பள்ளிக் கல்வித் துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையில் 7 இயக்குநர்கள் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இணை இயக்குநர்கள் 2 பேருக்கு இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இணை இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட இணை இயக்குநர்கள் விவரம் (அடைப்புக் குறிக்குள் பழைய பதவி):
1. அ.கருப்பசாமி - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் -பணியாளர் தொகுதி (தொடக்கக் கல்வி இணை இயக்குநர் - பணியாளர் தொகுதி)
2. வி.பாலமுருகன் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் - மேல்நிலைக் கல்வி (மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் - பாடத்திட்டம்)
3. எம்.பழனிச்சாமி - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் - இடைநிலைக் கல்வி (பள்ளிக் கல்வி இணை இயக்குநர் - தொழிற்கல்வி)
4. தர்ம.இராஜேந்திரன் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் - தொழிற்கல்வி (மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் - நிர்வாகம்)
5. என்.லதா - தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குநர் - பணியாளர் தொகுதி (தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குநர் - உதவி பெறும் பள்ளிகள்)
6. சி.செல்வராஜ் - தொடக்கக் கல்வி இணை இயக்குநர் - உதவி பெறும் பள்ளிகள் (மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் - பயிற்சிகள்)
7. எஸ்.சேதுராமவர்மா - மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர் (ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் -1)
8. வீ.ராஜராஜேஸ்வரி - அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் -மேல்நிலைக் கல்வி (பள்ளிக் கல்வி இணை இயக்குநர் - இடைநிலைக் கல்வி)
9. டி.உமா - அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் - இடைநிலைக் கல்வி (ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் -2)
10. எஸ். உமா - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் - பயிற்சிகள் (பள்ளிக் கல்வி இணை இயக்குநர் - மேல்நிலைக் கல்வி).
11. எஸ்.கார்மேகம் - ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் -1 (மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர்)
12. பி.ராமராஜ் - ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் - 2 (பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குநர்)
ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இணை இயக்குநர் நிலையில் பணியாற்றும் டி.உமா, எஸ்.சேதுராமவர்மா ஆகியோரின் மாறுதலை மேற்கண்ட தேர்வு முடிந்த பிறகு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இணை இயக்குநர்களாகப் பதவி உயர்வு பெறும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்:
1. ஜா.சுதர்சன் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் - நிர்வாகம் (துணை இயக்குநர் - மின் ஆளுகை)
2. எஸ்.சுகன்யா - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குநர் (கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், திருவள்ளூர்)
3. எஸ்.நாகராஜமுருகன் - அனைவருக்கும் கல்வி இயக்கக இணை இயக்குநர் ( முதன்மைக் கல்வி அலுவலர், திருவள்ளூர்)
4. கே.ஸ்ரீதேவி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் - பாடத்திட்டம் (ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்)
No comments:
Post a Comment