நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான, இலினார் கேத்த னுக்கு, இந்த ஆண்டுக்கான, புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புக்கர் விருதுக்கான போட்டியில், அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான, ஜூம்பா லாகிரியின், தி லோலேண்ட் என்னும் நாவலும் இடம்பெற்றிருந்தது.
புக்கர் விருதுக்கான போட்டியில் கலந்து கொண்ட நாவல்களில் இருந்து, இறுதிச் சுற்றுக்கு, ஆறு நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில், கேத்தன்,28, எழுதிய, தி லுமினரிஜ் என்னும் ஆங்கில நாவல், விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில், கில்டுஹாலில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில், பிரிட்டன் இளவரசர் சார்லசின் மனைவி கமீலா பார்க்கர், இந்த விருதினை வழங்குகிறார். இந்த விருது, 49 லட்சம் ரூபாய் ரொக்கபரிசு கொண்டது.
புக்கர் விருதை பெற்றவர்களில், மிக இளையவரான கேத்தன் எழுதிய புத்தகம், 832 பக்கங்களைக் கொண்டது. இப்புத்தகத்தை, தனது 25ஆவது வயதில், எழுதத் துவங்கியதாக, கேத்தன் கூறியுள்ளார்.
பெண்களே! தோல்வியை கண்டு துவளாதீர்....
வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வருவது இயல்பு. வாழ்வில் எல்லோரும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உயர்வு வரும் இடத்தில் தோல்விகளும் கூடவே வரும்.
உயர்வும், தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்களாக கருத வேண்டும். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில் ஒரு முறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவர் வெற்றி யடைந்தால் அவருக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பல முறை தோல்வி கண்டு, வெற்றி யைத் தழுவும் ஒருவரால் தான் அதை உண்மையில் உணர முடியும். அவன் சந்தோஷத் திற்கு அளவே இருக்காது; வெற்றியைக் கொண்டாடுவான்.
நமக்கு ஏற்பட்ட நிறைய தோல்விகளும் நம் வெற்றிக்கு காரணமாக அமையும். ஒருவர் பெற்ற வெற்றியை தாங்க முடியாதவர்கள், அவரை ஏதேனும் வகையில் தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
நாம் வெற்றி பெற்றுக் கொண்டே போகும் போது மற்றவர்களைப் பற்றி அறிய முடியாது. ஆனால், தோல்வி ஏற்படும் போது தான், யார் நல்லவர் கெட்டவர் என்ற சுயரூபம் நமக்குத் தெரியும். பொதுவாக வெற்றி பெறும் போது நமது நண்பர்கள் கூட எதிரிகளாக மாறுவார்கள். ஆனால், தோல்வி அடையும் போது சில நண்பர்களும் நமக்குக் கிடைப் பார்கள்.
இதெல்லாம் வாழ்க்கையில் இயல்பாக எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் நட்புடன் பழக வேண்டும். சில தோல்விகள் தான் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தோல்வி வரும் போது அதற்காக துவண்டு போய் சாப்பிடாமல், இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து யோசிப்பதை விட்டுவிட்டு, இதுவும் வெற்றிக்கான பாடமாக எடுத்துக் கொண்டு நேர்மறையாக நமது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தோல்வியின் முடிவே உயர்வின் ஆரம்பமாக இருக்கும்.
No comments:
Post a Comment