சுகமான வாழ்விற்கு இவையாவும் அவசியமே
ஊதிப் பெருத்த உடம்புக்குள்
ஒன்றா இரண்டா வியாதிகள்
எந்நாளும் மருந்தை உண்கின்றோம்
எது தான் இங்கே மாறியது ....!!!!!
வாழும் காலம் அனைத்திலும்
வாழ்க்கை என்பது சுகப்படவே
நோயை முதலில் ஒழிக்கணும்
நோயிருந்தால் நின்மதி வருமா சொல்
பாயிற் கிடக்கும் பொழுதெல்லாம்
மனப் பாரம் மட்டும் தொடர்ந்து வரும்
நோயின் தன்மை அதிகரித்தால்
நொந்து போகும் எங்களுயிர்......
விணாய் துன்பப் படலாமோ நாம்
விரும்பி உண்ணும் உணவாலே?...!
போதும் மனத்தை அடக்கிக் கொள்
பொரித்த உணவைத் தவிர்த்துக் கொள்
நீரை விரும்பி அருந்திக் கொள்
நீ விரும்பும் பானங்களைத் தவிர்த்துக் கொள்
காயைக் கனியையுட்கொண்டு
கலர் கலராய் வரும் இனிப்பைத் தவிர்த்துக் கொள்
இலையைக் குழையையுட்கொண்டு
இருக்கும் நோய்களை விரட்டிக் கொள்
உடலை அசைத்து வேலை செய்து
உடம்பை உடம்பாய் வைத்துக் கொள் !!......
இப்படி நல்லா நடவுங்கள்.
காலில் கிடப்பதை மாற்றுங்கள் :)
தண்ணீர் இது போதும் எல்லா நோயும் ஓடிவிடும் ....
இப்படியும் கொஞ்சம் செய்து பாருங்கள் .
உடம்பு தன்னால குறைந்து விடும் !..:)
இதெல்லாம் உடம்புக்கு ஆகவே ஆகாத பழக்கமுங்க...:))))
இத முதல்ல ஒழிக்கணும் .அத விட்டிற்று ஈரலைக் காணோம் இரப்பையைக் காணோம் என்று கடைசி நேரத்தில தவிக்கக் கூடாது......
இந்தப் பழக்கமெல்லாம் தற்கொலைக்குச் சமன் ...!!!!!
இப்படிச் சத்துள்ள உணவுதான் மூளை வளர்ச்சிக்கும் துணை நிற்கும் .
நல்லா சலாட்டில சாப்பிடுங்க ...........
சாத்தியமாகும் :)))
நீதி :நீங்க ஆயிரம் மவுசத் திண்டிருக்கலாம் இது உங்களால முடியாதப்பு :)
goole ள் மூலம் கிடைத்த இப் படங்களுக்கு நன்றிகள் !
thanks for அம்பாளடியாள்......
No comments:
Post a Comment