இணைய தளம், மொபைல் போன் என நவீன தொழில்நுட்பத்தின் வீச்சால், தகவல் பரிமாற்றம் வளர்ந்துள்ளது. எனினும், வாசிக்கும் பழக்கத்தின் நுட்பமான பயனை, அனுபவிப்பவர் மட்டுமே அறிவர்.
* வகுப்பறை நூலகங்களில், குழந்தை இலக்கியம், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, படக்கதை, கற்பனைக் கதை, நகைச்சுவை, புதிர், நெடுங்கதை, வாழ்க்கைக் குறிப்பு, நாளிதழ்கள் போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.
* சிறு கல்வித் திட்டங்கள் (புராஜெக்ட்), டைரிகள், சுயமாக உருவாக்கப்பட்ட புத்தகங்கள் ஆகியவை நுõலகங்களில் இடம் பெற வேண்டும். இவை, முக்கிய தகவல் சுரங்கங்களாக அமையும்.
* வீட்டில் படித்த புத்தகங்களையும் வகுப்பறை நூலகங்களில் வைப்பது பலன் தரும். பங்கிடும் பண்பை வளர்ப்பதோடு, நூலகத்தின் செழுமையை இது உறுதி செய்யும்.
* மாணவர்களோடு நூலகத்திற்கு ஆசிரியர்கள் சென்று, தேவைப்படும் புத்தகங்களை பெறுவதில் உதவுவது முக்கியம். வகுப்பறையில் நடத்தப்படும் பாடத்திற்கு, தேவையான நூல்களை நூலகங்களில் முன்பே வைத்திட வேண்டும்.
* நூலகங்களில் அனைத்து மொழி நூல்களையும் வைப்பது, மொழிகளின் இணையான அர்த்தத்தை உணர உதவும்.
* நூலகங்களில் வாசிப்பதற்குக் குறிப்பிட்ட காலத்தை ஒதுக்குமாறு செய்ய வேண்டும். இது வாசிக்க, தனி முக்கியத்துவத்தை ஏற்படுத்தும்.
* படித்தது பற்றிய கருத்துக்களை அறிவதும் முக்கியம்.
* தேவைக்கேற்ப புதிய புத்தகங்கள், இதழ்கள், பத்திரிகைகள் வாங்கப்பட வேண்டும்.
* வகுப்பறையிலோ சிறு குழுவிலோ, புத்தக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் செய்வதும் முக்கியம். புத்தகங்களை குழந்தைகளே தேர்வு செய்யச் சொல்வதும் அவசியம்.
* எதிர்பாராமல் புத்தகங்கள் கிழிந்து விட்டால், குழந்தைகளே அதை சரி செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
* நூலகங்களை நடத்துவது அதிக செலவு பிடிக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. பல பதிப்பகங்கள், விலை குறைந்த புத்தகங்களை வெளியிடுகின்றன. எனவே நூலகங்களை ஏற்படுத்துமாறு, பெற்றோரும் வலியுறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment