Saturday 14 September 2013

IB ASSOCIATION SCHOOL

குறிச்சியில் ஒரு பள்ளியின் முயற்சி


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலிருக்கும் “குறிச்சி” என்கிற கிராமத்தில் குறைந்த கட்டணத்தில், இந்தியன் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பினால் 2002ல் உருவாக்கப்பட்டது தான் IBEA பள்ளி. இப்பள்ளியின் சிறப்பம்சங்கள்:
Ø  RTE  வருவதற்கு முன்பே, இப்பள்ளியில் குழந்தைகளைத் துன்புறுத்தவில்லை; தேர்வு என்கிற முறையில் குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் கொடுத்து, தரம் பிரிக்கவில்லை;
Ø  அறிவியல் சார்-ஊரில் பல்வேறு பிர்ச்சனைகளை ஆறாய்ச்சிகள் செய்து, அதற்குறிய தீர்வைத் தேடியதன் விளைவாக தொடர்ந்து மூன்று வருடங்களாக இக்குழந்தைகளே செய்தது, தேசிய அளவிலான அறிவியல் செய்முறைகளில்(science projects) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது;
Ø  குழந்தைகளுக்கிடையே எந்த ஒரு பிரச்சனையாக இருப்பினும், அவர்களுக்குள்ளேயே பேசி, தீர்வு காண்பர்;
Ø  பள்ளியிலேயே ஆசிரியர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து, கடைகளை உருவாக்கி அனைவரும் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டும் என்கிற முடிவுடன், விற்றல், வாங்குதல், லாபம், நஷ்டம் முதலியவற்றைக் கற்பதுடன், ஆங்கிலமும் பேசப் பழகுகிறார்கள்;
Ø  குழந்தைகளிடையே குழுக்கள் அமைப்பதால், இவன் நன்றாகப் படிக்கிறான், அவள் நன்றாக படிக்காதவள் என்கிற பாகுபாடின்றி, ஒன்றை அறிந்தவர், அறியாதவருக்கு அறிந்துகொள்ள உதவி புறிவார்;
Ø  ஆசிரியர்கள் பள்ளி நேரம் முடிந்த பிறகு(சனிக்கிழமைகளிலும்), பாடத்திட்டங்களுடன் மாணவர்களுக்கேற்ற செயல்பாடுகளை திட்டமிட்டு கூட்டாக கலந்துரையாடி வடிவமைப்பர்;
இது போன்று மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இப்பள்ளியைப் பற்றி இந்தக் காணொலியில் காணலாம்.


No comments:

Post a Comment