Friday, 9 August 2013

மாணவர்களால் சாதித்து காட்ட முடியும் கலெக்டர் பேச்சு

வேலூர்
மாணவர்களால் சாதித்து காட்ட முடியும் என்று கலெக்டர் சங்கர் பேசினார்.
ஓவியப்போட்டி
வேலூரில் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் சார்பில் தேசிய ஓவியப்போட்டி நடந்தது. ஓவியப்போட்டியை கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 400 பள்ளிகளில் இருந்து 450 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கர் பேசியதாவது:–
மாணவர்களால் எதையும் சாதித்து காட்ட முடியும். அதற்காக நீங்கள் சபதம் ஏற்கவேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் நீங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரியாகவோ, டாக்டராகவோ வர முடியும். இதனை நீங்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
பல நிறங்களில் பிரிவுகள்
இங்கு நடைபெற உள்ள ஓவியப்போட்டியில் 5 முதல் 8 வயது வரை உள்ளவர்களுக்கு பச்சை நிற பிரிவாகவும், 9 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு வெள்ளை நிற பிரிவாகவும், 13 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கு நீல நிற பிரிவாகவும், மாற்று திறனாளியாக உள்ளவர்கள் சிறப்பு பிரிவினராக கருதப்பட்டு 5 முதல் 10 வயது வரை உள்ளவர்களுக்கு மஞ்சள் நிற பிரிவாகவும் 11 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு சிகப்பு நிற பிரிவாகவும் கலந்து கொண்டு உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு கலெக்டர் சங்கர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய குழந்தைகள் நல சங்க செயலாளர் திலகவதி ராமய்யா, முதன்மை கல்வி அலுவலர் வெ.செங்குட்டுவன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் எஸ்.அருண்மொழி, வி.ஐ.டி. பல்கலைக்கழக இயக்குனர் பேராசிரியை ஏ.எம்.விஜயலட்சுமி, மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் கே.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவில் இந்திய குழந்தைகள் நலச்சங்க இணை செயலாளர் சாரதா ராமநாதன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment