Sunday, 18 August 2013
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி நியமனம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள், ஓராண்டாகக் காலியாக உள்ளதால், பணிகளில் தேக்கம் ஏற்பட்டு உள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: கல்வியாளர்கள்
பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவியேற்பு தாமதமாவதால், அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரி நிர்வாகப் பணி முடங்கியுள்ளதால், பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறப்பான நகரம் சென்னை: பிற மாநில மாணவர்கள் மகிழ்ச்சி
பொறியியல் மற்றும் மருத்துவ கல்வி பயில, தமிழகத்திற்கு, வடமாநில மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை. அதுவும், சென்னையில் உள்ள பிரபல கல்லூரி களில் படிப்பதற்கு, அவர்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: 4.11 லட்சம் பேர் எழுதினர்
By dn, சென்னை
First Published : 18 August 2013 03:40 PM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம்தாள் தேர்வை இன்று 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் எழுதினர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வை நேற்று 2 லட்சத்து 67 ஆயிரத்து 957 பேர் எழுதினர். இன்று இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கி தேர்வு நண்பகல் 1 மணி வரை நடந்தது.தேர்வு எளிமையாக இருந்ததாக பட்டதாரி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
Saturday, 17 August 2013
TET----17/08/2013 1 paper
TET Paper 1 Key Answers | TNTET-2013- Answer Key download Aug-2013 | Tamilnadu Teacher Eligibility Test Exam Result date: 17.08.2013 Paper 1 Answer Key
Did you complete the TRB tntet-2013 exam ? Just Check yourself by the given answers.
We will update the TET answer keys soon in our website, you candownload them in pdf format from the below links. Links will appear after we update answer keys. It will be updated soon.
Sl.No
|
Subject
|
Question (or)Answer Keys
|
| 1 | Child Development and Pedagogy (relevant to age group 6 – 11) |
Soon update
|
| 2 | Language I –Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu | |
| 3 | Language II - English | |
| 4 | Mathematics | |
| 5 | Environmental Studies | |
ஒரு பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்! ! ! !
துபாய்: பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார். அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார். உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.
இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில்அமர்ந்திருந்தார். இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.அப்போது
இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில்அமர்ந்திருந்தார்.

கடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான கதவுகள் திறக்கும் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
உயர்ந்த லட்சியத்துடன் கடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான கதவுகள் திறக்கும் என்று போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
சிறப்பு வழிகாட்டி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, பள்ளி மாணவர்களுக்கு, வினாக்கள் அடங்கிய, "சிறப்பு வழிகாட்டி” புத்தகம் தயாரிக்கும் பணியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஈடுபட்டு உள்ளது.
முதுநிலை நூலக மற்றும் தகவல் அறிவியல் படிப்பு பற்றி அறிவோமா?
லைப்ரரி மற்றும் இன்பர்மேஷன் சயின்ஸ் படிப்பானது, ஒரு இன்டர்டிசிப்ளினரி படிப்பாகும். இப்பாடத்திட்டம் பல தியரி மற்றும் பிராக்டிகல் அம்சங்களை தன்னகத்தேக் கொண்டதாகும்.
சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழா
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆக.17 மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆளுநரும், பல்கலை வேந்தருமான கே.ரோசய்யா தலைமை வகிக்கிறார். முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொள்கிறார்.
1160 மாணவர்கள் பட்டமும் பரிசுகளும் பதக்கங்களும், தரச் சான்றிதழ்களும் பெறுகின்றனர். எனவே பட்டம் பெறுபவருடன் அவரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்கப்படுவர்.
எனினும் ஏனைய குடும்ப உறுப்பினர்களூம் பொதுமக்களும் விழா நிகழ்ச்சிகளை ஒளிக்காட்சி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பட்டமளிப்பு நிகழ்ச்சியைக் காண வரவேற்கப் படுகின்றனர்.
Friday, 16 August 2013
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்
தமிழகம் முழுவதும் 6.78 லட்சம் பேர் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வை எழுதுவோரில் 73 சதவீதம் பேர் (4 லட்சத்து 94 ஆயிரத்து 651) பெண்கள். 27 சதவீதம் பேர் மட்டுமே (ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 941) ஆண்கள்.
இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணியில் அதிகாரிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என மொத்தம் 71 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அந்த மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகள் சனி (ஆகஸ்ட் 17), ஞாயிறு (ஆகஸ்ட் 18) ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெறும் முதல் தாள் தேர்வை 677 மையங்களில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 957 பேர் எழுதுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் தாள் தேர்வை 1,060 தேர்வு மையங்களில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் எழுதுகின்றனர்.
காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கான தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்காக தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோரில் 23,471 பேர் மாற்றுத்திறனாளிகள். 2,477 பேர் கண்பார்வைத் திறன் இல்லாதவர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்திலேயே அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான உதவியாளரும், கூடுதலாக 30 நிமிஷங்களும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் தேர்வுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான பறக்கும் படைகளை அமைத்தல், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை ஆட்சியர்கள் செய்துள்ளனர். தேர்வுப் பணிகளுக்காக 32 மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
14 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு: இந்தத் தேர்வுக்குப் பிறகு சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தனியே அறிவிப்பு வெளியிடப்படும். இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 0.34 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதன்பிறகு, நடைபெற்ற மறுதேர்வில் 3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
முக்கிய அம்சங்கள்
முதல் தாள் தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கை ---2,67,957
இரண்டாம் தாள் தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கை --4,11,635
மொத்த தேர்வு மையங்கள் ----- 1,737
பெண்களின் எண்ணிக்கை ---- 73%
ஆண்களின் எண்ணிக்கை ---- 27%
தேர்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் - 14,000
Thursday, 15 August 2013
DPI வளாக 67 வது சுதந்திர தின விழா காட்சிகள்
பள்ளி கல்வி இயக்குனர் திரு.முனைவர்.V.C.இராமேஸ்வரமுருகன்அவர்கள் தேசியக்கொடி ஏற்றுகிறார்.
SCERT இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றுகிறார் .
SCERT இயக்குனர் மற்றும் SCERT பேராசிரியர்கள் ,DEEO சென்னை , AEEO எழும்பூர், SCERT பணியாளர்கள் கொடிக்கு வணக்கம் செலுத்துக்கிறார்கள்.
பள்ளிகல்வி இயக்குனர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார் .
தொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 20.08.13 அன்று சென்னையில் நடைபெறுகிறது
இனிய நண்பர்களே வணக்கம் ,
AEEO காலி பணி இடங்கள் 20/8/2013 அன்று காலை 10 மணிக்கு இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது புதிய உதவி தொடக்க கல்வி அலுவலராக சுமார் 50 கும் மேற்பட்டோர் பதவி மாறுதலில் வரவுள்ளனர் இவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
MIDDLE HM TO AEEO மாறுதல் பெற வருபவர்கள் DON BOSCO பள்ளிக்கு எதிரில் உள்ள உலக பல்கலைகழக (WUC-உர்ஸ்) வளாகத்தில் குறைந்த வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சென்னை எழும்பூர் AEEO திரு.இரா.கணேசன் (தலைமை நிலையச் செயலாளர் AEEO ASSOCIATION ) தொடர்பு கொள்ளவும்
தொலைபேசி எண் : 9750982287
9789422608
மின்அஞ்சல் : aeeoganesan@gmail.com
இவண்,
தலைவர் திரு.அய்யாச்சாமி : 9750982851
செயலாளர் திரு .சௌந்தராஜன் : 9750983032
பொருளாளர் திரு .ஆரோக்கியம் : 9750982761
AEEO சங்கம் .
67 வது சுதந்திர தின விழா!
நாம் தாய்த் திரு நாட்டின் 67 வது சுதந்திர தினவிழா தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் திரு ஆர். இளங்கோவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பேண்ட் வாத்திய முழக்கங்களுடன் இயக்குனர் அவர்கள் நமது தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இணை இயக்குனர் திருமதி லதா அவர்களும் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தார். பின்னர் பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இயக்குனர் அவர்கள் சுருக்கமாகவும் சிறப்பாகவும் சுதந்திர தின உரை ஆற்றினார்.
சீனர்கள் தேயிலை விலையேற்றத்தை குறைக்க மருத்ததாதால் கிழக்கிந்திய கம்பெனி உருவாகியது என்றும் ,அது பல நாடுகளில் வியாபாரம் செய்து வந்தது என்றும், வியாபாரம் செய்ய வந்தவர்கள் மெல்ல மெல்ல நாட்டையும் கைப்பற்றியதையும், பின்னர் பல்வேறு தியாகங்களுக்குப் பின் சுதந்திரம் பெற்றதையும் சுவைபட தெரிவித்தார்.
கல்வித் துறையில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளதையும் குறிப்பிட்டார்.
பின்னர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
சென்னை எழும்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஆர். கணேசன் விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . எழும்பூர் சரகத்தை சார்ந்த அசம்ஷன் , புனித அந்தோணியார்,தனகோட்டி பள்ளியிகளை சேர்ந்த மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கினர்.
விழாவில் தொடக்கக் கல்வி நேர்முக உதவியாளர்,சென்னை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,சென்னை மாவட்ட அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், இயக்குனகரகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் இனிப்பும் வழங்கப் பட்டது.
விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு
பேராசிரியர் கே.ராஜி எழுதிய "விஞ்ஞானிகள் வரிசை தேலீஸ் முதல் ராமகிருஷ்ணன் வரை " என்ற புத்தகத்தையம் ராமகிருஷ்ணா மடம் வெளியிட்ட "மாணவர்களுக்கு " என்ற புத்தகத்தையும் விழா மேடையிலேயே கையெழுத்திட்டு இயக்குனர் அவர்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவயுற்றது.
Tuesday, 13 August 2013
மொழி வல்லுநர்களுக்கான உலகம் பெரியது!ஆகஸ்ட் 13,2013,18:03 IST
பல வெளிநாட்டு மொழிகளைக் கற்றவர் பலவிதமான வேலை வாய்ப்புகளைப் பெற்று, அதிகமான அளவில் சம்பாதிக்கிறார்கள். எழுத்துவழி மற்றும் வாய்வழி மொழிபெயர்ப்பு, கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிவாய்ப்புகளில், வெளிநாட்டு மொழி நிபுணர்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)





