உங்கள் வாழ்க்கையில் எந்த செயலை செய்வதாக இருந்தாலும் குறிக்கோளோடு செயல்படுங்கள். நம்மால் முடியவில்லையே என்று துவண்டு போகமால், தொடர்ந்து உழையுங்கள். அதுவே ஒரு நாள் மிகப்பெரிய சாதனையாக மாறும்.
உங்கள் குறிக்கோளை சாதனையாக மாற்ற நீங்கள் செய்ய வேண்டியது:
* முதலில் உங்கள் மனதில் உள்ள குறிக்கோளினை, ஒன்றான் பின் ஒன்றாக பட்டியலிட்டு எழுதுங்கள். உங்கள் குறிக்கோளினை சாதனையாக மாற்ற இதுவே முதல் படியாகும். பிற்காலத்தில் அது நிறைவேறும் போது, நீங்கள் குறித்து வைத்தவற்றை எடுத்து பார்க்கும் போது நாம் முடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சி தோன்றும்.
* குறித்தவற்றில் எது உங்கள் வாழ்க்கைக்கு முதலில் முக்கியமானது என்று தேர்ந்தெடுங்கள். உங்களின் குறிக்கோளினை ஒன்றன் பின் ஒன்றாக முடிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, அனைத்தும் ஒரே சமயத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற நினைக்க கூடாது. இதனால் முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அரைகுறையாக அல்லது குறுக்கு வழியை முடிக்க நேரிடும். எனவே சரியான இலக்கை அடையும் வரை தொடர்ந்து உழைக்க வேண்டும்.
* உங்களது குறிக்கோள் எவ்வளவு நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற கால அளவினை நிர்ணயிங்கள். குறுகிய கால குறிக்கோள் என்றால் 1-2 வாரங்கள் ஒதுக்குங்கள். நடுத்தர குறிக்கோள் என்றால் 2 முதல் 6 வாரங்கள் ஒதுக்குங்கள். நீண்ட கால குறிக்கோள் என்றால் 6 முதல் 12 மாதங்கள் ஒதுக்குங்கள். ஒதுக்குவது பெரிதல்ல அந்த நேரத்திற்குள் முடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
* குறித்த நேரத்திற்குள் உங்களின் குறிக்கோளை சாதனையாக மாற்றினால், அதை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அவ்வாறு கொண்டாடும் போது சாதித்து விட்டோம் நிறைய சாதிக்க வேண்டும் என்று தோன்றும்.
எந்த செயலை செய்வதற்கு முன்பும் குறிக்கோளோடு செயல்பட வேண்டும். அது நிறைவேறும் வரை தொடர்ந்து உழைத்தல் வேண்டும். என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்துடன், செயல்பட்டால் வெற்றி உங்களுடையது தான்
No comments:
Post a Comment