Saturday, 17 August 2013

சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழா

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆக.17 மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆளுநரும், பல்கலை வேந்தருமான கே.ரோசய்யா தலைமை வகிக்கிறார். முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொள்கிறார்.
1160 மாணவர்கள் பட்டமும் பரிசுகளும் பதக்கங்களும், தரச் சான்றிதழ்களும் பெறுகின்றனர். எனவே பட்டம் பெறுபவருடன் அவரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்கப்படுவர்.
எனினும் ஏனைய குடும்ப உறுப்பினர்களூம் பொதுமக்களும் விழா நிகழ்ச்சிகளை ஒளிக்காட்சி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பட்டமளிப்பு நிகழ்ச்சியைக் காண வரவேற்கப் படுகின்றனர்.

No comments:

Post a Comment