Sunday 14 July 2013

இளநிலை பொறியியல் முடிவு தாமதம்: முதுகலை படிப்பில் சேர்வதில் சிக்கல்

விருதுநகர்: முதுகலை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க, ஜூலை 22 கடைசி தேதியாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இளநிலை பொறியியல் முடித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள், இன்னும் முழுமையாக
வெளி வராத நிலையில், முதுகலைக்கு விண்ணப்பம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதுகலை பொறியியல்  பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம் செய்ய, கடைசி தேதியாக ஜூலை 22 அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், கடந்த ஆண்டு பி.இ., முடித்த மாணவர்களில், அரியர்ஸ் இல்லாமல் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமே, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரியர்ஸ் உள்ள மாணவர்களுக்கு முழுமையாக வெளியிடப்படவில்லை. அண்ணா பல்கலைக்கு விண்ணப்பம் செய்யும் போது, தற்காலிக பட்ட சான்றிதழ் (புரவிஷனல்) இணைத்து அனுப்ப வேண்டும் என, தெரிவித்துள்ளது.
பி.இ.,தேர்வு முடிவுகளே இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், முதுகலை இன்ஜி., படிக்க எப்படி விண்ணப்பம் செய்ய முடியும். இதற்கு மாற்று ஏற்பாடாக விண்ணப்பத்தில் எந்த தகவலும் இல்லை. அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
பொறியியல் இறுதி தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் கூறுகையில், "பி.இ., இறுதி தேர்வு மற்றும் அரியர்ஸ் பேப்பருக்கான தேர்வும் எழுதியுள்ளோம். தேர்வு முடிவுகளை இன்று வரை முழுமையாக அண்ணா பல்கலை வெளியிடவில்லை.
இந்நிலையில், ஜூலை 22க்குள் எப்படி எம்.இ., விண்ணப்பம் அனுப்ப முடியும். இந்த குழப்பத்திற்கு, அண்ணா பல்கலைதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment