Wednesday, 28 August 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு

First Published : 27 August 2013 06:33 PM IST
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இன்று வெளியிடப்பட்டுள்ளன.இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செப்டம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வர்கள் மனு செய்யலாம்.
இந்த மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ செப்டம்பர் 2-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ம் தேதியும் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை மொத்தம் 6.50 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு இப்போது ஸ்கேன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுநேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இப்போது முக்கிய விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, முக்கிய விடைகள் தொடர்பான ஆட்சேபங்கள் பெறப்பட்டவுடன் ஒவ்வொரு பாடவாரியாக அவை பரிசீலிக்கப்படும்.இதைப் பரிசீலிப்பதற்காக ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுக்கள்  அமைக்கப்படும். அந்தக் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சேபங்களை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. அதையடுத்து, இறுதிசெய்ய்பட்ட விடைகளுடன் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். மதிப்பீட்டுக்குப் பிறகு இறுதி விடைகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்                                                  
  • Answer Key
  • Social science study
  • Social Science
  • Group 4
  • Study Materials
  • Answer
  • Spirits
  • Job interview questions
  • Teacher Recruitment
  • Free online tests
  • Answer Key
  • Social science study
  • Social Science

TET - 2013 Key Answer Published by TRB


Tamilnadu Teacher Recruitment Board (TRB) - Now Published Proper TNTET Key Answer
for TNTET - 2013 - Paper 1 & Paper 2 Exams. Today Trb Published the Tentative Key Answer for TNTET Key Answers.


1 comment:

  1. The post on AEEO Association sharing the TET Paper 2 answer keys is very helpful for candidates preparing for the exam! Providing clear and accessible answer keys can greatly assist in understanding performance and identifying areas for improvement. It's a valuable resource for those looking to assess their readiness. Thanks for sharing this useful information!

    Data science courses in Bangalore.

    ReplyDelete