Friday, 29 November 2013

நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் சனிக்கிழமை (நவம்பர் 30) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் வளிமண்டத்தின் மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்
வானிலை முன்னறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளிக்கிழமை ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

பீகார்: ஆசிரியர் தகுதித்தேர்வில் 10 ஆயிரம் பேர் தோல்வி

பீகார் மாநில அரசு பள்ளிகளில், தொடர்ந்து ஆசிரியர்களாக  பணியாற்ற நடத்தப்படும் தகுதித்தேர்வில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் பீகார் மாநில அரசு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும், இந்நிலையில் 5ஆம் வகுப்புக்கான ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் தகுதி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் ஆங்கிலம், கணிதம், பொதுஅறிவு மற்றும் ஹிந்தி பாடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வில் 43.447 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,
இதில் 24 சதவீதம் பேர் அதாவது 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தோல்வியடைந்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் 32.833 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்,
தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மற்றொரு முறை வாய்ப்பளிக்கப்படும் என்றும், அதில் தோற்றால் ஆசிரியராக பணியாற்ற முடியாது என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.

Monday, 25 November 2013

EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 30KB அளவுக்கு மாற்றம் செய்ய எளிய வழி

EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 30KB அளவுக்கு மாற்றம் செய்ய எளிய வழி

  

  

  

  

  


EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் 
EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் 

செய்ய அதிகம் நேரம் செலவாகிறது. போட்டோஷாப் மென்பொருளில் இதை எளிமையாகச் 

செய்ய ஒரு வசதி இருக்கிறது. முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS RESIZE என இரண்டு 

போல்டர்களை உருவாக்கிக் கொள்ளவும். EMIS எனும் போல்டரில் மாற்றம் செய்யப்பட 

வேண்டிய போட்டோக்களை வைத்துக் கொள்ளவும். போட்டோஷாப்பை ஓப்பன் செய்து அதில் 

உள்ள OPEN வழியாக EMIS போல்டரில் உள்ள ஏதேனும் ஒரு போட்டோவைத் திறக்கவும். பின்பு 

Windows மெனுவில் Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். கீழே ஐந்தாவதாக வரும்create new action 

என்பதை தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய New action க்கு RESIZE எனப் பெயர் கொடுக்கவும். 

பின்பு Record பட்டனை அழுத்தவும். பின்பு Image மெனுவில் Image size என்பதை 

தேர்ந்தெடுக்கவும். Constrain Proportions என்பதில் உள்ள டிக்கை எடுத்து விடவும்.

 Width,Height,Resolution ஆகியவற்றை 200க்கு செட் செய்து கொள்ளவும். பின்பு Save As கொடுத்து 

EMIS RESIZE என்ற டெஸ்க்டாப் போல்டரில் அதை சேமிக்கவும்.பின்பு Stop playing /recording 

என்பதை கிளிக் செய்து உங்களுடைய action நிறுத்தவும். அவ்வளவுதான் 99 சதவீதவேலையை 

நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்! இனிமேல் File மெனுவில் Automate இல் Batch 

பட்டனை கிளிக் செய்து Action இல் RESIZE என்பதை செலக்ட் செய்து உங்களுக்கு தேவையான 

EMIS போல்டரை செலக்ட் செய்து ஓ.கே கொடுத்தால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் அனைத்து

 படங்களும் EMIS RESIZE என்ற போல்டரில் தேவையான படிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்! 


நன்றி: நண்பர் திரு அசதா அவர்களின் வழிகாட்டுதலுக்கு!

தொடக்கக் கல்வி - வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள உத்தரவு

EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி? - விளக்கப் படங்களின் மீது CLICK செய்து பெரிதாக பார்க்கலாம்

EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி? - விளக்கப் படங்களின் மீது CLICK செய்து பெரிதாக பார்க்கலாம்

EMIS - Offline Photo Resize Tutorial 
Step By Step Instruction Now Available.

Step  1:

        எந்த புகைப்படத்தை Compress செய்ய வேண்டுமோ அதை Select செய்து Right Click செய்யவும். திரையில் தோன்ற கூடிய Windows Picture Manager ஐ Select செய்ய வேண்டும்.

Step 2:


         புகைப்படம் Windows Picture Manager இல் தோன்றும். Menu Bar இல் உள்ள Picture ஐ Click செய்து அதில் உள்ள Compress Menu ஐ Click செய்ய வேண்டும்.

Step  3:


        வலது புறத்தில் தோன்றும் Pane இல் உள்ள Compress For - இல் E - Mail Messages ஐ Select செய்த பிறகு OK வை Click செய்யவும்.

Step 4: 
     
         
  பிறகு Menu Bar ->File ->Save ஐ Select செய்யவும்.

Step 5:


மீண்டும் Menu Bar இல் உள்ள Picture -> Resize ஐ Select செய்யவும்.

Step  6:

 வலது புறத்தில் தோன்ற கூடிய Pane இல் Customs Width X Height என்ற கட்டத்தில் 275 X 350 மதிப்புகளை பதிவு செய்து OK கொடுக்கவும்.

Step 7:
 பிறகு Menu Bar ->File ->Save ஐ Select செய்யவும்.

Step 8:
           இப்போது நீங்கள் Resize செய்ய வேண்டிய புகைப்படம் தயார். 


          மேலும் இது குறித்த தகவல்களுக்கு திரு. ரமேஷ், கணினி ஆசிரியர், பச்சையப்பா மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம். அவர்களை தொடர்பு கொள்ளவும். Cell No :9445961887