Friday, 9 August 2013

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை: முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் முதலமைச்சரின் தகுதி பரிசுத் திட்டம் நடப்பாண்டிலும் செயல்படுத்தப்படுகிறது.
பிளஸ் 2 அரசு பொது தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவியர் மற்றும் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் பட்டய மற்றும் பட்டப் படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆயிரத்து 167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகள் மற்றும் ஆயிரத்து 170 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்று, ஜாதிச் சான்று மற்றும் இப்போது பயிலும் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட படிப்புச் சான்றுகளின் நகல்களுடன் அவர்கள் பிளஸ் 2 பயின்ற மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment