Tuesday, 9 July 2013

கல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார். விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமராஜின் அன்னையார் பெயர் சிவகாமி. மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார்.

குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் என்றும் அறியப்படுகிறார். 

வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.
கண்ணனைப் பாரதி கண்ணம்மாஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை காமாட்சிஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ராஜாஎன்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.
தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.
அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.
1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.
காமராஜரின் சாதனைகள்என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.

சாதனைகள்

கல்விச் சாதனைகள்

கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாறிற்று. கல்வி கற்பது எளிதாக்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கும் கல்வி. இலவசக் கலவி என்றானது.
எங்கும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன. எல்லோருக்கும் இலவசக்கல்வி. மதிய உணவு சீருடைகள் என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தினார் முதலமைச்சர் காமராஜர். கல்வி நிலை உயர்ந்தது. எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை, எளியவர்களுக்கும் எட்டியது. இதனால் கல்விக் கண் திறந்தவர்என்று காமராஜரைப் பல்லோரும் பாராட்டினார்கள்.

தொழிற் சாதனைகள்

பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் தொழில் துறைகளில் என்னென்ன அரும்பெரும் சாதனைகளைச் செய்தார் என்பனவற்றை இங்கே விரிவாகக் காண்போம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காமராஜர், கட்சிக்காரர்கள், நேருஜி போன்றவர்களின் கட்டாயத்துக்கேற்ப முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தார். காமராஜர் என்றும் பதவியைத் தேடி அலைந்தது இல்லை. பதவிகள் தான் அவரைத்தேடி வந்தன. அப்படி வந்த பதவிகளையும் அவர் வேண்டாம் என்றே தட்டிக்கழித்தார். முதலமைச்சர் பதிவியைக்கூட அவர் தட்டிக் கழிக்கத்தான் செய்தார். ஆனால் தலைவர்களின் நிர்பந்தத்தினால் அவர் ஏற்றுக்கொண்டார்.

அரசியல் சாதனைகள்

காமராஜர் பண்டித நேருவுடனும், மற்ற தலைவர்ளுடனும் காங்கிரசைப் பலப்படுத்தக் கலந்து ஆலோசித்தார். தானே ஒரு திட்டத்தை உருவாக்கினார். கடைசியாக அந்தத் திட்டத்தை அவர் வெளியிட்டார். மூத்த தலைவர்கள் பதவியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபடவேண்டும். இந்தியா முழுதும் காங்கிரஸ் இயக்கத்தை வலிமை உடையதாக ஆக்க வேண்டும் என்பதே காமராஜரின் திட்டம். இதைக் கே.பிளான் (காமராஜர் திட்டம்) என்றார்கள்.
காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பிரதமர் நேருஜியும், மற்றத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். முன் உதாரணமாக முதலமைச்சராக இருந்த காமராஜரே பதவியிலிருந்து விலகினார். தனது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பெரியவர். கே. பக்தவத்சலத்தைத் தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கினார்.

பேச்சு சாதனை

எண்ணச் சுதந்திரம் வேண்டும் அதை
எழுதச் சுதந்திரம் என்றென்றும் வேண்டும்
சொல்லச் சுதந்திரம் வேண்டும் வெறும்
சோற்றுச் சுதந்திரம் யாருக்கு வேண்டும்
என்றார் ஒரு கவிஞர். எண்ணியதை எண்ணியபடி எழுதுவதற்கும் எண்ணியதை எல்லோர்க்கும் எடுத்துச் சொல்வதற்கும் சுதந்திரம் இருக்கத்தானே வேண்டும்.

பேச்சு சாதனைகள்

எண்ணச் சுதந்திரம் வேண்டும் அதை
எழுதச் சுதந்திரம் என்றென்றும் வேண்டும்
சொல்லச் சுதந்திரம் வேண்டும் வெறும்
சோற்றுச் சுதந்திரம் யாருக்கு வேண்டும்
என்றார் ஒரு கவிஞர். எண்ணியதை எண்ணியபடி எழுதுவதற்கும் எண்ணியதை எல்லோர்க்கும் எடுத்துச் சொல்வதற்கும் சுதந்திரம் இருக்கத்தானே வேண்டும்.
ஆனால் இந்தச் சுதந்திரத்தை நியாயத்திற்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் புறம்பாகச் சிலர் பயன்படுத்தி விடுகிறார்கள். எதற்காக எல்லாமே சுயநலத்திற்காகத் தான்.
தமிழ் நாட்டில் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்த காமராஜர் அவர்கள் பெரிய பேச்சாளர் அல்ல. ஆனாலும் பேசத் தெரியாவரும் அல்ல. எது சொன்னாலும்
ஆகட்டும். பார்க்கலாமின்னேன்” – என்று ஒரு வரியில் எதற்கும் பதில் அளித்து விடுவார் என்பார்கள்.
காமராஜர் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் பேசாமல் இருந்ததில்லை. அவர் தொண்டனாக இருந்த காலங்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொண்டிற்கும் உழைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான பின்னர், காமராஜர் அளவோடு, சுருக்கமாகப் பேசினார். தமிழக கேள்விகளுக்குத் தக்க பதில் அளித்ததோடு, தேர்தல் பொதுக்கூட்டங்களில் சற்று நேரம் அதிகமாகவே, விளக்கமளித்துப் பேசினார்.
தண்ணீர் மழையாகப் பெய்யுது. அது ஆறாக ஓடுது. அப்படி ஓடுகிற தண்ணீரை அணைக் கட்டித் தேக்கி வைக்கிறோம். பிறகு அங்கு வாய்க்கால் வெட்டி அதன் மூலம் தண்ணீரை விவசாயத்துக்கு அனுப்புகிறோம். விவசாயத்துக்குப் பயன்பட்டபோது, மிஞ்சும் தண்ணீர் சமுத்திரத்துக்கு போகிறது.
பிறகு என்ன ஆகிறது? இந்த மழைநீர் வற்றி, ஆவியாகி, மேகமாக மேலே போய மறுபடியும் மழையாகக் கொட்டுகிறது. இப்படித்தானே அது பழையபடி சுற்றிக்கொண்டே வருகிறது. அதைத் தடுத்த நிறுத்த முடியும என்ன? அதே போல் தான் பணமும். அது நம்மைச் சுற்றித் தான் வர வேண்டும். ஒரே இடத்திலே அது தேங்கிவிடக்கூடாது.
மழையில்லை என்றால் யாரும் வாழ முடியாது. மழைக்கு இவ்வளவு பெருமை எப்படி ஏற்பட்டதோ, அதே மாதரி தான் பணத்துக்குப் பெருமை ஏற்பட்டுள்ளது. மழையைப்போலவேதான் பணமும் சுற்றிக்கொண்டு வர வேண்டும். மழை எல்லா இடத்திலும் பெய்கிறமாதிரி, எல்லா இடத்திலேயும் செல்வம் பரவலாக இருக்க வேண்டும். ஒருவரிடத்தில் மட்டும் அது தேங்கக்கூடாது. அதை ஒருஏர் மட்டுமே சொந்தமாக உபயோகிக்கக்கூடாது.
அகில இந்திய காங்கிரஸ் கமித்டித் தலைவர் ஆன பின்பு காமராஜர் இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எல்லா மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சிக்காகப் பேச வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. பெருந்தலைவர் காமராஜரின் பேச்சுக்களிலிருந்து சில பகுதிகளை இங்கே கொடுத்துள்ளேன்.
காமராஜரைத் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி எல்லோரும் வற்புறுத்திய போது,
எனது நிர்வாகத்தில் நண்பர்களோ கட்சிக்கார்களோ, உறவினர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ தலையிடக்கூடாது. அப்படி நீங்கள் தலையிடாமல் இருந்தால் நான் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன்” – என்று கூறினார்.
ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டால் அவன் பரம்பரையாகச் சாப்பிட்டானா என்று கேட்பது நியாயமா? ஏழைகளின் குழந்தைகளை வாட விடுவது முறையா? அவர்களைப் படிக்க வைத்தால் தானே முன்னுக்கு வருவார்கள். பணக்காரப் பையன்கள் படிக்கவா நான் முதல் மந்திரியாக இருந்து ராஜாங்கம் நடத்தறேன்?”
பள்ளிக்கூடங்களைத் திறப்பது பெரிய காரியமில்லை. குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவை ஊட்டித் திறமைசாலிகளாக்க வேண்டும். அதற்குத தகுந்த ஆசிரியர்கள் பொறுப்புடன் நல்ல முறையில் கல்வி புகட்டினால் குழந்தைகளின் அறவு வளரும் பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பித் தான் குழந்தைகளை அனுப்புகிறார்கள்.
ஒரு யானை அதற்கு ஏற்றபடி சாப்பிடுகிறது. அது சாப்பிடும்பது ஒரு கவளம் சிந்திவிடுகிறது. அந்த ஒரு கவளம் லட்சக்கண்க்கான எறும்புகளுக்கு ஆகாரமாக்க் கிடைக்கிறதே! யானைக்கு ஒரு கவளம் அதன் சாப்பாட்டில் குறைவதால், அது கவலைப்பட வேண்டியதில்லை.
அதே போலத்தான் பணக்கார்ர் கொஞ்சம் வரிப் பணம் கொடுத்தால், அதனால் ஒன்றும் குறைந்து போய் விடாதே! அரசாங்கம் பணக்கார்ர்களுக்கு போடுகிற குறைந்த அளவு வரியைக் கொண்டே, சோற்றுக்குக் கூட இல்லாமல் பிடுங்குகிறோம் என்று பீதியைக் கிளப்ப வேண்டாம்.
பலபேர்களின் பட்டினி தீர அவர்தம் நலவாழ்வுக்கு வழி செய்ய அந்த வரிப்பணம் பயன்படுமே!
பொருளாதாரத் துறையில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து முன்னேறி இதற்குத் தொழிலும், விவசாயமுமு நல்ல முறையில் வளர்ச்சிப் பெற வேண்டும். அப்போதுதான் தொழில் வாய்ப்புகள் பெருகி, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
காங்கிரஸின் சமதர்மக் கொள்கை பிடிக்காமல் பணக்கார்ர்களும் பெரிய முதலாளிகளும் காங்கிரஸ் மீது கோப்ப்படுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குக் காங்கிரஸ் மீது கோபம் வரலாமா?
நாட்டில் கவலையற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டும். அதையும் நாம் வாழ் நாளிலேயே செய்துவிட வேண்டும். உணவு, வீடு, கல்வி, வசதி எதுவும் இல்லை என்ற புகாரே மக்களிடம் இருக்கக்கூடாது
மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல் தான் நாட்டின் லட்சியத்திற்கு அஸ்திவாரம் எனவே மாணவர்கள் அதைப் பற்றி நன்கு தெரிந்து செய்ய வேண்டும்.
ஆசிரியர்களைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து. மாணவர்களைக் கொண்டு அரசியல் பலம் பெற நான் விரும்பவில்லை. நாங்கள் மாணவர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவோம் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம்.
நம் சுகத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நாம் குழந்தைகளைப்ப பற்றிபக் கவலைப்படவேண்டும். கழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும். குழந்தைகளுக்கு நிறையப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். மதிய உணவு வழங்குகிறோம். ஆணியும் (சீருடை) கொடுக்கிறோம்.
நம்மால் நிலையான அரசு அமைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. எப்படியாவது யாரோடு சேர்ந்தாவது ஆட்சியில் பங்கு பெற முயற்சிக்கக்கூடாது.
காங்கிரஸ் என்னும் மரம் நாட்டு மக்களுக்கு நல்ல நிழலைத் தந்துகொண்டு இருக்கிறது. இப்பொழுது சிலர் இதை வெட்டி விட வேண்டும் என்கிறார்கள். இதற்குத் தகுந்தாற்போல இன்னொரு மரம் இருந்தாலும் பரவாயில்லை.
இதைத் தவிர வேறு மரமே கிடையாது! இந்நிலையில் இருக்கின்ற மரத்தையும் வெட்டி விட்டு வெயிலுக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறார்களே!! அவர்கள் பின்னால் நீங்கள் போகலாமா?”
நாம் நம் உழைப்பைத் தந்து அதற்கு ஊதியமாகப் பெறும் ரூபாய் நோட்டுக்கள் வெறும் காகிதங்களே. ஆனாலும் அதை நிறை மனதோடு ஏற்கிறோம். சேமித்து வைக்கிறோம். எந்த நம்பிக்கையில்?
ஒவ்வொரு காகித நோட்டிலும் நாட்டின் அரசு ஒரு சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறது. அந்தக் காகிதத்தில் குறிக்கப்பட்டுள்ள தொகையை என்றும் எந்தப் பொருளாக விரும்புகிறோமோ அந்தப் பொருளாகப் பெறும் உரிமை நமக்குத் தரப்பட்டு இருக்கிறது. அரசுகள் மாறலாம். தலைவர்கள் மாறலாம். கொள்கை வேறுபாடுகள்ள அரசுகள் அமையலாம். ஆனால் தலைமை வங்கி (ரிசர்வ் பேங்க்) அல்லது நீதித்துறை அளித்த சத்தியவாக்குஎன்றும் மாறாது. மாறக்கூடாது.
மாணவர்கள் கல்விகற்பது வெறும் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் பயன்படாமல் நாட்டு முன்னேற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பல்வேறு விஞ்ஞான தொழில் நுணுக்க நிபுணர்கள் மாணவர்களிடமிருந்து தோன்றி அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்பட்டு வருகின்றனர்
எனினும் நமது வளர்ச்சிக்கு, வேகத்துக்கு அது போதுமானதாக இல்லை. எத்தனையோ பற்றாக்குறைகளைப் போலவே, நிபுணர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மாணவர்கள் நன்கு கற்று, விஞ்ஞான தொழில்நுட்ப மேதைகளாகி நாட்டுக்குப் பாடுபட வேண்டும்.
சமதர்மம் என்றால் ஏழ்மையைச் சமமாகப் பகிர்ந்து கொடுப்பது என்று அர்த்தமல்ல. மேலும், மேலும் உற்பத்தி செய்தால், அதே சமயத்தில் அதனால் ஏற்படுகின்ற செல்வம் ஒரு ணிலருடைய இரும்புப் பெட்டிகளில் சென்று ஐக்கியமாகி விடாமல், பலருக்கும் பயன்படும் வித்ததில் பரவலாகும்படி பார்த்துக் கொள்ளுதல், இவை தான் சமதர்மத்தின் நோக்கம்.
ஜனநாயக சோஷலிசமே இந்திய நாட்டிற்கு என்றும் ஏற்றது. முன்னேற்றம் அடையச் செய்யுற ஒரு காரியத்தை அந்த அம்மா மறு பரிசீலனை செய்யனும். அதி தான் பத்திரிக்ககைகளைத் தண்க்கை செய்யுறதாலே நாட்டிலே நடக்கிற உங்கள் நிலைமை அந்த அம்மாவுக்குக் கூடத் தெரியாமல் போய் விடும். கடைசிலே அது அவுங்களுக்கே ஆபத்தா முடியும்.
மக்களுடைய மனதில் அரசாங்கம் என்று ஒன்று தனியாக இருக்கிறது. அரசாங்கமே எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும்.
நமக்கு நல்ல திறமை இருக்கிறது. ஆனால் நாம் வீணாகச் சோம்பலாகத் திரிகின்றோம். சோம்பலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. ஏன் ஐயா சும்மா திரிகிறாய் என்று கேட்டால், நம் தலையெழுத்து, நமக்கு இவ்வளவுதான் என்று கூறுகிறோம். இதெல்லாம் வீண் பேச்சு. இப்படிப் பேசிக் கொண்டே இருந்தால் முன்னேற முடியாது.
நம் தாய்மார்கள் படித்துவிட்டால், நாட்டிலுள்ள தொந்தரவுகள் நீங்கி விடும். நாம் சம்பாதித்த சுதந்திரமும் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.
சம்பாதிக்கட்டும். வரி கொடு என்றால் மாட்டேன் என்பதா? நாங்கள் ஆலையை மூடி விட்டால் சம்பாதிக்க் முடியுமா? மின்சாரத்தை நிறுத்தி விட்டால் தொழில் பங்கை முடியுமா?
ஆகவே, அதிர்ஷ்டம், சாமர்த்தியம் என்றெல்லாம் சொல்லாமல் வரி கொடுங்கள் என்று கேட்கிறோம். இது தவறா? மாடு மேய்ப்பவன் அப்படியே இருக்கட்டும் மென்று சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்த நாங்கள் தயார் இல்லை. அதற்கு வேறு ஆளைப் பாருங்க
மகாத்மா காந்தி எதை இலட்சியமாக் கொண்டிருந்தாரோ அது தான் நம் இலட்சியமும் கவியரசர் பாரதி என்ன சொன்னார்? ”தனியொருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” – என்று பாடினார்.
மகாத்மா காந்தியின் உள்ளத்தைப் பாட்டாக எடுத்துக் காட்டினார். நமது மாபெரும் தலைவர், நேருஜி ஏழைகளின் நல்வாழ்வு” – என்ற இலட்சியத்தை வைத்துக் கொண்டு தான் காங்கிரஸ் ஆட்சிக்குத் தலைமை ஏற்றுக்கொண்டார்.
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று இப்போது பாடுகிறார்களே. அதை மகாத்மா காந்தி தான் உருவாக்கினார்; ஏழைகள்தான் இந்த நாட்டின் கடவுள் என்று அவர் குறிப்பிட்டார். அவர்களுக்குத் தரித்திர நாராயணர் என்று பெயர் வைத்தார். அவர்களுக்காக ஒரு ராஜ்யத்தைச் சம்பாதித்துக் கொடுத்தார்.
நாட்டிலே பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும். கிராமங்ள் முன்னேறும். ஏன், தேசமே முன்னேறும்.
ஒருவன் பட்டினியாக இருக்கிறான் என்றால் அவன் யார்? என்ன சாதி? என்றெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?
திராவிடன் பசி ஒருவிதமாகவும் ஆரியன் பசி வேறுவிதமானதாகவுமா இருக்கும்? பட்டினி எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆகவே பாரபட்சமின்றி எல்லோரது பட்டினியையும் போக்க வேண்டும்.
இந்தி மொழிகள் விஷயத்தைப் பொறுத்தவரை இந்தி மோழி பேசுகிறவர்கள்ப் பற்றி நாம் அறிந்து கொள்ள நாம் இந்தி மொழியைப் படிக்கணும். நம்மைப் பற்றி அறிய அவர்கள் நம் தமிழ் மொழியைப் படிக்கணும்.
பழைய காலத்தில் காசியாத்திரை போவதென்றால் சிரமம். பல மாதங்கள் ஆகும். இப்போது டில்லிக்கு போக வேண்டுமானாலும் சீக்கிரத்தில் போகலாம். ரயில், மோட்டார், ஆகாய விமானம் எல்லாம் இருக்கின்றன.
அதாவது நாட்டில் இன்று பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதை உணர்ந்து நாம் வாழவேண்டும். ஆனால் சிலர் இதை உணர மறுக்கிறார்கள். ட்டை வண்டியில் சவாரி செய்த காலம் தான் உயர்ந்தது என்கிறார்கள். அவர்களை எப்படித் திருத்துவது?”
வயிற்றுக்கு முதலில் கஞ்சி கிடைத்தால் போதும். பாயசம், வடை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். பட்டினி இருப்பவர்கள் என் மேலே கோப்ப்படுவது எனக்குப் புரிகிறத். ஆனால், தினசரி மூன்று வேளை வயிறாரச் சாப்பிட்டுக் கொண்டு, அதே சமயத்தில் பாயசத்துக்குப் பால் இல்லை, அல்வாவுக்குச் சர்க்கரை இல்லை என்பவர்கள் கோப்ப்படுவது தான் எனக்குப் புரியவில்லை.
புதிய சமுதாயத்தை அமைக்க வேண்டுமானால் பழைய பழக்க வழக்கங்களை அப்படியே வைத்துக் கொள்ள முடியுமா? அதற்காக்ப் பழையதெல்லாம் தப்பு என்று சொல்ல்லாமா? கூடாது. ஒரு புது வீட்டுக்குக் குடித்தனம் போகும்போது, பழைய டின், துடப்பம், ஓட்டை உடைசல் எல்லாவற்றையும் விட்டு விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு போகிறோம். அல்லவா? அது போல் பழமையில் இருக்கிற நல்ல விஷயங்களை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நமது சமுதாயத்தில் உழைப்புக்கு மரியாதை இல்லை. உழைப்பவனைக் கூலிக்காரன் என்று கூறுகிறோம். ஆனால் கடத்தல்காரனை, ”கடத்தல் மன்ன்என்று அரசர் அந்தஸ்த்தில் அழைக்கிறோம்.
சுதந்திரம் வந்தால் நாட்டில் மக்கள் நிலை உயரும் என்பதை அறிந்தே பலர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காகவே மகாத்மா காந்தியின் தலைமையில் பலர் ஜெயிலுக்குச் சென்றனர். ஆனால் யாரும் மந்திரியாவதற்கு ஜெயிலுக்குப் போகவில்லை.
பல்வேறு மொழிகள் பேசுகிறவர்களும் பழக்க வழக்கங்கள் உள்ளவர்களும் இருப்பதினால் ஒரு நாட்டை வெவ்வேறு பிரிவுகள் என்று சொல்லவோ, பிரிக்க வேண்டும் என்று சொல்லவே முடியாது.
என்னால் சார்ந்திருக்க முடியாது. இப்போதே பதவியில் உட்கார வேண்டும் என்றால் முடியுமா? நெல்லை இன்றைக்கு விதைத்து விட்டு, நாளையே அறுவடை செய்ய வேண்டுமென்று அரிவாளை எடுத்துக்கொண்டு போய் நின்றால் நடக்குமா?”
எப்போதும் தேவை ஏற்படுவது வளர்ச்சிக்கு அடையாளமு முன்பு எல்லாம் கிராமங்களில் சட்டை கூடப் போட மாட்டார்கள். இப்போது அப்படி இல்லை. எல்லோரும் சட்டை போடுகிறார்கள்.
ஆகவே நிறையத் துணி வேண்டியிருக்கிறது. துணிகளைத் தயாரிக்க ஆலைகள் வைக்க வேண்டும். ஆகவே தேவை ஏற்படுகிறதென்றால் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
வடக்குத் தெற்கு என்று வேற்றுமை வேண்டாம். இந்திக்காரரோடு பேசுவதற்கு நாம் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். அதே போல் நம்மிடம் பேசுவதற்கு இந்திக்கார்ர்கள் அவசியம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
வட இந்தியாவையும் நான் பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டிலோ மூலைமுடுக்குகளில் உள்ள எல்லாக் கிராமங்களையும் கண்டு இருக்கிறேன். இந்தியா ஒரே தேசம்தான் ஒரே சக்திதான்.
நேற்று, இன்று, நாளை, முக்காத்தையும் சரித்திரத்தையும், நாம் உணர வேண்டும். நாம் மட்டும் வளர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்.
இது ஜனநாயக நாடு. இங்கே எஜமானர்கள் யார்? வாக்காளப் பெருமக்கள்தான் அவர்கள் தான் உண்மையான எஜமானர்கள்.
கல்வி நாட்டிற்கு அவசியம் தேவை. ஆனால், கற்றவர், கல்லாதவர் என்று ஒரு புது சாதி உண்டாகிவிடக்கூடாது.
தண்ணீர் கீழ்நோக்கி ஓடுகிறது. திடீரென்று அது நின்று விட்டால் தேக்கம் ஏற்படுகிறது. அதைப் பகிர்ந்து கொடுக்கவேண்டும். அதேபோல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகும் காலத்தில் அந்த வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கி விடாமல் பிரித்து தர வேண்டும். அப்படிச் செய்யும் போது கோப்ப்படுவதற்கு என்ன இருக்கிறது?”
சமதர்மத்தில் என்ன கெடுதல் இருக்கிறது? பட்டினியாக இருப்பவர்கள் எத்தரை நாளைக்கு இப்படியே இருப்பது? ஒரு சிலர் செலவத்திலும் இருக்கலாமா? இந்த வேறுபாடு போய் எல்லோரும் சம்மாக இருக்க வேண்டும் என்பது தான் சமதரம்ம் அதில் என்ன தப்பு?”
உங்களைக் கேடிலாக்காரில் போக வேண்தாமென்று சொல்லவில்லை. ஆனால், போக்குவரத்து நெரிசலின் போது, நாலு தெருச் சந்திப்பில் வெறும் நூறு ரூபாய் சம்பளம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள் நிறுத்த என்று கேட்கிறீர்களே! அவன் நிறுத்தி வழியமைக்கக் குடுக்கலேன்னா, நீங்களும் உங்க காரும் நொறுங்கிப் போயிடுமேன்னேன். அதே போலத் தான் சமூகத்திலும் சில கட்டுப்பாடுகள் தேவைன்னு நாங்க சொல்கிறோம்
ரூபாய்க்கு மூணு படி அரிசி போடுவோம்னு சில படிச்ச தலைவர்களே பேசறாங்க. அது முடியுமான்னு நானும் பல பொருளாதார நிபுணர்களைக் கேட்டேன். அவர்கள் அது சாத்தியமே இல்லேங்குறாங்க. பாமர ஜனங்களின் ஓட்டுக்களை விக்குறத்துக்குப் படிச்சவங்க இப்படிப் பொய் சொல்லலாமா?
வசதியாக வீடு கட்டிக் கொள்கிறவர்கள், தங்கள் வீட்டு வேலைக்கார்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடவேண்டும். இல்லா விட்டால் குடிசைப் பிரச்சனை தீராது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இது நமது நாடு. நாம் எல்லோரும் இந்தியர்கள என்ற உணர்ச்சி வேண்டும். தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்ளலாம். ஆனால் இந்தியன் என்றால் இன்னும் அதிகமான பெருமை கொள்ள வேண்டும். இந்தியா வாழ்ந்தால் தான் தமிழ் நாடும் வாழும்.
பதவி என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. அது என்ன தனி உடைமையா? கிடையவே கிடையாது. மந்திரி பதவி பரம்பரைப் பாத்தியதை அல்ல. மகாராஜாக்கள் பதவி போன்றதும் அல்ல. மக்கள் ஒத்துழைக்கும் வரை மட்டுமே பதவி நீடிக்கும்.
நாட்டில் உள்ள பஞ்சம், பசி, பட்டினி, பிணி, வேலையின்மை ஆகியவற்றைப் போக்குவதி ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான வேலை அல்ல. அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களுடைய பிரச்சினை தேசியப் பிரச்சினை ஆகும்.
கடவுளுக்கு தேங்காய் உடைத்துப் பூமாலை சாத்தி பூஜை செயதால் மட்டும் போதும். அவர்கள் சும்மா இருந்து விடுவார். நாம நினைத்ததைச் செய்து கொண்டே போகலாம் என்று எண்ணக் கூடாது.
கோடி ரூபாய் வைத்திருப்பவனைக் கோடீஸ்வரன் என்கிறோம். பணமு படைத்தவன் என்பதற்காக ஒருவனை ஈஸ்வரனாக்கி கடவுளாக்கி விடும் இந்நப் புத்தி சமுதாயத்துக்கு எப்படி நன்மை தரும்?”
நாணயக் குறைவால் தொழில்கள் கெடும். தாங்கள் காட்டும் மாதிரிப் பொருளகளையும் போலவே சரக்கை அனுப்ப வேண்டும். மாதிரி நன்றாகவும், சரக்கு மோசமாகவும் இருக்கக்கூடாது. இதுவே வணிகர்களுக்கு நான் கூறும் அறிவுரை.
வயோதிக காலத்தில் வேலை செய்ய இயலாமல் போய்விடும். நம கதி என்ன ஆகும் என்ற பயம் முதியவரிகளுக்கு உண்டாகிறது. அவர்களுடைய இந்த அச்சத்தை நாம் போக்க வேண்டும்.
மந்திரியாக இருப்பது மாலை வாங்கிக் கொண்டு சுற்றுவதற்கல்ல. நம்மை நம்பி ஆட்சியை ஒப்படைத்த மக்கள் அனைவருக்கும் சேவை செய்வதற்காகத்தான்.
இவ்வளவு செய்தும் குழந்தைகள் போல இவனும் அப்பபடியே இருக்க வேண்டுமானால் அரசாங்கம் எதற்கு? மந்திரிகள் எதற்கு? பலம் படைத்தவர்கள் அதிகாரம் தானே இருக்க வேண்டும்?”
பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்று சொன்னாங்க். அப்போதைக்கெல்லாம் நான் நம்பலே. ஆனால், இப்பத் தான் தெரியுது. பணம், பாதாளமென்ன. அதுக்குக் கீழே வரைக்கும் கூட பாயுமின்னு.
ஏதோ சில கட்சிகள் கூடிக் கூட்டாளி அமைத்துத் தேர்தலில் வெற்றி பெற்றால் நிலையான அரசாங்கம் எப்படி அமையும்? சர்க்கசில் சிங்கம், புலி, கரடி, குரங்கு, நரி ஆகியவை கூண்டில் அடைபட்டு அடங்குவது போல, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கொள்கைகளை உடைய கட்சிகளது கதம்ப சர்க்கார் தானே நடக்கும்? நாட்டில்அமைதியும் ஒழுங்கும் இருக்குமா? அவர்களது பிரச்சினையைக் கவனிக்க முடியுமா? பொது மக்கள் யோசிக்கவேண்டும்.
நாமெல்லோரும் பெரியவர்காகி விட்டோம். நமக்குப் படிப்பு வராது. நம்முடைய குழந்தைகளாவது படிக்கட்டும். அவர்களுக்காவது எது நியாயம், எது அநியாயம் என்று தெரியட்டும். அதற்காகத் தான் நாங்கள் நிறையப் பள்ளிக் கூடங்களைத் திறக்கிறோம். எல்லோரும் படிக்க வசதி செய்து கொண்டு இருக்கிறோம்.
ஏழைகள் கையில் பணப புழுக்கம் நன்றாக இருந்தால் தான் நாடு நல்ல படியாக இருக்க முடியும். புதிய தொழிற்சாலைகளைக் கட்ட முடியும். ஏழைகள் நிறைய காப்பி, டீ சாப்பிடுவதால் சர்க்கரை மிகுதியாகத் தேவைப்படுகிறது. உடனே சர்க்கரை ஆலை வைக்கிறோம். ஆக ஏழை கையில் பணமிருந்தால் தான் வாழ்க்கை தரம் உயரும். தொழில்கள் வளரும்.
இந்தக் கிராமத்திலே ஏன் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை?” – காமராஜர்.
இந்தக் கட்சிக்கார்ர்கள் நம் கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை. அதனால் தான் பள்ளிக் கூடம் திறக்கப்படவில்லைஎன்றார் முதலமைச்சரின் உதவியாளர்.
இது ஜனநாயக நாடு . மக்கள் தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம்.
அது அவர்களின் ஜனநாயக உரிமை. அதனால் அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது. உடனே இந்தக் கிராமத்துக்கு பள்ளிக் கூடம் திறக்கச் செய்யுங்கள்” – என்றார் காமராஜர்.
ஒரு கிராமத்துக்குச் சென்றார் முதலமைச்சர் காமராஜர். அந்த ஊர்த் தலைவர்கள் அவரிடம் வந்து,
ஐயா! எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தந்திட வேண்டும்” – என்றார்கள்.
காமராஜர் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே,
நான் நீங்களெல்லாம் நன்றாக வாழ்வதற்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீர்கள்!என்றார்.
காமராசர் மேடையில் இருக்கும் போதே ஒரு பேச்சாளர்,
காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்என்று பேசினார்.
அடுத்துப் பேசிய காமராஜர்,
நடக்கிறதைச் சொல்லணும். நாங்கள் நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகனுமின்னு சொல்லுறீங்க. சரிகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்து விடுவதா வச்சுக்குவோம்.
அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தமின்னு சொல்லுவான்” – என்றார்.
உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று பேசியவரும், ஏன் கேட்டுக் கொண்டு இருந்த பொது மக்களும் அசந்து போனார்கள். இது கூடக் காமராஜரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பேச்சுத்தான்.
1971 – ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிஸ் அமோக வெற்றி பெற்றது. காமராஜர் சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது.
தொண்டர்கள் காமராஜரிடம் வந்து,
ஜயா! அவர்கள் வெற்றிக்கு காரணம் ரஷ்ய மைவைத்து ஏமாற்றி விட்டார்கள். வாக்குச் சீட்டில் ரஷ்ய மை தடவிவிட்டார்கள்என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட காமராஜர்,
ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது. நாம் தேர்தலிலே தோற்றதிற்குக் காரணம் மைஎன்கிறீர்களே! அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை” – என்றார்.
முதலமைச்சர் ஆனதும் காமராஜர் பேசிய பேச்சில் ,
நான் ஏழைகளின் துயர் நீக்கவே முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். அதற்கு இடமில்லை என்றால் எனக்கு இப்பதவி தேவை இல்லை.என்றார்.
ஏழையாகப் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, எந்தச் சூழ்நிலையிலும் ஏழைகளின் துயரங்களை நீக்கவே எண்ணிப் பாடுபட்ட காமராஜரை ஏழைப் பங்காளன்என்று சொல்வதிலே தவறில்லை தானே.
அப்போது காமராஜர் பதவியில் இல்லை. நாகர்கோயில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்தார். தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது.
அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்திருந்தார். அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புது டெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள்.
பார்க்க முடியாதுன்னேன்” – என்று காமராஜர் பதில் சொல்லி விட்டார். ஏன் இப்படிச் சொல்கிறார்? வந்து பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர். குழப்ப மடைந்தார்கள் கூடியிருந்தவர்கள்.
அவர்களைப் பார்த்துக் காமராஜர் சொன்னார். அண்ணாத்துரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர்அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்திவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்என்றார் காமராஜர்.
இது காமராஜர், தானும் ஒரு தமிழன் என்று தன்மானத்தையும், மாற்றுக் கட்சிக்காரர் என்றாலும் அண்ணாத்துரைக்கு அமெரிக்க அதிபர் சந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காததற்குக் கண்டனமும் தெரிவித்ததையும் தானே காட்டுகிறது. அவர் சுருக்கமாகப் பேசினாலும் சுறுக்கென்று பேசி இருக்கிறார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களது பேச்சுக்கள் பலவற்றைத் தொகுத்துப் பார்த்தோம். அவரது பேச்சுக்களில் நகைச்சுவையும் உள்ளார்ந்த நற்கருத்துகளும், பொதுவான போதனைகள் போன்ற தத்துவங்களும் இருந்ததனைக் கண்டோம்.
ஆகட்டும் பார்க்கலாமின்னேன்” – என்று சொல்வதைத் தவிரக் காமராஜருக்கு வேறொன்றும் பேசவே தெரியாது என்று அவரைத் தாழ்த்திப் பேசியவர்கள் கூடக் காமராஜரத் பேச்சுக்களை கேட்டிருந்தால் நிச்சயமாக வாழ்த்திப் பேசியிருப்பார்கள்.
காங்கிரஸ் ஊழியர்கள் மத்தியிலே தொண்டனாக, பின்னர் தலைவனாக அவரது பேச்சு ஒரு விதமாக இருந்தது. முதலமைச்சர் ஆன பின்பு காமராஜர் பேச்சு வேறு விதமாக மாறியிருந்தது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போது, இந்திய முழுவதக்கும் ஏற்றதாக அவரது பேச்சுக்கள் இருந்தன.
கோவைக் கல்லூரிகளின் சமூகப் பணிக் கூட்டு மன்ற அமைப்புத் துவக்க விழிவிலே, கல்லூரி, மாணவ மாணவியர்களிடையே அமைப்பைத் தொடங்கி வைத்து, ” எது சமூக சேவை?” என்று காமராஜர் மணிக்கணக்கில் பேரூரை ஆற்றிப் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சரித்திரம் சான்று பகர்கிறதே. எனவே காமராஜர் படைத்தவர் தான் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

புகழ்

தங்கமேதண்பொதிகைச்
சாரலே!தண்ணிலவே!
சிங்கமே!என்றழைத்துச்
சீராட்டுந்தாய்தவிரச்
சொந்தமென்றுஏதுமில்லை!
துணையிருக்கமங்கையில்லை!
தூயமணிமண்டபங்கள்
தோட்ட்கள்ஏதுமில்லை!
ஆண்டிகையல்ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே!
கவியரசர்கண்ணதாசன்
காமராசர் தாலாட்டு.
மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் காமராஜர். காமராஜரின் வாழ்க்கையென்பது ஒரு சாதாரண மனிதரின் வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்ன என்பதன் விளக்கம் தந்த வாழ்க்கை என்ன தனி மனித வாழ்விலும், பொது வாழ்விலும் அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறைகள் காந்தியடிகளின் சத்ய சோதனைபோன்றதாகும். அதனால் தான் காமராஜரையும், காந்தியடிகளோடு ஒப்புமைப்படுத்தி தென்னாட்டுக் காந்திஎன்று போற்றிப் புகழுகின்றோம்.
ஜூலை 15. காமராஜரின் பிறந்தநாள். எப்போதும் போல் வருகின்ற பிறந்த நாளல்ல. இந்த பிறந்த நாள் நூற்றாண்டின் நினைவுகளைத் தரும் இனிய நாள்.
அவர் படித்த வகுப்பு ஆறு. இப்பொழுது கடக்கிறது அவருக்கு வயது நூறு. அவருடைய சாதனைச் சரித்திரம் நூறு ஆண்டுகள் அல்ல. நூறு நூறு ஆண்டுகள் இன்னும் தொடரும்.
இனிய நூற்றாண்டில் மலரும் நினைவுகளாய் சில நினைவுகள். அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் சில பக்கங்களை உங்கள் பார்வைக்கு இங்கே பந்திவைக்கிறேன்.

அரசியல்

1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய காமராஜர் எளிமையின் சின்னமாக விளங்கினார்.
வீண் விளம்பரங்களை வெறுத்த காமராஜர், கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து கிராம பிரச்சனைகளை நேரில் கண்டறிந்தார். அதனை நீக்க புத்தம் புதிய செயல் திட்டங்களை தீட்டினார்.
கல்விக்கண் கொடுத்தவர்
ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.
தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.
எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?
உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.
பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.
அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.
ஆமாம்என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்என்றான்.
உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து மதிய உணவுத திட்டத்தைஉடனே அமுல் படுத்துங்கள்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.
அரசியல் பணி
மாநில முதல்வர் இருக்கும் தகுதி பெரும் பணக்கார்ர்களுக்கும் மிட்டாமிராசுதார்ர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மட்டுமே உண்டு என்பதை பொய்யாக்கி சாமானியனும் மாநில முதலமைச்சர் ஆகலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய முதல் மனிதர் காமராஜர்தான். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்குச் சாவு மணி அடித்தது அவரது மிகப் பெரியச் சாதனை.
பதவி ஆசை அற்றவரே பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்நேருவிற்குப் பிடிக்காதவர்களைப் பதவியிலிருந்து ஒழித்துக் கட்டவும் காமராஜர் பதவி விலகும் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். இது அவரது அரசியல் நுண்ணறிவுக்கு எடுத்துக்காட்டு ஆகும். நேருவுக்குப் பின் லால்பகதூரைப் பிரதமராக்கியது அவரது அரசியல் திறமைக்கு தக்கச்சான்று ஆகும்.
இந்தியாவைக் காப்போம் ஜனநாயகத்தைக் காப்போம்என்பது விருதுநகர் வீர்ரின் வேத வாக்கு.
அணைக்கட்டுகள்
காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.
மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.
சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.
நெல்லை மாவட்டம் தாரிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.
1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது.
இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.
சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.
இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொழில் நிறுவனங்கள்
காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.
இவை தவிர சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி ஆலைகள், மாக்னசைட், சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், உலைக்கூட ஆலைகள், ரப்பர் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் பாதைகள் அமைக்கும் எஞ்சின்கள்,சைக்கிள்கள், தானியங்கி ஈரிருளிகள், தட்டச்சுப் பொறிகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவைச் சிகிச்சை கருவிகள், தொடர் வண்டிப் பெட்டிகள், பார உந்து வாகனங்கள் ஆகியன காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும்.
இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.

நினைவிடம்

நினைவிடம்/நினைவகம் பெயர்:
பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம்
முகவரி:
சர்தார்பட்டேல் சாலை கிண்டி சென்னை-600 025
மொத்த பரப்பளவு:
6.04 ஏக்கர்
கட்டத்தின் பரப்பளவு:
484 சதுர மீட்டர்
அரசுடைமை ஆக்கப்பட்ட நாள்:
14-02-1976
திறக்கப்பட்ட நாள்:
14-02-1976
நினைவகத்தைப் பற்றிய குறிப்பு:
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்

மணி மண்டபம்

நினைவிடம்/நினைவகம் பெயர்:
பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம்
முகவரி:
கடற்கரை சாலை கன்னியாகுமரி
மொத்த பரப்பளவு:
6322.03 சதுர மீட்டர்
கட்டத்தின் பரப்பளவு:
431.18 சதுர மீட்டர்
அரசுடைமை ஆக்கப்பட்ட நாள்:
2-10-2000
திறக்கப்பட்ட நாள்:
2-10-2000
நினைவகத்தைப் பற்றிய குறிப்பு:
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது

சிறப்பு பக்கங்கள்

படிக்காத மேதை, ஏழை பங்காளன், கர்ம வீர்ர், பாரத ரத்னா, கிங் மேக்கர் என்று எல்லோராலும் புகழப்படுகின்ற நம்தலைவர் காமராஜர் பல்வேறு தொண்டுகள் ஆற்றி மக்களின்மனதில் நீங்காத இடம் பெற்றவர். தமிழக முதலமைச்சராக, அகில இந்திய காங்கிரஸின் தலைவராக, சிறப்பாகப் பணியாற்றிய அவரது ஆட்சிக்காலத்தில்தான் கல்விக்கூடங்கள் அதிகமாகத்திறக்கப்பட்டன.
இலவச சீருடை, மதிய உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் நம் தலைவர் காமராஜர். அவரது எளிமையான, புனிதமான வாழ்க்கையை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைகிறது.


No comments:

Post a Comment