Saturday, 18 May 2013

அம்மா உணவகம்




18/5/2013- அம்மா உணவகத்தில் நான் மதிய உணவு சாப்பிட போது  எடுத்த புகைப்படம்    










                                             17/5/2013 - ஒசூர் பேருந்து நிலையம்  




25/05/2013 - கலந்தாய்வு


கலந்தாய்வு -25/5/2013

MIDDLE HM TO AEEO முன்னுரிமை பட்டியல் 1 முதல் 250 வரை உள்ளவர்கள் 25/5/2013 காலை 9.30க்கு கலந்தாய்வு நடைபெறும் 


கலந்தாய்வு நடைபெறும் இடம் : தொடக்கக்  கல்வி இயக்ககம் 
                                                                     DPI வளாகம் சென்னை -600006  




கலந்துகொள்ள வருபவர்கள் கீழ்கண்ட ஆவணங்கள் கொண்டுவரப்படவேண்டும் 

1.பணிபுரியும் அலுவலரின் முழுவிவரங்களுடன் கூடிய படிவத்தில் அன்னாரது நிழற்படம் ஒட்டப்பட்டு உதவித் தொடக்க கல்வி அலுவலரின் மேலொப்பம் பெறப்பட்டிருக்கவேண்டும்.       



Thursday, 16 May 2013

DEAR FRIENDS

Good Evening My Dear Friends.,
   
                            I am going to Hosur . Middle school Head Master to AEEO seniority list will be release in  1 or 2 days. keep touch with this blogger. I will put that list in 1 or 2 days ...

                                                                                                           THANK YOU ....
                                                                                                                 HAVE A NICE DAY......!!!!  

Wednesday, 15 May 2013

APRIL - 2013 SWEET MEMORIES



APRIL -2013 SWEET MEMORIES

















திடீர் பயணம்

நண்பர்களே    வணக்கம்.,

                  சென்னையிலிருந்து   இரவு  பேருந்து   பயணம் (  முன்   பதிவு இல்லாமல் ) என்பது  மிகக்   கடினம்  என்பதை   உணரவைத்த    தருணம் .
     
                  திருநெல்வேலிக்கு   அருகில்  திருக்குறு ங்குடி   பேருந்து   பயணம்
செல்ல டிக்கட்   எடுக்க   முடியாமல்  தெரிந்த நண்பர் மூலம் டிக்கெட் கேட்டதற்கு கோடை விடுமுறை/சீசன் எனக் கூறி முயிற்சி செய்வதாகக் கூறினார்.
            
                  மதுரை வரை செல்ல PARVEEN TRAVELS இரவு 9.45 க்கு டிக்கெட் கிடைத்தது . 
                   
                         அப்பாடி டிக்கெட் கிடைத்த சந்தோசம் .........
  
                உண்மையில் நீண்ட தூர பேருந்துப்  பயணம் திடீரென ஏற்பட்டால் சிரமம்தான் .   

          
            நண்பர்களே BUS , TRAIN , AIR எதுவாக இருந்தாலும் RESERVE செய்து பயணம் செய்யுங்கள் ONLINE வசதியைப் பயன்படுத்துங்கள் ONLINEஇல் TICKET 
எடுப்பதை பழகிக்கொள்ளுங்கள் 
           
                                                                               மீண்டும் சந்திப்போம்...............!!!!!      
                                                                                    

          

Sunday, 12 May 2013

பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் கோரும் விண்ணப்ப படிவம்

2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்

 # தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின்   செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண்  183 /ஏ1/இ2/2013 நாள்:11.05.2013 ன் படி பள்ளிக்கல்வித்துறை அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான அறிவுரை கிழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது .
# 2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக  வழங்க வேண்டும்.

# 2013-2014ம் கல்வியாண்டின் பொதுமாறுதலுக்கான அரசாணை (1டி) எண். 129  பள்ளிக் கல்வி (இ1) துறை நாள்:09 .05.2013 வெளியிடப்பட்டுள்ளது.

# ஆசிரியர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதிகள்  17 (a), 17 (b),ன் கீழ் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்பதையும், நீண்டகால விடுப்பில் உள்ளவராயின் அதன் விவரம், தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவராயின் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டவராயின் அதன் விவரம், நிர்வாக நலன் கருதி மாறுதல் அளிக்கப்பட்டிருப்பின் அதன் விவரம் போன்ற விவரங்களைத் தெளிவாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கலத்தில் தலைமையாசிரியரால் குறிப்பிடப்பட வேண்டும். 

# மாவட்டத்திற்குள்/மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்  கோரும்   தலைமையாசிரியர்கள் உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய  ஒப்படைக்க வேண்டும். 

# முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விண்ணப்பதாரர்/அவர்கள்  பிரதிநிதி முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்த பின் பதிவு செய்த விவரங்கள் சரியாக உள்ளது என்பதை விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம்  உறுதி செய்து கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் அவர்களது விண்ணப்பத்தினை இருநகல்கள் எடுத்து விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் கையொப்பம் பெற்று ஒரு நகல் முதன்மைக் கல்வி அலுவலர் கோப்பில் பராமரிக்க வேண்டும். மற்றொரு நகலினை விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும்.

# மாவட்டத்திற்குள் /மாவட்டம் விட்டு மாறுதல் கோரும்  அனைத்துவகை ஆசிரியர்கள்,  உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பித்து மேலொப்பம் பெற வேண்டும். பொது மாறுதல் கோரும் விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து கலங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து தலைமையாசிரியரால் ஒப்பமிடப்பட வேண்டும்.  சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாறுதல் கோரும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய  ஒப்படைக்க வேண்டும்.  

# முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விண்ணப்பதாரர்/அவர்கள்  பிரதிநிதி முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்த பின் பதிவு செய்த விவரங்கள் சரியாக உள்ளது என்பதை விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம்  உறுதி செய்து கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் அவர்களது விண்ணப்பத்தினை இருநகல்கள் எடுத்து விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் கையொப்பம் பெற்று ஒரு நகல் முதன்மைக் கல்வி அலுவலர் கோப்பில் பராமரிக்க வேண்டும். மற்றொரு நகலினை விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும்.

# மாறுதல் கோரும் விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவு செய்யும் போது இணையத் தளத்தில் ஏற்கனவே  உள்ள பள்ளி முகவரியை மாற்றாமல்   தட்டச்சு செய்திட வேண்டும். புதிதாக  திருத்தங்கள் ஏதும் செய்தல் கூடாது.

# முதன்மைக் கல்வி அலுவலக  பிரிவு உதவியாளர் விண்ணப்பங்களை  பதிவு செய்த அன்றே தகுதியுள்ள விண்ணப்பம் / தகுதியில்லா விண்ணப்பம்,  நிராகரிக்கப்பட வேண்டியது என வகைப்படுத்தி  A மற்றும் B பதிவேடுகள் தயார் செய்து அவற்றைப் பதிந்து முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்.

# மேற்படி மாறுதல் விண்ணப்பங்களில் மாவட்டத்திற்குள் மாறுதல் கோருபவர்களின்    விண்ணப்பங்களை, தனியாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை இணைய தளத்தில் தனியாக தொகுத்து பதிவு செய்ய வேண்டும்.

# ஒவ்வொரு ஆசிரியர்  /தலைமை ஆசிரியர்  மாறுதல் கோரும் விண்ணப்பத்திற்கு தனித்தனியாக  எண் வழங்கப்பட வேண்டும். மாறுதல் வழங்கும் நாளன்று இணையதள பதிவு நகலுடன் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு காலை 9.00 மணிக்கு வருகை புரிய வேண்டும்.   

# உள்ளூர் மாவட்டங்களில் பணி மாறுதல் கோரியவர்களுக்கான கவுன்சிலிங் முடிந்தவுடன் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரியுள்ளவர்களுக்கு மாறுதலுக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும்.  எனவே, சார்ந்த தலைமையாசிரியர்கள் உரிய தகவல்களை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை 2013-14 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறை அரசாணை 129 வெளியீடு

HSC MARCH 2013 -SUBJECT WISE PERFORMANCE

தமிழகத்தில்  வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி தேர்வெழுதிய 88.1% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்னர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் 84.7% மாணவர்களும், 91% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TEACHERS GENERAL COUNSELLING 2013-2014 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2013-2014

 

  1. 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செய்திகள்
  2. DSE AND DEE | ஆசிரியர் பொது மாறுதல் கால  அட்டவணை 2013-2014 (UPDATED)
  3. பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)
  4. தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)
  5. பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT]
  6. பள்ளிக்கல்வி துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].
  7. தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் 2013-2014 
  8. TAMIL FONTS DOWNLOAD.

TRB | DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS BASED ON STATE LEVEL EMPLOYMENT SENIORITY.


முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:30.05.2013 கடைசி தேதி :14.06.2013 தேர்வு நாள் : 21.07.2013 மொத்தப்பணியிடங்கள்: 2881


TRB | DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS BASED ON STATE LEVEL EMPLOYMENT SENIORITY.


விருப்பமுள்ள 5 முதல் 8 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சென்னையில் மே 21 மற்றும் 22 தேதிகளில் இலவச கோடை அறிவியல் முகாமை SCIENCE CITY நடத்துகிறது

Transfer Application | பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம்

பிளஸ் 2 மறுகூட்டல்: சலானை பதிவிறக்கம் செய்யத் தவறியவர்களுக்கு மாற்று வழி

பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில், ஆன்-லைனில் சலானை பதிவிறக்கம் செய்யத் தவறியவர்களுக்கு மாற்று வழியை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், விண்ணப்பிக்கும்போது தங்களுடைய விவரங்களைப் பூர்த்தி செய்த பின்னர் 10 இலக்கம் கொண்ட விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யத் தவறும் மாணவர்கள், தேர்வு பதிவு எண், பிறந்த தேதி, பாடம், எதற்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்ற விவரம் (விடைத்தாள் நகல் அல்லது மறு கூட்டல்), மாணவரின் பெயர், முகவரி, செல்பேசி எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களை க்ஞ்ங்ட்ங்ப்ல்ப்ண்ய்ங்ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி, 10 இலக்க விண்ணப்ப எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது 044 - 28203089, 28221734 ஆகிய எண்களுக்கு ஃபேக்ஸ் அனுப்பியும், 044 - 28278286, 28264513 ஆகிய தொலைபேசி எண்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை

பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
விவாதத்தில் உறுப்பினர் பாலபாரதி பேசுகையில், பல தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை பணமாக இல்லாமல் வங்கிக்கணக்கு மூலம் செலுத்தும் நிலை இருந்தால் எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது? என்பதற்கு அது ஆதாரப்பூர்வமாக இருக்கும். பிளஸ்–2 தேர்வில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகளே ரேங்க் எடுக்கிறார்கள். காரணம் பல தனியார் பள்ளிகளில் பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார்.அதற்கு பதில் அளித்த அமைச்சர் வைகைச் செல்வன், ‘‘ உறுப்பினர் கூறுவதைப் போல எந்த பள்ளியிலும் பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடம் நடத்தப்படவில்லை. அதுபோன்று பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். அதேபோல், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில் ஒருசில பள்ளிகளின் அங்கீகாரம் கூட நிரந்தரமாக ரத்துசெய்யப்பட்டு உள்ளது’’ என்றார்.