Saturday, 22 June 2013

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடும் என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே”, “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” இதுபோன்ற பாடல்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட நம் கவிஞர்களின் படைப்பாகும்.

பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.

ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள். இப்போது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டிய சில நல்ல பழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப்படித்து, உங்கள் குழந்தைகளை பின்பற்ற வைத்து, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்து கொடுங்கள்.
நிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப்படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்து விடுங்கள். அதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளைச் சொன்னால், அவர்களே தினமும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்களை தேடி வருவார்கள்.
நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். உண்மையில் அவ்வாறு எழுப்புவது நல்ல பழக்கமல்ல. சொல்லப்போனால் அது அவர்களது உடலுக்கு கெட்டதைத் தான் விளைவிக்கும்.
எப்படியெனில், சிறு குழந்தைகளுக்கு 8-9 மணி நேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்பவோ, உடலில் தண்ணீரை ஊற்றவோ வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக்கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகி விடும்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக சாப்பாட்டை சிந்தாமல் சாப்பிடுவது, அருகில் அமர்ந்திருப்பவர்கள் முகம் சுழிக்காதவாறு சாப்பிடுவது, அருவறுக்கத்தக்க வகையில் சாப்பிடுவதை தவிர்ப்பது போன்றவை அடங்கும்.
குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்தவேண்டும். குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது ‘நன்றி’ மற்றும் ‘தயவு செய்து’ போன்ற மரியாதையான வார்த்தைகள் தான்.
எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். கடைக்கு சென்று ஒரு பொருள் வாங்கிவிட்டு புறப்படும் போது அவருக்கு “தேங்க்ஸ்” என்று கூறுவதன் மூலம் நம் குழந்தைகள் அவர்களின் மனதில் நிலைத்து நின்று விடுவார்கள். இது பொற்றோருக்கு பெருமை தானே. பகிர்ந்து கொள்வது என்பது ஒருவிதமான சந்தோஷம். ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் இதனை செய்வதில்லை.
மேலும் தற்போதைய பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்களுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொடக்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும்.
இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள். அத்துடன் பெற்றோர் தான் சிறு வயதில் இருந்த அனுபவித்த கஷ்ட, நஷ்டங்கள், வளர்ந்து வந்த விதம் ஆகியவற்றை கூறும்போது, அது நம் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். இதன் மூலம் குழந்தைகள் தன் தந்தையின் ஆரோக்கிய வழியை தேர்ந்தெடுக்க உதவும்.
தற்போதுள்ள குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறு வயதிலேயே வாங்கிக் கொடுத்து பழக்கிவிட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற்காலத்தில் ஆரோக்கியமற்ற உடலைப் பெற்றிருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளை சுத்தமாக டி.வி. பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும். பொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழுது கண்டித்து, அதனை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டுவார்கள். சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால், நீங்கள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத்து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம்.
குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்கள். எல்லாமே பெற்றோரின் கையில் தான் உள்ளது. தொட்டில் பழக்கம் கடைசி வரை நம் ஒழுக்கத்தை காக்கும்.
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” என்ற குறளுக்கு சான்றாய் விளங்குமாறு நாமும் நம் குழந்தைகளை வளர்ப்போம்.  நன்றி  ..... TN  KALVI

2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம்

இந்த வருடம் ஆசிரியர்களுக்கு மொத்தம் 7 நாட்கள் மட்டுமே பயிற்சி நாட்கள்.
குறுவள மையம் 3 நாட்கள் 
(இடைநிலை மற்றும் பட்டதாரிகள்)
1. 06.07.2013
2. 26.10.2013 
3. 04.01.2014
பணியிடைப் பயிற்சி 4 நாட்கள் 1. 20.08.2013
2. 04.09.2013
3. 20.11.2013 

4. 04.12.2013

Wednesday, 19 June 2013

உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை (இன்று) முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.
இதுகுறித்து எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கல்லூரி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஜூன் 19 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

இத்தேதிகளில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிற்பகல் 3 மணி வரை மட்டும் பெற்றுக்கொள்ளப்படும். கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிக்க வேண்டும். மஎஇ,இநஐத, ஒதஊ, சஉப, நகஉப தேர்ச்சி அல்லது பி.எச்.டி. பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் நேரில் பெற்றுச்செல்ல வேண்டும். வழிகாட்டி நெறிமுறைகளின் படி ரூ. 250, ரூ. 500-க்கான செலுத்துச்சீட்டுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மாநில ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வருடன் இன்று சந்திப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று ரேங்க் பெற்ற 13 மாணவ, மாணவியர் மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் ரேங்க் பெற்ற 9 மாணவியருக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுப் பத்திரத்தையும், ரொக்கப் பரிசையும் வழங்குவார் எனத் தெரிகிறது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசையும் வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று ரேங்குகளை 198 மாணவ, மாணவியர் பெற்றனர். எனவே, அவர்கள் அத்தனை பேருக்கும் முதல்வரே நேரில் சான்றிதழ்களை வழங்குவது குறித்து முடிவுசெய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று ரேங்குகள் பெற்ற 13 மாணவ, மாணவிகள் மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் ரேங்க் பெற்ற 9 மாணவிகள் மட்டும் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்திக்க அழைத்துச்செல்லப்பட உள்ளனர். மாநில அளவில் முதல் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.
தகுதித்தேர்வு விண்ணப்பம்
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 17–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை வாங்கிய வண்ணம் உள்ளனர்.
விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர்கள், பழங்குடியின வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். தேர்வு கட்டணத்தை விண்ணப்பத்துடன் கொடுக்கப்படும் செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கி கிளையிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ அல்லது கனரா வங்கியிலோ செலுத்தலாம்.
எந்த அலுவலகத்திலும் கொடுக்கலாமா?
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்குச் செல்லும்போது விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலையும் வைத்துக்கொள்ள வேண்டும். கையெழுத்திடப்பட்டு கொடுக்கப்படும் அந்த ஜெராக்ஸ் பிரதி தான் ஒப்புகைச்சீட்டாக கருதப்படும்.
இதற்கிடையே, விண்ணப்பம் வாங்கிய பள்ளியின் அதிகார எல்லைக்குள் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) மட்டும்தான் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமா? அல்லது எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாமா? என்ற கேள்வி ஒருசில விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி பதில்
காரணம் சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை எங்கேயாவது ஒரு பள்ளியில் வாங்கி இருப்பார்கள். அவர்களின் வீடு வேறு மாவட்டத்தில் இருக்கக்கூடும். இதுபோன்ற நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கென்று விண்ணப்பம் வாங்கிய பள்ளிக்கு உள்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்திற்கு செல்வதால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். தமிழகம் முழுவதும் 66 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களுமே கடைசியில் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு தான் வரும்.
இந்த பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் அறிவொளியிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உட்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. வசதிக்கு ஏற்ப எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். எங்கு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து டி.இ.ஓ. அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கிக்கொள்வார்கள்’’ என்று தெரிவித்தார்.

NEWS



1.             AEEO ASSOCIATION IS INVITED TO MEET MINISTER ON THURSDAY FOR DEMAND
2.         HIGH SCHOOL HEAD MASTER PANEL STAY TWO WEEKS AT  MADURAI BENCH

அகஇ - SABL - 1 முதல் 4 வகுப்புகளுக்கான கற்றல் அட்டைகள் திருத்தம் செய்தவைகளை வகுப்பறையில் நடைமுறைப்படுத்த உத்தரவு.

Monday, 17 June 2013

TNTET 2012 - 2013 Application Sales Centre List | ஆசிரியர் தகுதி தேர்வு - அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப விற்பனை மையங்களின் பட்டியல்

Tamil Nadu Teachers Eligibility Test for the year 2012 - 2013

Application for Tamil Nadu Teachers Eligibility Test Examination are sold in the following schools from 17.06.2013 to 01.07.2013. Filled in application should be submitted at District Educational Offices only after obtaining proper acknowledgement

Kanyakumari

Tirunelveli

Tuticorin

Ramanathapuram

Sivagangai

Virudhunagar

Theni

Madurai

Dindigul

Nilgiris

Coimbatore

Erode

Salem

Namakkal

Dharmapuri

Pudukkottai

Karur

Perambalur

Tiruchirapalli

Nagapattinam

Thiruvarur

Thanjavur

Villupuram

Cuddalore

Thiruvannamalai

Vellore

Kancheepuram

Chennai

Krishnagiri

Ariyalur

Tiruppur 

தமிழகம் முழுவதும் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பற்றிய முழு விவரம் கோரி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியம் மற்றும் நர்சரி உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை 15.06.2013 அன்றுள்ளவாறு அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிபுரியும் அலுவலகம், தற்பொழுது பணிபுரியும் ஒன்றியம் / அலுவலகங்கத்தில்
எத்தனை ஆண்டுகளாக பணிபுரிகிறார் என்ற விவரம், பிறந்த தேதி, முதன்முதலாக அலுவலராக பணியேற்ற நாள் மற்றும் பணிபுரியும் ஒன்றியம், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக  பணிபுரிந்த ஒன்றியம் போன்ற விவரம் முதல் படிவத்திலும், 2013-14ஆம் கல்வியாண்டில் ஓய்வுபெறவுள்ள அலுவலர்களின் பெயர், பதவி, ஒன்றியம் / அலுவலகம், பிறந்த தேதி, ஓய்வுபெறும் தேதி, இதற்குமுன் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்த ஒன்றியம் மற்றும் மாவட்டம் போன்ற விவரங்கள் இரண்டாவது படிவத்திலும் பதிவு செய்து 21.06.2013 அன்று தனிநபர் மூலம் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஒப்படைக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Sunday, 16 June 2013


HAPPYBIRTHDAY 


சந்தோசமாக நாங்கள்