தேர்வு நிலை ஊதியம் குறித்த வினா. ஐயம் தீர்க்கவும் .
Inbox
x
Inbox
Aug 25 (3 days ago)
| ||||
மதிப்பிற்குரிய ஐயா,
தங்களது புதிய வலைதளம் மிகவும் வரவேற்கத்தக்கது. அதேபோன்று வினா விடைப் பகுதியும் மிக மிக புறட்சி மிக்கது. நன்றி.
1. தனியார் பள்ளியில் பணிபுரிந்து, அரசு பள்ளிக்கு பணிக்கு வரும்போது பணிவிடுவிப்பு செய்ய வேண்டுமா அல்லது பணிவிலகல் செய்ய வேண்டுமா?
2. அரசுப் பள்ளியில் சேரும்போது நிர்ணயம் செய்யப்படும் துவக்க ஊதியம் என்ன?
3. தனியார் பள்ளியில் பெற்றை இறுதி ஊதியத்தை துவக்க ஊதியமாக பெற முடியுமா? அரசாணை உள்ளதா?
4. தனியார் பள்ளியின் பணிக்காலத்தை எடுத்துக் கொண்டு தேர்வு நிலை பெறும் போது தேர்வு நிலை ஊதிய விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய அரசாணை உள்ளது என அறிவோம்.
தற்போது தேர்வு நிலை ஊதிய விகிதம் இல்லை என்பதால் (தனியார் பள்ளி--அரசுப் பள்ளி வந்தவர்களுக்கு) தேர்வு நிலை ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரை பெறப்பட்டுள்ளதா?
தற்போது இடை நிலை ஆசிரியர் துவக்க ஊதியத்தில் 3% என்பது சாத்தியமா? அது தேர்வு நிலை ஆகுமா? எந்த உ.தொ.க.அலுவலராவது அர்சிடம் தெளிவுரை கேட்டுள்ளார்களா?
ஏன் தனியார் பள்ளியில் பெற்ற கடைசி ஊதியத்திலாவது 3% வழங்கக் கூடாது.
அரசு பள்ளியில் 2 வருடம் (தகுதி காண் பருவகால) மட்டும் ஊதிய இழப்பாக இருக்கட்டுமே. இது குறித்து எனது ஐயம் தீர்க்க மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.
தாங்கள் அமைத்துள்ள பதில் அளிக்கும் குழு மிகவும் அனுபவமும், தற்போதைய நிலையில் இது போன்ற ஆசிரியரின் ஊர்திய இழப்பை நன்கு அறிந்தவர்களும் ஆவர்.
இது குறித்து தெளிவுரை பெற முயற்சி மேற்கொள்ளப் படுமா?
பெற்ற இறுதி ஊதியம் ----- ரூ. 14050 + 2800
அரசு பள்ளியில் தேர்வு நிலைக்குப் பிறகு ஊதியம் -- ரூ. 7060 + 2800 மொத்த பணிக்காலம் --- 12 1/2 ஆண்டுகள்
இதன் பதிலை வலைதளத்திலோ அல்லது Reply mail மூலமாகவோ அளிக்கவும்.
நன்றி... நன்றி...
By Rayan.
By Rayan.
Aug 26 (2 days ago)
| ||||
ANSWER : 1.பணி விலகல் செய்ய வேண்டும் 2.சாதாரண நிலை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் 3.முடியாது 4.கேள்வியை தெளிவாக அனுப்பவும் நன்றி கேள்விக்கு பதில் கூறியவர் திரு.மோகன் P.A to DEO (ஓய்வு) நீங்களும் கேள்விகளை கேட்கலாமே ............!!!! E-mail : aeeoganesan@gmail.com |
No comments:
Post a Comment