புதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
சென்னை, செப். 13-
தமிழ்நாடு முதலமைச் சர் ஜெயலலிதா வெள்ளி யன்று (செப். 13) தலைமைச் செயலகத்தில், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள், 2 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என மொத்தம் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.கிராமப்புற மாணவ, மாணவியர் உயர்கல்வியி னைத் தொடர்ந்து கற்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த இரண்டு ஆண்டு களில் தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளில் 22 பல் கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் தமிழ்நாடு முதலமைச்ச ரால் தொடங்கப்பட்டு பெரு மளவிலான கிராமப்புற மாணவ, மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். இத்த கைய பயனுடைய உயர் கல்வி வசதியை கிராமப்புற மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து வழங்கிடும் நோக்கில் நடப்பாண்டில் மேலும் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு முதல மைச்சர் ஜெயலலிதா ஆணை யிட்டார்.
அதன்படி, புதுக் கோட்டை மாவட்டம் - கறம்பக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் - பேராவூரணி, திருப்பூர் மாவட்டம் - காங் கேயம், நாமக்கல் மாவட் டம் - குமாரபாளையம், தருமபுரி மாவட்டம் - காரி மங்கலம் (மகளிர்), கிருஷ்ண கிரி மாவட்டம் - ஓசூர், காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர், தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் - கடலாடி, திருவாடணை, முதுகுளத்தூர் மற்றும் விருது நகர் மாவட்டம் - சிவகாசி ஆகிய 12 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், பெரம்ப லூர் மாவட்டம் - வேப்பூ ரில் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் கடலூர் மாவட் டம் - திட்டக்குடியில் திரு வள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறி வியல் கல்லூரி, என மொத் தம் 14 கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளை காணொ லிக் காட்சி மூலமாக தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயல லிதா தொடங்கி வைத்தார்
.இந்த 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக் கும் 210 ஆசிரியர் பணியிடங் களும், 238 ஆசிரியரல்லா பிற பணியிடங்களும் தோற்று விக்கப்பட்டுள்ளன. மேலும், பணியாளர் சம்பளம், அலு வலக செலவினம் ஆகியவற் றிற்கும் மற்றும் கணினிகள், அறைகலன்கள், புத்தகங் கள், கருவிகள் போன்றவை கொள்முதல் செய்வதற்கும் 17 கோடியே 9 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக் கல்லூரிகளுக்கு 105 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் நிரந்தரக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் முதற் கட்டமாக பி.ஏ., (ஆங்கி லம்), பி.ஏ., (தமிழ்), பி.காம்., பி.எஸ்.சி., (கணிதம்) மற்றும் பி.எஸ்.சி., (கணினி அறிவி யல்) ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் ஆரம்பிக்கப் பட்டு அதற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், தொழில் துறை அமைச்சர் பி. தங்க மணி, தலைமைச் செயலா ளர் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வித் துறை முதன் மைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment