Sunday, 5 May 2013

குழந்தைகள் ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள...

குழந்தைகள் ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள...

குழந்தைகள் விடுமுறை நாட்களை வீணாக கழிப்பதைவிட அறிவு திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாகவும், ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளும் விதமாகவும் விடுமுறை நாட்களை கழிக்கலாம். குழந்தைகளின் ஞாபகத் திறனை அதிகரிக்கும் வகையில் பிரத்யேகமாக ஒரு இணையதளம் உள்ளது.
குழந்தைகளுடைய ஞாபகத் திறனை அதிகரிக்கும் விதமாக நான்கு வகையான விளையாட்டுக்கள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

முதல் விளையாட்டு எண்களை ஞாபகத்தில் கொள்வதற்கானது. இந்த விளையாட்டுப் பயிற்சியின் மூலம் தொலைபேசி எண்கள், எழுத்துக் கூட்டு (Spelling), தெருக்கள் அடையாளம், குறியீடுகள் (Symbols) போன்றவற்றை ஞாபகத்தில் கொள்ள முடியும்.

இரண்டாவது விளையாட்டு ஞாபக ஒப்பீடுக்கானது. இதன் மூலம் இருவேறு இடங்களிலுள்ள ஒரே பொருளை ஞாபகத்தில் கொண்டு ஒப்பீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் குறியீடுகள் அடையாளங்கள் போன்றவற்றை ஞாபகத்தில் கொள்ள முடிகிறது.

மூன்றாவது விளையாட்டு சற்று முன் நடந்ததை ஞாபகத்தில் கொள்வது. இதன் மூலம் ஒளியைக் கொண்டு சற்று முன் நடந்த நிகழ்வை ஞாபகத்தில் கொள்வதுடன் அடுத்தடுத்து நடக்கும் தொடர் நிகழ்வுகளை தொடர்ச்சியாக ஞாபகத்தில் கொள்ள உதவுகிறது.

நான்காவது விளையாட்டு தொடர் வரிசையை ஞாபகத்தில் கொள்வதற்கானது. இவ்விளையாட்டின் மூலம் முக அடையாளத்தைக் கொண்டு வரிசையாக நிகழ்வுகளை ஞாபகத்தில் கொள்ள முடிகிறது. மேலும் தொடர்ச்சியாக எத்தனை நிகழ்வுகளை நம்மால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

குழந்தைகள் மட்டுமின்றி வயதானவர்களும் தங்கள் மறதியைப் போக்கி ஞாபகத்தை வளர்த்துக் கொள்ள, சிறப்பான பயிற்சியை பெற்றுக் கொள்ள இந்த இணையதளம் உதவுகிறது.
இணையதளம் www.kidsmemory.com

No comments:

Post a Comment