Saturday, 13 July 2013

SWEET MEMORIES 4


சந்தோசமாக நண்பர்கள் 
1.AEEO.K.Shankar , Mylapore.
AEEO R.Ganesan , Egmore


                                               2.Shankar , Ganesan , Shanmugam AEEO's



இந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ. பொன்ராஜ்

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ. பொன்ராஜ். கலாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தபோது அவருடன்

ஊரகத்திறனாய்வுத்தேர்வு

ஊரகப் பகுதியிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்வில் 2012–13 கல்வி ஆண்டில் 50 சதவீத மொத்த மதிப்பெண்கள் பெற்று

NIRD HYDERBAD GROUP PHOTO


உங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க

உங்கள் வாழ்க்கையில் எந்த செயலை செய்வதாக இருந்தாலும் குறிக்கோளோடு செயல்படுங்கள். நம்மால் முடியவில்லையே என்று துவண்டு போகமால், தொடர்ந்து உழையுங்கள். அதுவே ஒரு நாள் மிகப்பெரிய சாதனையாக மாறும்.

மனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமிழருவி மணியன்

மனித மனங்களின் கோணல்களை சரி செய்ய நூல்கள் தேவை என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் புதன்கிழமை தெரிவித்தார்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் சார்ந்து அறிவுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

Friday, 12 July 2013

American Library's Saturday Orientations on Resources/ Higher Education / and Visa's - July 13, 2013

Dear Friend: 

The American Library, U.S. Consulate General, Chennai is pleased to invite you to our  Saturday Orientations.  During the orientations we present useful information on library resourceshigher education in the U.S., and visas, all in one hour!

Are you a research scholar trying to locate information? Our librarian will guide you to the appropriate print and online resources.  Do you need assistance in choosing a U.S. University? A student Advisor from USIEF will answer this and much more.  What are the things you should bear in mind when you are attending a Visa interview? Our Consular Officer will brief you on the Do’s and Don’ts of Visas and will answer any questions.  To confirm your participation call us at 044-2857 4321/4223/4041 or send us an emailChennaicirdesk@state.gov  or SMS  “ S to 3-in-1” and send it to 7299012865.  Please see the attached invite for details along with security instructions regarding ID cards required.

Groups from schools and Colleges are also welcome to attend this session.

The program will be held on Saturday July 13, 2013 at 10.00 a.m.  Please pass this information to your friends and colleagues.

Following this you are invited to join our Saturday Matinee screening -  Captain America: The First Avenger in our auditorium.

Looking  forward to seeing you on July 13.

Regards
The American Library Team, U.S. Consulate General, Gemini Circle, Chennai 600 006
Tel: 044- 28574000 extns 4223/4041/4321/4089/4017
Library Hours: 9.30 am - 5.00 pmMonday to Saturday
-- To unsubscribe from our mailing list, please reply with the word ‘Unsubscribe’

2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழகம் ஏற்பாடுஜூலை 12,2013,08:32 ISTby DINAMALAR

சென்னை: வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது.
ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் முதல், செப்டம்பர் வரை, முதல் பருவம்; அக்டோபர் முதல், டிசம்பர் வரை, இரண்டாம் பருவம்;  ஜனவரி முதல், ஏப்ரல் வரை, மூன்றாம் பருவம் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இதன்படி, பாடப் புத்தகங்கள், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனியே அச்சடிக்கப்பட்டு, மாணவருக்கு வழங்கப்படுகின்றன. இரண்டாம் பருவத்திற்காக, 2.29 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 100 அச்சகங்களில் நடந்து வருகின்றன.
பல அச்சகங்களில் இருந்து, பாடப் புத்தகங்கள் தயாராகி, வெளிவர ஆரம்பித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அச்சகங்களில் இருந்து, நேரடியாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, செப்டம்பர், கடைசி வாரத்தில், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக வழங்கப்பட்ட, பிளஸ் 1 புத்தகங்களின் பின்பக்க அட்டையில், மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள், அச்சடிக்கப்பட்டுள்ளன.
"காணாமல் போகும் குழந்தைகள், கொடுமைக்கு இரையாகும் குழந்தைகள், வீட்டிலிருந்து ஓடிப்போன குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், கவனிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகள், "1098" என்ற எண் மூலம், "சைல்டு லைன்" அமைப்பை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்" என அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த வாசகம், அடுத்த கல்வி ஆண்டில், மேலும் சில வகுப்பு புத்தகங்களில் அச்சடிக்கப்படும் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2013,11:37 IST BY DINAMALAR

இந்த உலகம் முழுவதும் வாழும் சுமார் 100 கோடி மக்கள், தங்களின் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள். இன்றைய வர்த்தக உலகில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அளவிட முடியாததாக இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில், ஆங்கிலத்தில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆர்வமுடைய இளைஞர்களுக்கு அளவேயில்லை.

புத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்

அரசு வழங்கும் விலை இல்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவை விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் 1–வது வகுப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 1 லட்சம் மாணவ–மாணவிகள் அதிகமாக சேர்ந்துள்ளனர் என்று தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

ஒரே நாளில் இரு தேர்வுகள்

திருநெல்வேலி: வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரே நாளில் இரு தேர்வுகள் நடப்பதால் தேர்வர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட்,

அனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்ஜூலை 11,2013,10:18 IST

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் அனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் தனியார் பள்ளி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் பறிமுதல்ஜூலை 11,2013,10:21 IST

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஆவணங்கள் இன்றி இயக்கப்படுகிறது. பள்ளி சவாரி ஓட்டும் ஆட்டோக்களில் மாணவர்கள் அதிக அளவில் அழைத்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது. நகரில் விதிகள் மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டி.எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார்.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள் மறுப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 56,682 இடங்கள் இருந்த போதும், 18,946 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இது, 33.42 சதவீதம். 1,012 தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு, "சீட்' கொடுக்க மறுத்துள்ளன. "இந்த பள்ளிகள் மீது, விரைவில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, 11 July 2013

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

திண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 28 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்களை உயர்த்தும் வகையில் ஆசிரியப் பணியை நேசித்து செய்தததற்கு, கிடைத்த மகத்தான பரிசு இது என்று பெருமிதம் கொள்கின்றனர் அவரது குடும்பத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் செல்வ சரோஜா. செப்டம்பர் மாதம் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது இவருக்கு வழங்கப்பட உள்ளது.
7 வயதிலேயே தந்தையை இழந்து தனது தாயாரின் முயற்சியால் சிரமங்களுக்கிடையே படித்து ஆசிரியப் பணியில் சேர்ந்து சிறந்த சேவையாற்றியுள்ளார் இவர். சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு உரிய கல்வியை அளிப்பதே அவர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்யும் என நம்புவதாகக் கூறுகிறார் செல்வ சரோஜா.
மாணவர்களுக்கு கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை சமூக நோக்குள்ளவர்களாக உருவாக்குவதிலும் இவரின் பங்களிப்பு இருந்திருக்கிறது. மாணவ, மாணவிகள் மூலம் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியையும் இவர் தலைமையாசிரியராக இருந்து முன்னின்று நிறைவேற்றியிருக்கிறார்.
இப்படி பல்வேறு பணிகளிலும் ஈடுபட்ட செல்வ சரோஜாவின் பணியை அங்கீகரித்துப் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு இவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த பெருமிதம் தருவதாகக் கூறுகின்றனர் இவரது தாயும், கணவரும்.
பணிபுரியம் காலத்தில் கூடை பின்னுதல், டிசைன் பூக்கள் மற்றும் மாலை தயாரித்தல் உள்ளிட்ட கைத்தொழில் பயிற்சிகளையும் மாணவர்களுக்கு அளித்து வந்துள்ளார் இவர். ஓய்வு பெற்ற நிலையில் இனி வரும் காலங்களில், தாய் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்ய விரும்புவதாய் விருப்பம் தெரிவிக்கிறார் இந்த தேசிய விருதுப் பெண்மணி.news by puthiyathalaimurai

தொலைக் கல்வியில் பி.எட்.,

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலைக்கல்வியில் பி.எட்., படிப்புக்கான அட்மிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு ஆக., 25ம் தேதி நடக்கிறது.
தமிழ், ஆங்கிலம், வரலாறு கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
தகுதிகள்
இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் நிரந்தரம் அல்லது தற்காலிகமாக 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேரடியாக கல்லூரியில் பி.எட்., படிப்புக்கு கால அளவு 1 வருடம்.
தொலைநிலைக் கல்வியில் இது 2 ஆண்டு படிப்பு.
விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 2013, ஜூலை 26.
விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பம் கிடைக்கும் இடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.tnou.ac.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்காலர்ஷிப்

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (என்.எச்.எப்.டி.சி.,) மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வித் உதவித் தொகை வழங்குகின்றன.
உயர் கல்வி பயிலும் 500 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய நிதியின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ஆன்லைனில் ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு தொழிற் கல்வியில் பட்டப்படிப்பு மற்றும், அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், விடுதியில் தங்கியிருந்தால் மாதம் 1,000 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு மாதம் 700 ரூபாயும் வழங்கப்படும்.
தொழிற்கல்வியில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு படிக்கும் விடுதி  மாணவர்களுக்கு, மாதம் 700 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு, மாதம் 400 ரூபாயும் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், தற்போது வேறு எந்த முறையிலும் உதவித்தொகை பெறக் கூடாது. பெற்றோர் மாத வருமானம் 15,000 ரூபாய்கு மேல் இருக்கக் கூடாது.
தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பின், படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து, அத்துடன் கல்வி சான்றுகள், உடல் ஊனமுற்றோருக்கான சான்று, வருமான சான்று, விடுதியில் சேர்ந்து படிப்பதற்கான சான்று அகியவற்றை இணைத்து, National Handicapped Finance and Development, Corporation (NHFDC), Red Cross Bhawan, Sector12, Faridabad - 121 007 என்ற முகவரிக்கு ஆக.,31க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://nhfdc.nic.in என்ற இணையதள முகவரி அல்லது 0129 - 2226 910, 2287 512, 2287 513 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

பி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் இதுவரை 66,391 இடங்கள் நிரம்பியுள்ளன.
பல்வேறு பிரிவுகளின் கீழ் 1,31,191 இடங்கள் காலியாக உள்ளன.
பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் 6-ஆம் தேதி பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. இப்போது 20 நாள்கள் முடிந்துள்ள நிலையில், 66,391 பொறியியல் இடங்கள் நிரம்பியுள்ளன.
இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓர் இடமும், உறுப்புக் கல்லூரிகளில் 1,244 இடங்கள், அரசு, அரசு உதவிப் பெறும் பொறியியல் கல்லூரிகளில் 23 இடங்கள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,29,923 இடங்கள் என மொத்தம் 1,31,191 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன.
இதுவரை பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் 15,262 மாணவ, மாணவிகளும், இசிஇ பிரிவில் 14,988 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் படிப்பில் 8,411 பேரும், சிவில் பிரிவில் 8,407 பேரும், இஇஇ பிரிவில் 7,547 பேரும், ஐ.டி. பிரிவில் 4,054 பேரும், பயோ டெக்னாலஜி பிரிவில் 816 பேரும், ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் 748 பேரும், ஆட்டோமொபைல் பிரிவில் 644 பேரும், தமிழ் வழி சிவில் பிரிவில் 128 பேரும், தமிழ் வழி மெக்கானிக்கல் பிரிவில் 103 பேரும் கலந்தாய்வு மூலம் சேர்க்கைக் கடிதம் பெற்றுள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதனை அந்தந்த கல்லூரிகளிலேயே விண்ணப்பப் படிவங்களை பெற்று உரிய சான்றுடன் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும்
www.tn.gov.in/bcmbcdept   என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.By dn, சென்னை
First Published : 11 July 2013 02:01 AM IST

Wednesday, 10 July 2013

தேனின் மருத்துவ குணங்கள்:-



தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்

அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.
இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்

புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை



உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: சித்தன் சிவமயம்
விதை இயற்கை அங்காடி

இதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:

உலகம் முழுவதும் மரணத்திற்கு முன்னனி காரணமாக இருப்பது மாரடைப்பு. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை சாப்பிட்டால் இதயத்தை பாதுகாக்கலாம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை எடுப்பது ஒன்றும் கடினமல்ல.

உரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை 48 மணி நேரத்தில் பெறலாம்

சென்னை : ‘உரிய கட்டணத்தை செலுத்தி, 48 மணி நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டையை  பெறலாம்‘ என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி

திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்த 16 வயதுச் சிறுமி படிக்க விரும்பினாள். தாய் அதை ஆதரித்தும், தகப்பனோ தன் அக்காள் மகனுக்கு (வயது 30) அவளைத் திருமணம் செய்துவைக்கக் கட்டாயப்படுத்தினான். அத்தை மகனும் அவனது பெற்றோரும் அவளைத் தொடர்ந்து படிக்க அனுப்புவதாக உறுதியளித்தனர். ஆனால் வாக்குறுதியை மீறினர்.

எச்சரிக்கை! கவனியுங்கள் சிறு நீரகங்களை!

  சென்னை நுங்கம்பாக்கம்  ரயில்வே ஸ்டேஷன் அருகில் துண்டு சீட்டுகள் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கும் ஒன்று கொடுத்தார்கள். ஏதோ ரியல் எஸ்டேட்விளம்பரமாக இருக்கும்அல்லது  கணினி கல்வி நிலையங்களின் விளம்பரமாக இருக்கும் என்று நினைத்தேன். சாதாரணமாக இது போன்ற விளம்பர நோட்டீசுகளை வாங்கிய பின் அவர்கள் எதிரிலேயே தூக்கி எறியாமல் கொஞ்சம் தள்ளி

சிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அசத்திய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்ஜூலை 09,2013,11:06 IST

கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படம் தயாரித்து நேற்று வெளியிட்டனர்.
கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்" உதவியுடன், "டிஜிட்டல் ஸ்டோரி டெல்லிங்" முறையில் குறும்படங்கள் தயாரிக்க கோடை கால பயிற்சியளித்தது. மாணவர்களின்

அங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்துறை அதிகாரிகள் அதிரடிஜூலை 09,2013,11:13 IST

திட்டக்குடி: திட்டக்குடியில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் மூடினர்.
கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த 44 பள்ளிகளை மூட கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டார். இதில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த இந்தியன் பள்ளியும் அடங்கும். ஆனால் கடந்த ஒரு மாதமாகவே இந்த பள்ளியில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் நடந்து வந்தது.

குழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரைவில் எட்டும்

குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை என்ற நிலையை தமிழகம் விரைவில் எட்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.கே.பச்சைமால் தெரிவித்தார்.
மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மேலும் பேசியது:
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றிட 2003-ஆம் ஆண்டு மாநில செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன் விளைவாக இன்று தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.
கடந்த மே மாதம் சார்க் உறுப்பினர் நாடுகளால் நடத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் தொடர்பான பயிலரங்கம் புது தில்லியில் நடைபெற்றது.
இதில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து தற்போது மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரும், மென்பொருள் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவரும் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இது தெற்கு ஆசிய அளவில் இந்திய நாட்டின் குறிப்பாக தமிழகத்தின் பெருமையை தலைநிமிர்த்தியுள்ளது.
குழந்தைத் தொழிலாளர்களைப் பணியிலிருந்து விடுவித்து அவர்களுக்கு கல்வி வழங்கிட 15 மாவட்டங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் நடத்தப்படுகிறது. மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்காக தமிழகத்தில் தற்போது 335 சிறப்புப் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 11 ஆயிரம் குழந்தைகள் படித்து வருகின்றனர்.
தொழிற்சாலைகள், கடைகள் மட்டுமன்றி, வீடுகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதும் சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து அரசுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
மாநிலங்களவை உறுப்பினர் ந.பாலகங்கா, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அரசு முதன்மைச் செயலர் பியாரெ, தொழிலாளர் துறை ஆணையர் டாக்டர் பி.சந்திரமோகன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் க.அய்யனு, மாநகராட்சி உறுப்பினர் ம.முகமது இம்தியாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2010-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி 32 ஆயிரம் பட்டதாரிகள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்காக அழைக்கப்பட்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் 12.5.2010 முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. பணி நியமன ஆணைக்காக காத்திருந்த அவர்கள் யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே இனி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று அரசு கூறிவிட்டது.
இதனை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்ளிட்ட 70 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி அவர்கள் 70 பேரும் உயர் நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல் என்.பரந்தாமன் உள்ளிட்ட வேறு 24 பேர் தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இதனை எதிர்த்து அவர்கள் அனைவரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
ஆக 70 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும், பின்னர் 24 பேர் தனியாக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பு விவரம்: 2010-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்புப் பணிக்கு மனுதாரர்களின் பெயர்களை வேலைவாய்ப்புத் துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். அன்றைய நிலவரப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எதுவும் எழுதாமலேயே அவர்கள் ஆசிரியர் பணி நியமனத்துக்கான முழுத் தகுதியையும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற அறிவிக்கையை 23.8.2010 அன்று ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. எனினும் அதில் ஒரு விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிக்கை வெளியாகும் முன்னரே ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றிருந்தால், அந்த பணி நியமனங்களை 2001-ஆம் ஆண்டின் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் விதிமுறைகளின்படி மேற்கொள்ளலாம் என்ற அந்த விதிவிலக்கில் கூறப்பட்டிருந்தது.
ஆகவே, இந்த வழக்கில் தொடர்புடைய 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை. எனினும் தற்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட காலியிடங்கள் இல்லை என்று அரசு தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார். ஆகவே, எதிர்காலத்தில் காலியிடங்கள் உருவாகும்போது இவர்கள் அனைவரையும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆசிரியர் பணியில் நியமித்திட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.By dn, சென்னை
First Published : 10 July 2013 02:24 AM IST

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழைகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக வந்த விண்ணப்பங்களில் 1,672 விண்ணப்பங்கள் பல்வேறு பிழைகளுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பெயர், பிறந்த தேதி, தேர்வு மையம், தேர்வு எழுதும் பாடம் போன்ற அடிப்படைத் தகவல்களைக் கூட சரியாக நிரப்பாமல் நிறையபேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவருக்கும் நிபந்தனை அடிப்படையில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் பிழைகள் என்ன என்றும், அதை நிவர்த்தி செய்தால் மட்டுமே அவர்கள் பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்படுவார்கள் என்றும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த ஊரில் தேர்வு எழுத விரும்புகிறார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்காத 128 பேருக்கு திருச்சியில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வு விண்ணப்பங்களை கலர் ஜெராக்ஸ் எடுத்த இருவரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,881 பேரைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்காக கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1.67 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டன.
1.67 லட்சம் பேருக்கு மொத்தம் 422 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஏராளமான விண்ணப்பங்கள் பிழைகளுடன் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
எம்.ஏ., எம்.எஸ்சி. படிப்புகளுக்குப் பிறகு பி.எட். முடித்தவர்கள், போட்டித் தேர்வு விண்ணப்பங்களைக்கூட சரியாக பூர்த்திசெய்யத் தெரியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய பிறந்த தேதியை "டைப்' செய்ய வேண்டும். ஆனால், பல விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதியைக் கூட சரியாக பூர்த்தி செய்யாத நிலையில் அவர்களுக்கான விண்ணப்பங்களை எப்படி பதிவேற்றம் செய்வது என தேர்வு வாரிய அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அல்லது மாற்றுத்திறனாளிகளாக இல்லாத 28 பேர் ரூ.250 கட்டணம் செலுத்தியுள்ளனர். இவர்களிடம் மீதிக் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்ணப்பத்தில் திருத்தம் செய்தால் தேர்வு எழுத முடியாது: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த சில விண்ணப்பதாரர்கள் தங்களது பிழைகளை மறைக்கும் வகையில் விண்ணப்ப நகலைத் திருத்தியிருந்தனர். ஆனால், அசல் விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில் விண்ணப்பதாரர்கள் தவறு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உதாரணத்துக்கு, தேர்வு மையங்கள் தொடர்பாக பூர்த்திசெய்யாத ஒரு விண்ணப்பதாரர், சென்னையில் தேர்வு மையத்தைக் கோரியிருந்தவாறு விண்ணப்ப நகலில் மாற்றம் செய்திருந்தார். அவரை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
பெயர், தேர்வு மையங்களை விண்ணப்ப நகலில் திருத்திய 4, 5 பேர் இந்த வகையில் சிக்கினர்.
ஆசிரியர் பணிக்கு வர விரும்புபவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடக் கூடாது. எனவே, விண்ணப்பங்களை திருத்தி எடுத்து வந்தவர்களுக்கு இந்த போட்டித் தேர்வில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
விண்ணப்பத்தில் பிழை செய்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறையிட்டால் அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். ஆனால், விண்ணப்பங்களைத் திருத்தியோ, மாற்றியோ கொண்டுவந்தால் அவர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.By ஆ.ரகுராமன், சென்னை
First Published : 10 July 2013 02:41 AM ISTBY DINAMANI

பள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், வங்கி கணக்குகள் முறையாக செயல்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டும், அதனை முறையாக தணிக்கை செய்திடவும் ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அகஇ சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட உத்தரவு.

தொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக் -கான பள்ளி மாணவர்களுக்குரிய விலையில்லா நலத் -திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 12.7.2013 அன்று இயக்ககக் கூட்டரங்கில் நடைபெறுதல் குறித்த விவரங்கள் அடங்கிய இயக்குனரின் செயல்முறைகள்

Tuesday, 9 July 2013

கல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார். விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமராஜின் அன்னையார் பெயர் சிவகாமி. மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார்.

குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் என்றும் அறியப்படுகிறார். 

ஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது

சென்னை: ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது. மாநிலத்தில், 550 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 17 ஆயிரம்

ஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/07/2013









வழக்கம்போல் இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் மாநில ரேங்க் பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவராக விரும்புவதாகவும், பொறியியல் படிப்பில் சேர விரும்புவதாகவும் தங்கள் விருப்பங்களை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினர். சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக சேவை செய்ய விரும்புவதாகவும் கூறினர். ஆனால், அறிவியல் படிக்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

Monday, 8 July 2013

SWEET MEMORIES - 3

இனிய நண்பர்களுக்கு 
                                              அன்பு வணக்கம் 

 நான் HYDERBAD யில் கலந்து கொண்ட  COMMUNITY PARTICIPATION AND SOCIAL MOBILIZATION FOR UNIVERSALIZATION OF ELEMENTARY EDUCATION  பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்  

                                    1.சென்னை விமான நிலையம் 
                                                               DATE  : (1/7/2013)   TIME : 3.30 P.M







2.HYDERABAD விமான நிலையம் (1/7/2013)
TIME : 4.40 P.M 



3. விமான நிலையத்தில் இயற்கை காட்சிகள்
  












4. NIRD நுழைவாயில் ராஜேந்தர் நகர் 
ஹைதரபாத் 




5. NIRD MAIN OFFICE





6.மகாத்மா காந்தி சிலை 




7. நாங்கள் தங்கி இருந்த விருந்தினர் மாளிகை 


8. விருந்தினர் மாளிகையின் வரவேற்புஅறை 












9.தங்கும் அறைகள்  


10. உணவு கூடம் 



11.TRAINING HALL 





















12.GROUP DISCUSSION




                                     



 



13.பயிற்சி முகாம் பற்றி FEEDBACK ஐ அங்கு ONLINE மூலம் பதிவு செய்கிறோம்   


                                                                         

14. மதிப்புக்குரிய  இணை இயக்குனர்கள் ONLINE யில் பயிற்சி மூகாம் பற்றி தங்கள் FEEDBACK ஐ பதிவு செய்கிறார்கள் 


                                      

                                                         
15.EGMORE உதவி தொடக்க கல்வி அலுவலரும் பயிற்சி முகாம் பற்றி FEEDBACK பதிவு செய்கிறார்  




                                           



16. ONLINE யில் பதிவு செய்யபட்டவுடன் LCD மூலம் நம் பெயர் தெரியும்  



17. NIRD - NATURAL SCENES  


                                      



























                                    

                                       

                                     

                                     



                                     

                                     

                                     

                                     
                                     
                                      


                                      
 
                                       
                                   
18. RAMOJI FILM CITY
                                         FUNDUSTAN -KIDS DREAM WORLD










19.THRILL RIDE



20.EUREKA 


21.RAMOJI TOWER





21. SHOTTING SPOT FOR HISTORICAL (MOVIES & SERIALS )




22. இந்த பேருந்தில் 20 K.M  RAMOJI FILM CITY ஐ சுற்றி பார்த்தோம் 


23. REAL STUNT SHOW PLACE IN RAMOJI FILM CITY
ITS VERY THIRRILLING  






24. SHOTTING SETTINGS





25. நல்லா பாருங்க 



26.GROUP PHOTO



27. RAJENDRA NAGARயில் உள்ள ஒரு தனியார் பள்ளி 



28. RAJENDRA NAGAR பெருமாள் கோவில்