ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கல்லூரி புதிய கட்டடங்கள் கட்ட
தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை, உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் இன்று(புதன் கிழமை) பகல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.
2013-2014-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் அரசு புதிய க்லலூரிகள் துவங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடடுள்ளார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரிலும், கடலாடியிலும் அரசு புதிய கல்லூரிகள் துவங்கப்டுகின்றன. இவ்விரு கல்லூரிகளும் ஜூலை.27 முதல் துவங்கப்பட உள்ளன. புதிய இரு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை குறித்து விண்ணப்பங்கள் நாளை மறு நாள்(ஜூலை.19) வரையிலும் வழங்கப்டுகின்றன. கடலாடியிலும், முதுகுளத்தூரிலும் தற்காலிகமாக அரசு மேனிலைப்பள்ளி வளாகத்தில் கல்லூரி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதற்கிடையில் புதிய கல்லூரிகளுக்குரிய கட்டடங்கள் கட்டப்பட உள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வற்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வந்திருந்தார். அமைச்சருடன் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர், மருத்துவ்ர் ஆர்.சுந்தரராஜ், மாவட்ட ஆட்சியர் க.நந்த குமார், சேமிப்பு கிடங்கு வாரிய தலைவரும், மாவட்ட அ.தி.முக. செயலருமான, ஜி.முனியசாமி, மு.முருகன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிகள் கவுன்சில் தலைவர், வழக்குரைஞர் எம்.சுந்தர பாண்டியன்,
முன்னாள் அமைச்சரும், மாநில அ.தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவு செயலருமான ஏ.அன்வர் ராஜா, மாவட்ட முன்னாள் செயலர் கே.சி.ஆனிமுத்து, மண்டல உயர் கல்வித்துறை இணை இயக்குனர் சீத்தாதேவி, கடலாடி ஊராட்சி ஒன்றி ய தலைவர் வி.மூக்கையா, மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிச்செல்வி, உதவி அலுவலர் மகேஸ்வரன் வட்டாட்சியர் கே.அமிர்தம், மற்றும் அ.தி.முக. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உள்ளிட்டோர் பலரும் வந்திருந்தனர்.
கடலாடியில் சாயல்குடி சாலையோரம் உள்ள சமத்துவபுரம் எதிரே அரசிற்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் இடத்தைஅமைச்சர் பழனியப்பன் பார்வையிட்டு திருப்தி தெரிவித்தார். கடலாடி அரசு மேனிலைப்பள்ளிக்குச் சென்று கல்லூரி வகுப்புகள் நடைபெற உள்ள கட்டடங்களையும் பார்வையிட்டார். பின்னர் முதுகுளத்தூருக்குச் சென்று தேரிருவேலி சாலையோரம், தனியார் மெட்ரிக் பள்ளி அருகே, அரசிற்குரிய இடத்தை அமைச்சர் பார்வையிட்டார். அதில் சுமார் 11 ஏக்கர், 15 சென்ட் இடம் கையகப்படுத்தப்படுவதாக அமைச்ரிடம் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் விளக்கினர். முதுகுளத்தூர் அரசு மேனிலைப்ள்ளிக்கு அமைச்சர் பழனியப்பன் சென்று வகுப்பறைகள் நடைபெற உள்ள கட்டடஙக்ளைப் பார்வையிட்டு ஆ ய்வு செய்தார். கடலாடியிலும், முதுகுளத்தூரிலும் தற்காலிகமாக கல்லூரி நடைபெறும் இடத்தில் கழிப்பறை, சுகாதாரம், குடி நீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் துரிதமாக செய்து முடிக்கும்படி அமைச்சர் பழனியப்பன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment