இந்திய ராணுவத்தில் சேர ஆள் சேர்க்கை முகாம் ஜூலை 18 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தகுதியான வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாரதி விளையாட்டு அரங்கம், நெய் வேலி டவுன்ஷிப், நெய்வேலி என்னும் இடத்தில் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கை நடைபெறுகிறது. சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களிலிருந்து தகுதியான ஆண் விண்ணப்பதாரர்கள் இதில் பங்கு பெறலாம்.
காலியாக உள்ள பணியிடங்கள்: சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியா ளர், சிப்பாய் பொதுவான கடமை, சிப்பாய் தொழில்நுட்பம் அறிந்தவர், சிப்பாய் எழுத்தர் (SKT)
வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர்:
+2-வில் கணிதம், ஆங்கிலம், நர்சிங் ஆகிய படிப்பை முடித்திருக்க வேண்டும். பி.எஸ்சி., நர்சிங் பிரிவில் 40 சதவீத மதிப் பெண் எடுத்து படித்திருக்க வேண்டும்.
ஜூலை 18 ஆம் தேதி ஆவணங்கள் சரி பார்த்தல் நடைபெறுகிறது. ஜூலை 19 ஆம் தேதி உடற்கட்டு தேர்வு நடைபெறும்.
சிப்பாய் பொதுவான கடமை:
10ஆம் வகுப்பில் ஆடியோ/மெட்ரிக் ., குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண் களும், அதிகபட்சமாக 45 சதவீத மதிப் பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜூலை 19, 20 ஆம் தேதிகளில் ஆவணங்கள் சரி பார்க்கப்படுகிறது. ஜூலை 20, 21 ஆம் தேதிகளில் உடற்கட்டு தேர்வு நடைபெறும்.
சிப்பாய் தொழில்நுட்பம் அறிந்தவர் ஹவுஸ் கீப்பர், மெஸ் கீப்பர் பணிக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செப் வாஷர்மேன், டிரெஸ்ஸர், ஸ்டீவார்ட் டைலர் ஆர்டிசன் உள்ளிட்ட பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும்.
ஜூலை 21 ஆம் தேதி ஆவணங்கள் சரி பார்க்கப்படும். ஜூலை 22 ஆம் தேதி உடற்கட்டு தேர்வு நடைபெறும்.
சிப்பாய் எழுத்தர்:
பிளஸ் 2-வில் (கலை அறிவியல் அல்லது வணிகவியல்) பாடப்பிரிவு எடுத்து 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இள நிலையில் பி.எஸ்சி (கணிதம், ஆங்கிலம்) பாடப்பிரிவு எடுத்து 40 சதவீத மதிப் பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஜூலை 22 ஆம் தேதி ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது. ஜூலை 23 ஆம் தேதி உடற்கட்டு தேர்வு நடைபெறும்.
குறிப்பு: தொழில்நிலைக் கல்வி பயின்ற விண்ணப்பதாரர்கள் தகுதியான வர்கள் இல்லை.
கையின் மேல்புறத்தில், மணிக்கட்டின் உட்புறத்தில், உள்ளங்கைக்கு மேற்புறத் தில் மட்டும் பச்சை குத்தியிருப்பவர்கள் அனுமதிக்கப்படுவர். மற்ற இடங்களில் பச்சை குத்தியிருப்பவர்கள் தகுதி தேர்விலிருந்து நீக்கப்படுவர்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment