பெரம்பலூர்: அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 203 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது தலைமை வகித்து பேசியதாவது:
மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கு தேவையான பாடப்புத்தகம், நோட்டு, கணித உபகரணம், காலனி, சீருடை, புத்தக பை, விலையில்லா சைக்கிள், லேப்டாப், கல்வி உதவி தொகை என பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
எதிர்காலத்தில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். சமுதாயத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வரால் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கல்வியில் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையை சரியாக செய்ய வேண்டும்.
இங்கு இருக்கும் ஆசிரியர்கள் உங்களுக்கு முறையாக பாடங்களை நடத்தி உங்களை முன்னேற்ற பாடுபடுகிறார்கள். எவ்வளவு சிரமான பொருளாதார சூழ்நிலைக்கு நடுவில் உங்கள் பெற்றோர்கள் உங்களை படிக்க வைக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டு கல்வியில் நீங்கள் சாதிக்க வேண்டும்.
தேர்வு நேரத்தில் மட்டும் படிப்பது என்பது சரியான முறையில்லை. எல்லா நேரங்களிலும் உங்களுக்கு நடத்தப்படும் பாடங்களில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். உங்கள் கல்விக்கு தேவையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகமும் உங்கள் கல்விக்கு அனைத்து வகையிலும் உதவ தயாராக இருக்கிறது.
படிக்க வேண்டியது மட்டுமே உங்கள் கடமை உங்களுக்கு கல்வி கற்பதிலோ, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதிலோ ஏதேனும் குறைபாடு இருந்தால் என்னுடைய மொபைல் நம்பரில் தொடர்பு கொண்டு நேரடியாக என்னிடம் பேசி உங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
அதற்கு ஏதுவாக உங்கள் பள்ளியின் தகவல் பலகையில் என்னுடைய மொபைல் நம்பர் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்று உங்கள் தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்திவுள்ளேன். அனைத்து வகையிலும் உங்கள் கல்வியின் மேம்பாட்டிற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கின்றோம். நீங்கள் நன்று படித்து தேர்ச்சி விகிதத்தை உயர்த்தி காட்டி பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்."இவ்வாறு அவர் பேசினார்.
I think you have a long story to share and i am glad after long time finally you cam and shared your experience.
ReplyDeleteDevops Online Training