Sunday, 21 July 2013

வாரத்துக்கு 5 பாடவேளைகளில் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் நடத்த வேண்டும்

நடுநிலைப் பள்ளிகளில் வாரத்துக்கு குறைந்தபட்சம் 5 பாடவேளைகளில் கம்ப்யூட்டர், லேப்-டாப்களை பயன்படுத்தி பாடம் நடத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
.
உணவு இடைவேளைக்கு முன்னரோ அல்லது பின்னரோ உள்ள பாடவேளையை கணினி வழியிலான பாடத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு பாட ஆசிரியரும் குறைந்தபட்சம் ஒரு பாடவேளையாவது கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
8 ஆயிரம் பள்ளிகளுக்கு லேப்-டாப்கள்: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 8 ஆயிரத்து 26 நடுநிலைப் பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக லேப்-டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், பாடங்களைக் கற்பிக்கும்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்-டாப்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது தொடக்கக் கல்வித் துறை இயக்குநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பாடங்களைக் கற்பிக்கும்போது கம்ப்யூட்டர், லேப்-டாப்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை தொடக்கக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.
என்னென்ன பாடங்களை கம்ப்யூட்டரில் நடத்தலாம்? தமிழில் வார்த்தை விளையாட்டுகள், தமிழ் நூல்கள், தொன்மையான வாழ்வியல், மொழி, கலாசாரம் போன்றவையும், ஆங்கிலத்தில் பாட்டுகள், இலக்கணம், உச்சரிப்புகள், படக் கதைகள், வார்த்தைத் தொடர் எழுதுவது, விநாடி-வினா நிகழ்ச்சிகள் ஆகியவற்றை லேப்-டாப்களைப் பயன்படுத்தி நடத்த வேண்டும்.
கணிதத்தில் சமன்பாடுகளுக்கான 3டி விளக்கப் படங்கள், விளையாட்டு முறையில் கணிதம், செயல் விளக்க மாதிரிகள் ஆகியவற்றுக்கும், அறிவியலில் உடலுக்குள் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகளைப் பற்றிய அனிமேஷன் விடியோக்கள், எளிய அறிவியல் பரிசோதனைகள், சிறிய பொருள்களை செய்வது தொடர்பான படங்களை மாணவர்களுக்கு காட்சி வழியில் கற்பிக்க வேண்டும்.
சமூகவியலில் கட்டடக் கலைகள் மற்றும் பவர் பாயின்ட்டுகள், புராதனக் கோயில்களில் உள்ள விடியோக்கள், நேஷனல் ஜியோகிரபி சேனல் வலைதளத்தில் உள்ள விடியோக்களை மாணவர்களுக்குக் காட்டலாம்.
6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கான உய்ஞ்ப்ண்ள்ட் ஹழ்ர்ன்ய்க் ன்ள், நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் ங்ஷ்ல்ங்ழ்ண்ம்ங்ய்ற்ள், அக்ஷ்ண்ம் டழ்ங்ம்த்ண் ச்ர்ன்ய்க்ஹற்ண்ர்ய் ஸ்ரீக்ள், பர்ர்ய் ம்ஹள்ற்ண் போன்ற சி.டி.க்களின் துணையோடும், இணையத்தில் இருந்து பாட சம்பந்தமான விடியோக்கள், பவர் பாயின்ட்டுகளை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்த வேண்டும். கம்ப்யூட்டர் பயன்பாடுகள் தொடர்பான வகுப்புகளை ஆசிரியர்களுக்கு நடத்திட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வாயிலாக தகுந்த அறிவுரைகளை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கிட வேண்டும் என அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment