விருதுநகர்:உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, பள்ளிக்கல்வித்துறையால், மொழி ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட 181 வது விதியை தளர்த்த கோரிய மனுவில், பதவி உயர்வுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 181 விதியின் படி கட்டுப்பாடு விதித்தது. இதில் 2001 ஜன.,31 க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட முதல் நிலை தமிழாசிரியர்கள், பி.எட்., பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே, 2012 டிச.,31வரை உள்ளவர்கள், தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மையான பி.லிட். பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பி.எட்., பட்டம் பெறாமல், மொழியாசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். அதன் பின்னர், பி.எட்., பட்டம் பெற்றுள்ளனர். இருந்தும் பதவி உயர்வில் இவர்கள் பாதிக்கப்பட்டனர். இந் நிலையில், தமிழக தமிழாசிரியர்கள் கழகம் சார்பில், மாநில துணை செயலாளர் இளங்கோவன், 181 விதியை தளர்த்தில அனைத்து மொழி ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு,இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

No comments:
Post a Comment