Sunday, 27 October 2013

கடனாளி ஆக்காதீர்கள்!

தவறான கொள்கைகளாலும், முறையான கண்காணிப்பு இல்லாததாலும், கட்டுப்பாடுகளைச் சரிவர, சரியான நேரத்தில் மேற்கொள்ளாமல் போனதாலும் பொருளாதாரத்தை மிகப்பெரிய நெருக்கடியில் தள்ளி இருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். குறிப்பாக, நிதியமைச்சகத்தின் பல தவறான முடிவுகள்தான் இன்று ரூபாயின் மதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பதற்கும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கும் காரணம். இப்போது மீண்டும் ஒரு தவறான முடிவை நிதியமைச்சகம் எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.
ப்ரிட்ஜ், ஏர்கண்டிஷனர், டெலிவிஷன், மோட்டார் சைக்கிள் போன்ற மத்திய தர வகுப்பினர் பரவலாக வாங்க ஆசைப்படும் பொருள்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் முன்வர வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். இதன் மூலம் அதுபோன்ற நுகர்வோர் பொருள்களின் விற்பனையை அதிகரிப்பதும், உற்பத்தியைப் பெருக்குவதும்தான் நிதியமைச்சகத்தின் நோக்கம். அதனால், பொருளாதாரம் சுறுசுறுப்படைந்து புதிய வேகத்துடன் இயங்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
இது ஏதோ கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பதுபோல இருக்கிறது. இதனால் ஏற்றுமதி அதிகரிக்கப் போவதும் இல்லை. இறக்குமதி குறையப் போவதும் இல்லை.
சற்று யோசித்துப் பார்த்தால், இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கக் கூடும் என்பதும் அதனால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரே மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன.
நமது இன்றைய உடனடித் தேவை நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பது. அதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை, இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் அத்தியாவசியப் பொருள்கள் அல்லாதவை எவை என்பதைப் பட்டியலிட்டு அவற்றிற்கான சுங்க வரியை அதிகப்படுத்துவது. இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது. அடுத்தாற்போல, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் அதே வேளையில் அன்றாட வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்கவும் வழிகோலுவது.
இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கு அதிகக் கடனுதவி வழங்குவதன் மூலம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. குறைந்த வட்டியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் கடனுதவி வழங்குவதன் மூலம், அந்த வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்குமே தவிர குறையாது. அது மட்டுமா? ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி நிற்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களை மேலும் கடனாளிகளாக்குவதன் மூலம், அவர்களது அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சியாகவும் இது முடியும்.
குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்று பொருள்களை வாங்குவோரும் நாளையே வட்டி விகிதம் உயர்த்தப்படுமானால் கடனைத் திரும்பி அடைக்க மாட்டார்கள். முறையான கட்டுப்பாடுகளோ, தேவையை உத்தேசித்த கடன் விநியோகமோ இல்லாமல் போனால் 2008 இல் அமெரிக்காவில் நடந்தேறிய வங்கி திவால் நிலைக்கு நமது அரசுடமை வங்கிகளும் தள்ளப்படும்.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரவர்த்தி கூறியிருப்பதுபோல, இப்போதே அரசு வங்கிகளிடம் இருக்கும் வைப்பு நிதியின் 78 விழுக்காடு கடனாக வழங்கப்பட்டுவிட்ட நிலைமை. இதற்கு மேலும் கடன் வழங்கி அவை வாராக் கடனாகப் போனால், வங்கிகள் தடுமாறத் தொடங்கிவிடும். அரசு நிதியுதவி அளிக்கும் என்றாலும் எந்த அளவுக்கு உதவி செய்துவிட முடியும் அல்லது பங்களிப்பு நல்க முடியும்? அந்த அளவுக்கு அரசிடம் அதிகப்படியான நிதியாதாரம் இருந்தால் பொருளாதாரம் இப்படி தள்ளாட வேண்டிய அவசியமே இல்லையே.
இங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. எல்லாவற்றிலும் தனியார்மயம், தனியார் பங்களிப்பு என்று பேசும் அரசு, இதுபோன்ற சிறுகடன்களையும், நுகர்வோர் கடன்களையும் குறைந்த வட்டியில் வழங்கும்படி தனியார் பன்னாட்டு வங்கிகளுக்கு அறிவுரை வழங்குவதுதானே? வாராக்கடனாகும் வாய்ப்புள்ள கடன் விநியோகம் என்றால் அது அரசு வங்கிகளுக்கு என்று ஒதுக்கீடு செய்வது என்ன நியாயம்?
நிதியமைச்சகத்தின் இந்தத் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதுதான் அரசுடமையாக்கப்பட்ட வங்கித் தலைவர்களின் கடமை. ரிசர்வ் வங்கியும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளை பலவீனப்படுத்தும் அரசின் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
நிதியமைச்சருக்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவின் பலமே நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு மனப்பான்மைதான். தயவுசெய்து, அதை உருக்குலைத்து, மக்களைக் கடனாளியாக்கி நடுத்தெருவில் நிறுத்தத் திட்டம் தீட்டாதீர்கள்!

P.U.M.S.NALLAMBAKKAM KANCHEEPURAM DIST

ஸ்கூல்ல வெட்டியாக உட்கார்ந்துதானே இருக்கப்போறீங்க?', 'உலகத்துலயே ரொம்ப ஈஸியானது, கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர் வேலைதான்', 'பசங்கள நிக்க வெச்சு வாசிக்க சொல்றது... அவங்களாவே நோட்ஸ் வாங்கிப் படிக்கச் சொல்றது... இதுக்கு மேல என்னத்த பண்ணப்போறீங்க', 'கவர்ன்மென்ட் டீச்சர்ஸ் சரியா பாடம் நடத்தினா, அப்புறம் ஏன் பிரைவேட் ஸ்கூல்ல அட்மிஷன் குவியுது..?'

பேருந்து பயணத்திலும், ஷேர் ஆட்டோ பயணத்திலும் சக பயணிகளிடம் பேச்சுக்கொடுக்கும்போது, உதிர்க்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களால் உண்டான கோபத்துக்கு, தன் பள்ளியின் பெயரில் தொடங்கிய ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் பதில் சொல்லி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி.

சென்னை அருகே வண்டலூருக்குப் பக்கத்தில் உள்ள நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கென தனி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அவ்வப்போது அப்டேட் செய்து வரும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம் பேசினேன்.

"அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே பலரும் மோசமாகவே பார்க்கிறார்கள். எங்களை எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கும் சோம்பேறிகள் என்றே சிலர் நினைக்கிறார்கள். இதை எனக்குத் தெரிந்தவர்களே என்னிடம் கலாய்த்தல் தொனியில் குத்திக்காட்டியிருக்கிறார்கள்.

அத்தகையோர் ஒவ்வொருவரிடமும் என்னால் விளக்கத்தை அளித்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்குப் புரியவைப்பதும் கடினம். அப்போதுதான், ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கி, எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கல்விச் சேவையையும், எங்கள் பள்ளி மாணவர்களின் திறமையையும் வெளிப்படுத்த முடிவு செய்தேன்.

அதன்படி, நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரிலேயே ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கினேன். எனக்கு ஃபேஸ்புக்கில் இருந்த மிகச் சில நண்பர்களிடம் விருப்பம் தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தேன். சென்ற ஆண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்ட இந்தப் பக்கத்துக்கு இப்போது லைக்குகள் 500-ஐ தாண்டியிருக்கிறது. இதற்குக் கிடைக்கும் எதிர்வினைகள் ஊக்கத்தை அளிக்கிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

தமிழகத்தில் முப்பருவ முறை கொண்டுவரப்பட்ட பிறகு, வளரறி மதிப்பீடு பிரிவின் மதிப்பெண்களை அள்ளுவதற்காக மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலைக்கொண்டு விதவிதமான புராஜெக்ட்டுகளை செய்து, தங்கள் ஆசிரியர்களிடம் அசத்தி வருகிறார்கள். இந்த மதிப்பீட்டு முறை, இந்தக் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர்களின் படைப்பாற்றல் வியக்கத்தக்கது. தங்களுக்கு எளிதில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டு அசத்தலான புராஜக்ட்களை செய்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இந்த விவரம் அனைத்தும் இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குவிந்து கிடக்கின்றன. மாணவர்கள் தங்கள் புராஜெக்ட்களுடன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் காட்சிகள்தான் இந்தப் பக்கத்தின் ஹைலைட்.

"எங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை, உலகுக்கு ஆதாரங்களுடன் உரைப்பதற்கு எங்கள் ஃபேஸ்புக் பக்கம் துணைபுரிகிறது. எங்கள் பள்ளியில் கொண்டாடும் 'ஜாய் ஆஃப் கிவிங்', 'ஆசிரியர் தினம்' உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறோம்.

நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே ஏழ்மையின் பின்னணி கொண்டவர்கள். இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கு நேரடியாக உதவி செய்வதற்கு, இளைஞர்கள் பலரும் முன்வந்திருக்கிறார்கள். எங்கள் பள்ளிக்கு கணினி உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருவதற்கும் சிலர் உறுதி அளித்திருக்கிறார்கள். என் கோபத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம், இப்போது என்னையும், சக ஆசிரியர் நண்பர்களையும் ஊக்கப்படுத்தும் தளமாகவே மாறிவிட்டது.

எங்கள் பள்ளிக்குக் கிடைத்த வரவேற்புக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைவருமே காரணமானவர்கள். அனைவரின் ஒத்துழைப்பால்தான் எங்கள் பகுதியில் இப்பள்ளிக்கு நன்மதிப்பு கூடியிருக்கிறது" என்கிறார் ஆசிரியை கிருஷ்ணவேணி.

சமீபத்தில்கூட தன் மாணவர்கள் போட்டி ஒன்றுக்காக செய்த புராஜெக்டை, யூடியூபில் பதிவேற்றி, அதற்கு இணையவாசிகளின் ஆதரவையும் நாடினார். அந்தப் புராஜெக்ட்டைப் பார்க்க http://youtu.be/HioD6RKgPe4

ஃபேஸ்புக் என்பது பொழுதுபோக்கு அல்ல... அது ஓர் அற்புதப் பொழுதாக்கம் என்பதை உணர்த்தும் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம், இப்போதெல்லாம் யாராவது அவரது பணி மற்றும் பள்ளியைப் பற்றி கிண்டல்செய்தால் ஒரு துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுக்கும் ஃபேஸ்புக் பக்க முகவரிhttps://www.facebook.com/nallambakkampums

GOOD DAY


Girija Balu AEEO TIRUVALLUR

Saturday, 26 October 2013

Passport பெறுதல் மற்றும் NOC பெறுவது சார்ந்த அரசாணை (G.O.No.259. Dt.17.12.2007).

ஐ.நா.சபையில் தமிழக மாற்றுத் திறனாளி மாணவி பேச்சு.

7வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு (NTSC)-2013:

அறிவியல் கற்பிக்கும் பணியில் இருப்போர்க்கு அறிவியல் கல்வி மற்றும் கற்பித்தல் குறித்த அவர்களின் அறிவை, திறமையை புதுப்பித்துக்கொள்ளும் பொருட்டும் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டும் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் அறிவியல் & தொழில்நுட்பத்துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புகளால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

வாராது வரும் வால்நட்சத்திரம்சூரியனையே மேய வரும் ஐசான் வால் நட்சத்திரம்


வாராது வரும் வால்நட்சத்திரம்

சூரியனையே மேய வரும் ஐசான் வால் நட்சத்திரம்

மனிதகுல வரலாற்றில் இதுவரை வராத வால்நட்சத்திரம். இனிமேலும் வராமல் போகும் எனக் கருதப்படும் வால்நட்சத்திரம். அது தான் தற்போது நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐசான் வால் நட்சதிரம். எனவே தான் அதை வாராது வரும் வால் நட்சத்திரம் என்கிறோம்.

பழுதான கட்டடத்தில் வகுப்பு வேண்டாம் - பள்ளி கல்வி துறை உத்தரவு

10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் இன்று முதல் விற்பனை.

          இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் வழி புத்தகங்கள் ரூ.185-க்கும், ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

          இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
அதன் விவரம்:
1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, ஈஎல்எம் பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு.
2. காஞ்சிபுரம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை.
3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
4. கடலூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம், கடலூர்.
5. விழுப்புரம் - ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்டம், விழுப்புரம்.
6. தஞ்சாவூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம் அருகில், தஞ்சாவூர்.
7. நாகப்பட்டினம் - சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி, பழைய பஸ் நிலையம் அருகில், நாகப்பட்டினம்.
8. திருவாரூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.
9. மதுரை - சேதுபதி மேல்நிலைப் பள்ளி, வடக்குவெளி வீதி, மதுரை.
10. தேனி - என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.
11. திண்டுக்கல் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனி சாலை, திண்டுக்கல்.
12. ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.
13. விருதுநகர் - டி.டி.என்.எம். நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
14. சிவகங்கை - புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, மதுரை சாலை, சிவகங்கை.
15. திருநெல்வேலி - அரசு மேல்நிலைப் பள்ளி, ரத்னா திரையரங்கம் எதிரில், திருநெல்வேலி.
16. தூத்துக்குடி - லசால் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
17. கன்னியாகுமரி - அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோயில்.
18. வேலூர் - வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.
19. திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.
20. சேலம் - பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மறவனேரி, சேலம்.
21. நாமக்கல் - அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணாசாலை, ராசிபுரம்.
22. தருமபுரி - அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
23. திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
24. கரூர் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கரூர்.
25. பெரம்பலூர் - தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேசபுரம், பெரம்பலூர்.
26. புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.
27. கோவை - நல்லாயன் உயர்நிலைப் பள்ளி, பெரிய கடை வீதி, கோவை.
28. ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பூங்கா அருகில், ஈரோடு.
29. உதகமண்டலம் - அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னூர்.
30. கிருஷ்ணகிரி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி.
31. அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
32. திருப்பூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம், திருப்பூர்.

Friday, 25 October 2013

ஒளவையாரின் ஆத்திச்சூடி

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு

எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது.

இணையதளம் வழியாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய இணையதளப் பக்கத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான பயிற்சி மையம் (எம்.எஸ்.எம்.இ.) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இணையதளப் பக்கத்தின் வழியாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களிடம் இருந்து மாணவர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இது குறித்து எம்.எஸ்.எம்.இ. கூடுதல் தொழில் ஆலோசகர் சிவஞானம் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: இன்றைய சூழலில் பணி புரிவதற்குத் தேவையான திறன் மாணவர்களிடம் போதிய அளவு இல்லை என ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆன்-லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
"ப்ரோகடமியா' என அழைக்கப்படும் இந்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் வலைப் பக்கத்தின் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்தி, தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.procademia.com என்ற வலைதளப் பக்கத்தினை தொடர்பு கொள்ளலாம். க்வாட்ரபிள் என்ற மென்பொருள் நிறுவனம் இந்த வலைதளப் பக்கத்தை மேம்படுத்தியுள்ளது. தற்போது பல்வேறு துறைகளைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள், மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க தங்கள் பெயர்களை வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார் அவர்.
இந்தச் சந்திப்பின்போது க்வாட்ரபிள் மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன்திலக் மற்றும் அமல்ராஜ் அகஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

புத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்

புத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா தெரிவித்தார்.
   திண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் 2 ஆவது புத்தகத் திருவிழா, திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார், புத்தக விற்பனையை துவக்கி வைத்தார். அதனை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி பெற்றுக்கொண்டார்.
   விழாவில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா பேசியது: மனிதனின் மிகப்பெரிய சொத்தாக புத்தகம் உள்ளது. அந்தப் புத்தகத்தினை வாசிக்கும் பழக்கம் குழந்தைகள் முதல் தொடங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை வீடுகளிலில் ஆரம்பிக்க வேண்டும்.
   நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கணினியில் வாசிக்கும் பழக்கம் வந்துவிட்டபோதிலும், அச்சு வடிவிலான புத்தகங்களே மனதில் நிலைத்து நிற்கின்றன.
  மனித மேம்பாட்டுக்கு திருக்குறளை விட ஒரு சிறந்த புத்தகம் உலகில் இல்லை.   தன்னம்பிக்கை இழந்து தவறான வழிகளில் செல்லும் இளைய சமுதாயம், உலகுக்கே வழிகாட்டியாக விளங்கும் திருக்குறளையும், பாரதியின் கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
  தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார்: சினிமா தவிர, பொழுதுபோக்கு இல்லாத திண்டுக்கல் நகர மக்களின் அறிவுப் பசிக்காக, புத்தகத் திருவிழா முதன்முதலில் தொடங்கப்பட்டது.
 பெற்றோர்கள் புத்தகத்தின் பெருமைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மனனம் செய்யும் குழந்தைகள், சினிமா, தொலைக்காட்சி பெட்டிகளோடு நின்றுவிடுகின்றனர்.
  உலக அறிஞர்களின் ஞானம், அனுபவம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமெனில், சிறு வயது முதல் புத்தகம் வாசிப்பில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். நாம் வாழும் வாழ்வு செம்மை பெற, சிறந்த புத்தகங்களை வழிகாட்டியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்தி தேவி: பள்ளிகளில் நூலகம் அமைக்கப்பட்டிருந்தாலும், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாசிக்க மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கல்வியின் குறிக்கோள் வேலைவாய்ப்பினை பெறுவதாக மட்டுமே உள்ளது.
அதன்மூலம், மாணவர்களின் எதிர்காலத்தை சிறிய வட்டத்தில் குறுக்கி விடுகிறோம்.   மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஆசிரியர்களின் வீடுகளில் அனைத்து நவீன பொருள்களும் இருக்கும். ஆனால், புத்தகங்களை பார்ப்பது அரிது. கேள்வி கேட்காத குழந்தைகள் அறிவில் சிறந்தவர்களாக முடியாது என்றார் அவர்.
  விழாவில், திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.ரா. லிங்கம், திண்டுக்கல் இலக்கியக் கள அமைப்பின் தலைவர் மு. குருவம்மாள், செயலர் எஸ். ராமமூர்த்தி, பொருளாளர் கே. மணிவண்ணன் உள்ளிட்டோரும் பேசினர்.

10, +2 தனித்தேர்வு; இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அக்.25 (இன்று) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வு செப்., 23 முதல் அக்., 1 வரையிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கான தனித்தேர்வு செப்.,23 முதல் அக்.,5 வரையிலும் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் தயாராக உள்ளன.
இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே. தேவராஜன் கூறியது: 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் தயாராக உள்ளன. தாங்கள் எழுதிய தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் நேரில் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வுகளின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படாது. மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். அக்டோபர் 25 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும்.
தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களது வீட்டு முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்
தனித்தேர்வுகள் முடிவடைந்த மூன்றே வாரங்களில் மாணவர்களுக்கு இந்தாண்டு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தேர்வுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறைகள் மற்றும் தேர்வுத்துறை பணியாளர்களின் சிறப்பான பணியே இதற்குக் காரணம் என்றார் தேவராஜன்.
ஆன்-லைன் முறை மூலம் விண்ணப்பித்தல், புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள், டம்மி எண்ணுக்குப் பதிலாக கம்ப்யூட்டர் மூலம் ரகசிய பார் கோடு உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அக்டோபர் மாதத் தேர்வில் அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றங்கள் சிறப்பான பலனை அளித்துள்ளதைத் தொடர்ந்து பொதுத்தேர்வுகளுக்கும் புதிய முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்: ஒரு மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை

தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை ஒரு மாதத்துக்குள் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் 25 சதவீதம் ஏழை மற்றும் சமூகரீதியாக நலிவடைந்த மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.
இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே திருப்பி வழங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான கட்டணம் செப்டம்பர், ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களில் மூன்று தவணைகளாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணம் அல்லது அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆகும் செலவு இவற்றில் எது குறைவோ அந்தக் கட்டணத்தை இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்காக அரசு திருப்பி வழங்கும்.
செப்டம்பர் மாதத்திலேயே முதல் தவணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அக்டோபர் மாதம் முடிவடையும் நிலையில் ஏழை மாணவர்களின் கட்டணத்துக்கான முதல் தவணை இதுவரை வழங்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் புகார் தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக, கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்தச் சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான கட்டணத்தை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். மத்திய அரசிடம் ஒவ்வொரு மாணவருக்கான கட்டண விவரத்தையும் கணக்கிட்டு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்குள் அவர்களுக்கான கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

சோதனை ஓட்ட பாதையில் மெட்ரோ ரயில்




சோதனை ஓட்ட பாதையில் மெட்ரோ ரயில்

கோயம்பேடு, அக். 24 -
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு (2014) ஏப்ரல் மாதம் கோயம் பேட்டில் இருந்து பரங்கிமலை வரை ரயில் போக்குவ ரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக முதல் ரயிலின் 4 பெட்டிகள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு கோயம்பேடு பணிமனையில் நிறுத்தப்பட்டது. 2 மற்றும் 3வது ரயில் விரைவில் பிரேசில் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட உள்ளது.இந்த ரயிலின் சோதனை ஓட்டத்துக்காக 850 மீட்டர் நீள சோதனை ஓட்ட தண்டவாளம் கோயம்பேடு பணி மனையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்காக சோதனை ஓட்ட பாதையில் மெட்ரோ ரயில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.ரயிலின் ஏ.சி., என்ஜின், பிரேக், மின்தொடர்பு சாதனங் கள் அனைத்தும் நேரடி மின்சாரம் மூலம் பரிசோதிக்கப் பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும். அதை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வரும் ஜனவரி மாதத்தில் இருந்து 3 மாதங்கள் வரை கோயம்பேடு, பரங்கிமலை இடையே சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.

கேரள அரசு அதிரடி

பத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு : கேரள அரசு அதிரடி
பாலக்காடு: கேரளாவில், 10க்கும் குறைவான மாணவர்களை உடைய, அரசு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாநிலத்தில் குழந்தைகள் இல்லா பள்ளிகளை மூட, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 12 பள்ளிகள் மூடப்பட்டன.
கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 143 பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே இருப்பது தெரியவந்தது. உடன், இப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொச்சு வேளி ரயில் நிலையம் அருகேயுள்ள, ஜி.எல்.பி., பள்ளி இந்த கல்வியாண்டு முதல் மூடப்பட்டது. இங்கு பயின்ற மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, வேறு சில பள்ளிகளும் மூடப்பட்டன. மீதி பள்ளிகளை மூடுவது தொடர்பாக, வரும், 28ம் தேதி நடைபெறும் , மாநில கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

Wednesday, 23 October 2013

தமிழகத்தில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு

அண்மையில் நடந்து முடிந்த தகுதித் தேர்வு மூலம் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாட வாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
13 ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கடந்த ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தகுதித்தேர்வை ஆறரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. தேர்வு முடிவுகளை ஒரு வாரத் தில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த தகுதித்தேர்வு மூலம் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் மட்டும் 10 ஆயிரம் அடங்கும். மீதமுள்ள 3 ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆகும்.
பாடவாரியாக கணக்கெடுப்பு பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த  பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, நகராட்சி பள்ளிகள், சென்னை மாநகராட்சி, கோவை மாநகராட்சி என பல்வேறு துறைகளில் இருந்து வந்துள்ளன.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாகவும், துறைவாரியாகவும் கணக்கெடுக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்தவுடன் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BLOGGER NEWS




Monday, 21 October 2013

நீலகிரி மாவட்ட பொது குழு 20/10/2013



பயணங்கள் படிப்பினை என எழுத்தாளர் S.இராமகிருஷ்ணன் கூறினார் . நீலகிரி மாவட்ட AEEO சங்க பொதுக்குழு கூட்டம் செல்ல கோவை பேருந்து நிலையம் . மாநிலப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலாளர்  இருவரும் பயணத்துக்கு தயார் நிலையில் 




பேருந்து நிலையம் -- கோவை 20/10/2013


மலைப் பாதையில் நமக்குப் பொருத்தமான வாசகம் 
நாளைய கவலை இன்று வேண்டாம்
இன்றைய கடமை நாளை வேண்டாம்  


குன்னூர் லயன்ஸ் துவக்கப்பள்ளியில் மாநில நிர்வாகிகள் மற்றும் நீலகிரி மாவட்ட உறுப்பினர்கள்  





AEEO சங்க கெளரவத் தலைவர் , பொதுச் செயலாளர் , தலைமை நிலையச் செயலாளர் , மாவட்ட தலைவர் திரு.எம்.ஆர்.தேசிங் , செயலாளர் திரு.ஜெ.பி.கிருஷ்ணமூர்த்தி , பொருளாளர் திருமதி.பி.ஜெயஸ்ரீ மற்றும் திரு.ஆர்.ஹரிகுமார் , திரு.பி.ஆர்.பாலசுப்ரமணியன் , திரு.எச்.பி.ரவி , எஸ்.அந்தோணியம்மாள் , எஸ்.மாதவன்  , திரு.பொன்.தன்ராஜ்











இயக்க வளர்ச்சி நிதி வழங்குகிறார்கள் மாவட்ட பொருளாளர் , மாவட்ட தலைவர் , மாவட்ட செயலாளர்  , மற்றும் ஹரிகுமார் ,   





உதகை பொதுக் குழு சிறப்பாக நடைபெற்றது  கல்வி வளர்ச்சி சார்பாகவும் இயக்க வளர்ச்சி சார்பாகவும் பல திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .