By dn, சென்னை
First Published : 16 September 2013 01:52 AM IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (செப்.16) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
. இந்த விடுமுறைக்குப் பதிலாக செப்டம்பர் 28-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருவூலம் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும். ஓணம் பண்டிகையையொட்டி, மலையாளிகள் வாழும் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment