Friday, 30 August 2013

தமிழகத்தில் கல்வியின் வரலாறு

ஆங்கியலம் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டதும், ஆரம்ப பாடசாலையில் பயிற்று மொழியாக தமிழ் ஏற்கப்பட்டதும் - தொழிற்கல்வி, ஓவியக்கல்வி, மருத்துவக்கல்வி முதலானவை தொடங்கியது, மாணவர்களின் உடை, நாகரீகம் அறிமுகமானதும் இக்காலக்கட்டத்தில் தான்.
தமிழகத்தில் கல்வியானது, திண்ணைப் பள்ளிக்கூடத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. அரிச்சுவடி, வாய்ப்பாடு, கணிதம் இவ்வளவுதான் பாடம். அடுத்து குருகுலம். இது பெரும்பாலும் வேத பாடசாலை. இங்கு வேதம், வானசாஸ்திரம். கனிதம் போதிக்கப்பட்டன. பெரும்பாலும் தனிப்பட்டவரின் விருப்பம் மற்றும் வசதியானவர்களின் விருப்பமாக கல்வி கற்பது இருந்தது.
மொகலாயர்களின் ஆட்சியில் மசூதிகளையொட்டிய பகுதிகளில் அரபி பாடசாலை இருந்தது. ஹிந்துக்களுக்கு சமஸ்கிருதப் பாடசாலைகளும் குருகுலம் போன்று உருவானது. அரபி, சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் அமைப்புகளுக்கு ஆட்சியில் மானியம் வழங்கப்பட்டன. மொகலாய ஆட்சிக்குப் பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆங்கிலேய பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் நாட்டினரும் இதே மானியத்தை தங்களின் பகுதியில் நீட்டித்தனர். பின்னர் மானியம் நிறுத்தப்பட்டு மீண்டும் கல்வி என்பது வசதியுள்ளவர்களின் விருப்பமாயிற்று.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடிகோலியவர்கள் பிரிட்டனைச் சேர்ந்த 80 வியாபாரிகள் தான். இந்த பியாபாரிகள் இந்தியாவில் வணிகம் செய்ய விரும்பினர். இதற்கான அனுமதியைக் கோரி இங்கிலாந்து மகாராணி எலிசபெத்திடம் மனுவும் செய்தனர். உடனடியாக இதற்கு அனுமதிக்காவிட்டாலும், வியாபாரிகள் ஒரு பொதுவான அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன்போரில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தரப்பில் யோசனை கூறினர். அதன்படி 80 வியாபாரிகளும் சேர்ந்து பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மீண்டும் விண்ணப்பித்தனர். 1599ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இதற்கான அனுமதியை இங்கிலாந்து மகாராணி வழங்கினார்.
இந்தியாவில் மொகலாயர் ஆட்சி. மன்னர் ஜஹாங்கீர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். பிரிட்டிஷாருக்கு முன்பாகவே வியாபாரம் செய்யும் எண்ணத்தில் டச்சுக்காரர்களும், போர்ச்சுகீசியர்களும், பிரெஞ்சுக்காரர்களும் மொகலாய ஆட்சியை அணுகி, அனுமதி பெற முடியாமல் தோற்றுப் போயிருந்த நேரம். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியும் தன் பங்குக்கு முயன்றது. இறுதியில், 1612ல் சூரத்தில் மட்டும் வியாபாரம் செய்து கொள்வதற்கான அனுமதியை ஆங்கிலேய கம்பெனி பெற்றது. இதன் தொடர்ச்சியான முயற்சிகளில் 1647ல் இந்தியாவின் பல பாகங்களிலும் 23 இடங்களில் வர்த்தக நிறுவனங்களை கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கியது.

No comments:

Post a Comment