வாலி இன்று இல்லை. இவருக்கு வயது 82 . வாழ்த்துப்பா பாடுவதில் மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகிப்பது இவருக்கு கை வந்த கலை. தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். நேரத்திற்கு ஏற்றால் போல் நினைத்த உடன் கவிதைகளை கொட்டி போடும் திறம் படைத்தவர் வாலி.
தரைமேல் பிறக்க வைத்தான்: இவர் எழுதிய பாடல்களில் சரித்திரத்தில் மறையாத பாடல்கள் ஆயிரம் உண்டு. புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாக ஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. இது போன்ற பாடல்கள் ஏராளம்.
நுரையீரல் தொற்று :
கடந்த ஜூன் 14 முதல் நுரையீரல் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இன்று அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இவரது மறைவுக்கு திரை உலகத்தினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வாலிப கவிஞர் :
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். இவரது தத்துவ வார்த்தைகள் கொண்ட பாடல்கள் எம்.ஜி.ஆரை மக்களிடம் பிரபலப்படுத்த பெரிதும் உதவியாக இருந்தது. தமிழ் சினிமா உலகில் வாலிப கவிஞர் என அழைக்கப்பட்ட கவிஞர் வாலி இதுவரை சுமார் 15 ஆயிரம் பாடல்கள் வரை எழுதியுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் ஜொலித்தவர். இவரது படைப்புகள் என்றும் ஜொலிக்கும்.
இரங்கல்
AEEO சங்கம் தலைவர் அய்யசாமி செயலர் சௌந்தரராஜன் , பொருளாளர் ஆரோக்கியம் ஆகியோர் இரங்கல் தெரிவிக்கின்றனர்
சென்னை மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவுலர் சங்கம் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்
No comments:
Post a Comment