By dn, சென்னை
First Published : 18 August 2013 03:40 PM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம்தாள் தேர்வை இன்று 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் எழுதினர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வை நேற்று 2 லட்சத்து 67 ஆயிரத்து 957 பேர் எழுதினர். இன்று இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கி தேர்வு நண்பகல் 1 மணி வரை நடந்தது.தேர்வு எளிமையாக இருந்ததாக பட்டதாரி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment