Wellbeing Seminar. Experience his legendary guidance!thinkflash.ae/Deepak-Chopra
டி. விஜயலட்சுமி
ஓணம் பண்டிகை
கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது
சென்னை, கோவை மாவட்டங்களில் இன்று விடுமுறை
By dn, சென்னை
First Published : 16 September 2013 01:52 AM IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (செப்.16) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Posts (Atom)