Saturday, 26 October 2013

வாராது வரும் வால்நட்சத்திரம்சூரியனையே மேய வரும் ஐசான் வால் நட்சத்திரம்


வாராது வரும் வால்நட்சத்திரம்

சூரியனையே மேய வரும் ஐசான் வால் நட்சத்திரம்

மனிதகுல வரலாற்றில் இதுவரை வராத வால்நட்சத்திரம். இனிமேலும் வராமல் போகும் எனக் கருதப்படும் வால்நட்சத்திரம். அது தான் தற்போது நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐசான் வால் நட்சதிரம். எனவே தான் அதை வாராது வரும் வால் நட்சத்திரம் என்கிறோம்.

சூரிய மண்டலத்தின் கடைசி எல்லையில் ஊர்ட்ஸ் மேகம் உள்ளது. அதாவது சுமார் 7500000000000கோடி (7.5 லட்சம் கோடி/ 50000 AU) கிமீ தொலைவில் உள்ளது. இதோடு நமது சூரிய மண்டலம் முடிந்து அடுத்த சூரிய மண்டலம் (ஆல்ஃபா செண்டாரி) ஆரம்பித்து விடும். ஐசான் வால் நட்சத்திரம் இந்த எல்லையின் விளிம்பில் இருந்து தான் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது். எனவே தான் இதை வாராது வரும் வால் நட்சத்திரம் என்கிறோம்.

தற்பொழுது இது சூரியனுக்கு அருகில் வந்து விட்டது. செவ்வாய் கிரகத்திற்கு அருகாமையில் இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருந்தால் இதை நாம் வெறும் கண்ணால் இப்பொழுதே பார்க்கலாம். நாம் செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலன்கள் படங்கள் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. பூமியில் இருந்தும் பார்க்கலாம். முதன் முறையாக இரண்டு கிரகங்களில் இருந்து கவனிக்கக் கூடிய வால்நட்சத்திரம் இது தான். எனவே தான் இதை வாராது வரும் வால் நட்சத்திரம் என்கிறோம்.


ஐசான் வால்நட்சத்திரத்தில் சூரியக் குடும்பம் தோன்றிய காலத்தில் இருந்த மிச்சசொச்சப் பொருள்கள் பல இருக்கலாம். பாறைகள்தூசுகள்நீர்ப் பனிக்கட்டிகள்உலர்பனிக்கட்டிகள்அம்மோனியாமீதேன்அமினோ அமிலங்கள் போன்ற பொருள்கள் இதில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பொருள்களில் பல சூரிய வெப்பத்தினால் ஐசானில் இருந்து வெளியேறி வருகிறது. சுமார் 10லட்சம் கிலோகிராம் கார்பன் டை ஆக்ஸைடு உலர் ஐஸ்5 கோடி கிலோ கிராம் தூசு90000 கிலோ தண்ணீரை தினசரி வெளியேற்றிக் கொண்டு ஆவேசத்துடன் வந்து கொண்டிருக்கிறது. எனவே தான் இதை வாராது வரும் வால் நட்சத்திரம் என்கிறோம்.

நமது ஆராய்ச்சியாளர்கள் இப்பொருள்களைப் பற்றிய ஆய்வுகள் செய்யத் தயாராகி விட்டனர். இதன் மூலம் பூமியில் உயிர் எவ்வாறு தோன்றி இருக்கலாம் என்ற முடிச்சுகளில் ஒன்று அவிழ்க்கப்படலாம். அதாவது நீரும்,அமினோ அமிலங்களும் வால் நட்சத்திரஙகளால் வந்தன என்ற கோட்பாடு இன்றும் உள்ளது. எனவே நாசா ஆராய்ச்சிமையம் இப்பொருள்களைச் சேகரிக்க பலூன் பறக்க விட்டுள்ளனர். இதற்கு ஐசான் வருகை உதவி செய்கிறது. எனவே தான் இதை வாராது வரும் வால் நட்சத்திரம் என்கிறோம்.

இயல்பாக எல்லா வால்நட்சத்திரங்களும் பாறைகள்தூசுகள்பனிக்கட்டிகள்,வாயுக்கள் கொண்டிருக்கும். சூரியனுக்கு அருகாமையில் வரும் பொழுது அதன் வெப்பத்தால் ஆவியாகி எதிர் திசையில் வால்போல் நீண்டிருக்கும். என்வே தான் இதை நாம் வால்நட்சத்திரம் என்கிறோம். ஐசானும் அப்படித்தான். இதில் மூன்று பெரிய பாறைகள் 5கிமீ விட்டத்தில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இதைச்சுற்றியுள்ள அனைத்துப்பொருள்களும் சூரியனுக்கு அருகில் வரும் போது ஆவியாகும். இது சுமார் 10% எடையையும்,உருவத்தையும் இழக்கலாம். இதனால் இதன் வால் பகுதி மூன்று ல்ட்சம் கிலோமீட்டர் நீளம் இருக்கலாம். எனவே இது மிகப்பெரிய வால் கொண்ட நட்சத்திரம் ஆகக் கருதப்படுகிறது. ஒரு கட்டத்தில் இதன் வெளிச்சம் பெளர்ணமி வெளிச்சம் போல் இருக்கலாம் (அதிக பட்ச வெளிச்ச அளவு கோல்=1). இது வால் நட்சத்திரங்களிலேயே  சூப்பர் ஸ்டார்எனச் சொல்லலாம். எனவே தான் இதை வாராது வரும் வால் நட்சத்திரம் என்கிறோம்.

இந்த சூப்பர் வால் நட்சத்திரம் சூரியனை மிக நெருக்கமாக நவம்பர் 28 அன்று வருகிறது. அதாவது சுமார் 19 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் நெருங்குகிறது. இவ்வளவு அருகில் எந்த வால்நட்சத்திரமும் சூரியனுக்கு அருகில் இது வரை சென்றதில்லை. எனவே தான் இதை சூரியனை மேயப்போகும் (Sun Grazing) வால் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள். அவ்வளவு தெனாவட்டு ஐசானுக்கு! உண்மையிலேயே வால் புடிச்ச நட்சத்திரம் தான். சூரியன் இந்த வாலு நட்சத்திரத்தை உள்ளே இழுத்து விழுங்கி விடுவார் என்றும் சொல்கிறார்கள். ஐசானாசூரியனாயார் ஜெயிப்பர் எனப் பார்க்கலாம்.சூரியனுக்கே சவால் விட்டு அதனை நெருங்குகிறது. எனவே தான் இதை வாராது வரும் வால் நட்சத்திரம் என்கிறோம்.

சூரியனுக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் ஐசான் அக்டோபரில் இருந்து தெரிய ஆரம்பித்து உள்ளது. இப்பொழுது பைனாகுலர் மூலம் அதிகாலையில் செவ்வாய் அருகில் பார்க்கலாம். முதற்கட்டமாக நவம்பர் 6 முதல் 23 வரை பூமியில் இருந்து தெளிவாகப் பார்க்கலாம். தென் கிழக்கு வானில் 4 டிகிரீ முதல் 30டிகிரி வரை அடிவானத்தில் இதைப் பார்க்கலாம். இரண்டாம் கட்டமாக டிசம்பர்13 முதல் 28 வரை 2டிகிரியில் கிழக்கில் இருந்து துவங்கி 15 டிகிரி கோணத்தில் வடகிழக்கு அடிவானத்தில் பார்க்கலாம். இறுதிக்கட்டமாக 4 டிகிரி கோணத்தில் வடக்குப்பகுதியில் 2014 ஜனவரி 4ந் தேதி முதல் 10ந் தேதி வரைப் பார்ர்க்கலாம்.10ந்தேதி கடைசியாக துருவ நட்சத்திரம் அருகில் பார்த்து விடைகொடுக்கலாம். விடைகொடுக்கும் போது ரொம்ப மெலிந்துஒளிகுறைந்து போய்க் கொண்டிருக்கும். ஆனந்தக் கண்ணீர் விட்டு விடை கொடுக்க வேண்டியதிருக்கும் எனவே தான் இதை வாராது வரும் வால் நட்சத்திரம் என்கிறோம்.

இந்திய தொலைக் காட்சியிலேயே முதன் முதலாக.....மன்னிக்கவும்.........
மனித குல வரலாற்றிலேயே முதன் முதலாக இதுவரை பார்த்திராத
ஐசானே ஐசானே...வாவா...உன் வாலை அதிகம் நீநீநீட்ட்ட்டீடீடீடீ....வா வா.....

இதன் அடிப்படையில் மதுரையில் பலவிதமான பிரச்சார வழிமுறைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.
            மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்
ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டமிட்டு  ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பது. அத்துடன் வட்டார வளமைய பயிற்சியின் போது கல்வித்துறை அனுமதியுடன் அவர்களுக்கு பயிற்சி அளிப்பது. அத்துடன் கருத்தாளர் பயிற்சி பெற்றவர்கள் மாலை நேரங்களில் துளிர் இல்லங்கள் மற்றும் சுய உதவி பெண்குழுக்களுக்கு சென்று பிரச்சாரத்தை எடுத்துச்செல்ல உள்ளனர்.
 ஐசான் விழிப்புணர்வு வேன் பயணத்தை திருமங்கலத்தில் 15.11.2013 அன்று வரவேற்பது.
வேன் பயணம் செல்லும் வழித்தடம்
திருமங்கலம்
திருநகர்
மதுரை மாநகர்
செக்காணூரனி
தங்கும் முகாம்களாக திட்டமிட்டு அதிகாலையில் வால்நட்சத்திரத்தை பார்பதற்காக கீழ்கண்ட இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
ரேஸ்கோர்ஸ் மைதானம்                           22.11.2013
சிட்டம் பட்டி                                                23.11.2013
வளையங்குளம்                                             24.11.2013
இளமனூர்                                                      25.11.2013
பொதும்பு                                                       26.11.2013
முத்துப்பட்டி ( அழகப்பன் நகர்)                  27.11.2013
முத்துப்பட்டி ( பல்கலைநகர் )                     28.11.2013
மேலும் வாய்ப்புள்ள இடங்களில் நடத்துவது. ஒவ்வொரு கிளையும் தங்கள் பகுதியில் குறைந்தது இரண்டு இடங்களில் நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது

            கருத்தாளர்கள்                                                 முனைவர். பி. குமாரசாமி
                                                                                     திரு. எல். நாராயணசாமி ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். மேலும் விவரங்களை தெரிந்துகொள்வதற்கு
ஐசான்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  திரு. சிவராமன்            9944793606  அவர்களை அணுகவும்.

No comments:

Post a Comment