Sunday 27 October 2013

கம்ப்யூட்டர், டிவியில் மூழ்கலாமா?

கம்ப்யூட்டர், டிவியில் மூழ்கலாமா?
இன்றைக்கு இண்டர்நெட், இமெயில், செல்போன், பேஸ்புக், சார்டிங் என்று பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. மாணவ, மாணவிகளில் பலர் கம்ப்யூட்டரில் மூழ்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. சிலர் டிவியில் மூழ்கி கிடக்கும் நிலை உருவாகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
சமூகத்தின் பங்கு
சமூகம் என்றால் என்ன, அதில் நம் பங்கு என்ன என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். பொதுவான விபரங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு தெரியும் வகையில் அதனை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆபத்து... ஆபத்து...
ஆம்புலன்ஸ் சேவை, 108 போன்றவற்றை தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். சில சேனல்களில் வரக் கூடிய ஆபத்தான விளையாட்டு போன்றவற்றை பார்த்து அதனை செய்து பார்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். அதுபோன்ற சேனலை பார்க்க கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.
பேஸ்புக்
தங்களது போட்டோக்களை இனம் தெரியாத நபர்களுக்கு பேஸ்புக் மூலம் அனுப்ப கூடாது. எஸ்.எம்.ஏ.ஆர்.டி என்கிற சேப்டி, மீட், அஸ்பெட்டிங், ரிலையபிள், டெல் ஆகியவற்றை தெளிவாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சேப்டி என்கிற போது கம்ப்யூட்டரில் பல்லூடக தொடர்பில் (சேட்டிங்)
சொந்த தகவல்களை பிறரிடம் பரிமாறிக் கொள்ளாமல் (சேப்) பாதுகாப்பாக இருக்க வேண்டும். இமெயில் முகவரி, போட்டோ, செல்போன் எண், பள்ளியின் பெயர் போன்ற தகவல்களை தெரிவிக்க கூடாது.
மீட் என்கிற போது பல்லூடகத்தின் வழியே அறிமுகமில்லாத ஒருவரை சந்திக்க நேரிடுவது மிகவும் ஆபத்தானது. பெற்றோர், பாதுகாவலரின் துணையுடன் தான் செய்தல் வேண்டும்.
இ-மெயில் இன்னல்கள்
அக்ஸ்செப்ட்டிங் என்கிற போது அறிமுகம் இல்லாதவர்களின் இமெயில் தகவல்கள், போட்டோக்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது பிரச்னைகளை உண்டாக்கிவிடும். இந்த தகவல்களை வைரசாக தேவையில்லாத தகவல்களாக இருக்கலாம்.
ரிலையபிள் என்கிற போது தகவல்களை பல்லூடகத்தில் பார்க்க நேரிடும் போதும், உண்மை தகவல்களா, நம்பகத்தன்மையான நபர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
டெல் என்கிற போது அசவுகரியமான, துன்பப்படும் படியான செயல்களை பல்லூடகம் வாயிலாக உங்களுக்கு ஒருவர் கொடுக்கும் போது உடனடியாக பெற்றோர், பாதுகாவலர், நம்பகத்தன்மையான, உண்மையான நபர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற தகவல்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment