Sunday, 27 October 2013

அரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த புது திட்டம்

அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் துவங்கும் முன்மாதிரி திட்டத்திற்கென ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்தனர்.


அரசு பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் 10ம் வகுப்பு வரை முன்னேறிய பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழை கூட சரியாக வாசிக்க தடுமாறும் நிலையில் இருப்பதால் வாசிப்புத்திறனை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

முதல் கட்டமாக 3 முதல் 10ம் வகுப்பு வரை இந்த முன் மாதிரி வாசிப்பு திறனை அமல்படுத்துவது குறித்து, தேவகோட்டையில் கல்வி அதிகாரிகள் மற்றும் நூலக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப் பட்டது. ஒவ்வொரு வகுப்பறையிலும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி புதிய உக்திகளில் வாசிப்பு, தமிழ் எழுத்துக்களை கற்றுத்தருவது என, முடிவெடுக்கப்பட்டது. இதற்காக அரசு உயர், மேல்நிலை பள்ளிகளிலும் இருந்து தலா ஒரு ஆசிரியருக்கு சிவகங்கையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

சி.இ.ஓ.,கணேசமூர்த்தி கூறுகையில், "மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிப்பு குறித்து ஏற்கனவே ஆசிரியர்கள் படித்த ஒன்று தான். புதிய உத்திகள் மூலம் மேலும் வாசிப்பு திறனை மேம்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் ஒன்றிய, வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கு வாசிப்பு திறன் குறித்த பயிற்சி தரப்படும். தமிழை தொடர்ந்து படிப்படியாக அடுத்த பாடம், வகுப்பினருக்கும் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

No comments:

Post a Comment