Saturday, 12 October 2013

அலிஸ் மன்றோ

அலிஸ் மன்றோ

ஓர் எழுத்தாளரைப் பற்றி நினைக்கும்போது மனதில் என்ன தோன்றுகிறது? அதுதான் முக்கியம். நான் சந்தித்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. குழந்தைப் பிள்ளைபோல சிரிப்பு. இன்று, 82 வது வயதில், 2013ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்துள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்னர் ஓரு காலை நேரம் அவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். ‘நான் அலிஸ் மன்றோ பேசுகிறேன்’ என்றார். அவர் வெளிநாடு போவதால் திரும்பி வந்ததும் எனக்கு ஒரு செவ்வி தருவதாக ஒப்புக்கொண்டார். அவருடைய தொலைபேசி எண்ணைத் தந்தபோது கிட்டத்தட்ட நேர்காணல் முடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்தேன்.
அது எத்தனை தவறு. அவர் கொடுத்த கெடு தாண்டியதும் அவருடைய தொலைபேசி எண்ணை அழைத்துத் தகவல் விட்டேன். பதில் இல்லை. மறுபடியும் தகவல் விட்டேன் பதில் இல்லை.

எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குகிறோம்?

சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள முக்கியமான பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஒரு காலத்தில் அப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.

அலிஸ் மன்றோ---இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

அலிஸ் மன்றோ

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடாவின் மிக முக்கிய எழுத்தாளரான அலிஸ் மன்றோவிற்குக் கிடைத்திருக்கிறது,
நம்காலத்தின் மிக முக்கிய சிறுகதை ஆசிரியர் அலிஸ் மன்றோ, அவரது சில சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன, நோபல் பரிசு பெறும் 13வது பெண் இவராகும்,
ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக அலிஸ் மன்றோவின் நேர்காணல் ஒன்றினை அ.முத்துலிஙகம் எடுத்திருக்கிறார், அது காலச்சுவடு இதழில் வெளியாகி உள்ளது,  உங்கள் பார்வைக்காக அதை மீள்பிரசுரம் செய்கிறேன்

AEEO எஸ்.அமலதாஸ் பணி நிறைவு பாராட்டு விழா

AEEO எஸ்.அமலதாஸ்  பணி நிறைவு பாராட்டு விழாவில் கெளரவத் தலைவர் மாவீரர் அ. சுந்தராஜன் அவர்கள் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்குகிறார்

மாநில துணைச் செயலாளர் ம.ஜோசப் அண்டோரெக்ஸ் சால்வை அணிவித்து பாராட்டுகிறார்  




AEEO எஸ்.அமலதாஸ்  பணி நிறைவு பாராட்டு விழாவில் இயக்க நன்கொடை                                               ரூபாய் 5000 வழங்குகிறார்


மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சால்வை அணிவித்து பாராட்டுகிறார் 





மேடையில் நம் சங்க உறுபினர்களுடன் திரு. அமலதாஸ் மற்றும் தலைவர் 



மாநில பொருளாளர் அ.ஆரோக்கியம் அவர்கள் திரு.அமலதாஸ்க்கு வாழ்த்துரையும் இயக்க பேருரை ஆற்றுகிறார்


மாநிலத்தலைவர் திருமு.அய்யாச்சாமி  , மாநிலப் பொதுச் செயலாளர் ச.சௌந்தராஜன் , மாநில தலைமை நிலையச்  செயலாளர் இரா.கணேசன் , மாநில துணைத்  தலைவர் அ.தம்பித்துரை மற்றும் AEEO கள் மண்டல செயலர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.எஸ்.அமலதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறார்கள். 

Monday, 7 October 2013

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.



சதுரங்கப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு


கிருஷ்ணகிரி, அக். 6-
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார் பில் மாவட்ட அளவி லான சதுரங்கப் போட்டி நடந்தது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் துவக்கி வைத்தார்.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிப் பேசினார். அப்போது அவர் பேசிய தாவது: -தமிழக முதல்வரின் ஆணைப்படி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிநடந்தது. இப் போட்டியில் 48 மாணவர் கள் பங்கேற்றனர். சதுரங்க போட்டிகள் பெரிய நகரங் களில் மட்டுமே நடந்தப் பட்டு வந்தன. தற்போது மாவட்ட அளவில் நடத்தப் படு வதால் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலும், மாநில அளவிலும் பங்கேற்க வாய்ப்புள்ளது.இந்த போட்டியில் பங் கேற்ற மாணவர்கள் சிலர் மலைப்பிரதேசமான தளி வட்டாரங்களை சேர்ந்தவர் கள். சதுரங்கப் போட்டி ஒரு அறிவு சார்ந்த போட்டி யாகும். மேலும் இது போன்ற போட்டிக ளில் பங் கேற்கும் போது நன்கு பயிற்சி பெற்று போட்டிகளில் பங் கேற்க வேண்டும். மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள் வதன் மூலம் எளிதில் வெற்றி பெறலாம். எனவே மாணவ, மாணவியர்கள் நன்கு விளையாடி மண்டல அள விலும் மற்றும் மாநில அள விலும் நடைபெறும் போட்டி களில் பங்கேற்று வெற்றி பெற எனது வாழ்த்துக் களை தெரிவித்து கொள் கிறேன்.இவ்வாறு அவர் பேசி னார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் லதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அன்பு, பள்ளித் துணை ஆய்வாளர் சென்னப்பன், மாவட்ட தடகள விளையாட்டுக் கழக செயலாளர் பத்மாவதி, துணை செயலாளர் சுரேஷ் பாபு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராணி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

மதங்களைத் தாண்டிய சமூகம்

மனித சமுதாய வரலாற்றைப் படித்தால் மற்ற எந்த காரணத்தையும் விட மதத்தின் பேரால் நடந்த போர்களே அதிகம் என்பதைப் பார்க்க முடிகிறது. சரியாகச் சொன்னால், எந்தெந்தக் காலகட்டங்களில் மதமும் அதன் மீதான கொள்கைப் பிடிவாதமும் தீவிரமாகக் கோலோச்சினவோ அந்தக் காலகட்டங்களில்தான் மனிதர்கள் மீது மிகக் குரூரமான சித்திரவதைகளும் நடைபெற்றன. உதாரணமாக, கத்தோலிக்க சர்ச்சோடு உடன்படாதவர்களைக் கொடுமைப்படுத்திய ஸ்பானிய விசாரணைகள் (ளுயீயniளா ஐnளூரளைவைiடிn) நடைபெற்ற காலத்தைக் கூறலாம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கி வளர்ந்த நாசிசம் இரண்டாம் உலகப் போரில் போய் முடிந்தது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முறை மேலை நாடுகளில் உருவானது என்பதால் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கிறித்தவர்கள் கொணர்ந்த திட்டம் என முஸ்லிம் முல்லாக்கள் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு சொந்த மதத்தின் மீதான வெறி சென்றுள்ளது. போலியோ சொட்டு மருந்துக்கெதிராக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் தாலிபான்கள் தீவிரப் பிரச்சாரம் செய்வதற்குப் பின்னணியில் மதவிரோதமே உள்ளது.மனிதர்கள் கடவுள் கொள்கை யை ஏன் கண்டுபிடித்தனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மதம் என்ற நிறுவனமே பயத்தின் அடிப்படையில் பிறந்ததுதான். அதுவும் மனிதர்களால் விளக்கம் சொல்ல முடியாத இயற்கை நிகழ்வுகளின் மேல் ஏற்பட்ட பயம்தான் அவர்களைக் கடவுள் பக்கம் தள்ளியது. இன்று நவீன விஞ்ஞானத்தினால் அநேகமாக அனைத்து இயற்கை நிகழ்வுகளைப் பற்றியும் விளக்கம் அளிக்கமுடிகிறது. இன்று இயற்கையைப் பார்த்து பயப்பட வேண்டிய தேவைஇல்லாததால், ஆதிகாலத்தில் இந்துக்களோ, கிரேக்கர்களோ வழிபட்ட சூரியக் கடவுள், வாயுக் கடவுள் போன்ற இயற்கைக் கடவுள்களுக்கும் தேவை இல்லா மல் போய் விட்டது. ஆனாலும் ஒரே கடவுளைக் கொண்ட கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள்கூட இயற்கைக் கடவுள்களைவிட்டனவே தவிர, அக்கடவுள்களுக்கு மாற்றாக மனிதசக்தி யையும் இயற்கையையும் தாண் டிய ஒரேயொரு கடவுள் மீது பிடிமானத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவரை மட்டும் கும்பிடும் வழக்கத்தை விட்டுவிடவில்லை. ஒரு குறிப்பிட்ட கடவுளைக் கும்பிட வேண்டுமென்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தை களுக்கு சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்து விடுகின்றனர். 2001 செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தக மையத்தைத் தகர்த்த பயங்கரவாதிகள் தங்களுடைய கடவுளுக்கு எதிரானவர்களைத் தாங்கள் தண்டிப்பதால் அவர் தங்களுக்கு பரிசளித்துப் பாராட்டுவார் என நம்பியிருக்கக் கூடும். அதனால்தான் “மதம் என்பது மனித கவுரவத்தை அவமதிக்கக் கூடியது. மதம் என்ற ஒன்று இல்லாவிடில், நல்ல மனிதர்கள் நற்செயல்களைப் புரிவார்கள். கெட்ட மனிதர்கள் கெடுதல்களைச் செய்வார்கள். ஆனால் நல்ல மனிதர்களும் கூட கெடுதல் செய்வதற்கு மதமே தூண்டுகோலாக இருக்கிறது” என்கிறார் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் வெய்ன்பர்க். மதத்திற்காக வக்காலத்து வாங்குபவர்கள் `நம்மைச் சுற்றிலும் உள்ள வலிகளும் துயரங்களும் நாம் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை உறுதியாக உள்ளதா என்பதை அறிய அவர் வைக்கும் சோதனை’ என்பார்கள்.
புற்று நோயால் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு ஏதுமறியாக் குழந்தையின் பெற்றோர்களிடம் இப்படிச் சொல்லிப் பாருங்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் உள்ள ஒரு கடவுள் இருந்து, அவர் இதை உண்மையிலேயே ஒரு குழந்தைக்குச் செய்திருப்பாரானால் அவரை உலகிலேயே மிகக் கொடுமையான மனிதராகவே கருத வேண்டும். ஐன்ஸ்டீன், பெட்ரண்ட் ரஸ்ஸல், இங்கர்சால் போன்ற சிந்தனையாளர்கள் கடவுள்கள், மதங்கள் அற்ற ஓர் உலகை - அறிவு, அன்பு, தைரியம், தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களை உடைய ஓர் உலகை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திச் சென்றுள்ளனர். அப்படிப்பட்ட உலகை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற சோதனையில் மனிதர்கள் தேறி வருவது எளிதானதல்ல. பழக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி மாற்றி யோசிப்பதற்கான உந்துதல் உள்ளவர்களே இந்த சோதனையில் பங்கேற்க முடியும். உலகம், பூமி, உயிரினங்கள் உருவான வரலாற்றையும் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும் உள்வாங்க அவர்கள் முயற்சி எடுக்கும்போதே வெற்றி சாத்தியமாகும். (உதவிய கட்டுரை : 2013 செப்டம்பர் 22 தேதியிட்ட ஆங்கில இந்து நாளிதழில் பேராசிரியர் வசந்த் நடராஜன் எழுதிய கட்டுரை).

ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி: 650 மாணவ, மாணவியர் பங்கேற்பு

புதுச்சேரி-விழுப்புரம் பயணிகள் ரயிலில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 650 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் குழந்தைகளிடம் ஓவியக் கலையைத் தூண்டும் வகையிலும் ஆண்டுதோறும் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
புதுவை மாநில ஓவியர் மன்றம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் புதுவைச் சேர்ந்த 48 பள்ளிகளில் இருந்து 650 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி தலைமை வகித்தார். போட்டிகளை அமைச்சர்கள் தியாகராஜன், பன்னீர்செல்வம், அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர். புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஓவியர் மன்றத் தலைவர் இபேர் விதிகளை விளக்கிக் கூறினார்.
புதுச்சேரி ஓவிய நுண்கலை குழுத் தலைவர் மாலதி ராஜவேலு குழந்தைகள் வரைவதற்கான பொருள்களை வழங்கினார்.
அனைவருக்கும் ரயிலில் அச்சடித்த கோட்டுப்படம் வழங்கப்பட்டது. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி பட்டதாரிகளாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கோட்டுப்படம் வைக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் இருந்து மாலை 3.30 மணியளவில் ரயில் புறப்பட்டவுடன் போட்டி தொடங்கியது. ரயிலின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர் ஓவியங்களை வரைந்து அசத்தினர்.
4.50 மணிக்கு ரயில் விழுப்புரத்தை அடைந்தது. விழுப்புரம் ரயில் நிலைய மேலாளர் பிரேம் லகேரா மாணவர்களை வரவேற்று சான்றுகள், சிற்றுண்டி போன்றவற்றை வழங்கினார். புதுவை, காரைக்கால், சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
65 ஆசிரியர்களும், 20 என்.எஸ்.எஸ். மாணவர்களும், 2 செவிலியரும் போட்டி நடத்தும் பணியில் ஈடுபட்டனர். ஓவியர்கள் எமில், குலசேகரன், ரிச்சர்ட், ராமலிங்கம், சுகுணா, ஜெயலட்சுமி, புதுவை, விழுப்புரம் ரயில் நிலைய அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறும்.

Sunday, 6 October 2013

குழந்தை வளர்ப்பில் ஏன் அதிக கவனம் தேவை?

“அப்ப எல்லாம் யாரு குழந்தைகளைப் பார்த்துகிட்டது? நாங்களேத்தான் வளர்ந்தோம். நாங்களே தான் சாப்பிட்டோம், நாங்களே தான் படிச்சோம். எங்கப்பாவுக்கு நாங்க என்ன வகுப்பு படிக்கிறோம்னு கூடத் தெரியாது. இப்ப இருக்கற பெத்தவங்க குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளக்கறாங்க. கண்ணுல வெச்சி வளக்கறாங்கன்னு, அவங்க குழந்தைகளை வளர விடறதே இல்லை” என்ற ரீதியில் வயதானவர்கள் பேசுவதைக் கேட்கலாம்.
முன் எப்பொழுதைக் காட்டிலும் தற்போது குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய அவசியமும் தேவையுமும் தான் என்ன? சுமார் முப்பது முதல் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? தினமும் பள்ளிக்குச் செல்வார்கள், பள்ளியிலே ஆட்டம் பாட்டம் விளையாட்டு, வீடு திரும்பியதும் வசதிக்கு ஏற்றாற் போல மாலை உணவு / தேநீர், புழுதி நிரம்பிய தெருக்களில் இரவு வரையில் விளையாட்டு,கொஞ்ச நேரப் படிப்பு, உறக்கம். வார இறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் காலை வீட்டைவிட்டுக் கிளம்பினால் இரவு தான் திரும்பும் பழக்கம். மிகச் சில குடும்பங்களில் புத்தகம் வாசிக்க வைக்கும் பழக்கம். சொந்தக் காசிலே சிறுவர் புத்தகங்களை வாங்கும் பழக்கம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பதால் ஒரே வீட்டில் நிறையப் பொடிசுகள் இருக்கும், பெரியவர்கள் இருப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும், அன்பினைப் பொழிந்துகொண்டும் வாழ்ந்தனர்.
சரி, இதில் என்னென்ன நன்மைகளை நாம் இழந்துவிட்டோம்? மிக முக்கியமாக விளையாட்டுகளை நாம் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். கிராமப்புறங்களைத் தவிர்த்துத் தெருக்களில் சிறுவர்கள் புழுதிகளில் விளையாடுவது அரிதாகிவிட்டது. விளையட்டுகளுக்குப் பதிலாக மாணவர்களின் நேரம் தொலைக்காட்சியிலும், வீடியோ கேம்களிலும், டியூஷன்களிலும் சென்றுவிடுகின்றது.
விளையாட்டுகள் கொடுக்கும் உடலுறுதியும் மன உறுதியும் அசாத்தியமானது. நம் தாத்தா பாட்டிகள் போல வயதான காலத்திலும் உறுதியாக, திடமாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனை விட நம் குழந்தைகள் நிலைமையை நினைத்தால் அச்சமே மிஞ்சுகின்றது.
உளவியல் ரீதியாகவும் வெற்றி தோல்விகளைச் சரிசமமாகப் பாவிக்கும் மனநிலை பாதிக்கப்படுகின்றது. தோல்வியைக் கண்டால் ஓடி ஒளிந்துக் கொள்கின்றனர். கூட்டாக சிறுவர்கள் விளையாடும்போது ஏற்படும் நன்மைகள் ஏராளம். மற்ற குடும்பங்கள் பற்றிய அறிதல், விட்டுக்கொடுக்கும் பாங்கு, வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் ருசிபார்த்தல் ஆகியவை சாதாரணமாக நிகழும்.
அடுத்தது, அந்நாட்களில் தொலைக்காட்சி குறைந்த நேரத்தையே எடுத்துக்கொண்டிருந்தது. நிகழ்ச்சிகளும் குறைவு, தொலைக்காட்சி பெட்டிகளும் குறைவு. ஆனால் இன்று இல்லம் தவறாமல் பெட்டி ஓடிக்கொண்டே இருக்கின்றது. பெரும் நேரத்தை இது விழுங்கிவிடுகின்றது. தொலைக்காட்சியில் நன்மைகள் இருந்தாலும் அதன் சதவிகிதம் மிகக்குறைவே. குழந்தைகள் தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்காமல் இருக்க வைப்பது பெரும் போராட்டமே.
கல்வியைப் பற்றிய எதிர்ப்பார்ப்பிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தனது பிள்ளை பெரும் மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணம் ஆரம்ப பாடசாலையில் இருந்தே ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் இதர விஷயங்களில் குழந்தைகள் கவனம் செல்வதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை. பாடம், படிப்பு, டியூஷன், மனப்பாடம், மதிப்பெண். இது போதும் என்ற மனநிலையில் உள்ளனர். இதனைத் தவிர, ஏராளமான கவனச்சிதறல்கள், எதிலும் நாட்டமில்லாமை ஆகியவை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
சிதறிப்போன கூட்டுக்குடும்ப வாழ்கை நம் சிறுவர்களை வரும்காலத்தில் பாதிக்கலாம். பெரியவர்கள் பல விஷயங்களில் சமன் செய்தார்கள். உணவு முதற்கொண்டு கதை சொல்வது, கண்டித்து வளர்ப்பது என குழந்தை வளர்ப்பின் பெரும் பகுதிகளை அவர்கள் செய்துவந்தார்கள்.
இத்தகைய சூழலில் குழந்தை வளர்ப்பு கவனமும் முக்கியத்துவமும் பெறுகிறது. உடல் ரீதியாகவும், உலகமயமாக்கப்பட்ட சூழலும், நமக்குள் புகுந்துள்ள உணவு பழக்கம் தொடங்கி, குழந்தைகளை அணுகுதல், கல்வியை அணுகுதல், ஊடகங்களைப் பயன்படுத்துதல், உறவுகளைப் பேணுதல், குழந்தைகளுக்கான கதைச் சொல்லலின் அவசியம், தரமான நேரத்தை குழந்தைகளுடன் செலவழித்தல், விளையாட ஊக்கப்படுத்துதல், அதற்கான தளங்களை உருவாக்குதல், இன்னும் ஏராளமான விஷயங்களைக் குழந்தை வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன.
நம்மிடம் காணக்கிடைக்கும் குழந்தை வளர்ப்பு கட்டுரைகளில் வெளிநாட்டு தரவுகளும் அவர்களின் குழந்தை வளர்ப்பு அணுகுமுறைகளுமே தென்படுகின்றது. நம் சூழல், நம் குடும்ப கட்டமைப்பு, நம் உணவுப் பழக்கம், நம் கல்விச்சூழல் எல்லாம் நமக்குத்தான் நன்கு விளங்கும். எல்லா குழந்தைகளும் ஒன்று, எல்லோர் உளவியலும் ஒன்று என்றாலும் இன்னபிற விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நமக்கு கட்டுரைகள் வந்து சேர்கின்றன. அவைகளை நாம் எப்படி வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள முடியும்?
நம்மூர் பெற்றோர்கள் அவர்களின் சொந்த அனுபவங்களைச் சக பெற்றோர்களுடன் பகிரவேண்டும், அதற்கான தளங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள், அவர்களுக்கான அணுகுமுறையை அந்தப் பெற்றோர்களே முடிவு செய்ய முடியும். மற்றவர்களின் அறிவுரைகளும் அனுபவங்களும் ஒரு வழிகாட்டி மட்டுமே. அதே வழிமுறை நம் குழந்தைக்கு ஒத்துவராமல் போகலாம்.
குழந்தை வளர்ப்பு ஒரு கலை. குழந்தை வளர்ப்பில் அழகிய சிக்கலே எந்த நேரத்தில் அவர்களைத் தோளில் சுமக்க வேண்டும், எப்போது அவர்கள் விரல் பிடித்துக் கூட நடக்க வேண்டும், எப்போது வழிகாட்டியாக முன்னே நடந்து செல்லவேண்டும், எப்போது அவர்களை முன்னே நடக்கவிட்டுப் பின்னே நாம் செல்லவேண்டும் என்று அறிந்து, புரிந்து நடப்பதே.
குழந்தை வளர்ப்பினை புரிந்து, குழந்தைமையைக் கொண்டாடி, ஆனந்தமான, வலுவான , செறிவான இளைய சமூகத்தைக் கட்டமைக்க முற்படுவோம்.

வீட்டைப் பராமரிப்போம்

பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டையும், ரசித்து ரசித்து செய்த உள்அலங்காரங்களையும் பராமரிப்பதில்தான் வீட்டின் அழகே அடங்கியிருக்கிறது. "என் கடன் வீடு கட்டி முடிப்பதே" என்பதுடன் முடங்கிவிட்டால், அழகு ஒளிரும் இல்லத்துக்கு நாம் காரணகர்த்தாவாக இருக்க முடியாது.
காலை முதல் இரவு வரை காத்திருக்கும் வேலைகளுக்கு நடுவே பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தினசரி வாழ்வியலோடு பராமரிப்பையும் சேர்த்துவிட்டால் கவலை இல்லை.
வீடு விசாலமாகத் தோற்றமளிக்க வேண்டுமென்றால், வீட்டில் இருக்கும் பொருள்களை நேர்த்தியாக வைக்க வேண்டும். தேவையில்லாத பொருள்களை எக்காரணம் கொண்டும் வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. பெரியபெரிய பொருள்களைவிட சின்னச்சின்ன கலைப்படைப்புகளே சிறந்தவை. "கலைப்பொருள்களைச் சேகரிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு வீடு முழுக்க பொம்மைகளாக வாங்கி அடுக்கக்கூடாது. சுவர் முழுக்க படங்களாக நிறைக்காமல் மனதைக் கவரும் ஏதோவொரு ஓவியத்தை மையமாக மாட்டினால் பார்ப்பவர்களை அது கவர்ந்து இழுக்கும்.
எந்தப் பொருளை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் வைக்க வேண்டும். குளிர்சாதனப்பெட்டி மீது சீப்பும், தொலைக்காட்சி மீது செல்போனையும் வைப்பது வீட்டு அலங்கார விதிக்கு எதிரானது. எடுத்த பொருளை அதனதன் இடத்தில் திருப்பி வைத்துவிட்டால் வீட்டை ஒதுங்க வைக்க, ஞாயிற்றுக்கிழமையை தனியாக ஒதுக்க வேண்டியதில்லை.
அட்டவணை போட்டு வேலை செய்தால், வீடு எப்போதுமே பளிச்சென்று இருக்கும். தினசரி வேலைகளைத் தள்ளிப்போடாமல் இருப்பதே பாதி பராமரிப்புக்குச் சமம். தினமும் வீட்டைப் பெருக்கித் துடைக்கும்போதே கையோடு மர அமலாரிகளையும் மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். சமையலறை சாதனங்களைச் சுத்தப்படுத்துவது, ஒட்டடை அடிப்பது போன்ற வேலைகளை வாரம் ஒருமுறை செய்யலாம். அதிக உடலுழைப்பு தேவைப்படுகிற வேலைகளை, மாதம் ஒருமுறை செய்யலாம். இப்படி தொடர்ந்து செய்வதால், வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது பதறிக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே கைகொடுக்க வேண்டும். செடிகளைப் பராமரிக்கிற வேலையைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மின் சாதனங்களைக் கழட்டி, சுத்தப்படுத்தும் வேலையை ஆண்கள் ஏற்றுக் கொள்ளலாம்.
வீடு பார்வைக்கு சுத்தமாக இருப்பது மட்டுமில்லாமல், உள்அலங்காரமும் அவசியம். சுவர்களின் வண்ணங்களே நம் எண்ணங்களைப் பிரதிபலிக்கும். அதனால் கண்களை உறுத்துகிற அடர் நிறங்களைத் தவிர்த்து, மனதுக்கு இதம் தரும் வெளிர்நிறங்களைப் பூசலாம். சுவர்களின் நிறத்துக்கு ஒத்துப் போகிற நிறங்களில் திரைச்சீலைகள் இருப்பது கூடுதல் அழகு. தரைவிரிப்பும் அந்த நிறங்களுக்கு ஒத்திசைவாக இருந்தால், கச்சிதமாக இருக்கும்.
படுக்கையறைக்கு வெளிர்நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிறங்களைப் பரிந்துரைக்கலாம். படுக்கை விரிப்புகளும் அதே நிறங்களில் இருப்பது நல்லது.
இப்போது சின்னச்சின்ன தொட்டிகளிலும் அழகழகான பூச்செடிகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வீட்டு வரவேற்பறையிலோ, பால்கனியிலோ வைக்கலாம். அழகுக்கு அழகு, கண்களுக்கும் குளிர்ச்சி.

இதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி,.. 'F.A.L.T.U' அப்டீன்னு ஒரு இந்திப்படம் வந்துது. இந்தப்படம் நிறைய கேள்விகளை பொதுமக்கள் மனசுல எழுப்பியது. படத்தோட கதை என்னன்னா, பரீட்சையில குறைச்சலான சதவீதத்துல தேறின நாலஞ்சு மாணவர்களுக்கு, மேல்படிப்புக்கு எந்தக்காலேஜுலயும் இடம் கிடைக்கலை. அப்பா,அம்மாவோ கரிச்சுக்கொட்டறாங்க. அந்த நண்பர்கள் குழுவில் உள்ள ஒரு பெண்ணுக்கு, அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பிச்சுடறாங்க.

இது எல்லாத்துலேர்ந்தும் தப்பிக்கிறதுக்காக, போலியா ஒரு காலேஜை உருவாக்கி,  போலியான அட்மிஷன் கடிதமெல்லாம் தயார்செஞ்சு பெத்தவங்களை ஏமாத்துறாங்க. இதுல வேடிக்கை என்னன்னா, அந்த காலேஜ் உண்மைன்னு நம்பி குறைச்சலான சதவீதத்துல தேறின எக்கச்சக்கமான மாணவர்கள் அட்மிஷனுக்காக வந்துடறாங்க. வந்தப்புறம்தான், கல்லூரிக்கட்டிடம் முதற்கொண்டு எல்லாமே போலின்னு தெரியுது.

படிக்கவும் முடியாம, வீட்டுக்கு திரும்பிப்போய் பெத்தவங்க முகத்துல முழிக்கவும் முடியாம, தர்மசங்கடமான நிலையில் இருக்கற அவங்கல்லாம் ஒண்ணுகூடி... வெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கறதில்லை, ..அவங்கவங்களோட தனித்திறமைகளை வளர்த்துக்கிட்டாலும் பிரகாசிக்கலாம்ன்னு, பெத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் பாடம் புகட்டறாங்க. அதுக்கு பரிசா அவங்க நடத்திக்கிட்டிருந்த போலியான காலேஜுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்குது.

3 idiotsக்கு அப்புறம், மாணவச்செல்வங்களோட மனவலியை உணரச்செய்த இந்தப்படத்தோட கதை நிஜமாவே நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.  ஆண்டுதோறும் ஒவ்வொரு காலேஜ்லயும் அட்மிஷனுக்காக 'கட்-ஆஃப் மார்க்' நிர்ணயிக்கறது வழக்கம். பொதுவா மொத்தம் மூணு மெரிட் லிஸ்ட் வெளியிடறாங்க. இதுல காலேஜ் நிர்ணயிச்ச உச்சவரம்பு கட்-ஆஃப் மார்க் எடுத்தவங்களோட பேரு, முதல் லிஸ்டுல வந்துடும். இஷ்டமிருந்தா மறுநாளே போய் சேர்ந்துக்கலாம். இல்லைன்னா விருப்பப்பட்ட காலேஜ்ல ரெண்டாவது மெரிட் லிஸ்ட் வர்றவரைக்கும் காத்திருப்பாங்க. இந்த ரெண்டாவது மெரிட் லிஸ்ட், முதலாவதைவிட இன்னும் கொஞ்சம் தளர்த்தப்பட்டதாயிருக்கும். அதாவது,.. முதல் மெரிட் லிஸ்ட் 95%அல்லது அதுக்கு மேல் எடுத்தவங்களுக்கானதாயிருந்தா, ரெண்டாவது லிஸ்ட் 93-95க்குள்ளாக இருக்கும். இந்தசமயங்கள்ல92.50 எடுத்திருந்தாக்கூட சீட் கிடைக்காம திரும்பவேண்டிய அவல நிலை ஏற்படறதுண்டு.

வழக்கமா இதெல்லாம், professional coursesன்னு சொல்லப்படற பொறியியல், மருத்துவம்,மற்றும் இன்னபிற படிப்புகளுக்குத்தான் நடக்கும். ஆனா, இங்கே எல்லா பட்டப்படிப்புகளுக்குமே அட்மிஷன் இப்படித்தான் நடக்குது. அதுலயும் ஒவ்வொரு வருஷமும், முந்தைய வருஷத்தைவிட கட்-ஆஃப் மார்க் எப்பவும் கூடுதலாத்தான் இருக்கும். இதனால மாணவர்களுக்கும் பெத்தவங்களுக்கும் டென்ஷன் கூடுதலாகத்தான் செய்யுது. விரும்பிய படிப்பை விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்கணும்ன்னா, அவங்க எதிர்பார்க்கற உச்சவரம்பு மதிப்பெண்களை எடுத்துத்தான் ஆகணும். இது மறைமுகமா பசங்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்குது. இந்த மனஅழுத்தம் விரும்பத்தகாத விளைவுகளுக்கும் காரணமா அமைஞ்சுடறதுதான் ஏத்துக்கவேமுடியலை.

முன்னெல்லாம் ஒருத்தர் 60-70% வாங்குனாலே, 'அடேயப்பா... பெரிய படிப்பாளிதான்!!!' அப்படீன்னு மூக்கு மேல வெரலை வெச்சு நாக்கு நோக பேசித்தீர்ப்போம். அப்றம் கொஞ்ச காலத்துக்கப்புறம் மதிப்பெண்கள் ஏறுமுகமாக ஆக... இப்பல்லாம் மாணவர்கள் சர்வசாதாரணமா 95%க்கு மேல வாங்கறாங்க. ரெண்டுவருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் 85% எடுத்தா, இருந்த மதிப்பு, இப்போ அவ்வளவா இல்லை.

 'இதெல்லாம் போறாது.. இன்னும் மார்க் வாங்கு.. வாங்கு'ன்னு பசங்க உயிரை வாங்கறாங்க. இதுல பிரச்சினை என்னன்னா, எல்லோருமே அவ்வளவு மார்க் வாங்குவாங்கன்னு சொல்லமுடியாது. சுமாரா படிக்கறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க. அப்படீன்னா,.. 50% மார்க் வாங்குனதாலயே அவள்/ன் எதுக்கும் லாயக்கில்லைன்னு ஆகிடுமா என்ன!!. ஒருத்தருக்கு படிப்பு வராது.. ஆனா நல்லா ஓவியம் வரைவார், ஆடை அலங்காரத்துல நிபுணரா இருப்பார், இன்னபிற திறமைகள் ஏதாவது இருக்குன்னு வெச்சுப்போம். நிறைய மார்க் வாங்காததால அவர் கிட்ட இருக்கற திறமைகளும் இல்லைன்னு ஆகிடாதே. அந்தத்திறமைகள் மூலமாக கூட முன்னுக்கு வரலாமே.

 "வெறும் மதிப்பெண்களை மட்டுமே வெச்சு ஒருத்தர் திறமைசாலியா இல்லையான்னு முடிவு செய்யக்கூடாது. 100% மார்க் வாங்குனதாலேயே ஒருத்தர் வாழ்க்கையில முன்னுக்கு வந்துடமுடியாது".. இதைச்சொல்லியிருப்பவர் தாதரைச்சேர்ந்த ப்ரத்தமேஷ் ஜெயின். மும்பை டிவிஷனில் இந்தவருஷம் பத்தாம் வகுப்புத்தேர்வில் 100% எடுத்த பத்து மாணவமாணவியரில் இவரும் ஒருத்தர்.

இதையெல்லாம் பத்தி பசங்களோடயும், தோழியின் பசங்களோடயும் பேசிக்கிட்டிருந்தப்ப கொட்டித்தீர்த்துட்டாங்க. ஏன்னா, இந்த வருஷம் மும்பையின் 'சில' காலேஜ்கள்ல 100% எடுத்தவங்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுக்கறாங்க. இந்த நிலை மத்த காலேஜ்களுக்கும் பரவினா என்னாகும்!!!.. இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டப்ப, "அட்மிஷனுக்காக பசங்க மனப்பாடம் செஞ்சு, உருப்போட்டு படிக்கிற நிலையையும், டியூஷன் செண்டர்களை முழுக்கமுழுக்க சார்ந்திருக்க வேண்டிய நிலையையும்தான் இது உருவாக்குமே தவிர வேற பிரயோசனமில்லை. அட்மிஷன் கிடைச்ச எல்லாப்பசங்களுமே முழு மதிப்பெண்கள் வாங்கறவங்களாயிருந்தா, காலேஜ்க்கும் ஒழுங்கா வரமாட்டாங்க. டியூஷன் செண்டர்களே கதின்னு கிடக்க ஆரம்பிச்சுடுவாங்க. இப்பவே நிறையப்பேரு காலேஜை பங்க் பண்ணிட்டுபோயிடறாங்க. கேட்டா.. அதெல்லாம் நாங்க க்ளாஸ் போயி படிச்சு மார்க் வாங்கிடுவோம்ன்னு சொல்றாங்க."

"அதேமாதிரி, சுமாரா படிக்கிறவங்களுக்குத்தான் ஆசிரியரோட கற்பித்தல் தேவைப்படும்.. ரொம்ப நல்லா படிக்கிறவங்களுக்கு எதுக்கு?ன்னு ஆசிரியர்களும் நினைச்சுட்டா, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கல்வித்தரம் குறைய ஆரம்பிச்சுடாதா?.."ன்னு அவங்க மனசுல எக்கச்சக்க கேள்விகள். பொதுவாவே பரீட்சைன்னாலே, பசங்களுக்கு டென்ஷன் வந்து மனசுல டெண்ட் போட்டு உக்காந்துடும். இந்த நிலைமையில 100% எடுத்தாத்தான் கல்லூரில இடம் கிடைக்கும்ன்னு சொல்றது அவங்களை மன உளைச்சல்ல தள்ள வாய்ப்பிருக்கு.

 'F.A.L.T.U' படத்தோட க்ளைமாக்ஸ்ல , "இவ்வளவு மார்க் எடுத்தாத்தான் அட்மிஷன்னு நீங்கள்லாம் வரம்பு வெச்சிருக்கறப்ப எதுக்கு 35% எடுத்தாப்போதும்,.. நீங்க பாஸ்ன்னு சொல்றீங்க?.. அதையும் கூடுதலாக்கிடுங்களேன்.."ன்னு நொந்துபோயி சொல்றதுதான், நிறைய பசங்களோட மனசுலயும் ஓடிக்கிட்டிருக்கு.

இந்த விஷயத்தைப்பொறுத்தவரை ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் நிச்சயமா மாறுபடுது. 'பசங்கல்லாம் நிறைய மார்க் வாங்கறதாலதான் நாங்களும் உச்சவரம்பை கூட்டுறோம்,  அதாவது பசங்களோட படிப்புல ரொம்ப நல்ல முன்னேற்றம் இருக்குது.. இது பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே'ன்னு காலேஜும்,...  'நீங்க உச்சவரம்பு மதிப்பெண்களை கூடுதலா வெச்சிருக்கறதாலதான், எப்படியாவது மேல்படிப்புக்கு இடம் கிடைக்கணுமேன்னு நாங்க உயிரைக்கொடுத்து படிக்கறோம்ன்னு பசங்களும் அவரவர் கருத்தை சொல்றாங்க.

 படிக்கிறதுங்கறது அறிவைப்பெருக்கும் ஒரு இனிய அனுபவமா இருக்கணுமேதவிர, பசங்களை மனப்பாட்டம் பண்ணும் இயந்திரங்களா மாத்தறதா இருக்கக்கூடாது. 'கொடியசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடியசைந்ததா'ங்கற மாதிரி, இதுவும் அவ்வளவு எளிதா முடிவு செய்யப்பட முடியாமலேயே இருக்கு...

டிஸ்கி: அமைதிச்சாரலில் வெளியானதின் மீள் இடுகை :-)


நல்ல தாய்தந்தையராக இருப்பதெப்படி?

விமர்சனத்தோடு வளரும் குழந்தை குறை கூறக் கற்கிறது.

காழ்ப்புணர்வோடு வளரும் குழந்தை சண்டையிடக் கற்கிறது

பயத்தோடு வளரும் குழந்தை திகிலோடு வாழ்கிறது

இரக்கத்தோடு வளரும் குழந்தை சுயபச்சாதாபப்படக் கற்கிறது

ஏளனத்துடன் வளரும் குழந்தை வெட்க உணர்வைக் கற்கிறது

பகையுணர்வோடு வளரும் குழந்தை பொறாமைப்படக் கற்கிறது

அவமான உணர்வோடு வளரும் குழந்தை குற்றவுணர்வைக் கற்கிறது.

ஊக்க உணர்வோடு வளரும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்கிறது.

சகிப்புத் தன்மையுடன் வளரும் குழந்தை பொறுமையைக் கற்கிறது.

புகழ்தலுடன் வளரும் குழந்தை பாராட்டக் கற்றுக் கொள்கிறது.

உரிமையோடு வளரும் குழந்தை அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறது.

திருப்தியுடன் வளரும் குழந்தை சுயமதிப்போடிருக்கக் கற்கிறது

அங்கீகாரத்துடன் வளரும் குழந்தை குறிக்கோளுடன் வாழக் கற்கிறது

விட்டுக் கொடுத்தலோடு வளரும் குழந்தை பெருந்தன்மையோடு வாழ்கிறது.

நேர்மையோடு வளரும் குழந்தை உண்மையை மதிக்கக் கற்கிறது.

நியாய உணர்வோடு வளரும் குழந்தை நீதிமானாக இருக்கக் கற்கிறது.

கருணையோடு வளரும் குழந்தை மரியாதை செலுத்தக் கற்கிறது.

பாதுகாப்புடன் வளரும் குழந்தை நம்பிக்கையைக் கற்கிறது.

நட்புணர்வுடன் வளரும் குழந்தை, உலகம் வாழ்வதற்கான இடம் என்பதைக் கற்றுக் கொள்கிறது.

சிறந்த பெற்றோர்க்கான குறிப்புகள்:

குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது.
பெற்றோர் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது.
ஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப் படுத்துவது.
குழந்தையின் தனித்தன்மையை மதிப்பது; போற்றுவது.
வயதிற்கும் மன வளர்ச்சிக்கும் ஏற்ப சுதந்திரம் அளிப்பது.
பெற்றோர் மீது பரிவும் பாசமும் நிலைக்கவும், பயத்தைத் தவிர்க்கவும் செய்வது.
தேவையான அளவு அன்பு காட்டுவது.
மன, உடல் சங்கடங்கள் ஏற்படும் போது பரிவுடன் நீக்க முயல்வது.
திரைப்படம், விளம்பரம், தொலைக்காட்சி இவற்றின் வரையறைகளைத் தெளிவுபடுத்துவது.
நல்ல நண்பர்களுடன் பழகவும், வீட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிப்பது.
தகுதிக்கு ஏற்ற அளவு வெற்றியை அடையும் போது மகிழ்வது; பாராட்டுவது.
குடும்பத்தினர் யாவரும் குதூகலமாக இருக்க உதவுவது.
நாமே எடுத்துக் காட்டாக முன்மாதிரியாக வாழ்வது.

புரிந்துகொள்வோம் வாருங்கள் - குழந்தையை!!!-1

பெற்றோருக்கு எந்த வயதுப்பிள்ளையும் குழந்தைதான். அந்தக்குழந்தையின் நல்லபடியாக பெற்றெடுத்து, வளர்த்து, படிக்க வைத்து, கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து, என ஒவ்வொரு வயதிலும் ஒரு ரகமாக அவர்களுடன் நம் பயணம் இருக்கும். ஒவ்வொரு வயதிலும் பிரச்சனை ஒவ்வொரு ரகமாக இருக்கும். அவர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.


 சின்னக்குழந்தைக்கு என்ன பிரச்சனை என்றோ, டீன் ஏஜ்ல என்ன படிப்புல கான்சண்ட்ரேட் பண்ணாம என்றோ இருந்துவிட முடியாத விடயம் பிள்ளை வளர்ப்பு. குழந்தை வளர்ப்பின் மிக முக்கியமான நிகழ்வாக குழந்தையை புரிந்துக்கொள்வதை சொல்லலாம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ரகம் என்பதால் புரிந்து கொண்டால் தவிர அந்தக்குழந்தையின் வளர்ச்சியில் நம்மால் முழு பங்கு எடுத்துக்கொள்ள முடியாது.

 பெற்றோருக்கும் குழந்தைக்குமான உறவு: பெற்றோரும் குழந்தையுமே உறவுதானே!! இதுல என்ன தனியாக இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். ஒவ்வொரு உறவிலும் ஒரு தனித்தன்மை. அதை பேணிக்காக்க வேண்டும். கணவன் - மனைவி உறவுக்குள் அந்த புரிதல், பேணல் இல்லாவிட்டால் வாழ்வில் ஜீவனே இருக்காது. அது போலத்தான் பெற்றோர்- குழந்தை உறவு.

அன்பு - இது எந்த உறவுக்கும் தேவையான விஷயம். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே கலப்படமில்லாத அன்பு இருக்க வேண்டும். திகட்ட திகட்ட அன்பை கொடுக்கும் அதே வேளையில் அன்பு எனும் பெயரால் பிள்ளைகளை கெடுத்துவிடவும் கூடாது. தவறைத் திருத்தி, பாராட்டி, என சமமாக அன்பு இருக்க வேண்டும். எதைக்கொடுத்தும் நிவர்த்தி செய்து விட முடியாத அளக்க முடியாத அன்பை குழந்தைக்கு கொடுப்பதை விட சிறந்தது வேறெதுவும் இருக்காது. 

கேட்டதை உடனே வாங்கி கொடுப்பதோ, கேட்காததையும் முன் கூட்டியே வாங்கி கொடுப்பதோ அன்பாகாது. அது அவர்களை கெடுத்து விடும்.
 அன்பு  காட்டும்  அதே சமயம்  நாம் குழந்தைகளுக்கு தேவையான நீதி போதனைகளை, ஒழுக்கத்தை, நல்லெண்ணத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு நல்ல வாய்ப்பு. அதை தவற விட்டால் ரொம்ப கஷ்டம். 5 வளையாதது 50ல் வளையாது!!

இளம்ப்ராயத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் ரோல்மாடல். எதற்கெடுத்தாலும் பெற்றோரிடம் தான் ஓடிவருவார்கள். அந்தச் சமயத்தில் நாம் நம் குழந்தையை எப்படி இருக்க வேண்டும் என ஆசைபடுகிறோமோ அப்படி நாம் அவர்கள் முன் நடந்து கொள்ள வேண்டும். கற்றல் வீட்டிலிருந்துதான் துவங்குகிறது. பெற்றோர்தான் சிறந்த முன்னுதாரணம் என்பதை நாம் மறக்க கூடாது. அதே நேரம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளும் அளவளாவ வேண்டும். அதுதான் முக்கியம். குழந்தைகளுடன் செலவிடும் அந்த நேரம் அவர்கள் மனதில் பாசத்தை உண்டு செய்யும்.

 வாரி எடுத்து அணைப்பது என்பது அன்பின் வெளிப்பாடு. வயது ஆக ஆக அது குறைந்துவிடாமல் என்றும் குழந்தைக்கு நம் ஸ்பரிசத்தை தந்தால் குழந்தை பாதுகாப்பாக, கதகதப்பாக உணரும் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளரும்.

அவர்களின் பேச்சை பொறுமையாக கேட்க வேண்டும். நாம் சொல்வதை பெற்றோர் காதுகொடுத்து கேட்கிறார்கள் எனும் எண்ணம் அவர்களுக்குள் நல்ல மாற்றத்தை தரும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு அலுத்து கொள்ளாமல் குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு பதில் சொல்வது அவசியம். குழந்தைகளிடம் பொறுமை இழந்து கத்துவது கூடவே கொடாது.
பொறுமையாகத்தான் அவர்களை கையாள வேண்டும்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக நம் பேச்சு இருக்கவேண்டும்.
அவர்களிடம் பேசுவது, அவர்கள் பேசுவதை நாம் கேட்பது என இருவருக்குமிடையே ஆன கருத்து பரிமாற்றம் எப்போதும் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும்.

 வெளியிடங்களில் பிள்ளைகள் பலவிதமான எதிர்மறைக்கருத்துக்களை கேட்கநேர்கிறது. பள்ளியில், விளையாட்டில் என ஈடுபடும் பொழுது பாராட்டு அவசியமாகிறது. பெற்றோர் பாராட்டி ஊக்குவித்தால்தான் குழந்தை தன் முயற்சியை விடாமல் செய்யும் பக்குவத்தை அடையும். ஞாபகமிருக்க வேண்டிய விஷயம். பெற்றோரின் பாராட்டு ஓவர் டோஸாக போய்விடக்கூடாது. “தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்” என்பதனால் தூக்க மருந்து ஓவர் டோஸாகிடாமல் ஊக்கமருந்தாக அவர்களை முன்னேறச்செய்யும் அளவுக்கு இருக்கட்டும்.

பிள்ளைகள் தவறு செய்தால் மிதமான கண்டிப்புடன் புரிய வைக்க வேண்டும். நல்லது எது கெட்டது எது என புரியவைப்பது அவசியம். ஏன் நல்லபாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் சொல்லி புரியவைப்பது அவசியம். ஆனால் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்ககூடாது. அவர்கள் பிள்ளைகள்!!


”நீ ஒரு முட்டாள்!” “ உனக்கு ஒன்றும் தெரியாது!” போன்ற எதிர்மறையான வார்த்தை ப்ரயோகங்களை தவிர்ப்பது நலம். இது குழந்தையின் மனதில் அதீத பாதிப்பை உண்டு செய்துவிடும். மாறாக “ நான் உன்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால்!!” என்று “இப்படி செய்தால் மகிழ்ச்சியாக இருக்கு” என்றோ சொல்வதனால் மாற்றங்கள் நிகழ வாய்ப்புக்கள் அதிகம்.

பொறியியலாளர்களே தயங்காமல் தயாராகுங்கள்...

பொறியியலாளர்களே தயங்காமல் தயாராகுங்கள்...அக்டோபர் 06,2013,17:53 IST

உருவாகும் அத்தனை பொறியியலாளர்களும் பணிச் சூழலுக்குத் தயாரானவர்களாக இருப்பதில்லை என்ற கருத்து கடந்த சில வருடங்களாக இந்தியா முழுவதும் பரவலாக பேசப்படும், தீர்வை கண்டுகொள்வதற்காக ஆலோசிக்கப்படும் கருத்தாகவும் இருந்து வருகிறது.
ஆனால், அதைக் கடந்து இந்திய பொறியியலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு இந்தியாவில் போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும், பரந்து விரிந்த உலகம் திறன் வாய்ந்த இந்திய பொறியியலாளர்களை இரு கரம் நீட்டி அழைக்க தயாராக இருக்கிறது என்பதுதான் உண்மை.
ஏனெனில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள மாணவர்கள் கணிதத்தையும், இயற்பியலையும் கடினமான பாடங்களாக கருதுவதால் பொறியியலை தேர்தெடுத்து படிப்பதில் ஆர்வமின்றி உள்ளனர். அதனால் அந்த நாடுகள் பொறியியலாளர்களின் தேவைப்பாட்டை, தங்கள் நாடுகளில் உள்ள மனித வளத்தைக் கொண்டு தீர்க்க முடியாமல் உள்ளனர்.
எனவே நடைமுறை பணிக்கேற்ற திறனுடன், படிப்பை முடித்து தயாராக வரும் மாணவர்களுக்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பணி வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில் உலக அளவில் இந்திய பொறியியலாளர்களுக்கு கிடைக்கும் பணி வாய்ப்பினை  தட்டி பறிப்பவர்களாக சீனப் பொறியியல் மாணவர்கள் உள்ளனர். தனித் திறன்களில் இந்தியர்களை விட அதிகம் திறமையுள்ளவர்களாக  அவர்கள் இருந்தாலும், எத்தைகைய சூழ்நிலையிலும் பணியாற்றுவதிலும், மொழித் திறனிலும் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர்.  
உலகம் முழுவதும் உள்ள மாணவர்களிடையே தகவல் தொழில்நுட்பத் துறை தான் சிறந்தது என்ற மனோபாவம் அதிகமாக உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், சிஸ்டம்ஸ், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது.
பொறியியல் மாணவர்கள், பொறியாளர்கள் தங்களை மெருகேற்றிக்கொள்வதற்காக "தி இன்ஸ்டிடீயூஷன் ஆஃப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி" போன்ற அமைப்புகளும் உள்ளது. மாணவர்களின் லட்சியம், லட்சியத்திற்காக மேற்கொண்ட பயணம் மிகச் சரியானதாக இருந்தால் தங்களுக்கான இடத்தை உலகின் எந்த மூலையிலிருந்தும் பெறலாம். தயங்காமல் தயாராகுங்கள் பொறியியலாளர்களே...

கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி

சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணித பாடத்தை எளிதாக கற்பிப்பது தொடர்பான 2 நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 284 பள்ளிகளும் 30 கிண்டர் கார்டன் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் கணித ஆசிரியர்களுக்கு, எளிதாக மாணவர்களுக்கு புரியும் வகையில் கணித பாடத்தைக் கற்பிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தியாகராய நகரில் உள்ள தியாகராய அரங்கத்தில் நடைபெறும் இந்த 2 நாள் பயிற்சியை மேயர் சைதை துரைசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
முதல் நாள் பயிற்சியில் 10-ஆம் வகுப்பு கணித வகுப்பு எடுக்கும் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் 283 பேர் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை நடைபெறும் பயிற்சியில் ஒவ்வொரு பள்ளியிலும் 10-ஆம் வகுப்பு பயிலும் தலா 5 மாணவர்கள் ஆசிரியர்களுடன் கலந்து கொள்ளவுள்ளனர். கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமா ஜானு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

உலக சதுரங்க வாகையர் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சென்னையில் நவம்பர் மாதத்தில் உலக சதுரங்க வாகையர் போட்டி-2013 நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவர், மாணவியர்களுக்கிடையே சதுரங்க விளையாட்டுப் போட்டியினை நடத்தி வருகிறது.
அதன்படி அக்.,5 (இன்று) சென்னைக்குட்பட்ட நான்கு கல்வி மாவட்டங்களில் கிழக்கு சென்னை, மத்திய சென்னை, வடக்கு சென்னை மற்றும் தெற்கு சென்னையில் அமைந்துள்ள பள்ளிகளில் 11 வயது, 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.