சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணித பாடத்தை எளிதாக கற்பிப்பது தொடர்பான 2 நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 284 பள்ளிகளும் 30 கிண்டர் கார்டன் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் கணித ஆசிரியர்களுக்கு, எளிதாக மாணவர்களுக்கு புரியும் வகையில் கணித பாடத்தைக் கற்பிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தியாகராய நகரில் உள்ள தியாகராய அரங்கத்தில் நடைபெறும் இந்த 2 நாள் பயிற்சியை மேயர் சைதை துரைசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
முதல் நாள் பயிற்சியில் 10-ஆம் வகுப்பு கணித வகுப்பு எடுக்கும் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் 283 பேர் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை நடைபெறும் பயிற்சியில் ஒவ்வொரு பள்ளியிலும் 10-ஆம் வகுப்பு பயிலும் தலா 5 மாணவர்கள் ஆசிரியர்களுடன் கலந்து கொள்ளவுள்ளனர். கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமா ஜானு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.
No comments:
Post a Comment