Saturday, 11 May 2013

தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களுடன் என்ஜினீயரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்தார்.

தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களுடன் என்ஜினீயரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்தார்.

மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை ஆன்–லைன் மூலம் எடுத்து மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகமே மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் கூறினார்.

சட்டசபையில் தே.மு.தி.க. உறுப்பினர் வெங்கடேசன் பேசுகையில், ‘‘இம்மாத இறுதியில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதால், அந்த மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதியை நீட்டிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து பேசியதாவது:–

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை ஜூலை 30–ந்தேதிக்குள் முடித்து, ஆகஸ்டு 1–ந்தேதி கல்லூரிகளில் வகுப்பு தொடங்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.அதனால்தான் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ளோம். கடந்த ஆண்டு மே மாதம் 21–ந்தேதிதான் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மே 9–ந்தேதியே தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டோம். என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 20–ந்தேதி கடைசி நாளாகும்.

ஜூன் 5–ந்தேதி ரேண்டம் எண்ணும், ஜூன் 12–ந்தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படும். ஜூன் 21–ந்தேதி முதல் ஜூலை 30–ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி குறித்த காலத்திற்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு, ஆகஸ்டு 1–ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் உடனடியாக என்ஜினீயரிங் படிப்பிற்கான விண்ணப்பத்தை வாங்கி, பூர்த்தி செய்து, அத்துடன் சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகமே சி.பி.எஸ்.இ. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை ஆன்–லைன் மூலம் டவுன்லோடு செய்து மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை மேற்கொள்ளும்.

தேர்வு முடிவுகள் வந்த பிறகு இணையதளத்தில் இருந்து மதிப்பெண் பட்டியலை மாணவர்களே டவுன்லோடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கலாம். எனவே, சி.பி.எஸ்.இ.மாணவர்களை, என்ஜினீயரிங் படிப்பில் சேர்ப்பதில் எவ்வித பிரச்சினையோ, குழப்பமோ இருக்காது.இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு, அனைத்துப் பிரிவினருக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 198.50. இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 0.50 அளவுக்கு அதிகரிக்கும் என்பதால், அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆக இருக்கும்.இதேபோன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.) உள்பட அனைத்துப் பிரிவினரின் கட்-ஆஃப் இந்த ஆண்டு 0.50 மதிப்பெண் வரை அதிகரிக்கும்.

2012-13 கட்-ஆஃப் விவரம்: 
ஓ.சி.-198.50; 
பி.சி.-197.50; 
பிசிஎம்-196.25; 
எம்.பி.சி.-196.00; 
எஸ்.சி.-192.25; 
எஸ்.சி.ஏ.-192.00; 
எஸ்.டி.-185.00.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டு படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்த ஆண்டும் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர  விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை ரூ.500 செலுத்தியும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தி விண்ணப்ப படிவத்தை  பெற்று கொள்ளலாம்.

தபால் மூலம் விண்ணப்பங்களை பெற ரூ.750ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.450ம் வரைவோலை எடுத்து The Secretary, Tamilnadi Engineering Admissions. Anna University, Chennai - 600025. என்ற முகவரி மூலம் விண்ணப்பங்களை பெறலாம்.

www.annauniv.edu/tnea2013 என்ற இணையதளத்திலும்  மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் மே 4 முதல் 20ம் தேதி வரை, காலை 9.30 முதல் மாலை 5.30 வரை (ஞாயிற்று கிழமைகளிலும்) வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20ம் தேதி 5.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களை பெற www.annauniv.edu என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 044-2235 8265, 2235 8266, 2235 8267 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி - அமைச்சர்


எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்க திட்டம்: அமைச்சர் தகவல்

"அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். சட்டசபையில், நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்...

தே.மு.தி.க., - சுபா: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பணியிட மாறுதல் வழங்குவதில்லை. மற்ற துறை ஆசிரியர்களைப் போல், அவர்களுக்கும், கலந்தாய்வு நடத்தி, பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

வைகைச் செல்வன் - பள்ளிக்கல்வி அமைச்சர்: இந்த கோரிக்கையை, அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும்.

சுபா: தனியார் பள்ளிகளில், கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில், மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. அரசு விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை, மழலையர் பள்ளிகளாக மாற்றி, அங்குள்ள குழந்தைகளுக்கு, ஆங்கிலவழி கல்வியை வழங்க, அரசு முன்வர வேண்டும்.

அமைச்சர்: எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்க வேண்டும் என, எம்.எல்.ஏ., கூறுகிறார். இது, நல்ல ஆலோசனை. இத்திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.
"அரசுபள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள்துவங்குவதுகுறித்து, தமிழகஅரசுபரிசீலனைசெய்துவருகிறது" என, பள்ளிக்கல்விஅமைச்சர்வைகைச்செல்வன்அறிவித்தார். சட்டசபையில், நேற்றுபள்ளிக்கல்விமானியக்கோரிக்கைமீதுநடந்தவிவாதம்...
 
 
தே.மு.தி.க., - சுபா: கள்ளர்சீரமைப்புபள்ளிகளில்பணியாற்றும்ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வுமூலம், பணியிடமாறுதல்வழங்குவதில்லை. மற்றதுறைஆசிரியர்களைப்போல், அவர்களுக்கும், கலந்தாய்வுநடத்தி, பணியிடமாறுதல்வழங்கவேண்டும்.
 

வைகைச்செல்வன்- பள்ளிக்கல்விஅமைச்சர்: இந்தகோரிக்கையை, அரசுபரிசீலனைசெய்துவருகிறது. விரைவில், நடவடிக்கைஎடுக்கப்படும்.
 

சுபா: தனியார்பள்ளிகளில், கடந்தஅக்டோபர், நவம்பர்மாதங்களில், மாணவர்சேர்க்கைமுடிந்துவிட்டது. அரசுவிதிமுறைகளுக்குமாறாகசெயல்படும்பள்ளிகள்மீது, நடவடிக்கைஎடுக்கவேண்டும். அங்கன்வாடிமையங்களை, மழலையர்பள்ளிகளாகமாற்றி, அங்குள்ளகுழந்தைகளுக்கு, ஆங்கிலவழிகல்வியைவழங்க, அரசுமுன்வரவேண்டும்.
 

அமைச்சர்: எல்.கே.ஜி., வகுப்புகளைதுவங்கவேண்டும்என, எம்.எல்.ஏ.,
சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும். மாநில அரசுகள், இந்த தகுதி மதிப்பெண்களை குறைத்துக் கொள்ளலாம் என, தேசிய ஆசிரியர் கல்விக் குழுவும் தெரிவித்துள்ளது.

அமைச்சர்: தரமான ஆசிரியர்களை நியமனம் செய்தால் தான், தரமான கல்வியை, மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவே, 60 சதவீத மதிப்பெண்களை, தகுதித்தேர்வில் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுபா: தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா, பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்க, பள்ளிகள் தோறும், புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும் என, தெரிவித்திருந்தார். இந்த விஷயத்தில், அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

அமைச்சர்: பள்ளிகளில், புகார் புத்தகங்கள் உள்ளன. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவரை, "சஸ்பெண்ட்" செய்யாமல், "டிஸ்மிஸ்" நடவடிக்கையே எடுக்கிறோம்.

முதல்வர் ஜெயலலிதா: பள்ளிகள்தோறும், "சைல்டு ஹெல்ப் லைன்" என்ற திட்டத்தின் மூலம், தொலைபேசி சேவை, ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இது, கட்டணமில்லா தொலைபேசி. மாணவர்கள், இதில் புகார் செய்தால், உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு விவாதம் நடந்தது.

அரசுப் பள்ளிகளில் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும்

"அரசுப் பள்ளிகளில், 3,711 ஆசிரியர்களும், 1,146 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், நடப்பு கல்வி ஆண்டில் நிரப்பப்படும்" என பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த, 2011-12, 12-13 ஆகிய ஆண்டுகளில், 63 ஆயிரத்து, 125 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வி ஆண்டில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 313; துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 380; முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 880; பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 1,094; இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 887; சிறப்பாசிரியர் பணியிடங்கள், 156 என, 3,711 பணியிடங்கள் நிரப்பப்படும்.

மேலும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், 16 பேர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், இரண்டு பேர், விரிவுரையாளர்கள், 99 பேர், உடற்கல்வி இயக்குனர்கள், எட்டு பேர் என, 125 பேரும் நியமனம் செய்யப்படுவர்.

ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்:உதவியாளர்கள் (நேரடி நியமனம்), 850 பேர்; சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 18 பேர்; இளநிலை உதவியாளர்கள், 188 பேர் மற்றும் தட்டச்சர்கள், 90 பேர் என, 1,146 பேரும், நடப்பு கல்வி ஆண்டில் நியமனம் செய்யப்படுவர்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Friday, 10 May 2013

”தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம், மாநில அமைப்பு. மாநில பொதுத்தேர்தல் அறிவிப்பு அழைப்பிதழ்”



”தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர்  சங்கம், மாநில அமைப்பு. மாநில பொதுத்தேர்தல் அறிவிப்பு அழைப்பிதழ்”
  AEEO நண்பர்களே ! இனிய காலை வணக்கம். நமது தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர்  சங்கத்தின் மாநில பொதுத்தேர்தல் 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரில் U.C  மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது…
வேட்பு மனு தாக்கல்                        = 10.00 – 10.30
வேட்பு மனு பரிசீலனை                     = 10.30 – 11.00 
வேட்பு மனு திரும்ப பெறுதல்               = 11.00 – 11.45
போட்டியிருந்தால் தேர்தல்                  = 12.00 – 1.00
தேர்தல் முடிவு அறிவிப்பு                   = 02.00 

புதிய பொறுப்பாளர் பதிவு ஏற்பு              = 02.30    
தேர்தல் ஆணையாளர்:
1.         S.பால்ராஜ்., M.A.,M.Ed (Retd.AEEO)
         மதுரை கிழக்கு- மதுரை மாவட்டம்.
2.      c. அழகர்சாமி., M.A.,M.Ed (Retd.AEEO)
   திருமயம்- புதுக்கோட்டை மாவட்டம்.




              



உதவி தொடக்க கல்வி அலுவலர் மாறுதல் கோரும் விண்ணப்ப படிவம்



 உதவி தொடக்க கல்வி அலுவலர் மாறுதல் கோரும் விண்ணப்ப படிவம்

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் விண்ணப்ப படிவம்

தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் - பதிவு ஆணை

தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் -  பதிவு ஆணை

பிளஸ்-2 தேர்வில் மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம் விவரம்

சென்னை-    91.82 %
புதுச்சேரி-    88.2 %
காஞ்சீபுரம்-    84.73 %
திருவள்ளூர்-    85.39 %
வேலூர்-    81.13 %
திருவண்ணாமலை-    69.91 %
கடலூர்-    73.21 %
விழுப்புரம்-    78.03 %
தஞ்சை-    90.03 %
திருவாரூர்-    82.53 %
நாகப்பட்டினம்-    84.7 %
திருச்சி-    93.78 %
பெரம்பலூர்-    90.59 %
அரியலூர்-    74.94 %
கரூர்-    91.03 %
புதுக்கோட்டை-    86.95 %
தர்மபுரி-    86.22 %
கிருஷ்ணகிரி-    83.18 %
நாமக்கல்-    94.41 %
சேலம்-    89.4 %
ஈரோடு-    94.28 %
கோவை-    92.95 %
திருப்பூர்-    92.89 %
ஊட்டி-    84.05 %
திண்டுக்கல்-    89.76 %
மதுரை-    93.77 %
தேனி-    93.58 %
விருதுநகர்-    95.87 %
சிவகங்கை-    91.82 %
ராமநாதபுரம்-    89.23 %
தூத்துக்குடி-    95.46 %
திருநெல்வேலி-    94.61%
கன்னியாகுமரி-    94.03 %

பன்னிரண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

மார்ச் 2013 பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கநர் வெளியிட்டுள்ள செய்தியில்: பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகலைப் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் மே 10-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்-லைன் மூலமே விடைத் தாள் நகலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு, மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம். இதற்கு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும்போது பதிவிறக்கம் செய்த ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே நகலை பதிவிறக்கம் செய்ய முடியும்.

கட்டணம் எவ்வளவு? விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 275-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழிப் பாடம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 205 கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த கட்டணத்தை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த சலான் மூலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளைகளில் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு: மாணவர்கள் விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகே, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 1010-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 505-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.மதிப்பெண் சான்றிதழ்: பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 27-ம் தேதியன்று மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பித்து, தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு தபால் மூலம் அவர்களுடைய வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

தொடக்கக் கல்வித் துறை பொது மாறுதல் அட்டவணை 2013

பொது மாறுதல் பற்றிய அட்டவணை 


24.05.2013-
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
25.05.2013-
ந.நி.பள்ளி த.ஆ பதவியில் இருந்து உதவி தொடக்கக் கல்வி அலுவராக பணி மாறுதல்
28.05.2013
நடு நிலைப் பள்ளி த. ஆ ஆக பதவி உயர்வு/ந.நி.பள்ளி த..ஆ மாறுதல்
28.05.2013
பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல்
29.05.2013
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
29.05.2013
பிற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு -
30.05.2012
இடைநிலை ஆசிரியர் மாறுதல் -  (ஒன்றியத்திற்குள்)
31.05.2013
இடைநிலை ஆசிரியர் மாறுதல்  (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)


பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:-

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 காலை (மாவட்டதிற்குள்)

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 காலை (மாவட்டதிற்குள்)

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)

இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.

முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)

முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்)

சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.

Wednesday, 8 May 2013

தமிழகத்தில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம்: முதல்வர்

இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலையில், ரூ.6.48 கோடி செலவில் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்துள்ளார்

2013-14ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு சேர்கை அறிவிப்பு

விண்ணப்பம் விநியோகம் : மே13-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை
விண்ணப்பக்கட்டணம் : பொது: ரூ.600, எஸ்.சி/எஸ்.டி: ரூ. 300
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 3ந்தேதி

கல்வியை அள்ளி வழங்கும் வள்ளல்களாக ஆசிரியர்கள் விளங்க வேண்டும்

"பெருமை வாய்ந்த கல்வியை, அள்ளி வழங்கும் வள்ளல்களாக ஆசிரியர்கள் விளங்க வேண்டும்," என, திண்டுக்கல் காந்திகிராம் பல்கலை கல்வியியல் துறை தலைவர் ஜகீதாபேகம் பேசினார்.
அருள்புரம் ஜெயந்தி கல்வியியல் கல்லூரியில், நான்காவது பட்டமளிப்பு விழாவில் பி.எட்., மாணவர்கள் 180 பேருக்கு பட்டங்களை வழங்கி, காந்திகிராம் பல்கலை கல்வியியல் துறை தலைவர் ஜகீதா பேகம் பேசியதாவது:

கல்விதான் செல்வம், கற்பகத்தரு, நாட்டின் வளர்ச்சி, ஆக்கம் தரும் அறிவு, நெறிகாட்டும் சொர்க்கம். தானும் கற்று பிறருக்கும் கற்றுத் தருபவர், சிறந்த மனிதர். கல்லாதவனின் வணக்கத்தை விட, கற்றவனின் உறக்கமே மேலானது என்கிறது குரான்.

பெருமைவாய்ந்த கல்வியை செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல, ஏழைகளுக்கும், சமுதாயத்தில் பின் தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கும், இல்லை என கூறாமல் அள்ளி வழங்கும் வள்ளல்களாக, ஆசிரியர்கள் விளங்க வேண்டும்.

மருத்துவர், பொறியாளர், சட்ட வல்லுனர், வங்கி அதிகாரிகள் என அனைத்து துறை வல்லுனர்களை உருவாக்கும் சர்வ வல்லமை பெற்ற பணி, ஆசிரியர் பணி. இப்பணியை சிலர் விரும்பியும், சிலர் சற்று விருப்பம் இல்லாமலும், சிலர் சூழ்நிலையாலும், சிலர் பொருளாதார நிலையாலும் தேர்ந்தெடுத்தாலும், அனைத்து பணிகளுக்கும் ஆணிவேராய் விளங்குவது ஆசிரியர் பணி என்ற அறப்பணி.

ஆசிரியர் பணியை, ஜனாதிபதி பதவியை விட மிக உயர்வாக கருதியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். விருப்பு, வெறுப்பற்றவன் இறைவன் மட்டுமல்ல, ஆசிரியரும் தான்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் பொருளாதாரத்திலோ, உயரமான கோட்டைகளிலோ, கட்டடங்களிலோ இல்லை; கல்வியில் சிறந்து முழு மனிதனாக விளங்கும் குடிமக்களின் எண்ணிக்கையை சார்ந்தது, என்றார்.