சென்னை மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சாரா பட்ட படிப்பிற்கு 2013-14ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பப்படிவங்கள் இன்று காலை 10 மணி முதல் விநியோகிக்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை ஜூலை 05 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் Secretary. Selection Committee, Kilpauk, Chennai -10 என்னும் பெயரில் பெறப்பட்ட ரூ.350க்கான காசோலையை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் அரசு அலுவலர்களால் சான்றொப்பமிடப்பட்ட தங்களது ஜாதி சான்றிதழ்களின் இரு நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்,
+2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், அல்லது கணிதம் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பி.எஸ்சி.,(நர்சிங்), பி.பார்ம். பிபிடி, பி.ஏ.எஸ்.எல்.பி, பி.எஸ்சி(ரேடியாலஜி அன்ட் இமேஜிங் டெக்னாலஜி), பி.எஸ்சி., (ரேடியேஷன் டெக்னாலஜி), பிஒடி(ஆகுபேஷனல் தெரபி) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment