Monday, 7 October 2013

மதங்களைத் தாண்டிய சமூகம்

மனித சமுதாய வரலாற்றைப் படித்தால் மற்ற எந்த காரணத்தையும் விட மதத்தின் பேரால் நடந்த போர்களே அதிகம் என்பதைப் பார்க்க முடிகிறது. சரியாகச் சொன்னால், எந்தெந்தக் காலகட்டங்களில் மதமும் அதன் மீதான கொள்கைப் பிடிவாதமும் தீவிரமாகக் கோலோச்சினவோ அந்தக் காலகட்டங்களில்தான் மனிதர்கள் மீது மிகக் குரூரமான சித்திரவதைகளும் நடைபெற்றன. உதாரணமாக, கத்தோலிக்க சர்ச்சோடு உடன்படாதவர்களைக் கொடுமைப்படுத்திய ஸ்பானிய விசாரணைகள் (ளுயீயniளா ஐnளூரளைவைiடிn) நடைபெற்ற காலத்தைக் கூறலாம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கி வளர்ந்த நாசிசம் இரண்டாம் உலகப் போரில் போய் முடிந்தது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முறை மேலை நாடுகளில் உருவானது என்பதால் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கிறித்தவர்கள் கொணர்ந்த திட்டம் என முஸ்லிம் முல்லாக்கள் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு சொந்த மதத்தின் மீதான வெறி சென்றுள்ளது. போலியோ சொட்டு மருந்துக்கெதிராக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் தாலிபான்கள் தீவிரப் பிரச்சாரம் செய்வதற்குப் பின்னணியில் மதவிரோதமே உள்ளது.மனிதர்கள் கடவுள் கொள்கை யை ஏன் கண்டுபிடித்தனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மதம் என்ற நிறுவனமே பயத்தின் அடிப்படையில் பிறந்ததுதான். அதுவும் மனிதர்களால் விளக்கம் சொல்ல முடியாத இயற்கை நிகழ்வுகளின் மேல் ஏற்பட்ட பயம்தான் அவர்களைக் கடவுள் பக்கம் தள்ளியது. இன்று நவீன விஞ்ஞானத்தினால் அநேகமாக அனைத்து இயற்கை நிகழ்வுகளைப் பற்றியும் விளக்கம் அளிக்கமுடிகிறது. இன்று இயற்கையைப் பார்த்து பயப்பட வேண்டிய தேவைஇல்லாததால், ஆதிகாலத்தில் இந்துக்களோ, கிரேக்கர்களோ வழிபட்ட சூரியக் கடவுள், வாயுக் கடவுள் போன்ற இயற்கைக் கடவுள்களுக்கும் தேவை இல்லா மல் போய் விட்டது. ஆனாலும் ஒரே கடவுளைக் கொண்ட கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள்கூட இயற்கைக் கடவுள்களைவிட்டனவே தவிர, அக்கடவுள்களுக்கு மாற்றாக மனிதசக்தி யையும் இயற்கையையும் தாண் டிய ஒரேயொரு கடவுள் மீது பிடிமானத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவரை மட்டும் கும்பிடும் வழக்கத்தை விட்டுவிடவில்லை. ஒரு குறிப்பிட்ட கடவுளைக் கும்பிட வேண்டுமென்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தை களுக்கு சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்து விடுகின்றனர். 2001 செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தக மையத்தைத் தகர்த்த பயங்கரவாதிகள் தங்களுடைய கடவுளுக்கு எதிரானவர்களைத் தாங்கள் தண்டிப்பதால் அவர் தங்களுக்கு பரிசளித்துப் பாராட்டுவார் என நம்பியிருக்கக் கூடும். அதனால்தான் “மதம் என்பது மனித கவுரவத்தை அவமதிக்கக் கூடியது. மதம் என்ற ஒன்று இல்லாவிடில், நல்ல மனிதர்கள் நற்செயல்களைப் புரிவார்கள். கெட்ட மனிதர்கள் கெடுதல்களைச் செய்வார்கள். ஆனால் நல்ல மனிதர்களும் கூட கெடுதல் செய்வதற்கு மதமே தூண்டுகோலாக இருக்கிறது” என்கிறார் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் வெய்ன்பர்க். மதத்திற்காக வக்காலத்து வாங்குபவர்கள் `நம்மைச் சுற்றிலும் உள்ள வலிகளும் துயரங்களும் நாம் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை உறுதியாக உள்ளதா என்பதை அறிய அவர் வைக்கும் சோதனை’ என்பார்கள்.
புற்று நோயால் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு ஏதுமறியாக் குழந்தையின் பெற்றோர்களிடம் இப்படிச் சொல்லிப் பாருங்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் உள்ள ஒரு கடவுள் இருந்து, அவர் இதை உண்மையிலேயே ஒரு குழந்தைக்குச் செய்திருப்பாரானால் அவரை உலகிலேயே மிகக் கொடுமையான மனிதராகவே கருத வேண்டும். ஐன்ஸ்டீன், பெட்ரண்ட் ரஸ்ஸல், இங்கர்சால் போன்ற சிந்தனையாளர்கள் கடவுள்கள், மதங்கள் அற்ற ஓர் உலகை - அறிவு, அன்பு, தைரியம், தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களை உடைய ஓர் உலகை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திச் சென்றுள்ளனர். அப்படிப்பட்ட உலகை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற சோதனையில் மனிதர்கள் தேறி வருவது எளிதானதல்ல. பழக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி மாற்றி யோசிப்பதற்கான உந்துதல் உள்ளவர்களே இந்த சோதனையில் பங்கேற்க முடியும். உலகம், பூமி, உயிரினங்கள் உருவான வரலாற்றையும் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும் உள்வாங்க அவர்கள் முயற்சி எடுக்கும்போதே வெற்றி சாத்தியமாகும். (உதவிய கட்டுரை : 2013 செப்டம்பர் 22 தேதியிட்ட ஆங்கில இந்து நாளிதழில் பேராசிரியர் வசந்த் நடராஜன் எழுதிய கட்டுரை).

No comments:

Post a Comment