Saturday, 14 September 2013

நல்ல காய்கறி எப்படி பார்த்து வாங்கணும்?


இன்று ஒரு தகவல்:- 13.09.2013. 

நல்ல காய்கறி எப்படி பார்த்து வாங்கணும்? 

 1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது

2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம் 

4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம் 

6.தக்காளி :  தக்காளி வாங்குவது புளிப்பு சுவைக்காக, ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் நாட்டு தக்காளியில் தான் புளிப்பு சுவை நன்றாக இருக்கும், பெங்களூர் நவீன் தக்காளி சீக்கிரம் வீணாகாது ஆனால் சுவை குறைவே, நாட்டு தக்காளியில் சாம்பார் வச்சு பாருங்க வித்தியாசம் தெரியும். நன்றாக சிவந்த தக்காளி கூட வாங்கலாம். பெங்களூர் தக்காளி ஒரு வாரம் அப்படியே இருக்கும். கெடாது. 

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: 
சின்ன வெங்காயத்திலும் பழசு விட புதுசே நல்ல சுவை இருக்கும், வெங்காயம் நாள் ஆக ஆக நீர்ச்சத்து குறையும்,காரம் போய்விடும்.புது வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும் 

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும் 

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும் 

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும் 

15. உருளை கிழங்கு:  உருளைக்கிழங்கை அழுத்தினால் கல்லு போல இருக்க கூடாது ,கொஞ்சம் அழுந்தனும், வதங்காமல் இருக்கணும். முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம்  வெங்காயத்திலும் பழசு விட புதுசே நல்ல சுவை இருக்கும், வெங்காயம் நாள் ஆக ஆக நீர்ச்சத்து குறையும்,காரம் போய்விடும்.புது வெங்காயம் வாங்குவதே நல்லது.மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய் :  கத்திரிக்காய் வாங்கும்போது, காம்பிலிருந்து நீளும் தடிமனான தோல்  நீளமாக காயின் மேல் பகுதியை நிறைய மூடியிருக்க வேண்டும். கருப்பு நிற புள்ளிகள் (பூச்சி) இருக்க கூடாது.தோல் soft-ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம் 

23. பீன்ஸ்  பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி: மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும் 

31.  பச்சை மிளகாய்: குண்டானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே நீளமானது  தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது

2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம்

6.தக்காளி : தக்காளி வாங்குவது புளிப்பு சுவைக்காக, ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் நாட்டு தக்காளியில் தான் புளிப்பு சுவை நன்றாக இருக்கும், பெங்களூர் நவீன் தக்காளி சீக்கிரம் வீணாகாது ஆனால் சுவை குறைவே, நாட்டு தக்காளியில் சாம்பார் வச்சு பாருங்க வித்தியாசம் தெரியும். நன்றாக சிவந்த தக்காளி கூட வாங்கலாம். பெங்களூர் தக்காளி ஒரு வாரம் அப்படியே இருக்கும். கெடாது.

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்:
சின்ன வெங்காயத்திலும் பழசு விட புதுசே நல்ல சுவை இருக்கும், வெங்காயம் நாள் ஆக ஆக நீர்ச்சத்து குறையும்,காரம் போய்விடும்.புது வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: உருளைக்கிழங்கை அழுத்தினால் கல்லு போல இருக்க கூடாது ,கொஞ்சம் அழுந்தனும், வதங்காமல் இருக்கணும். முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் வெங்காயத்திலும் பழசு விட புதுசே நல்ல சுவை இருக்கும், வெங்காயம் நாள் ஆக ஆக நீர்ச்சத்து குறையும்,காரம் போய்விடும்.புது வெங்காயம் வாங்குவதே நல்லது.மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய் : கத்திரிக்காய் வாங்கும்போது, காம்பிலிருந்து நீளும் தடிமனான தோல் நீளமாக காயின் மேல் பகுதியை நிறைய மூடியிருக்க வேண்டும். கருப்பு நிற புள்ளிகள் (பூச்சி) இருக்க கூடாது.தோல் soft-ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி: மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய்: குண்டானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே நீளமானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.



IB ASSOCIATION SCHOOL

குறிச்சியில் ஒரு பள்ளியின் முயற்சி


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலிருக்கும் “குறிச்சி” என்கிற கிராமத்தில் குறைந்த கட்டணத்தில், இந்தியன் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பினால் 2002ல் உருவாக்கப்பட்டது தான் IBEA பள்ளி. இப்பள்ளியின் சிறப்பம்சங்கள்:
Ø  RTE  வருவதற்கு முன்பே, இப்பள்ளியில் குழந்தைகளைத் துன்புறுத்தவில்லை; தேர்வு என்கிற முறையில் குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் கொடுத்து, தரம் பிரிக்கவில்லை;
Ø  அறிவியல் சார்-ஊரில் பல்வேறு பிர்ச்சனைகளை ஆறாய்ச்சிகள் செய்து, அதற்குறிய தீர்வைத் தேடியதன் விளைவாக தொடர்ந்து மூன்று வருடங்களாக இக்குழந்தைகளே செய்தது, தேசிய அளவிலான அறிவியல் செய்முறைகளில்(science projects) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது;
Ø  குழந்தைகளுக்கிடையே எந்த ஒரு பிரச்சனையாக இருப்பினும், அவர்களுக்குள்ளேயே பேசி, தீர்வு காண்பர்;
Ø  பள்ளியிலேயே ஆசிரியர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து, கடைகளை உருவாக்கி அனைவரும் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டும் என்கிற முடிவுடன், விற்றல், வாங்குதல், லாபம், நஷ்டம் முதலியவற்றைக் கற்பதுடன், ஆங்கிலமும் பேசப் பழகுகிறார்கள்;
Ø  குழந்தைகளிடையே குழுக்கள் அமைப்பதால், இவன் நன்றாகப் படிக்கிறான், அவள் நன்றாக படிக்காதவள் என்கிற பாகுபாடின்றி, ஒன்றை அறிந்தவர், அறியாதவருக்கு அறிந்துகொள்ள உதவி புறிவார்;
Ø  ஆசிரியர்கள் பள்ளி நேரம் முடிந்த பிறகு(சனிக்கிழமைகளிலும்), பாடத்திட்டங்களுடன் மாணவர்களுக்கேற்ற செயல்பாடுகளை திட்டமிட்டு கூட்டாக கலந்துரையாடி வடிவமைப்பர்;
இது போன்று மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இப்பள்ளியைப் பற்றி இந்தக் காணொலியில் காணலாம்.


செப்டம்பர் 16 முதல் தமிழில் ஹிந்து!

ஹிந்து ஆங்கிலப் பத்திரிகைக்கு ஒரு வரலாறு உண்டு. அது மிகவும் வெற்றிகரமரமான வரலாறு. 1878-ல் வாரப்பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது த ஹிந்து. அப்போது எண்பதே எண்பது பிரதிகள் மட்டும் அச்சடிக்கப்பட்டன. ஒரு ரூபாய் 12 அணா கடன் வாங்கித்தான் முதல் பிரதி அச்சடித்தார்கள். 1883-ல் வாரம் மூன்றுமுறை வெளிவந்தது. 1889-ல் மாலை தினசரியாக மாறியது. இன்று அது சராசரியாக தினமும் 14 லட்சம் பிரதிகள் அச்சாவதாகச் சொல்கிறார்கள்.

இந்த குழுமத்திலிருந்து தமிழில் ஏதாவது ஒரு பத்திரிகை ஆரம்பிக்கவேண்டும் என்று வெகுநாட்களாகச் சொல்லப்பட்டுவந்தது. பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் பதிப்பு தொடங்கிய பின்னர்தான் ஹிந்து நிர்வாகம் தமிழ்நாட்டின் பக்கம் கொஞ்சம் பார்வையை அகலமாகத் திறந்தது. நாம் பலமாக இருக்கும் கோட்டையை எளிதாக வெளியிலிருந்து வருபவர்களுக்குக் கொடுத்துவிடக்கூடாது என்ற அக்கறை. அத்துடன் இந்தியா முழுக்க இப்போது பிராந்திய விளம்பரங்கள் மீது ஊடக நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா சென்னைக்கு வந்த வேகத்தில் உள்ளூர் விளம்பரங்களை வாரியதுடன் தமிழிலும் ஒரு செய்தித்தாள் ஆரம்பிக்கலாமே என்று ஆய்வு செய்துவருகிறது.

ஆகவே தமிழில் ஒரு பத்திரிகையைக் கொண்டுவந்தால் நன்றாகப் போகும் அத்துடன் டைம்ஸ் ஆப் இந்தியாவை முந்திக்கொண்டதுபோலும் ஆச்சு என்ற எண்ணத்துடன் ஹிந்து நிறுவனம் களமிறங்கி உள்ளது. ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த கே.அசோகன் தலைமையில் இளம் பத்திரிகையாளர்கள் இரவும் பகலுமாக பணி புரிந்து வருகிறார்கள். தமிழ் பத்திரிகைக்கென்று தனியாக அண்ணாசாலையில் ஓர் அலுவலகமும் தொடங்கி உள்ளார்கள்.

ஆறுமாதத்துக்கு ஹிந்து தமிழ் பேப்பருக்காக 375 ரூபாய் கட்டுங்கள் என்று சொல்லி பல இளைஞர்கள் வீடு வீடாகப் போய் சந்தா வசூலிக்கிறார்கள்.

தமிழ் செய்தித்தாள் ஹிந்து என்ற பெயரில் வருமா காமதேனு என்ற பெயரில் வருமா? என்றால் அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். அனேகமாக ஹிந்து என்ற பெயரிலேயே வரக்கூடும்.

செய்திகள், செய்தி சார்ந்த கட்டுரைகள், தரமான இலவச இணைப்புகள் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கிலப் பத்திரிகையைப் போலவே தரமாக இருக்கவேண்டும். அதே சமயம் தமிழ்நாடு சார்ந்த பார்வையும் இருக்கவேண்டும் என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பு. இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்

10, 12ம் வகுப்புகளில் சாதனை படைத்தவர்களுக்கு ரொக்கப்பரிசு

10, 12ம் வகுப்புகளில் சாதனை படைத்தவர்களுக்கு ரொக்கப்பரிசு


சென்னை, செப். 13-
2012-2013ஆம் கல்வி யாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு களில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட் டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் மற் றும் சிறுபான்மையினர் வகுப் பைச் சேர்ந்த மாணவர்க ளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ரொக்கப் பரிசு களை வழங்கி வாழ்த்தினார்.பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிய ரின் கல்வி மேம்பாட்டிற் காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறது. மாநில அளவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவி களை ஊக்கப்படுத்தும் வகை யில் ரொக்கப் பரிசுகள் வழங்கும் திட்டமும் இதில் ஒன்றாகும்.இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு களில் முதல் மூன்று இடங் களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே 25 ஆயிரம் ரூபாய், 20 ஆயி ரம் ரூபாய் மற்றும் 15 ஆயி ரம் ரூபாய் என்ற வீதத்தி லும், 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே 50 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என்ற வீதத் திலும், பிற்படுத்தப்பட் டோர், மிகப்பிற்படுத்தப்பட் டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப் பைச் சேர்ந்தவர்களில் ஒவ் வொரு பிரிவிலும் மாணவர் களுக்குத் தனியாகவும், மாணவியருக்குத் தனியாக வும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படு கின்றன.அதன்படி, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற் றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங் களைப் பெற்ற 80 பிற்படுத் தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர், சீர்மரபி னர் மற்றும் சிறுபான்மை யினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 14 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க் கான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகிறது.

இவர் களில் 7 மாணவ, மாணவி யருக்கு ரொக்கப்பரிசுகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளியன்று (செப். 13) வழங்கி வாழ்த் தினார்.இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்ர மணியன், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை அமைச் சர் எஸ். அப்துல் ரஹீம், தலை மைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத் தப்பட்டோர், மிகப்பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் கே. அருள்மொழி, அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண் டனர்

புதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

புதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்


சென்னை, செப். 13-
தமிழ்நாடு முதலமைச் சர் ஜெயலலிதா வெள்ளி யன்று (செப். 13) தலைமைச் செயலகத்தில், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள், 2 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என மொத்தம் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.கிராமப்புற மாணவ, மாணவியர் உயர்கல்வியி னைத் தொடர்ந்து கற்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த இரண்டு ஆண்டு களில் தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளில் 22 பல் கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் தமிழ்நாடு முதலமைச்ச ரால் தொடங்கப்பட்டு பெரு மளவிலான கிராமப்புற மாணவ, மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். இத்த கைய பயனுடைய உயர் கல்வி வசதியை கிராமப்புற மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து வழங்கிடும் நோக்கில் நடப்பாண்டில் மேலும் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு முதல மைச்சர் ஜெயலலிதா ஆணை யிட்டார்.
அதன்படி, புதுக் கோட்டை மாவட்டம் - கறம்பக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் - பேராவூரணி, திருப்பூர் மாவட்டம் - காங் கேயம், நாமக்கல் மாவட் டம் - குமாரபாளையம், தருமபுரி மாவட்டம் - காரி மங்கலம் (மகளிர்), கிருஷ்ண கிரி மாவட்டம் - ஓசூர், காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர், தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் - கடலாடி, திருவாடணை, முதுகுளத்தூர் மற்றும் விருது நகர் மாவட்டம் - சிவகாசி ஆகிய 12 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், பெரம்ப லூர் மாவட்டம் - வேப்பூ ரில் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் கடலூர் மாவட் டம் - திட்டக்குடியில் திரு வள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறி வியல் கல்லூரி, என மொத் தம் 14 கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளை காணொ லிக் காட்சி மூலமாக தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயல லிதா தொடங்கி வைத்தார்
.இந்த 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக் கும் 210 ஆசிரியர் பணியிடங் களும், 238 ஆசிரியரல்லா பிற பணியிடங்களும் தோற்று விக்கப்பட்டுள்ளன. மேலும், பணியாளர் சம்பளம், அலு வலக செலவினம் ஆகியவற் றிற்கும் மற்றும் கணினிகள், அறைகலன்கள், புத்தகங் கள், கருவிகள் போன்றவை கொள்முதல் செய்வதற்கும் 17 கோடியே 9 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக் கல்லூரிகளுக்கு 105 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் நிரந்தரக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் முதற் கட்டமாக பி.ஏ., (ஆங்கி லம்), பி.ஏ., (தமிழ்), பி.காம்., பி.எஸ்.சி., (கணிதம்) மற்றும் பி.எஸ்.சி., (கணினி அறிவி யல்) ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் ஆரம்பிக்கப் பட்டு அதற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், தொழில் துறை அமைச்சர் பி. தங்க மணி, தலைமைச் செயலா ளர் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வித் துறை முதன் மைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண் டனர்.

FIRST AID DAY

செப்டம்பர் 14 சர்வதேச முதலுதவி தினம்
உடுக்கை இழந்தவன் கைபோல்...

நட்புக்கு இலக்கணமாக திருவள்ளுவர் கூறுவது விபத்தில் மாட்டிக்கொள்பவர்களுக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, தீ விபத்தில் மாட்டிக்கொண்டவர்களுக்கும் பொருந்தும். இடுப்பு வேட்டி நழுவும் போது படக்கென்று கைகள் அதனைப்பிடித்து சரி செய்வது போல் முதல் உதவி அமைய வேண்டும். ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அல்லது காயம் அடைந்தால், அல்லது விபத்தில் சிக்கிக் கொண்டால் அவருக்கு விரைவாகவும் சரியானதாகவும் முதலுதவி அளிக்கப்படவேண்டும்.
எந்தவொரு அவசரச் சூழலிலும்முதல் சில நிமிடங்கள் மிக முக்கியமானதாகும்.உதாரணமாக மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமானதாகும். அதை மருத்துவர்கள் பொன்னான நேரம் (ழுடீடுனுநுசூ ழடீருசு ) என்று கூறுவார்கள். ஒரு அவசரத்தில் எதையெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்ற புரிதல் ஒரு உயிரைக் காப்பதற்கு அவசியமான, அடிப்படையான தேவைகளாகும். ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ உதவியாளர் வரும் வரை ஒருவரின் உயிரை பாதுகாப்பதுதான் முதலுதவி செய்பவரின் பணியாக இருக்க முடியும்.ஓவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு வாகனத்திலும் முதலுதவி பெட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும். நமது நாட்டில் இது போன்ற பெட்டிகளை வீடுகளில் காணமுடியாது. பல வாகனங்களில் உள்ள முதலுதவி பெட்டிகள் ஒன்று காலியாக இருக்கும் அல்லது அதில் உள்ள மருந்துகள் காலாவதியானவையாக இருக்கும். அரசு பேருந்துகள், ரயில் பெட்டிகள் போன்றவற்றில் இவற்றை மோப்பநாய் கொண்டுதான் தேட வேண்டும் .
முதலுதவி பெட்டிகள் அனைவரும் எளிதில் பார்க்கக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும்.சிறுபிள்ளைகள் இருக்கும் இடத்தில் இவை அவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டும்.ஆபத்தான சூழலில் பதற்றமின்றி செயல்பட வேண்டியது அவசியமாகும். நாம் பதற்றம் அடைவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களும் பதட்டம் அடையக்கூடும். அது அபாயத்தை அதிகரிக்கவே செய்யும். பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதை துரிதப்படுத்த வேண்டும். இதில் மருத்துவர்களுக்கும் பங்குண்டு. மருத்துவர்கள் விடுமுறை நாட்களில் ஆபத்து நிலையில் இருக்கும் வியாதியஸ்தர்களை கவனிக்க வருவதில்லை. அண்மையில் ரயிலார் நகரில் ஒரு சிறுவன் வீட்டின் காம்பவுண்டு சுவரில் இருந்து விழுந்து வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அந்த சிறுவன் குடியிருக்கும் பகுதியில் ஒரு மருத்துவரும் அவனுக்கு வைத்தியம் பார்க்க முன்வரவில்லை. பெற்றோர்கள் அவனை எடுத்துக்கொண்டு தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு காரில் விரைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். காயம் அடைந்தவரை அவரால் நகர முடியாவிட்டால் அவரை இழுத்துக்கொண்டு செல்லக்கூடாது. பாதிக்கப்பட்டவருக்கு காற்றோட்டம் கிடைக்கும்படி அவரை சுற்றி கூட்டம் கூடக்கூடாது.
சிறிய தீக்காயங்களுக்கு களிம்புகளை உடனடியாக தடவலாம்,பின்னர் மருத்துவரிடம் காட்டுவது நலம். பெரிய தீக்காயங்களுக்கு பாதிக்கப்பட்டவரை மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியமாகும். நீரில் மூழ்கியவர்களை கரை ஏற்றியவுடன் அவரை தலைகீழாக பிடித்துக்கொண்டு சுற்றுவதன் மூலம் அவர் குடித்துள்ள நீரை வெளியேற்ற முடியும். அவரைப் படுக்கவைத்து வயிற்றுப்பகுதியில் அமுக்குவதன் மூலம் நீரை வெளியேற்ற முடியும். ஒரு பெண்ணைக் காப்பாற்றும் ஆடவரின் நிலைமை கடினமானதுதான். அவர் மருத்துவரை அழைப்பதுதான் சரியாக இருக்கும். முதலுதவி முறைகளை அனைவருக்கும் கற்றுத்தர வேண்டியது அவசியமாகும்.
பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் அதற்கான ஏற்பாடுகளை அரசும் கல்வி நிறுவனங்களும் செய்ய வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு முதலுதவி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.மருத்துவ நிறுவனங்களும் முதலுதவி முகாம்களை அவை இருக்கும் பகுதிகளில் நடத்திட முன்வர வேண்டும்.முதலுதவிப் பெட்டிகளில் ரத்தத்தை துடைக்க உதவும் பஞ்சு, ஒட்டும் நாடாக்கள், ஆண்டி செப்டிக் திரவ மருந்து, கட்டுவதற்கு உதவும் பல வடிவ பேண்டேஜ்கள், தீக்காயத்துக்கு தடவும் களிம்பு, டிங்ச்சர் அயோடின், ஒரு கத்திரிக்கோல், ஒரு வெப்பமானி, ஒரு பென்சில், ஒரு சிறிய குறிப்பேடு போன்றவை இருக்க வேண்டும்.முதலுதவிப்பெட்டிக்குள் உங்கள் குடும்பவைத்தியரின் பெயர் முகவரி, தொலைபேசி எண், அலைபேசி எண், அவர் பணி புரியும் மருத்துவமனை எண் ஆகியவை இருக்க வேண்டும். இதை வாங்கி வைத்து விட்டு மறந்து விடக்கூடாது. முதலுதவிப்பெட்டியை பூட்டி வைக்கக் கூடாது என்பதுடன் பூட்டப்பட்ட இடத்திலும் வைக்கக்கூடாது. ஒவ்வொரு மாதமும் முதலுதவி பெட்டியை சோதனையிட்டு அனைத்தும் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

காலாவதியானவைகளை தூக்கி எறிந்து விட்டு புதியதை வாங்கி வைக்க வேண்டும். தீர்ந்து போனவைக்கு புதியவை வாங்கி வைக்க வேண்டும். இதை மறந்து விடக்கூடாது. வீடுகளில் தாங்கள் எப்போதும் செல்லும் மருத்துவமனைகளின் தொலை பேசி எண், அவசர மருத்துவ ஊர்தியை அழைக்க உதவும் தொலைபேசி எண் ஆகியவற்றை அனைவரும் உடனடியாக பார்க்கும் வண்ணம் குறித்து வைத்திருக்க வேண்டும் முதலுதவி என்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். அதுவே எல்லாமுமாகி விடாது. முதலுதவிக்குப் பின் மருத்துவரின் சிகிச்சை பல விஷயங்களில் அவசியமானதும், அவசரமானதும் ஆகும் என்பதை மறந்து விடக்கூடாது. செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு 2000ம் ஆண்டு முதல் இதை கடைப்பிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. அதன்படி சர்வதேச முதலுதவி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு சர்வதேச முதலுதவி தினம் செப்டம்பர் 14 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது

Thursday, 12 September 2013

DPI

                               
DPI ல் நுழைவாயிலில் மழையின் காரணமாக மரம் கீழே விழுந்துகிடக்கும் நேரடி காட்சி......!!




                                     






தொடக்கக் கல்வி - AEEO / AAEEO மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (ANNUAL INSPECTION) பள்ளிகள் பார்வை சார்பாக அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

AMERICAN LIBRARY

Saturday orientation Invite sep 14.jpg


Movie -  Puss in Boots @ 11:00 am

cid:image001.gif@01CEAEF6.9DA1AF50

வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் அவசர தொடர்புக்கு அழைக்க மாநகராட்சி மண்டல அலுவலர்களின் அலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:


மண்டலம் 1- 9445190001
மண்டலம் 2- 9445190002
மண்டலம் 3- 9445190003
மண்டலம் 4- 9445190004
மண்டலம் 5- 9445190005
மண்டலம் 6- 9445190006
மண்டலம் 7- 9445190007
மண்டலம் 8- 9445190008
மண்டலம் 9- 9445190009
மண்டலம் 10- 9445190010
மண்டலம் 11- 9445190011
மண்டலம் 12- 9445190012
மண்டலம் 13- 9445190013
மண்டலம் 14- 9445190014
மண்டலம் 15- 9445190015

ஒரே மாதத்தில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று மதிப்பெண் சான்றிதழ்கள்

First Published : 12 September 2013 03:30 AM IST
ஒரே மாதத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாற்று மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பில் 8,464 மதிப்பெண் சான்றிதழ்களும், பிளஸ் 2 வகுப்பில் 7,830 மதிப்பெண் சான்றிதழ்களும் அனுப்பப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில் 2,434, பிளஸ் 2 வகுப்பில் 2,867 சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
விண்ணப்பித்து பல ஆண்டுகளாகக் காத்திருந்தவர்களுக்கு இப்போது மாற்று மதிப்பெண் சான்றிதழ்கள் விரைந்து அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

First Published : 12 September 2013 04:54 AM IST
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் (செப். 12) விடுமுறை விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேலும், வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காலாண்டுத் தேர்வு, கடைசி தேர்வுக்குப் பின்னர் நடத்தப்படும் என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
"கனமழை தொடரும்' என்ற வானிலை ஆய்வு மைய அறிவிப்பு காரணமாக விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருவதால் மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (செப். 11) விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 11 September 2013

வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை: செப்டம்பர் 11,2013,17:47 IST

சென்னை : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி ப்ளஸ் 2 மற்றும் ப்ளஸ் 1 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும், திருவள்ளூரில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழை நீடிக்கும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இடியுடன் கனமழை பெய்து வருவதால் தி.நகர், சேப்பாக்கம், கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் சுற்று வட்டாரங்கள் மட்டுமின்றி திருச்சி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், அரணி, சேய்யாறு சுற்றுப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழை நாளை வரை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக லண்டனில் இருந்து சென்னை வரும் விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. 

Monday, 9 September 2013

HEALTH

சுகமான வாழ்விற்கு இவையாவும் அவசியமே




ஊதிப் பெருத்த உடம்புக்குள் 
ஒன்றா இரண்டா வியாதிகள்
எந்நாளும் மருந்தை உண்கின்றோம்
எது தான் இங்கே மாறியது ....!!!!!

வாழும் காலம் அனைத்திலும்
வாழ்க்கை என்பது சுகப்படவே
நோயை முதலில் ஒழிக்கணும்
நோயிருந்தால் நின்மதி வருமா சொல்

பாயிற் கிடக்கும் பொழுதெல்லாம்
மனப் பாரம் மட்டும் தொடர்ந்து வரும்
நோயின் தன்மை அதிகரித்தால்
நொந்து போகும் எங்களுயிர்......

விணாய் துன்பப் படலாமோ  நாம்
விரும்பி உண்ணும் உணவாலே?...!
போதும் மனத்தை அடக்கிக் கொள்
பொரித்த உணவைத் தவிர்த்துக் கொள்

நீரை விரும்பி அருந்திக் கொள்
நீ விரும்பும் பானங்களைத்  தவிர்த்துக் கொள்
காயைக்  கனியையுட்கொண்டு 
கலர் கலராய் வரும் இனிப்பைத் தவிர்த்துக் கொள்

இலையைக் குழையையுட்கொண்டு
இருக்கும் நோய்களை விரட்டிக் கொள்
உடலை அசைத்து வேலை செய்து
உடம்பை உடம்பாய் வைத்துக் கொள் !!......
                                                       இப்படி நல்லா நடவுங்கள்.
                                                 காலில் கிடப்பதை மாற்றுங்கள் :)

                                 தண்ணீர்  இது போதும் எல்லா நோயும் ஓடிவிடும் ....
                                           இப்படியும் கொஞ்சம் செய்து பாருங்கள் .
                                                  உடம்பு தன்னால குறைந்து விடும் !..:)

                                                         இதெல்லாம் உடம்புக்கு ஆகவே ஆகாத                                                                                                               பழக்கமுங்க...:))))
                 இத முதல்ல ஒழிக்கணும் .அத விட்டிற்று ஈரலைக் காணோம் இரப்பையைக் காணோம் என்று கடைசி நேரத்தில தவிக்கக் கூடாது......

                            இந்தப் பழக்கமெல்லாம்  தற்கொலைக்குச் சமன் ...!!!!!

              இப்படிச் சத்துள்ள உணவுதான் மூளை வளர்ச்சிக்கும் துணை நிற்கும் .
                                                                                

                                       நல்லா சலாட்டில சாப்பிடுங்க ...........            
                                 அட எதுக்கு இந்தக்  குதி குதிக்குறீங்க ?..இதெல்லாம்                                                        முடியாதென்றா ?...முடியும் .முயற்சி செய்தால் எதுவும்
                                                                           சாத்தியமாகும் :)))  

நீதி :நீங்க ஆயிரம் மவுசத் திண்டிருக்கலாம் இது உங்களால முடியாதப்பு :)
goole ள் மூலம் கிடைத்த இப் படங்களுக்கு நன்றிகள் !

thanks for அம்பாளடியாள்......

விநாயகர் சதுர்த்தி - செஸ் விளையாட்டு




இனிய வணக்கம் நண்பர்களே .......!!!!

                                    கனிணி சதி செய்துவிட்டது . ஆம் பழுதாகிவிட்டது இப்போது சரி செய்து மீண்டும் உங்களுடன் . இதோ .....!!!

                                                   விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் .....!!!!
      
              பள்ளிகளில் செஸ் விளையாட்டுப் போட்டி நடைபெறும் காலம் இதோ இந்த விநாயகர் செஸ் விளையாண்டு பயிற்சி பெறுகிறார் .  



MATRIC விநாயகரும்  PUM School விநாயகரும் செஸ் விளையாடி , PUM School விநாயகர் MATRIC பள்ளி விநாயகர்க்கு CHECK வைத்து வெற்றி பெற்று விட்டார்  


இதோ சென்னையில் எங்கள் தெருவில் விநாயகர் சதுர்த்தி விற்பனை பொருள்கள்