பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் இதுவரை 66,391 இடங்கள் நிரம்பியுள்ளன.
பல்வேறு பிரிவுகளின் கீழ் 1,31,191 இடங்கள் காலியாக உள்ளன.
பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் 6-ஆம் தேதி பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. இப்போது 20 நாள்கள் முடிந்துள்ள நிலையில், 66,391 பொறியியல் இடங்கள் நிரம்பியுள்ளன.
இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓர் இடமும், உறுப்புக் கல்லூரிகளில் 1,244 இடங்கள், அரசு, அரசு உதவிப் பெறும் பொறியியல் கல்லூரிகளில் 23 இடங்கள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,29,923 இடங்கள் என மொத்தம் 1,31,191 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன.
இதுவரை பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் 15,262 மாணவ, மாணவிகளும், இசிஇ பிரிவில் 14,988 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் படிப்பில் 8,411 பேரும், சிவில் பிரிவில் 8,407 பேரும், இஇஇ பிரிவில் 7,547 பேரும், ஐ.டி. பிரிவில் 4,054 பேரும், பயோ டெக்னாலஜி பிரிவில் 816 பேரும், ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் 748 பேரும், ஆட்டோமொபைல் பிரிவில் 644 பேரும், தமிழ் வழி சிவில் பிரிவில் 128 பேரும், தமிழ் வழி மெக்கானிக்கல் பிரிவில் 103 பேரும் கலந்தாய்வு மூலம் சேர்க்கைக் கடிதம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment